முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஈமு கோழி வளர்ப்பது எப்படி?

ஈமு கோழி வளர்ப்பு தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. பண்ணை அமைத்து சிரத்தையுடன் தொழிலில் ஈடுபட்டால் லாபத்தை அள்ளலாம் என்று கூறுகிறார் ஈரோடு மாவட்டம் பெருந்துறை யில் ‘சுசி ஈமு பார்ம்ஸ் இந்தியா’ நடத்திவரும் எம்ஜிஎஸ்.அவர் கூறியதாவது: நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். கல்லூரி படிப்பை முடித்தவுடன் தனியார் நிறுவனத்தில் மாதம் 8 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலைபார்த்து வந்தேன். விவசாயம் மற்றும் பண்ணைகள் பற்றிய தகவல்களை ஆர்வமுடன் தெரிந்து கொள்வேன். ஆந்திரா, புதுவை ஆகிய இடங்களில் உள்ள பண்ணைகளுக்கு சென்று ஈமு கோழி வளர்ப்பு குறித்து முழுமையாக அறிந்துகொண்டேன். 2004ம் ஆண்டு 5 ஜோடி ஈமு கோழிகளுடன் பெருந்துறையில் பண்ணை துவங்கினேன். அவை முட்டையிட துவங்கியதும்  வேறொரு பண்ணையாளரிடம் கொடுத்து குஞ்சு பொரிக்க செய்து, அவற்றையும் சேர்த்து வளர்த் தேன். ஈமு வளர்ப்பையே முழு நேர தொழிலாக மேற் கொண்டேன். தமிழகத்தில் ஈமு எண்ணிக்கை குறைவு. ஒப்பந்த அடிப்படையில் ஈமுவை வளர்க்க விவசாயிகளிடம் ஆர்வத்தை உருவாக்கினேன்.  சிரமம் இல்லாத வளர்ப்பு முறை, அதனால் கிடைக்கும் வருமானத்தை பார்த்து இன்று தமிழகம் முழுவதும் ஒப...

கிழங்கு சிப்ஸ்.. கலக்கல் லாபம்!

மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ்  என்றால் சிறியவர்கள் முதல்  பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்து சாப்பிடுவார்கள். தரமான, சுவையான மரவள்ளி சிப்ஸை தயாரித்து வழங்கினால் நன்றாக சம்பாதிக்க லாம் என்கிறார் ஈரோடு மாவட்டம்  காலிங்கராயன்பாளையத்தை சேர்ந்த மரவள்ளி சிப்ஸ் விற்பனையாளர் மஞ்சுளா. அவர் கூறியதாவது: வீட்டிலேயே வடகம், ஊறுகாய் போன்றவற்றை தயாரித்து அருகில் உள்ள வீடுகளுக்கும், கடைகளுக்கும் விற்று வந்தேன். எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் கிடைக்கவில்லை. வேறு தொழில் செய்ய நினைத்தபோது, முதலீடு அதிகம் தேவைப்பட்டது. குறைந்த முதலீட்டில் எளிதாக தொழில் செய்ய முயற்சித்தபோது, மளிகை கடைகளிலும், வீடுகளிலும் சிப்ஸ் வகைகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதை தெரிந்து கொண்டேன். சிப்ஸ் தயாரிப்பது தொடர்பான தொழில்  முறைகளை கற்றுக்கொண்டு மகளிர் சுய உதவிக்குழுவினருடன் இணைந்து 4 ஆண்டுகளுக்கு முன்பு மரவள்ளி கிழங்கு சிப்ஸ் தயாரிக்க தொடங்கினேன். ஒரு சிப்ஸ் மாஸ்டர், மரவள்ளியை உரிக்க 2 தொழிலாளர்கள் இருந்தால் போதும். கடைகளுக்கு  சப்ளை செய்ய தகுதிக்கு ஏற்ப ஒரு மொபட் அல்லது ஆட்டோ தேவைப்படும். ஒரு டன் சிப்ஸ்...

பொக்கே தயாரிப்பில் பொங்குது லாபம்!

பிறந்த நாள், திருமண நாள் கொண்டாட்டங்கள் முதல் நோயாளிகள் நலம் பெற வாழ்த்துவது வரை பொக்கே முக்கிய இடத்தை பிடித்துள்ளது. வீடுகள், அலுவலக வரவேற்பறைகளில் மணமும், அழகும் கொண்ட ஜார் மற்றும் கப் பொக்கேவை தினசரி அமைப்பது பேஷனாகி விட்டது. இந்த காரணங்களால் பொக்கே தயாரிப்பது லாபகரமான தொழிலாக உள்ளது என்கிறார் கோவை ஆர்.எஸ்.புரத்தில் ஆர்கிட்ஸ் என்ற பெயரில் பொக்கே ஷாப் நடத்தி வரும் குருபரசிங். அவர் கூறியதாவது: கண்ணை கவரும் பொக்கேக்களுக்கு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதை அறிந்து இத்தொழிலில் ஈடுபட முடிவு செய்தேன்.  கோவையில்ள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பொக்கே ஷாப்பில் வேலைக்கு சேர்ந்து தொழில்நுணுக்கங்களை கற்றேன். 15 ஆண்டுகளுக்கு முன்பு பொக்கே ஷாப் துவங்கினேன். தொழில் போட்டியை சமாளிக்க புதுமைகளை புகுத்தினேன். மலர்கள், வண்ணங்கள், கலை வேலைப்பாடுகளில் அதிக கவனம் செலுத்தினேன். இதனால் நான் தயாரித்த பொக்கே பலரையும் கவர்ந்தது. வாடிக்கையாளர்களும் பெருகினார்கள். சென்னை, பெங்களூர், ஐதராபாத், டெல்லி உள்பட பல நகரங்களில் எனக்கு வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். அவர்கள் இங்குள்ள உறவினர்கள், நண்பர்களின் வீ...

முயல் வளர்த்தால் முன்னேற்றம்

ஆடு, மாடு, கோழி வளர்ப்பு போல முயல் வளர்ப்பு தொழிலும் மிகுந்த லாபம் தரக் கூடியது. இத்தொழிலின் முக்கியத்துவம் கருதி, கோவை கால்நடை பல்கலைக்கழகத்தில் முயல் வளர்ப்பு பற்றி பயிற்சி வழங்கப்படுகிறது. முழுநேரமாகவோ, பகுதி நேரமாகவோ முயல் வளர்த்தால் முன்னேற்றம் நிச்சயம் என்கிறார் கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்த செல்வம். டெய்லரான இவர், பகுதி நேரமாக வீட்டிலேயே முயல் வளர்க்க துவங்கினார். இப்போது ஏகப்பட்ட கிராக்கி. தொழிலை விரிவாக்க திட்டமிட்டுள்ளார். அவர் கூறியதாவது: முயல் குட்டி ஒரு மாசம் வரை தாயுடன் இருக்கணும். அதுவரை தாய்ப்பால் குடிக்கணும். முதல்ல... 20 நாளில் குட்டியை பிரிச்சுட்டேன். 40 குட்டிகள் இறந்திடுச்சு. கோவை கால்நடை பல்கலை.யில் முயல் வளர்ப்பு பயிற்சி கத்து கொடுத்தாங்க. அவங்க சொன்னபடி முயல் வளர்க்க ஆரம்பிச்சேன். அப்புறம் ஒரு  குட்டியைக் கூட நான் இழக்கல. முயலையோ, முயல் கறியையோ முதலில் யாரும் வாங்கல. சமைக்கத் தெரியாது; ருசி பழக்கமில்லைனு சொன்னாங்க. நானே அதை சமைத்து அக்கம்பக்கத்தில் உள்ளவங்களுக்குக் கொடுத்தேன். அப்புறம் அவங்களுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. இப்போ நல்ல கிராக்கி. ஒரு கிலோ ரூ.200க்க...

வசீகர சேலைகள்.. வருவாய் பிரமாதம்

‘பேப்ரிக் பெயின்டிங் சேலை களை கலைவண்ணம் உள்ளதாக மிளிர செய்யும். இது பெண்களின் புதிய பேஷனாக உருவாகியுள்ளது. சேலைகளில் பேப்ரிக் பெயின்டிங் செய்ய கற்றுக்கொண்டால் வீட்டு பெண்கள் நல்ல வருவாய் ஈட்டலாம்’ என்று கூறுகிறார் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தை சேர்ந்த கீதா. கீதா கூறியதாவது: கணவர் செல்வம், வங்கி அதிகாரி. நாகர்கோவிலுக்கு டிரான்ஸ்பர் ஆகி, அங்கு வசித்தபோது டிவி நிகழ்ச்சி ஒன்றில், பேப்ரிக் பெயின்டிங் கற்றுக்கொண்டால் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம் என்று கூறி செயல்விளக்கத்தையும் காட்டினர். இது எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது. ஓவியம், எம்ப்ராய்டரி பயிற்சி பெற்றேன். அருகில் வசிக்கும் பெண்களின் சேலைகளுக்கு இலவசமாக பேப்ரிக் பெயின்டிங் செய்து கொடுத்தேன். ‘சாதாரண சேலைய கூட சூப்பரா பண்ணீட்டீங்களே...’ என்று பெண்கள் பாராட்டினர்.  பலர் என்னிடம் சேலைகளை கொடுத்து பெயின்டிங் செய்து கொடுக்குமாறு கூறினர். குறைந்த கட்டணம் நிர்ணயித்து தொழிலை துவக்கினேன்.  ஓரளவு வருமானம் கிடைத்தது. கணவர் கோபிச்செட்டிபாளையம் டிரான்ஸ்பர் ஆனார். இது போன்ற சிறிய நகரங்களில் சேலைகளில் ஆடம்பரமான, அழகான வ...

லாபம் கொழிக்கும் பேரீச்சை வளர்ப்பு!

பாலைவனத்தில் விளையக்கூடிய பயிரான பேரீச்சையை நமது மண்ணிலும் விளைவிக்கலாம்.  உரிய முறையில் பேரிச்சையை  சாகுபடி செய்து மார்க்கெட்டிங் செய்தால் லாபத்தில் அசத்தலாம் என்கிறார் திருப்பூர் மாவட்டம் முருகம்பாளையத்தை சேர்ந்த கே.ஜி.டேட்ஸ் உரிமையாளர் முருகவேல். அவர் கூறியதாவது: ஆரம்பத்தில் ரெடிமேடு ஆடை தயாரிப்பு தொழில் செய்தேன். அதில் பெருமளவு நஷ்டம் ஏற்பட்டது. வேறு சில தொழில்களிலும் ஈடுபட்டு அதிலும் நஷ்டம்  ஏற்பட்டு பணம் எல்லாம் இழந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடியை சேர்ந்த அன்பழகன் என்ற விவசாயி புதிய ரக திசு பேரீச்சையை வளர்த்து லாபம்  சம்பாதிப்பது பற்றி தெரிய வந்தது.  அங்கு சென்று விவரங்களை கேட்டேன். நிச்சயம் இதில் நல்ல லாபம்  சம்பாதிக்கலாம் என நம்பிக்கை துளிர்த்தது. கையில் காசில்லாத நிலையில்,  இடத்தை விற்று பேரீச்சை சாகுபடியில் ஈடுபட்டேன். இது புது வகையான திசு வளர்ப்பு பேரீச்சை. இந்தியாவில் இந்த கன்று உற்பத்தி கிடையாது. இங்கிலாந்தில் மட்டும் ஆய்வுக்கூடங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த திசு கன்றுகள் வளைகுடா நாடுகளில் பராமரிக்கப்பட்டு, பின...

கோழி பண்ணையில் கொழிக்குது பணம்!

சத்துக்களை அள்ளித் தரும் ஆரோக்கியமான உணவு முட்டை.  மாணவர்கள் சத்துணவிலும் வழங்கப்படுகிறது. கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் கூட, மஞ்சள் கருவை தவிர்த்துவிட்டு வெள்ளைக் கருவை சாப்பிடலாம். தேவை அதிகம் இருப்பதால், கோழிப்பண்ணை அமைத்து முட்டை உற்பத்தி செய்தால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்கிறார் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த வேப்பங்கொட்டை பாளையத்தில் கிருத்திகா கோழி பண்ணை நடத்தி வரும் வெங்கடாசலம். அவர் கூறியதாவது: நான் ஒரு விவசாயி. பாசன நீர் பற்றாக்குறை காரணமாக முட்டைக்கோழி வளர்ப்பை பிரதான தொழிலாக செய்து வருகிறேன். இதற்கு  வங்கிக் கடன் உதவி எளிதாக கிடைப்பதால், பண்ணை அமைத்து கூண்டு முறையில் 24 ஆயிரம் கோழிகளை வளர்க்கிறேன். கோழி வளர்ப்பில் முதல் வளர்பருவம் வரை உற்பத்தி செலவுக்கு முதலீடு இருந்தால் போதும். முட்டைப்பருவ காலத்தில்  கிடைக்கும் முட்டைகளை விற்று  அதன்மூலம், அடுத்தடுத்த உற்பத்தி செலவுகளை சமாளிக்கலாம். அரவை இயந்திரம் வாங்கி தீவனத்தை நாமே அரைத்து கொண்டால் செலவு மிச்சமாகும். தீவனத்துக்கு தேவையான தானியங்கள் விலை குறையும்போது வாங்கி இருப்பு வைத்துக் கொள்ளலாம். நாமக்கல், ப...