முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பயில்வோம் பங்குச்சந்தை பாகம் 21



கடந்த வாரம் cup with handle என்ற pattern பற்றி பார்த்து வந்தோம், இதில் முதல் இலக்காக handle இன் உயரம் இருக்கும் என்றும், அடுத்து cup இன் உயரத்தை இலக்காக வைத்து நகர தொடங்கும் என்றும், அவ்வாறு நகரும் போது higher top, higher bottom என்ற முறையில் ஏறி இறங்கி, ஏறி இறங்கியே நகரும் என்றும் பார்த்தோம்,
மேலும் இந்த cup in உயரத்தை  இலக்காக  வைத்து நகரும் போது முதலில் அந்த cup இன் மொத்த உயரத்தில்  சில சதவிகிதங்களை உயரத்தில் சென்று அடையும் போது, நல்ல இளைப்பாறல் அல்லது profit booking என்ற நிலைமை வரும், இந்த சதவிகிதங்கள் எதன் அடிப்படையில் வருகிறது என்றும், அந்த சதவிகிதங்கள் என்ன என்ன என்றும் இப்பொழுது பார்ப்போம்,
அதாவது technical analysis இல் Fibonacci Retracement   என்ற ஒரு அளவுகோள்  உள்ளது, இந்த அளவுகோள் ஆனது முழுவது சதவிகிதங்களின் அடிப்படையில் கணக்கிடப்படுவது ஆகும், மேலும் இந்த Fibonacci முறைகளில் retracement என்ற முறை மட்டும் இல்லாமல் இன்னும் சில விசயங்களும் உள்ளது, அதாவது   Fibonacci Time Zone, Fibonacci arc, Fibonacci fan என்று அநேக விசயங்களை நாம் நமது Technical analysis இல் பயன்படுத்தலாம்,
இதில் அடிக்கடி பயன்படுத்தப்படுவதும் மிக முக்கியமான விளைவுகளை தரக்கூடியதுமான Fibonacci Retracement ஐ பற்றி சற்று விரிவாக பார்ப்போம் அதற்க்கு முன் இந்த அளவுகள் எப்படி வந்தது, இது யாரால் கண்டு பிடிக்கப்பட்டது, இதன் முக்கியத்துவம் என்ன   என்பன வற்றை சற்று விரிவாக இப்பொழுது பார்ப்போம்…  
அதற்க்கு முன்  FIBONACCI  என்று சொல்கிறோமே அவரை பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள்,
FIBONACCI  என்பவர்  கிபி 1175  TO  கிபி 1250 களில் ஐரோப்பியாவில் வாழ்ந்த ஒரு மிகப்பெரிய கணிதமேதை
இவர் பிறந்தது இத்தாலியில் உள்ள பிசா என்னும் இடத்தில்,
இவர் வாழ்ந்த காலத்தில் கணிதத்தில் மிகப்பெரிய மற்றும் செயற்கரிய செயல்கள் அநேகம்  செய்துள்ளார்,
இன்னும் சொல்லவேண்டும் என்றால் அவர் அன்று கொடுத்த விசயங்களை தான் நாம் இன்று பயன்படுத்துகிறோம்,
உதாரணமாக சொல்லவேண்டும் என்றால்  ROMAN NUMBERS ஐ சொல்லலாம்மேலும் நாம் பயன்படுத்தும் கூட்டல் கழித்தல் களில் கூட இவரின் வழிகட்டுதல்கள் உண்டு …..
