இதுவரை பயில்வோம் பங்குசந்தையில் அநேக விசயங்களை பார்த்து வந்தோம், முக்கியமாக open, high, low, close என்பதினை பற்றியும் அதில் இருந்து எப்படி ஒரு candlestick bar உருவாகிறது என்பதினை பற்றியும், பிறகு இவ்வாறு உருவாகும் ஒரு தனிப்பட்ட மற்றும் இரண்டு மூன்று candle களின் வடிவத்தை வைத்து எப்படி அதன் அடுத்த கட்ட நகர்வுகளை தீர்மானிக்கலாம் என்றும் பார்த்து வந்தோம், மேலும் இது போன்று சந்தையின் அல்லது ஒரு குறிப்பிட்ட பங்கின் அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்க பேருதவியாக இருக்கும் Indicator களை பற்றியும் பார்த்து வந்தோம், தற்பொழுது இவ்வாறு உருவாகும் candle களின் தொகுப்பை பயன்படுத்தி எப்படி ஒரு பங்கில் வர்த்தகம் செய்யலாம் என்பதினை பார்ப்போம், அதற்க்கு முன் தினமும் சந்தையில் வர்த்தகத்தில் உருவாகும் இந்த ஒவ்வொரு நாள் candle களின் தொகுப்பை பற்றி கொஞ்சம் பார்த்து விடுவோம்,
உதாரணமாக நாம் Technical Analysis ல் பயன்படுத்தும் இந்த வரைபடங்களில் இருக்கும் candle களின் தொகுப்புகள் ஒன்றாக சேர்ந்து நமக்கு சில உருவங்களை ஞாபகப்படுத்தும், அப்படி ஞாபகப்படுத்தும் இந்த உருவங்களை வைத்து தான் நாம் அந்த பங்கில் வர்த்தகம் செய்வதை முடிவு வேண்டி இருக்கும் ,
இது போன்ற வடிவங்கள் தோன்றினால் இன்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்று யாரும் எழுதி வைக்கவில்லை, ஆனால் இயற்கையாகவே இது போன்ற வடிவங்கள் சந்தையில் வர்த்தகமாகும் பங்குகளின் வரைபடங்களில் அமைந்து கொண்டு இருந்தது, இப்படியாக அமைந்து வந்த அந்த வடிவங்களை அந்த பங்குகளின் விலைகள் மேலேயோ அல்லது கீழேயோ கடந்து செல்லும் போது முக்கியமாக குறிப்பிடும் படியான விளைவுகள் தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டே இருந்தது,
இப்படி எல்லாம் ஏற்படும் விளைவுகளை மறு முறை மறு முறை சோதனை செய்து, எப்பொழுது எல்லாம் இது போன்ற உருவங்கள் ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் இதே விளைவுகள் வருவதை கண்டறிந்து நமக்கு அறிவித்தனர், ஆகவே பங்கு சந்தையில் பங்குகளின் உயர்வுகள் தாழ்வுகள் நடப்பது இயற்கையே என்பதினை மனதில் வைத்து, இது போன்று நடப்பது இயற்கையாகவே நடந்த ஒன்று என்றும், யாரும் உக்கார்ந்து இதற்க்கான Rules & Regulation ஐ எழுதி நமக்கு தரவில்லை என்பதினையும் , சந்தையில் இயற்கையாக நடப்பதை தான் தொகுத்து தந்தார்கள் என்பதினையும் மனதில் வைத்து, அப்படிப்பட்ட வடிவங்கள் என்ன என்ன, அதன் விளைவுகள் என்ன என்ன என்பதினை பார்ப்போம் வாருங்கள்,
அதற்க்கு முன் இது போன்ற வடிவங்கள் வரை படங்களில் தோன்றி இருக்கும் போது அந்த வடிவங்களை நாம் அடையாள காண நமக்கு வேறு விதமான பார்வைக் கோணம் வேண்டும், இயற்கையாகவே நாம் அனைவருக்கும் பார்ப்பதை அப்படியே உணர்ந்து கொள்ளும், புரிந்து கொள்ளும் திறமைகள் இருந்தாலும், சந்தையில் இருந்து கிடைக்கும் இந்த வரைபடங்கள் மிகவும் நேர்த்தியாக புள்ளி விவரமாக வடிவங்களை தராது,
எல்லாம் சித்தன் போக்கு சிவன் போக்கு என்ற அளவில் தான் அமைந்து இருக்கும், இவாறு அமைந்து இருக்கும் இது போன்ற விசயங்களை கண்டு ஆராய்ந்து தெளிவு பெற்று ஒரு முடிவுக்கு வருவதற்குள் உங்கள் பொறுமை தீர்ந்து விடும், பார்த்த மாத்திரத்திலே கண்டு உணர்ந்து கொள்ள சரியான தொடர் பயிர்ச்சிகளே உதவும்,
மேலும் வரைபடங்களில் மேம்போக்காக அமைந்து இருக்கும் உருவங்களை கண்டு பிடிப்பதற்கு முறையான சில பயிற்ச்சிகள் நமக்கு தேவைப்படும், ஆகவே இதை மனதில் கொண்டே கீழே சில படங்களை கொடுத்துள்ளேன், இந்த படங்கள் அனைத்து எதார்த்தமாக பார்க்கும் போது சில விசயங்களையும், ஆழாமாக பார்க்கும் போது வேறு சில விசயங்களையும் நமக்கு உணர்த்தும்,
இது போன்ற படங்களை நான் நடத்தி வரும் Technical Analysis வகுப்புகளில் கலந்து கொள்ளும் நண்பர்களுக்கு தெளிவாக புரிய வேண்டும் என்ற அடிப்படையில் காட்டப்பட்டு, சில விளக்கங்களை அவர்களிடம் இருந்து வரவழைத்து அவர்களின் பார்வை கோணங்களை மாற்றுவோம், அவைகளில் சில படங்களை உங்களுக்கும் தருகிறேன் பாருங்கள், பார்த்து உங்கள் கருத்துகளை சொல்லுங்கள் அடுத்த வாராம் தொடருவோம் …..
படங்கள்:-








மேலே உள்ள படங்களை பார்த்து விட்டீர்களா சரி கீழே உள்ள விசயத்தையும் பாருங்கள், கீழே உள்ள ஆறு படங்களை பாருங்கள், இதில் எப்படி ஒரு உருவ அமைப்பு நமது chart படங்களில் தோன்றும்! என்பது இந்த அழகான பெண்ணின் வரை படம் உருவாக்கப்படுவதில் இருந்து சற்று தெளிவாகும்,
இப்படி தான் சந்தையில் அடுத்த கட்ட நகர்வுகளுக்காக அதற்குரிய வடிவங்களை மெல்ல மெல்ல shape செய்யப்படும், இறுதியில் அழகான பெண்ணின் வரைபடம் கிடைத்தது போல! அழகான உருவம் break out பெற்று நமக்காக காத்து இருக்கும்,
இவ்வாறு காத்து நிற்கும் வடிவங்களை தான் நாம் சரியான நேரத்தில் கண்டு பிடித்து நமது வர்த்தகத்தை தொடங்கி வெற்றி பெற வேண்டும், இதற்க்கு தான் Technical Analysis என்று பெயர், அவைகளை பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்
சரி படங்களை பாருங்கள்:






கருத்துகள்
கருத்துரையிடுக