காய்கறி கலவை குருமா
- காய்கறி கலவை - 1 கப் (பீன்ஸ்,காரட்,காலிப்ளவர்,பட்டாணி,உருளை)
- பெ.வெங்காயம் - 1 பெரியது
- தக்காளி - 1 சின்னது
- அரைக்க:
- தேங்காய் - அரை மூடி
- பொட்டுக்கடலை - 1 ஸ்பூன்
- ப.மிளகாய் - 1 (அல்லது) 2 காரத்திற்கேற்ப
- சோம்பு - 1/4 ஸ்பூன்
- முந்திரி பருப்பு - 5
- பூண்டு - 1 சின்ன பல்
- தாளிக்க:
- கடுகு - 1/2 ஸ்பூன்
- உ.பருப்பு - 1/2 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
- மல்லி இழை - சிறிதளவு
- ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு,உ.பருப்பு,கறிவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம்,தக்காளி சிறிது உப்பு போட்டு வதக்கவும்.
- அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நல்லா நைசா அரைத்து எடுத்து கொள்ளவும்.
- பின்னர் காய்கறி கலவையை போட்டு நல்லா ஒரு வதக்கு வதக்கி சிறிது உப்பு,தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- நல்லா கொதித்து வரும் சமயத்தில் அரைத்த விழுதை போட்டு கொதிக்க விடவும்.
- காய்கறிகள் வெந்த பின் மல்லி இழை தூவி அடுப்பை அணைத்துவிடவும்.
இட்லி,தோசை,சப்பாத்தி,பரோட்டாவிற்கு நல்ல காம்பினேஷன்.
கருத்துகள்
கருத்துரையிடுக