இப்படி நிறைய விசயங்களை சொல்லிக்கொண்டே போகலாம் 
சரி நாம் TECHNICAL ANALYSING இல் பயன்படுத்தி வரும்  FIBONACCI RETRACEMENT LEVELS இல் சில சதவிகிதங்களை பயன்படுத்துவோம், அவைகள் 23.6%, 38.2%, 50%, 61.8%, 76.4%, 85.4% இதில் மிக முக்கியத்துவம்  வாய்ந்தது 61.8%, 38.2%,  இந்த  இரண்டு அளவுகள் எப்படி வந்ததுமேலும் அதன் முக்கியத்துவம் என்ன என்பதை பற்றியும், மற்றும் 23.6%, 50%, 76.4%, 85.4%, என்ற அளவுகள் எப்படி வந்தது! மேலும் அவைகளின் முக்கியத்துவம் பற்றியும் பார்ப்போம் 
கிபி 1175 TO  கிபி 1250 களில் வாழ்ந்த  FIBONACCI  அவர்கள் சில  எண்களின் வரிசையை கண்டுபிடித்தார் 
அதாவது முதலில் வை எழுதிக்கொள்ளவேண்டும் 
பிறகு அந்த வுடன் என்ற எண்ணை கூட்ட வேண்டும், 1 என்று விடை வரும்
வந்த விடையுடன் முன்னாள் உள்ள எண்ணான மீண்டும் கூட்ட வேண்டும், 2 என்று விடை வரும், அதனுடன்  முன்னால உள்ள எண்ணான ஐ கூட்ட வேண்டும்என்று விடை வரும், அதனுடன் முன்னாள் உள்ள எண்ணான ஐ கூட்ட வேண்டும்என்று விடை வரும், அதனுடன்  முன்னால உள்ள எண்ணான ஐ கூட்ட வேண்டும்என்று விடை வரும், அதனுடன் முன்னால உள்ள எண்ணான ஐ கூட்ட வேண்டும் ,
இப்படியாக முன்னாள் உள்ள எண்ணுடன் கூட்டிக்கொண்டே சென்றால்,  நீளமான எண்களின் வரிசை வரும் அந்த வரிசைக்கு பெயர் தான் FIBONACCI SERIAL NUMBERS,
என்ன புரியவில்லையா கீழே உள்ள எண்களின் வரிசையை பாருங்கள் புரியும்   
0-  1- 1- 2- 3- 5- 8- 13- 21- 34- 55- 89- 144- 233- 377- 610- 987........  
இப்போ புரியுதா அதாவது இந்த வரிசையை பாருங்கள்
முதலில் வை எழுதிக்கொள்ள வேண்டும்பின் அதனுடன் ஐ கூட்ட வேண்டும், வரும் விடையான  எழுதிக்கொள்ளவேண்டும், அடுத்து இந்த என்ற எண்ணுடன் முன்னாள் உள்ள 0  வை கூட்ட வேண்டும்வரும் விடையான  எழுதிக்கொள்ளவேண்டும், அடுத்து இந்த  1 என்ற எண்ணுடன் முன்னாள் உள்ள  கூட்ட வேண்டும்வரும் விடையான   எழுதிக்கொள்ளவேண்டும் இப்படியாக முன்னாள் உள்ள எண்ணுடன் கூட்டினால் அடுத்து அடுத்து எண்கள் கிடைக்கும், அவைகளை எழுதிக்கொண்டால் ஒரு வரிசை கிடைக்கும்,
அந்த வரிசைக்கு பெயர் தான் FIBONACCI SERIAL NUMBERS ஆகும், 
இவ்வாறு கண்டுபிடித்த எண்களை வைத்துக்கொண்டு  FIBONACCI  அவர்கள் சில விசயங்களை கண்டுபிடித்தார்,
அவர் கண்டுபிடித்த அந்த விஷயம் தான் அனைவராலும் இன்று கொண்டாடப்படும்  GOLDEN NUMBER, OR GOLDEN MEAN  NUMBER எனப்படும் GOLDEN AVERAGE ஆகும் ,
இந்த என்னை தான் நாம் TECHNICAL ANALYSING இல் உள்ள FIBONACCI RETRACEMENT LEVELS இல் முக்கியமான நிலையாக பயன்படுத்துகிறோம்  
61.8%:-
சரி அந்த FIBONACCI SERIAL NUMBERS இல் இருந்து இந்த முக்கியமான எண்ணான 61.8% ஐ அவர் எப்படி கண்டுபிடித்தார் என்பதை இப்பொழுது பார்ப்போம்,
அதாவது இந்த வரிசையில் உள்ள எண்களை ஒன்றுடன் ஒன்றை FIBONACCI அவர்கள் இரண்டு விதமாக வகுத்துக்கொண்டார் (DIVIDING)
இப்பொழுது  அவர் செய்த இரண்டு வகுத்தல் முறைகளில்  முதல்  முறையை பற்றி  பார்ப்போம்
