முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கிழங்கு சிப்ஸ்.. கலக்கல் லாபம்!









மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ்  என்றால் சிறியவர்கள் முதல்  பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்து சாப்பிடுவார்கள். தரமான, சுவையான மரவள்ளி சிப்ஸை தயாரித்து வழங்கினால் நன்றாக சம்பாதிக்க லாம் என்கிறார் ஈரோடு மாவட்டம்  காலிங்கராயன்பாளையத்தை சேர்ந்த மரவள்ளி சிப்ஸ் விற்பனையாளர் மஞ்சுளா. அவர் கூறியதாவது: வீட்டிலேயே வடகம், ஊறுகாய் போன்றவற்றை தயாரித்து அருகில் உள்ள வீடுகளுக்கும், கடைகளுக்கும் விற்று வந்தேன். எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் கிடைக்கவில்லை.

வேறு தொழில் செய்ய நினைத்தபோது, முதலீடு அதிகம் தேவைப்பட்டது. குறைந்த முதலீட்டில் எளிதாக தொழில் செய்ய முயற்சித்தபோது, மளிகை கடைகளிலும், வீடுகளிலும் சிப்ஸ் வகைகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதை தெரிந்து கொண்டேன். சிப்ஸ் தயாரிப்பது தொடர்பான தொழில்  முறைகளை கற்றுக்கொண்டு மகளிர் சுய உதவிக்குழுவினருடன் இணைந்து 4 ஆண்டுகளுக்கு முன்பு மரவள்ளி கிழங்கு சிப்ஸ் தயாரிக்க தொடங்கினேன்.

ஒரு சிப்ஸ் மாஸ்டர், மரவள்ளியை உரிக்க 2 தொழிலாளர்கள் இருந்தால் போதும். கடைகளுக்கு  சப்ளை செய்ய தகுதிக்கு ஏற்ப ஒரு மொபட் அல்லது ஆட்டோ தேவைப்படும். ஒரு டன் சிப்ஸ்  தயாரிக்க 3 நாள் ஆகும். மாதம் ஒன்றுக்கு 5 டன் வரை தயாரிக்க முடியும். நான் சிப்ஸ்  தயாரிப்பது, பேக்கிங் செய்வது போன்ற பணிகளை கவனித்துக்கொள்கிறேன். எனது கணவர் கடைகளில் ஆர்டர் பிடிப்பது, சப்ளை செய்வது, கலெக்ஷன் மற்றும் மரவள்ளி  கொள்முதல்  போன்ற  பணிகளை கவனித்துக் கொள்கிறார். இது ஒரு லாபகரமான தொழில்.

சந்தை வாய்ப்பு

100 கிராம், 250 கிராம், 500 கிராம், 1 கிலோ என பேக்கிங் செய்யப்படும் சிப்ஸ் பாக்கெட்களை  அருகில் உள்ள சிறிய மற்றும் பெரிய கடைகள், பேக்கரிகள், டாஸ்மாக் பார்கள் என  உள்ளூரிலேயே எளிதில் விற்பனை செய்ய முடியும்.

டிப்ஸ்..

தயாரிக்கப்பட்ட தேதி யில் இருந்து 15 நாட்களுக்குள் சிப்ஸ் வகை களை சாப்பிட்டு விட வேண்டும்.  அதற்கு மேல் வைத்திருந்தால் எதிர்பார்த்த சுவை இருக்காது. எனவே உடனுக்குடன் டெலிவரி செய்வது அவசியம். சிப்ஸை பிளாஸ்டிக்  பாக்கெட்டுகளில் இருந்து பிரித்த
தும் காற்றுபுகாத பிளாஸ்டிக் டப்பாக்களில் போட்டு வைத்தால் மொறுமொறுப்புடன் இருக்கும்.

செலவு

ஒரு டன் மரவள்ளி கிழங்கு தற்போதைய மார்க்கெட் நிலவரப்படி ரூ.7500க்கு விலைக்கு வாங்கப்படுகிறது. தோட்டத்தில் இருந்து கடைக்கு கொண்டு வர வண்டி வாடகை மற்றும் ஏற்று , இறக்கு கூலி என ரூ.1500, எரிபொருள் ரூ.3000, 15 கிலோ கொண்ட 2 டின் பாமாயில் ரூ.1800, 4 கிலோ மிளகாய் தூள் ரூ.500, 4 கிலோ உப்பு ரூ.20, கலர் பொடி ரூ.50, சிப்ஸ் மாஸ்டர்  சம்பளம் ரூ.400, சிப்ஸ் சீவுவதற்கு கூலி (2 நபர்களுக்கு) ரூ.500, பேக்கிங் செய்ய பயன்படும் கேரி பேக் ரூ.100, விற்பனைக்கு கொண்டு செல்லும்போது வாடகை ரூ.750 என ஒரு டன்  மரவள்ளி கிழங்கு தயாரிக்க ரூ.16,120 வரை செலவாகும். இது தவிர இடவாடகை,  மின்கட்டணம் தனி.

