முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பயில்வோம் பங்குச்சந்தை பாகம் 17


ADX
கடந்த வாரம் ADX என்ற indicator ஐ பற்றி பார்த்து  கொண்டிருந்தோம் இல்லையா, இப்பொழுது  முழுமையாக அதைபற்றி  பார்ப்போம், adx என்ற indicator இல் மூன்று விதமான கோடுகள் இருக்கும் என்றும் அதில் இரண்டு கோடுகள் முறையே D+, D-, என்றும், மற்றது ADX என்ற வினை ஊக்கி என்றும் பார்த்து கொண்டிருந்தோம் இல்லையா, சரி இப்பொழுது  இந்த மூணு கோடுகளையும் பயன் படுத்தி எப்படி நமது வர்த்தகத்தை சரியாக செய்யலாம் என்று பார்ப்போம்
இந்த adx என்ற கோடானது ஒரு குறிப்பிட்ட பங்கில் நடந்து கொண்டிருக்கும் trend ஐ உறுதிபடுத்தும் ஒரு கோடாகும், அதாவது D+ என்ற கோடானது D- என்ற கோட்டை மேலே கடந்து செல்லும் பட்சத்தில் அந்த பங்கை நாம் வாங்கலாம் என்று அர்த்தமாகும், அதே நேரம் இந்த D+ கோடானது மேலே தொடர்ந்து உயரும், இதற்க்கு எதிராக D- என்ற கோடு  கீழே வரும், இப்படி நடந்து  கொண்டிருக்கும் போது இந்த D+ என்ற கோட்டை தொடர்ந்து, மேலே சொன்ன ADX என்ற கோடும் உயரே  செல்லும்! இப்படி சென்றால் அந்த buying trend நல்ல  சக்தியுடன்  செல்கிறது  என்று  அர்த்தம்  கொள்ளலாம்,  
அதே போல் இந்த D+ என்ற  கோடு  D- என்ற கோட்டை கீழே கடந்து சென்றால் நாம் அந்த பங்கை விற்று வாங்கலாம் என்று அர்த்தமாகும், அதாவது அந்த பங்கு தொடர்ந்து கீழே வர இருக்கிறது என்று அர்த்தம், இப்படி நடக்கும் போது D- என்ற கோடு மேலே உயரும், இதற்க்கு எதிராக D+ என்ற கோடு கீழே வந்து கொண்டிருக்கும், இந்த நேரத்தில் adx என்ற கோடும் d- என்ற கோட்டினை தொடர்ந்து மேலே உயருமானால் அந்த பங்கின் இறங்கும் trend நல்ல சக்தியுடன் இருப்பதாக நாம் கொள்ளலாம்,  
இது போல் மேலே குறிப்பிட்ட கோடுகள் ஏறி இறங்குவதற்கு சில புள்ளிகளை அதன் குறியீடாக கொள்ளலாம், அதாவது இந்த adx கோடானது எந்த புள்ளியை மேலே கடந்து சென்றால் நல்ல உயர்வு அல்லது வீழ்ச்சி என்று  சொல்லலாம் என்பதினை பற்றிய விஷயம், அதாவது இந்த adx என்ற கோடானது 20 மற்றும்  40 என்ற இரண்டு புள்ளிகளையும் முக்கியமான அளவுகளாக கொண்டு நகரும் (சிலர் 30 என்ற  புள்ளியை  கடந்தால்  என்றும் சொல்கிறார்கள்),  
அதாவது  d+ என்ற கோடு   d- என்ற கோட்டை மேலே கடந்து உயர்ந்து கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், இதனை தொடர்ந்து இந்த adx என்ற கோடும் கீழே இருந்து உயர்ந்து வந்து 20 என்ற புள்ளியை கடந்து மேலே செல்கிறது என்றால், அந்த trend சக்தி மிக்கதாக கொள்ளலாம், பிறகு adx கோடு 40 என்ற புள்ளியையும் மேலே கடந்து சென்றால் அந்த trend இன் சக்தி இன்னும் அதிகம் என்று கொள்ளலாம், அதற்க்கு அடுத்து 50 என்ற புள்ளிக்கு மேல் அதிகமான சக்தி என்று கொள்ளவேண்டும்,  
அதே போல் இந்த adx கோடானது மேலே இருந்து கீழ் நோக்கி இறங்கி வந்து 40 என்ற புள்ளியை கீழே கடந்து வருமானால் சக்தி குறைந்து விட்டது என்று கொள்ள வேண்டும், பிறகு 20 என்ற புள்ளியையும் கீழே கடந்தால் சுத்தமாக சக்தி குறையும் வாய்ப்புகள் உருவாகலாம் என்றும், புதிய trend ஏற்பட இருக்கிறது என்றும் கொள்ள வேண்டும், மேலும் இந்த adx என்ற கோடு மேலே இருந்து கீழே வரும் சமயங்களில் நடந்து கொண்டிருக்கும் trend சற்று மந்தமாக, அதிகப்படியான நகர்வுகள் இல்லாமல் இருக்கும், அல்லது consolidation என்ற நிலையில் இருக்கும், சரி இந்த adx இன் படத்தை பாருங்கள்                     
ADX PICTURE 1
PARABOLIC SAR 
PARABOLIC SAR என்பது ஒரு முக்கியமான INDICATOR ஆகும், முக்கியமாக தின வர்த்தகர்களுக்கு பயன்படக்கூடியது, இதை பற்றி சொல்லவேண்டும் என்றால், இந்த PARABOLIC SAR INDICATOR புள்ளியை ஒரு பங்கின் விலை கீழே கடந்தால் விற்கலாம் என்றும், இந்த புள்ளியை மேலே கடந்தால் வாங்கலாம் என்றும், அர்த்தம் கொள்ளும் அளவுக்கு BUYING மற்றும்  SELLING SIGNAL களை தரும் INDICATOR என்று கூட சொல்லலாம்,  
அதாவது  இந்த PARABOLIC SAR என்ற INDICATOR, பங்குகளின் CHART படங்களின் ஊடே நகர்ந்து கொண்டிருக்கும் புள்ளிகளாகும், இந்த புள்ளிகள் பங்குகளின் CHART படங்களுக்கு மேலேயும் கீழேயும் அமைந்து வந்து கொண்டே இருக்கும், அதன் படி தற்பொழுது அருகில் இருக்கும் புள்ளியை பங்கின் விலை கீழே கடந்தால் SELL, அதே போல் மேலே உள்ள புள்ளியை பங்கின் விலை மேலே கடந்தால் BUY, இப்படியாக இந்த INDICATOR BUYING மற்றும் SELLING SIGNAL களை தருகிறது அதனால் தான் இந்த INDICATOR க்கு PARABOLIC STOP AND REVERSAL (SAR) என்று பெயர்,  
இதன் படி  நாம் அப்படியே செயல்படாமல் வேறு சில விசயங்களையும் கையாண்டால் மிகச்சரியான வர்த்தக முடிவுகளை இந்த INDICATOR பயன்படுத்தி நாம் எடுக்கலாம், அதாவது இந்த PARABOLIC SAR    புள்ளியை ஒரு பங்கின் விலை ஒரு மணி நேர தின வர்த்தக CHART இல் மேலேயோ அல்லது கீழேயோ கடந்தவுடன், அடுத்து அந்த இடத்தில் இருக்கும் TOPS மற்றும் TREND LINE RESISTANCE, மற்றும் FIBONACCI அளவுகள் மற்றும் PATTERNS போன்ற விசயங்களை எல்லாம் சரி பார்த்து உங்கள் வர்த்தகத்தை தொடங்கினால் கண்டிப்பான லாபம் கிடைக்கும், இந்த INDICATOR தின வர்த்தகத்திற்கு மிக உதவியாக இருக்கும் ,  PARABOLIC SAR    இன் படத்தை பாருங்கள்                     
PARABOLIC SAR PICTURE 2  


