இன்றைய தேதியில் இந்தியாவின் மிக முக்கியமான வண்ண மீன் வளர்ப்பு மையம் என்றால் அது சென்னைதான் ! கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் வண்ண மீன் வளர்ப்புத் தொழில் இரண்டு மடங்காக வளர்ந்திருப்பது மிகப்பெரிய வளர்ச்சி . ‘ நம்மால் எப்படி திடீரென்று மீன் வளர்ப்புக்குப் போகமுடியும் ’ என்று யோசிக்கிறீர்களா .. ? இதோ வழிகாட்டுகிறார் மாதவரத்தில் உள்ள ‘ மீன்வள ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மைய ’ த்தின் பேராசிரியர் ஃபெலிக்ஸ் . வண்ண மீன்கள் அல்லது அலங்கார மீன்கள் வளர்ப்பில் இன்டர்நேஷனல் ஹப்பாக எல்லோரும் கருதுவது சிங்கப்பூரைத்தான் . ஆனால் இன்று இலங்கை , மலேஷியா போன்ற நாடுகளும் வண்ண மீன் வளர்ப்பில் கவனம் செலுத்தி வருகின்றன . இந்தியாவைப் பொறுத்தவரை முன்பு கொல்கத்தாவில்தான் அதிகமான வண்ண மீன்கள் உற்பத்தி ஆயின . பின்பு அது மும்பைக்கு மாறியது . ஆனால் , இன்று அந்த இடத்தை சென்னை பிடித்துவிட்டது . இங்கு உற்பத்தியாகும் மீன்கள்தான் இந்தியா முழுக்கச் செல்கிறது . கூடவே அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிற...