மீன் குழம்பு
தேவையானவை:
வஞ்சிரம் மீன் - அரை கிலோ
சிறிய வெங்காயம் - 100 கிராம்
பூண்டு - 50 கிராம்
கறிவேப்பிலை - சிறிதளவு
புளி - 50 கிராம்
தேங்காய் - அரை மூடி
பெருஞ்சீரகம் - 10 கிராம்
வெந்தயம் - 10 கிராம்
மல்லித்தூள் - இரண்டு டேபிள் ஸ்பூன்
சீரகத்தூள் - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
மிளகாய்த் தூள் - இரண்டு டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் - 100 மில்லி
எலுமிச்சை சாறு - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
கடுகு, உளுந்து,
மிளகாய் வற்றல் - தாளிக்க
செய்முறை:
வஞ்சிரம் மீன் - அரை கிலோ
சிறிய வெங்காயம் - 100 கிராம்
பூண்டு - 50 கிராம்
கறிவேப்பிலை - சிறிதளவு
புளி - 50 கிராம்
தேங்காய் - அரை மூடி
பெருஞ்சீரகம் - 10 கிராம்
வெந்தயம் - 10 கிராம்
மல்லித்தூள் - இரண்டு டேபிள் ஸ்பூன்
சீரகத்தூள் - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
மிளகாய்த் தூள் - இரண்டு டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் - 100 மில்லி
எலுமிச்சை சாறு - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
கடுகு, உளுந்து,
மிளகாய் வற்றல் - தாளிக்க
செய்முறை:
· மீனை சுத்தம் செய்தபின், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து பத்து நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.
· தேங்காயை அரைத்து, கெட்டியான முதல் பாலை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
· வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, வெந்தயத்தை தாளிக்க வேண்டும்.
· இதனுடன் மிளகாய் வற்றல், வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
· இதனுடன் புளியை கரைத்து உப்பு மற்றும் அனைத்து பொடி வகைகளையும் சேர்த்து கொதிக்க விடவேண்டும்.
· குழம்பு கொதிக்கும் போது, மீன் துண்டுகளை சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேகவிட வேண்டும்.
· அடுப்பிலிருந்து இறக்குவதற்கு ஒருநிமிடம் முன்பாக, தேங்காய்ப் பாலை ஊற்ற வேண்டும்.
· தேங்காய்ப் பால் கொதித்தால் திரிந்து விடும். எனவே கொதிப்பதற்கு முன்பாக அடுப்பிலிருந்து இறக்கினால், தேங்காய் வாசனையுடன் மீன்குழம்பு மணக்கும்.
· சமையல் நேரம்: 25 நிமிடங்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக