முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பங்குச்சந்தை வரலாறு

பங்குச்சந்தை வரலாறு (History of Stock Market)

இந்திய பங்குச்சந்தை (Indian Stock Market)
இந்தியாவின் முதல் பங்குச்சந்தை 1875 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மும்பை பங்குச்சந்தை (BSE – Bombay Stock Exchange) இந்தியாவின் பழமையான பங்குச்சந்தை ஆகும். இது 1875 ஆம் ஆண்டு 318 உறுப்பினர்களுடன் தனது பங்கு வர்த்தகத்தை தொடங்கியது. அதன் பிறகு 1965 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டது. இந்தியாவின் மற்றொரு பங்குச்சந்தை தேசிய பங்குச்சந்தை (NSE – National Stock Exchange) ஆகும்.


<>



மும்பை பங்குச்சந்தை (Bombay Stock Exchange)
மும்பை பங்குச்சந்தை இந்தியாவின் பழமையான பங்குச்சந்தை ஆகும். இந்திய பங்குச் சந்தையின் மிகவும் பழமை வாய்ந்த குறியீடு ஆகும். 1986-ல் தொடங்கப்பட்டது. அதன் பிறகு 1965 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டது.
இது சென்செக்ஸ் (SENSEX) என்ப்படும் அளவுகோலால் (Benchmark) 1986 ஆம் ஆண்டு முதல் கணக்கிடப்படுகிறது. இது மும்பை பங்குச்சந்தையின் அடையாள குறியீட்டு எண் ஆகும். சென்சிட்டிவ் இண்டெக்ஸ் (Sensitive Index) என்பதன் சுருக்கமே சென்செக்ஸ் ஆகும். இந்தியாவின் பல துறைகளிலும் உள்ள முப்பது பெரிய நிறுவனங்கள் இதில் இடம் பெறுகின்றன. இக்குறியீட்டு எண் அதிகரிக்க அதிகரிக்க பங்குச்சந்தை (Stock Market raising) நன்றாக உள்ளதாகவும், குறைய குறைய பங்குச்சந்தை வீழ்ச்சி (Stock Market falling) அடைவதையும் குறிக்கும்.  அவ்வப்பொழுது ஏதாவது ஒன்றிரண்டு நிறுவனங்கள் வெளியே செல்வதும் உள்ளே வருவதும் உண்டு. பங்குகளின் மார்க்கெட் மதிப்பினை, அதாவது விலையை வைத்தே கணக்கிடப்படுகிறது. இந்தக் கணக்கில் புரமோட்டர்கள் மற்றும் அரசாங்கத்திடம் இருக்கும் பங்குகள், மேலும் லாக் செய்யப்பட்ட பங்குகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச். இந்தியாவின் இருபெரும் எக்ஸ்சேஞ்சுகளில் இதுவும் ஒன்று. ஆசியாவின் மிகப் பழமை வாய்ந்த எக்ஸ்சேஞ்ச் என்ற பெருமையும் இதற்குண்டு. இதன் புரமோட்டர்கள் பெரும்பாலும் புரோக்கர்கள் ஆவர்.
  பி.எஸ்.சி (BSE) யின் வெளிப்புற சுவற்றில் மிகப்பெரிய திரையகத்தின் (Wide Screen) மூலமாக நடப்பு பங்குகளின் புள்ளிகள் திரையிடப்படும். இதே விபரங்களை NDTV Profit, CNBC etc., தொலைக்காட்சியிலும் காணலாம்.