முதல் முறை
அதாவது இந்த வரிசையில் உள்ள ஒரு நம்பரை எடுத்துக்கொண்டு அதற்க்கு பின்னால் உள்ள மற்றொரு நம்பரால் வகுப்பது (DIVIDING),
அவர் எப்படி வகுத்தார் என்பதை கீழே காண்க
அந்த வரிசை Fibonacci serial numbers   
"0- 1- 1- 2- 3- 5- 8- 13- 21- 34- 55- 89- 144- 233- 377- 610- 987"  
இரண்டு இழக்க நம்பரில் இருந்து வகுக்க (DIVIDING) ஆரம்பிப்போம்
21/13 விடை = 1.61538
34/21 விடை = 1.61904
55/34 விடை = 1.61764
89/55 விடை = 1.61818
144/89விடை = 1.61797
233/144விடை=1.61805
377/233விடை=1.61802
610/377விடை=1.61803
இப்படியாக இந்த முதல் முறையில் அவர் வகுத்ததில் (DIVIDE) அவருக்கு கிடைத்த விடை சராசரியாக 1.618 ஆக இருந்தது   
இரண்டாம முறை
இந்த முறை முதல் முறைக்கு நேர் எதிரான முறை ,
அதாவது அந்த வரிசையில் உள்ள  ஒரு நம்பரை அதன் அடுத்த இடத்தில் உள்ள நம்பருடன் வகுப்பது (DIVIDING)
அந்த வரிசை Fibonacci serial numbers
"0- 1- 1- 2- 3- 5- 8- 13- 21- 34- 55- 89- 144- 233- 377- 610- 987"
அதாவது கீழ் கண்ட முறையில்
13/21 விடை = 0.61904
21/34 விடை = 0.61764
34/55 விடை = 0.61818
55/89 விடை = 0.61797
89/144விடை = 0.61805
144/233விடை= 0.61802
233/377விடை= 0.61803
377/610விடை= 0.61803
இப்படியாக இந்த இரண்டாம் முறையில் அவர் வகுத்ததில் (DIVIDE) அவருக்கு கிடைத்த விடை சராசரியாக 0.618 ஆக இருந்தது  
இந்த இரண்டு வகுத்தலிலும்  அவருக்கு கிடைத்த இரண்டு சராசரி விடைகள்
1.618 மற்றும் 0.618 ஆகும்
இந்த இரண்டு சராசரி விடைகளிலும் பொதுவானதாக .618  என்ற எண் இருந்தது ஆகவே அதை எடுத்துக்கொண்டார் ,
இப்பொழுது இந்த நம்பரை அரைகுறை நம்பராக இல்லாமல் முழு நம்பராக மாற்ற வேண்டி இதை 100 உடன் பெருக்குவோம் ,
பொதுவாக நாம் சதவிகிதங்களை  100  அடிப்படையில் தான் காண்போம் இல்லையா ஆகவே இந்த என்னை 100  உடன் பெருக்கினால் வரும் விடை 100*.618 = 61.8 இப்படியாக கிடைத்தது ,
இந்த நம்பரானது மிக முக்கியத்துவமான அனைவராலும் கொண்டாடப்படும் GOLDEN MEAN OR GOLDEN RATIO ஆகும் ,
இந்த GOLDEN MEAN  நம்பரை தான் (61.8%)  நாம் TECHNICAL ANALYSING இல் FIBONACCI RETRACEMENT LEVEL இல் மிக முக்கியமானதாக பார்க்கின்றோம்
மேலும் இந்த GOLDEN MEAN NUMBER OR GOLDEN AVERAGE NUMBER ஐ பற்றி நான் இங்கு கொஞ்சமாவது சொல்லியே ஆகவேண்டும்
இந்த நம்பரானது நமது வாழ்க்கையில் நீக்கமற நிறைந்த  ஒரு MAGICAL நம்பர் ஆகும் ,
எப்படி என்று பார்ப்போம் வாருங்கள்இந்த விஷயம் ஒரு சுவாரசியமான விஷயம் கூட ,
மேலும் அனைத்தையும் சொல்ல முடியாததால் 1 , 2  ஐயாவது சொல்கிறேன்
இப்பொழுது இந்த  61.8% என்ற MAGICAL  நம்பர் எப்படி நமது பூமியில் உள்ளது என்று பார்ப்போம் 
நமது பூமி அதிக அளவு நீரினாலும் குறைந்த அளவு நிலத்தினாலும் ஆனது , அது உங்கள் அனைவருக்கும் தெரியும் ஆனால் இந்த நீரின் அளவு கிட்ட தட்ட  61.8%  என்னஆச்சரியமாய் இருக்கா!