வருமானம்

ஒரு டன் மரவள்ளி கிழங்கில் 380 கிலோ சிப்ஸ் தயாரிக்க முடியும். கிலோ கணக்கில் விற்றால் ஒரு கிலோ ரூ.60க்கு விற்க முடியும். இதன்மூலம் டன்னுக்கு ரூ.22,800  கிடைக்கும். 500 கிராம், 250 கிராம் என பாக்கெட் செய்து சில்லரையில் விற்கும்போது ரூ.2000 வரை கூடுதலாக லாபம் ஈட்ட முடியும். ரூ.16,120 செலவு போக மீதம் ரூ.6,680 வரை லாபம் ஈட்ட முடியும்.

தோட்டத்தில் இருந்து விலைக்கு வாங்கி வருவதற்கு பதில் தோட்டத்தை குத்தகைக்கு எடுக்கும்  பட்சத்தில் மரவள்ளி கொள்முதல் விலையில் டன் ஒன்றுக்கு ரூ.300 வரை சேமிக்க முடியும்.  மரவள்ளி கிழங்கில் இருந்து உரிக்கப்படும் தோலை, மாட்டுதீவனம் தயாரிக்க கிலோ ரூ.2க்கு  விலைக்கு வாங்கி கொள்கின்றனர். இதன் மூலம் ரூ.150 வரை கிடைக்கும்.

தயாரிப்பது எப்படி?

மரவள்ளி கிழங்கை தோட்டத்தில் இருந்து விலைக்கு வாங்கி வந்து நன்றாக கழுவி தோலை உரிக்க வேண்டும். பின்னர் சிப்ஸ் சீவும் கட்டையை கொண்டு தேவையான சைஸ்களில் சீவலாம். வட்டமாக வேண்டுமெனில் அதற்கென உள்ள கட்டையில்  சீவவேண்டும். குச்சி சிப்ஸ் என்றால் அதற்கு தனி கட்டை உள்ளது.  சீவிய  கிழங்குகளை கொதி நிலையில் இருக்கும் எண்ணெயில் போட்டு 5 நிமிடங்களில் எடுத்து விடலாம். பேக்கிங் செய்வதற்கு முன்பாக சிறிதளவு மிளகாய் பொடி, உப்பு கலந்து  சிப்ஸ் மீது லேசாக தூவ வேண்டும்.

எண்ணெயில் பொரித்து எடுத்திருப்பதால், பொடி நன்கு ஒட்டிக் கொள்ளும். பிறகு தேவையான அளவுகளில் பேக்கிங் செய்து விற்பனைக்கு அனுப்பலாம். சுவை, தரத்தில் கவனம் செலுத்துவது அவசியம். ஒவ்வொரு முறை தயாரிக்கும்போதும், அதை சுவைத்து பார்ப்பதும் முக்கியம்.

ரூ.10 ஆயிரம் போதும்

மரவள்ளி கிழங்கு, கேஸ் சிலிண்டர் (விறகு அடுப்பு என்றால் தென்னை மட்டைகள்), மிளகாய்த்தூள், உப்பு,  பாமாயில், கலர்பொடி, வடைசட்டி, அரிகரண்டி, சாரணை, ஹீட்டர், கம்ப்யூட்டர் தராசு ஆகிய பொருட்கள் தேவை. மரவள்ளி கிழங்கு சீவும் கட்டை ரூ.750, எரிபொருள் ரூ.2000, வடைசட்டி ரூ.3000, அரிகரண்டி ரூ.500, சாரணை ரூ.400, ஹீட்டர் ரூ.300, கம்ப்யூட்டர் தராசு ரூ.3000 என மொத்தம் ரூ.10 ஆயிரம் முதலீடு போதும்.  

