முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கலைவண்ணம்.. கலக்கல் வருமானம் !

ஓவியம், சிற்பம் ஆகியவற்றை பரிசுப்பொருட்களாக வழங்குகிறோம். இவற்றை இணைத்து புதுவிதமாக, கலைநயத்துடன் கூடிய பரிசுப்பொருளாக வழங்கினால் அனைவரையும் ஈர்க்கும். இதையே தொழிலாக மேற்கொண்டால், வீட்டில் இருந்தபடியே வருவாய் பார்க்கலாம் என்று கூறுகிறார் கோவை பாப்பநாயக்கன்புதூரை சேர்ந்த உமாதேவி. அவர் கூறியதாவது:  கல்லூரி படிப்பை முடித்தது முதலே சொந்தமாக தொழில் துவங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. திருமணத்துக்கு பிறகு கோவை அவிநாசிலிங்கம் பல்கலைக்கழக தொழிற்பயிற்சி மையத்தில் சேர்ந்து தையல், ஓவியம், பரிசு பொருட்கள், மசாலா பொடி தயாரிப்பு பயிற்சி பெற்றேன். பரிசுப்பொருள் தயாரிப்பை ஒரு வாரத்தில் கற்றேன். ஓவியத்தில் ஆர்வம் இருந்ததால், ஓவியம், சிற்பத்திறமையை இணைத்து பரிசு பொருட் களை செய்து பார்த்தேன். அதை உறவினர், நண்பர்களின் குடும்ப விழா, பிறந்த நாள் விழாவின்போது அளித்தேன். அது அவர்களை கவர்ந்தது. அவர்கள் தங்களுக்கு தேவையான பரிசுப்பொருட்களை தயாரித்து தருமாறு கூறினார்கள். நாளடைவில் இதற்கு உள்ள வரவேற்பை பார்த்து, இதையே தொழிலாக செய்யலாம் என்று கணவர் யோசனை கூறினார். அதன்படி பல்வேறு பரிசு பொருட்களை தயாரித்து எனது...

பேப்பர் தட்டு தயாரிப்பில் பிரமாத லாபம்

சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காதவை பேப்பர் தட்டுகள். ஆடம்பரமாகவும் இருக்கும். வாழை இலை, பிளாஸ்டிக் தட்டுகளுக்கு மாற்றாக விளங்கும் இவற்றை தயாரித்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் என்கிறார் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த சின்னாம்பாளையத்தில் உள்ள கற்பகவிருட்சம் மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த சுகுணா. அவர் கூறியதாவது: கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் குழுவை துவக்கினோம்.  உறுப்பினர்கள் 5 பேர் சேர்ந்து, பேப்பர் பிளேட் தயாரிக்க பயிற்சி பெற்றோம். வங்கியில் ரூ.5 லட்சம் கடன் வாங்கி தொழிலுக்கு தேவையான மெஷின்களை நிறுவினோம். 5 பேரும் பக்கத்து பக்கத்து வீடுகளை சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டு வேலைகளை சீக்கிரம் முடித்துவிட்டு பேப்பர் பிளேட் தயாரிக்கும் பணிகளை தொடங்குவோம். ஒருவர் பேப்பரை கட்டிங் செய்யும் இயந்திரத்தையும், மற்றொருவர் பிளேட் தயாரிக்கும் மெஷினையும் இயக்குவோம். மற்ற 2 பேர் பேக்கிங் செய்வார்கள். உற்பத்தியோடு விற்பனையையும் நாங்களே கவனிக்கிறோம். மின் தடை இல்லாமல் இருந்தால், ஒரு நாளில் 10 ஆயிரம் பிளேட் தயாரிக்கலாம். ஒரு பிளேட்டுக்கு 20 பைசா லாபம். மாதம் ரூ.18 ஆயிரம் வங்கிக்கு செலுத்து...

லாபம் கொழிக்கும் கூடை பொம்மை தயாரிப்பு!

சந்தோஷமான தருணங்களில், ஒருவருக்கு வழங்கும் பரிசுப்பொருட்கள் அந்த சந்தோஷத்தை இரட்டிப்பாக மாற்றும். பரிசுப்பொருள் விலை உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பெறுபவர் மனதைக் கவர்வதாக இருக்க வேண்டும். விலை குறைந்த, அதே நேரம் பாரம்பரியம், நவீனம் கலந்து  சிறப்பாக வடிவமைக்கப்படும் கூடை பொம்மைகள், பரிசுப்பொருளாக வழங்க நல்ல தேர்வு.  கூடை பொம்மைகள் தயாரித்து விற்றால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை காந்திபுரத்தை சேர்ந்த பத்மா. அவர் கூறியதாவது: 15 ஆண்டுகளுக்கு முன்பு கைவினைப்பொருட்கள் செய்வதில் ஆர்வம் ஏற்பட்டது. பரிசு பொருள் விற்கப்படும் பொம்மைகள் செய்து கடைகளுக்கு விற்றேன். படிப்படியாக பல்வேறு வகையான பொம்மைகளை தயாரித்தேன். திருப்பூர் பனியன் ஏற்றுமதி நிறுவனங்களிடம் வெளிநாட்டு வர்த்தகர்கள் ஆர்கானிக் காட்டன் பொம்மைகள் செய்து தர ஆர்டர் கொடுத்தனர். ஆர்டர் எடுத்த நிறுவனங்கள் என்னிடம் பொம்மைகள் தயாரித்து வாங்கி ஏற்றுமதி செய்தனர். இதன் மூலம் தொழில் பெருகியது. பொதுவாக பொம்மைகள் செய்வது கை தையல் மூலம் தான். உற்பத்தி அதிகம் செய்ய வேண்டி வந்ததால் பவர் தையல் மெஷின் மூலம் பெரிய ப...

லாபம் தரும் காகித பை தயாரிப்பு

சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, காகித மற்றும் துணி பைகளை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. பேஷனாகவும் இருப்பதால், இவற்றை மக்கள் விரும்பி வாங்குகின்றனர். காகிதப் பைகள் தயாரிக்க குறைந்த முதலீடு போதும். நிறைந்த லாபம் பார்க்கலாம் என்கிறார் காகிதப் பை வகைகள் ஒருமுறை பயன்படுத்தும் செய்தித்தாள் பைகள், பல முறை பயன்படுத்தும் டியூப்ளக்ஸ் போர்டு, கோல்டன் யெல்லோ ஷீட், பிரவுன் ஷீட் பேப்பர் மற்றும் சார்ட் பேப்பர் பைகள் என விதவிதமான வகைகள் உள்ளன. தேவைப்படும் பொருட்கள்: பழைய அல்லது புதிய பேப்பர்கள். பேப்பரின் வகைகளான டியூப்ளக்ஸ் போர்டு, கோல்டன் யெல்லோ ஷீட், பிரவுன்ஷீட், சார்ட் ஆகியவை. இயந்திரம்: கட்டிங் அண்ட் கிரீசிங் மெஷின். உற்பத்தி பொருட்கள்: மெட்டல் வளையம், பசை, கைப்பிடிக்குத் தேவையான கயிறு. கிடைக்கும் இடங்கள்: பேப்பர்கள் பழைய பேப்பர் கடைகளிலும், கட்டிங் அண்ட் கிரீசிங் மெஷின் சென்னை, பெங்களூர், கோவை, ஐதராபாத் நகரங்களிலும், இதர வகை பேப்பர்கள் மற்றும் பொருள்கள் சிறு மற்றும் பெரு நகர ஸ்டேஷனரி, பேன்சி ஸ்டோர்களிலும் கிடைக்கும். தயாரிப்பது எப்படி?  எந்த வகை ...