அடுத்து நம்மை வைத்தே ஒரு உதாரணம் பார்ப்போம் ,
உங்களது முழு உயரத்தை அளந்து கொள்ளுங்கள் அந்த உயரத்தில் கிட்ட தட்ட 61.8% உயரத்தில்  நமது முக்கியமான உறுப்புகள் அமைந்துள்ளது, பெண்களுக்கு அவர்களின் மொத்த உயரத்தில் 61.8% உயரத்தில் தான் தாய்மை அடையக்கூடிய கர்ப்பபை உள்ளது என்றும்  சொல்கிறார்கள் , இப்படியே இன்னும் நிறைய விஷயங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்,
இப்பொழுது FIBONACCI அவர்களின் SERIAL NUMBER களின் முக்கியத்துவத்தை பற்றியும் பார்ப்போம்
உதாரணமாக நமது கைகளை எடுத்துக்கொள்ளுங்கள்
நமக்கு கைகள் அதில் விரல்கள் அந்த விரல்களிலும் அடுக்குகள்இவ்வாறு நிறைய சொல்லலாம்
இன்னும் பார்க்க வேண்டும் என்றால் இந்த LINK CLICK செய்து பாருங்கள்,
காய்கனிசெடி கொடிகளில், பூ இவைகளில் எல்லாம் எப்படி FIBONACCI NUMBER கள் அமைந்துள்ளது என்று அறிந்து கொள்ளலாம்
இவளவு விஷயங்கள் நமக்கு தேவை இல்லை தான் இருந்ததாலும் இந்த FIBONACCI NUMBER எவ்வளவு முக்கியமானது என்று காட்டுவதர்ர்க்காக சொல்ல வேண்டி ஏற்ப்பட்டது , சரி நாம் நம் விசயத்திற்கு வருவோம்
இந்த  FIBONACCI  இன்  GOLDEN MEAN  புள்ளியான  61.8  ஐ நாம்  TECHNICAL ANALYSIS இல் FIBONACCI RETRACEMENT LEVEL கள் என்ற பெயரில் பயன்படுத்துகிறோம், மேலும் இதனுடன்  23.6%, 38.2%, 50%, 76.4%, போன்ற அளவுகளையும் பயன் படுத்துகிறோம் , இந்த மற்ற  அளவுகள் எப்படி வந்தது என்பதனையும் பார்த்துவிடுவோம்
இந்த 61.8  100  உடன் கழித்தால் கிடைப்பது = 38.2
இந்த 38.2 61.8 உடன் கழித்தால் கிடைப்பது = 23.6
இந்த 23.6  100 இல் கழித்தால் வருவது         = 76.4
இந்த 68.1 உடன் 23.6  கூட்டினால் வருவது85.4  
ஆகவே  நாம் பயன்படுத்தும்  FIBONACCI RETRACEMENT LEVEL களின் மொத்த  வரிசையை பார்ப்போம்
61.8 - 32.8                     = 23.6%
100 - 61.8                       = 32.8%
PSYGOLOGICAL USE  = 50%
GOLDEN NUMBER      = 61.8%
100 - 23.6                     = 76.4%
23.6 + 61.8                   = 85.4%
அனுபவத்தில்           = 89%   
(சைக்காலஜியாக நாம் எப்பொழுதும் முழுஅரை (1, ½)  ஆகியவைகளை பயன் படுத்துவோம் இல்லையா அந்த வகையில் 50% மும் முக்கியமானதே), மேற்கண்ட அனைத்து அளவுகளையும் நாம்  FIBONACCI RETRACEMENT LEVEL களில் பயன்படுத்துகிறோம் ,  