பி.எஸ்.சி (BSE) சென்செக்ஸ்யை தவிர மற்ற புகழ்பெற்ற பங்கு குறியீடுகள்,
சென்செக்ஸ்,
பி.எஸ்.இ. மிட்கேப்,
பி.எஸ்.இ. ஸ்மால்கேப்,
பி.எஸ்.இ. 100,
பி.எஸ்.இ. 200,
பி.எஸ்.இ. 500,
பி.எஸ்.இ. ஆட்டோ,
பி.எஸ்.இ. பி.எஸ்.யூ. போன்றவை.
தேசிய பங்குச்சந்தை (National Stock Exchange – NSE)
தேசிய பங்குச்சந்தை மும்பையில் நிருவப்பட்டது. இது நிஃப்டி (Nifty) என்னும் அளவுகோலால் (Benchmark) கணக்கிடப்படுகிறது. இதில் இந்தியாவில் உள்ள 23 துறைகளிலிருந்து ஐம்பது நிறுவனங்கள் இடம் பெறுகின்றன. இந்தக் குறியீட்டை ஐ.ஐ.எஸ்.எல். என்ற நிறுவனம் நிர்வகித்து வருகிறது. ஐ.ஐ.எஸ்.எல். தேசிய பங்குச் சந்தை மற்றும் கிரிஸில் ஆகிய இரண்டு நிறுவனங்களால் உருவாக்கப்பட்டது.
 நிஃப்டி, பங்குச்சந்தையில் நன்றாக லாபம் கொழித்து கொண்டிருக்கும் முதல் ஐம்பது (50) கம்பனிகளின் பங்குகளை கொண்டு கணக்கிடப்படுகிறது. இதனால் நிஃப்டி-ஐம்பது (Nifty-50) என்றும் அழைக்கப்படுகிறது.
நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா லிமிடெட். இந்தியாவின் மிகப் பெரிய எக்ஸ்சேஞ்ச்.  மும்பையைத் தலைமையிட மாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த எக்ஸ்சேஞ்சின் சொந்தக்காரர்கள் யார் தெரியுமா? பல பொதுத்துறை வங்கிகள், பொதுத்துறை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மற்றும் சில நிதித்துறை சார்ந்த நிறுவனங்கள். பலரும் இதை அரசுக்குச் சொந்தமான நிறுவனமாக நினைக்கிறார்கள். இது தவறு. பல அரசுத்துறை நிறுவனங்கள் இணைந்து நடத்தும் தனியார் நிறுவனமே இது. நீங்கள் பங்குகளில் வர்த்தகம் செய்யும்போது உங்களது புரோக்கர் இந்த இரண்டு எக்ஸ்சேஞ்சுகளில் ஏதாவது ஒன்றில்தான் நீங்கள் கேட்ட பங்குகளை வாங்கியிருப்பார் அல்லது விற்றிருப்பார். சில புரோக்கர்கள் என்.எஸ்.இ.
அல்லது பி.எஸ்.இ. என ஏதாவது ஒரு எக்ஸ்சேஞ்சில்தான் உறுப்பினராக இருப்பார்கள். பெரிய புரோக்கர்கள் இரண்டு எக்ஸ்சேஞ்சிலும் உறுப்பினராக இருப்பார்கள்.

மார்க்கெட் மதிப்பு, துறைகள், முதலீட்டு முறைகள், அரசாங்கம் தனியார் போன்ற பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் பல குறியீடுகள் நமது இரண்டு சந்தைகளிலும் உள்ளன.
இந்தக் குறியீடுகளை பங்குச் சந்தை அல்லது அதனைச் சார்ந்த அமைப்புகள் கணக்கிடுகின்றன. குறிப்பிட்ட வரையறைக்குள் எந்தப் பங்குகள் ஒவ்வொரு குறியீட்டிலும் இடம் பெற வேண்டும் அல்லது வெளியேற வேண்டும் என்பதை பங்குச் சந்தையினால் உருவாக்கப்பட்ட கமிட்டிகள் நிர்ணயிக்கின்றன. நிறுவனங்கள் பெரிதாக இருந்து, அவற்றின் மார்க்கெட் மதிப்பு அதிகமாக இருந்து, அந்நிறுவனங்களின் பங்குகள் பரவலாக முதலீட்டாளர்களிடம் அதிக சதவிகிதத்தில் இருக்கும் பட்சத்தில், குறியீடுகளில் அப்பங்குகளின் வெயிட்டேஜ்
அதிகமாக இருக்கும்.