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவகிரக துதி

சூரியன் சீலமாய் வாழ சீரருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி! சூரியா போற்றி! சுந்தரா போற்றி! வீரியா போற்றி! வினைகள் களைவாய் சந்திரன் எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி! திருவருள் தருவாய் சந்திரா போற்றி! சற்குணா போற்றி! சங்கடந்தீர்ப்பாய் சதுராய் போற்றி! அங்காரகன் (செவ்வாய்) சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ மங்கள செவ்வாய் மலரடி போற்றி! அங்காரகனே அவதிகள் நீக்கு! புதன் இதமுற வாழ இன்னல்கள் நீக்கு புத பகவானே பொன்னடி போற்றி! பதந்தந்தாள்வாய் பண்ணொளியானே உதவியே யருளும் உத்தமா போற்றி! குரு குணமிகு வியாழக் குருபகவானே மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய் ; பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா கிரகதோஷமின்றி கடாஷித்தருள்வாய் சுக்கிரன் சுக்கிரமூர்த்தி சுப சுக மீவாய் வக்ரமின்றி வரமிகத் தருவாய் வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே சனி சங்கடந் தீர்ககுஞ் சனி பகவானே! மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றி சனீஸ்வரத் தேவே இச்சகம் வாழ இன்னருள் தா தா ராகு அரவெனும் ராகு அய்யனே போற...