இந்த அளவுகள் வந்த விதத்தை பார்த்துவிட்டோம் ,இப்பொழுது இந்த அளவுகள் உலக சந்தைகளின் வரை படங்களில் எப்படி அமைந்துள்ளது என்று கீழ் கண்ட படங்களை பாருங்கள் படத்திலேயே அதன் அளவுகளை ஆங்கிலத்தில் கொடுத்துள்ளேன் ,
FIBONACCI RETRACEMENT PICTURES: கீழே கொடுத்துள்ள படங்கள் அனைத்தும் 2009 MARCH மாதத்தில் உள்ள நிலைகள்  






இந்த FIBONACCI அளவுகளை படத்தில்  "0"  என்ற குறிக்கப்பட்ட கோட்டில் இருந்தது ஆரம்பித்து , "100"  என்ற குறிக்கப்பட்ட இடத்தில்  முடித்துள்ளேன்இந்த இடைப்பட்ட உயரங்களுக்கான FIBONACCI RETRACEMENT அளவுகள் எந்த எந்த இடங்களில் வருகிறது என்று பாருங்கள்,
அந்த இடங்களில் இப்பொழுது நடந்து வரும் உயர்வுகள் தடை நிலைகளை சந்திக்கலாம் ,
இந்த மற்றும் 100  என்ற புள்ளிகளானதுஇப்பொழுது நடந்து கொண்டிருக்கும் உயர்வுக்கு முன் நடந்த வீழ்ச்சி இன் தொடக்கப் புள்ளியில் இருந்தும் , இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் உயர்வு எந்த புள்ளியில் இருந்து ஆரம்பம் ஆனதோ அந்த புள்ளியில் இருந்தும் கணக்கிடப்பட்டுள்ளது,  
உங்களுக்கு இதில் ஏதும் சந்தேகம் இருந்தாலும்கருத்துகள் இருந்தாலும் பின்னூட்டம் இடுங்கள், மீதியை அடுத்த பதிவில் பார்ப்போம்….   ....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவகிரக துதி

சூரியன் சீலமாய் வாழ சீரருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி! சூரியா போற்றி! சுந்தரா போற்றி! வீரியா போற்றி! வினைகள் களைவாய் சந்திரன் எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி! திருவருள் தருவாய் சந்திரா போற்றி! சற்குணா போற்றி! சங்கடந்தீர்ப்பாய் சதுராய் போற்றி! அங்காரகன் (செவ்வாய்) சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ மங்கள செவ்வாய் மலரடி போற்றி! அங்காரகனே அவதிகள் நீக்கு! புதன் இதமுற வாழ இன்னல்கள் நீக்கு புத பகவானே பொன்னடி போற்றி! பதந்தந்தாள்வாய் பண்ணொளியானே உதவியே யருளும் உத்தமா போற்றி! குரு குணமிகு வியாழக் குருபகவானே மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய் ; பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா கிரகதோஷமின்றி கடாஷித்தருள்வாய் சுக்கிரன் சுக்கிரமூர்த்தி சுப சுக மீவாய் வக்ரமின்றி வரமிகத் தருவாய் வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே சனி சங்கடந் தீர்ககுஞ் சனி பகவானே! மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றி சனீஸ்வரத் தேவே இச்சகம் வாழ இன்னருள் தா தா ராகு அரவெனும் ராகு அய்யனே போற...