கருத்துகள்

  1. very good article...
    really very useful for all of us.

    thanks for sharing...
    pls write more self business articles.

    with best regards
    Babu
    contactbabu@yahoo.com

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவகிரக துதி

சூரியன் சீலமாய் வாழ சீரருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி! சூரியா போற்றி! சுந்தரா போற்றி! வீரியா போற்றி! வினைகள் களைவாய் சந்திரன் எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி! திருவருள் தருவாய் சந்திரா போற்றி! சற்குணா போற்றி! சங்கடந்தீர்ப்பாய் சதுராய் போற்றி! அங்காரகன் (செவ்வாய்) சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ மங்கள செவ்வாய் மலரடி போற்றி! அங்காரகனே அவதிகள் நீக்கு! புதன் இதமுற வாழ இன்னல்கள் நீக்கு புத பகவானே பொன்னடி போற்றி! பதந்தந்தாள்வாய் பண்ணொளியானே உதவியே யருளும் உத்தமா போற்றி! குரு குணமிகு வியாழக் குருபகவானே மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய் ; பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா கிரகதோஷமின்றி கடாஷித்தருள்வாய் சுக்கிரன் சுக்கிரமூர்த்தி சுப சுக மீவாய் வக்ரமின்றி வரமிகத் தருவாய் வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே சனி சங்கடந் தீர்ககுஞ் சனி பகவானே! மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றி சனீஸ்வரத் தேவே இச்சகம் வாழ இன்னருள் தா தா ராகு அரவெனும் ராகு அய்யனே போற...

சோப் ஆயிலில் சூப்பர் லாபம்!

வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் இயந்திரங்கள் எதுவும் இல்லாமல் சோப் ஆயில் தயாரிக்கலாம். இதன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை காளம்பாளையத்தில் ஹக் புராடக்ட்ஸ் சோப் ஆயில் தயாரிக்கும் ரமணன். அவர் கூறியதாவது: கோவையில் தேசிய பஞ்சாலை கழக தரக்கட்டுப்பாட்டு பிரிவில் உதவி ஸ்பின்னிங் மாஸ்டராக 28 ஆண்டுகள் பணிபுரிந்தேன். 7 ஆண்டுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றேன். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற என் போன்றவர்களை, கோவையில் உள்ள சிறு தொழில் சேவை மையத்தினர் சுய தொழில் செய்வதற்கான பயிற்சிக்கு அழைத்தனர். அங்கு ஒரு மாதம் நறுமண சொட்டு நீலம், பினாயில், சோப் பவுடர் போன்றவை தயாரிக்க கற்றுக் கொடுத்தனர். ரூ.5 ஆயிரம் முதலீட்டில் சோப் ஆயில் தயாரிப்பதற்கான தொழிலை துவக்கினேன். நானே முதலாளியாகவும், தொழிலாளியாகவும் இருந்து மாதம் 200 லிட்டர் சோப் ஆயில் தயாரித்து விற்கிறேன். சோப் ஆயில் தயாரித்து விற்பவர்கள் பலர் இருந்தாலும், தரமாக தயாரித்து விற்பதால் ஆர்டர் தொய்வு இல்லாமல் கிடைக்கிறது. தினசரி 5 மணி நேரம் உழைத்தால் 10 லிட்டர் சோப் ஆயில் தயாரிக்க முடியும். 20...

Various Herbs & Spices English & Hindi Names

English/ ஆ ங்கிலம் Tamil/ தமிழ் Hindi/ हिन्दी/ ஹிந்தி Rice Arisi( அரிசி) Chaval Black gram Kadalai Parruppu ( கடலை பருப்பு) Channa Dhal Black Gram Ulluththam Paruppu ( உளுதம் பருப்பு) Urad Dhal Green gram dhal Payaththam Parruppu( பயத்தம் பருப்பு) Moog Dhal Green gram Whole Paasi Parruppu( பாசி பருப்பு) Moog Sabut Yellow split peas Thuvaram Parruppu( துவரம் பருப்பு) Toor Dhal Green gram  Split Pachchai payiru( பச்சைப்பயறு) Moong Chilka Garbanzo beans Kondai Kadalai( கொண்டை கடலை) Kabuli Channa Peanuts Veerkadalai( வேற்கடலை) Moong falee All Purpose Flour Maida Maavu( மைதா மாவு) Maida Gram flour Kadalai Maavu( கடலை மாவு) Besan Wheat flour Godhumai maavu( கோதுமை மாவு) ...