தேசியப் பங்குச் சந்தையின் பாப்புலர் குறியீடுகள்:
நிஃப்டி - இந்தியாவின் 50 பெரிய நிறுவனப் பங்குகள் அடங்கிய பட்டியல் இவை. 23 துறைகளைச் சார்ந்த பங்குகள் கொண்ட இந்தக் குறியீடு இந்தியப் பொருளாதாரத்தின் முகம் என்றே சொல்லலாம். தேசியப் பங்குச் சந்தையின் 48% வர்த்தகம் இப்பங்குகளில்தான் நடக்கிறது. இந்தக் குறியீட்டை வைத்து பல டெரிவேட்டிவ்கள் மற்றும் ஃபண்டுகள் வர்த்தகமாகின்றன. இந்தக் குறியீட்டில் இடம்பெறும் நிறுவனங்களைத்தான் 'புளூசிப் கம்பெனிகள்என்று அழைக்கிறோம்.
2.
நிஃப்டி ஜூனியர் - நிஃப்டி பங்குகளுக்குப் பிறகு அதிகமாக வர்த்தகமாகும் 50 பங்குகளை உள்ளடக்கியது. இந்தக் குறியீட்டையும் நிஃப்டியின் 50 பங்குகளையும் சேர்த்தால் இந்தியாவில் வர்த்தகமாகும் டாப் 100 பங்குகளின் லிஸ்ட் கிடைக்கும். இந்த இரண்டு குறியீடுகளிலும் வெவ்வேறு பங்குகள்தான் இடம் பெறும். ஒரே பங்குகள் இரண்டு குறியீடுகளிலும் இடம் பெறாது.

நிஃப்டி மிட்கேப் 50 - நடுத்தர மார்க்கெட் மதிப்புள்ள அதிக வளர்ச்சியுள்ள 50 பங்குகள் இந்தக் குறியீட்டில் இடம் பெற்றுள்ளன.
4.
பேங்க் நிஃப்டி - எந்த ஒரு பொருளாதாரமும் அதிவேக வளர்ச்சியில் இருக்கும் பொழுது, அப்பொருளாதாரத்தில் உள்ள வங்கிகளின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும். இந்தக் குறியீட்டில் 12 பெரிய வங்கிகள் அங்கம் வகிக்கின்றன.
5.
சி.என்.எக்ஸ். 500 - இந்தியப் பங்குச் சந்தையில் முக்கிய பங்கு வகிக்கும் 500 நிறுவனங்களின் குறியீடு ஆகும். தேசியப் பங்குச் சந்தையின் 87% வர்த்தகம் இப்பங்குகளில்தான் நடக்கிறது. 72 விதமான தொழில் பங்குகள் இக்குறியீட்டில் இடம் பெற்றுள்ளன.
6.
சி.என்.எக்ஸ். ஐ.டி - இன்ஃபர் மேஷன் டெக்னாலஜி துறையைச் சார்ந்த 20 முன்னணிப் பங்குகள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்தியா உலகளவில் ஒரு சேவைப் பொருளாதாரமாகக் கருதப்படும் நிலையில் இந்தக் குறியீடு ஒரு முக்கியமான அளவுகோலாக உள்ளது.
7. சி.என்.எக்ஸ். இன்ஃப்ரா - கட்டுமானப் பணிகள், அடிப்படைத் தேவைகள் மற்றும் கேப்பிட்டல் குட்ஸ் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களைச் சார்ந்த 25 நிறுவனப் பங்குகளின் குறியீடு.
8. சி.என்.எக்ஸ். ரியால்டி - ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டுள்ள 10 முன்னணி நிறுவனப் பங்குகள் இந்தக் குறியீட்டில் இடம் பெற்றுள்ளன.

கருத்துகள்