சோப் ஆயிலில் சூப்பர் லாபம்!

வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் இயந்திரங்கள் எதுவும் இல்லாமல் சோப் ஆயில் தயாரிக்கலாம். இதன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை காளம்பாளையத்தில் ஹக் புராடக்ட்ஸ் சோப் ஆயில் தயாரிக்கும் ரமணன். அவர் கூறியதாவது: கோவையில் தேசிய பஞ்சாலை கழக தரக்கட்டுப்பாட்டு பிரிவில் உதவி ஸ்பின்னிங் மாஸ்டராக 28 ஆண்டுகள் பணிபுரிந்தேன். 7 ஆண்டுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றேன். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற என் போன்றவர்களை, கோவையில் உள்ள சிறு தொழில் சேவை மையத்தினர் சுய தொழில் செய்வதற்கான பயிற்சிக்கு அழைத்தனர். அங்கு ஒரு மாதம் நறுமண சொட்டு நீலம், பினாயில், சோப் பவுடர் போன்றவை தயாரிக்க கற்றுக் கொடுத்தனர். ரூ.5 ஆயிரம் முதலீட்டில் சோப் ஆயில் தயாரிப்பதற்கான தொழிலை துவக்கினேன். நானே முதலாளியாகவும், தொழிலாளியாகவும் இருந்து மாதம் 200 லிட்டர் சோப் ஆயில் தயாரித்து விற்கிறேன். சோப் ஆயில் தயாரித்து விற்பவர்கள் பலர் இருந்தாலும், தரமாக தயாரித்து விற்பதால் ஆர்டர் தொய்வு இல்லாமல் கிடைக்கிறது. தினசரி 5 மணி நேரம் உழைத்தால் 10 லிட்டர் சோப் ஆயில் தயாரிக்க முடியும். 20...

தலையணை உறை.. தூள் கிளப்பும் லாபம்

பெண்கள்  வீட்டு வேலை  போக மற்ற நேரங்களில் சுயமாக வேலை செய்து சம்பாதிக்க ஏற்ற தொழில் தையல். ஜாக்கெட், சுடிதார் போன்ற நுட்பம் நிறைந்த தையல் வேலைகள் மேற்கொள்ள பயிற்சி வேண்டும். ஆனால் தலையணை உறை தைக்க எவ்வித பயிற்சியும் தேவை இல்லை. நுணுக்கமான தையல் தெரியாதவர்கள் தலையணை உறை தயாரித்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் என்கிறார் கோவை வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரிநாயக்கன்பாளையத்தை சேர்ந்த செல்வி. அவர் கூறியதாவது: கணவர் ஆட்டோ டிரைவர். குடும்ப வருமானம் போதவில்லை. அதை சமாளிக்க 4 ஆண்டுகளுக்கு முன்பு தையல் கற்றேன். வீட்டிலேயே பழைய தையல் மெஷின் வாங்கி போட்டு, ஜாக்கெட், சுடிதார் தைத்து வந்தேன். அப்போது எங்கள் பகுதியில் உள்ள பெண்கள் 13 பேர் சேர்ந்து அம்மன் சுய உதவி குழு துவக்கினோம். ரூ.10 ஆயிரம் கடனுதவி கிடைத்தது. அதன்மூலம் ஈரோட்டில் தலையணை உறை துணி வாங்கி வந்து தைத்தேன். அவற்றை கணவர் கடைகளுக்கு எடுத்து சென்று விற்று வந்தார். பின்னர் நானே ஆட்டோவில் ஏற்றி அபார்ட்மென்ட்கள், பள்ளி, கல்லூரி விடுதிகள், வீடுகளில் விற்றேன். நல்ல லாபம் கிடைத்தது. முழு நேர தொழிலாக தற்போது தலையணை உறை தயாரிக்கிறேன். இத...