முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அழகு குறிப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எளிய அழகுக் குறிப்புகள்

எளிய அழகுக் குறிப்புகள் * சந்தனம் , முல்தானிமட்டி கலந்த , " பேஸ் பாக் ' உபயோகித்து வர , முகம் பொலிவாகவும் , மிருதுவாகவும் மாறும். * கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள் , எலுமிச்சை சாறு , ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி , காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ , முகம் மிருதுவாகும். * ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும். * பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும். * 2 ஸ்பூன் முள்ளங்கி சாற்றுடன் 2 ஸ்பூன் மோர் சேர்த்து , முகத்தில் தடவி , ஒரு மணிநேரம் கழித்து , சுடுநீரில் முகத்தை கழுவ வேண்டும். இதை தினசரி செய்து வர , வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் தவிட்டு நிறமுள்ள புள்ளி மறையும். * தேங்காய் தண்ணீரை முகத்தில் தொடர்ந்து 6 மாதம் தடவி வர சின்னம்மையால் ஏற்பட்ட வடு மறையும். * பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களை சுற்றி வைக்க கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும். * பப்பாளி பழத்தை அரைத்து , முகத்தில் தொ...

தலையில் பொடுகா? கவலைப்படாதீர்கள்...

தலையில் பொடுகா? கவலைப்படாதீர்கள்... கூந்தலைப் பற்றி பல காப்பியங்களிலும் , இதிகாசங் களிலும் அதிகம் காணப்படுகிறது. நீண்ட தலைமுடியை கூந்தல் என அழைக்கிறோம். நீண்ட கூந்தலை விரும்பாத பெண்கள் எவரும் இருக்க முடியாது. நம் முன்னோர்களில் ஆண்களும் , பெண்களும் பாரபட்சமின்றி கூந்தல் வளர்த்தனர். நாகரிகம் வளர வளர இன்று பெண்கள் கூட கூந்தலை கத்தரித்துவிட்டு மிகக் குறைந்த அளவே முடிவைத்துக் கொண்டுள்ளனர். இன்றைய நவீன இரசாயனம் கலந்த உணவுகள் மற்றும் பருவ மாற்றங்களால் நீண்ட கூந்தல் என்பது சில பெண்களுக்கு கனவாக அமைந்துவிடுகிறது.கூந்தலை வளர்ப்பது பெரிதல்ல... அதை பராமரிப்பதுதான் மிகவும் கஷ்டமான விஷயம். சிலர் முடி உதிர்வதால் பெரிதும் மனவேதனைக்கு ஆளாகியிருக்கின்றனர். பகட்டு விளம்பரங்களில் வரும் இரசாயனக் கலவையான ஷாம்புகளை பயன்படுத்தி சிலர் மேலும் முடிகளை இழக்கின்றனர். முடி உதிர்வதைத் தடுக்கவும் , நீண்ட நெடிய கூந்தலைப் பெற பொடுகின் தொல்லை இல்லாமல் இருப்பது அவசியம். பொடுகினால்தான் அநேக பேருக்கு முடி உதிர்கிறது. தலையில் அரிப்பு இருந்தாலே பொடுகு இருக்கிறது என்று உணர்ந்துகொள்ளலாம். பொடுகு எவ்வாறு உண்டாகிறது: பொட...