சோப் ஆயிலில் சூப்பர் லாபம்!

வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் இயந்திரங்கள் எதுவும் இல்லாமல் சோப் ஆயில் தயாரிக்கலாம். இதன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை காளம்பாளையத்தில் ஹக் புராடக்ட்ஸ் சோப் ஆயில் தயாரிக்கும் ரமணன். அவர் கூறியதாவது: கோவையில் தேசிய பஞ்சாலை கழக தரக்கட்டுப்பாட்டு பிரிவில் உதவி ஸ்பின்னிங் மாஸ்டராக 28 ஆண்டுகள் பணிபுரிந்தேன். 7 ஆண்டுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றேன். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற என் போன்றவர்களை, கோவையில் உள்ள சிறு தொழில் சேவை மையத்தினர் சுய தொழில் செய்வதற்கான பயிற்சிக்கு அழைத்தனர். அங்கு ஒரு மாதம் நறுமண சொட்டு நீலம், பினாயில், சோப் பவுடர் போன்றவை தயாரிக்க கற்றுக் கொடுத்தனர். ரூ.5 ஆயிரம் முதலீட்டில் சோப் ஆயில் தயாரிப்பதற்கான தொழிலை துவக்கினேன். நானே முதலாளியாகவும், தொழிலாளியாகவும் இருந்து மாதம் 200 லிட்டர் சோப் ஆயில் தயாரித்து விற்கிறேன். சோப் ஆயில் தயாரித்து விற்பவர்கள் பலர் இருந்தாலும், தரமாக தயாரித்து விற்பதால் ஆர்டர் தொய்வு இல்லாமல் கிடைக்கிறது. தினசரி 5 மணி நேரம் உழைத்தால் 10 லிட்டர் சோப் ஆயில் தயாரிக்க முடியும். 20...

தலையணை உறை.. தூள் கிளப்பும் லாபம்

பெண்கள்  வீட்டு வேலை  போக மற்ற நேரங்களில் சுயமாக வேலை செய்து சம்பாதிக்க ஏற்ற தொழில் தையல். ஜாக்கெட், சுடிதார் போன்ற நுட்பம் நிறைந்த தையல் வேலைகள் மேற்கொள்ள பயிற்சி வேண்டும். ஆனால் தலையணை உறை தைக்க எவ்வித பயிற்சியும் தேவை இல்லை. நுணுக்கமான தையல் தெரியாதவர்கள் தலையணை உறை தயாரித்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் என்கிறார் கோவை வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரிநாயக்கன்பாளையத்தை சேர்ந்த செல்வி. அவர் கூறியதாவது: கணவர் ஆட்டோ டிரைவர். குடும்ப வருமானம் போதவில்லை. அதை சமாளிக்க 4 ஆண்டுகளுக்கு முன்பு தையல் கற்றேன். வீட்டிலேயே பழைய தையல் மெஷின் வாங்கி போட்டு, ஜாக்கெட், சுடிதார் தைத்து வந்தேன். அப்போது எங்கள் பகுதியில் உள்ள பெண்கள் 13 பேர் சேர்ந்து அம்மன் சுய உதவி குழு துவக்கினோம். ரூ.10 ஆயிரம் கடனுதவி கிடைத்தது. அதன்மூலம் ஈரோட்டில் தலையணை உறை துணி வாங்கி வந்து தைத்தேன். அவற்றை கணவர் கடைகளுக்கு எடுத்து சென்று விற்று வந்தார். பின்னர் நானே ஆட்டோவில் ஏற்றி அபார்ட்மென்ட்கள், பள்ளி, கல்லூரி விடுதிகள், வீடுகளில் விற்றேன். நல்ல லாபம் கிடைத்தது. முழு நேர தொழிலாக தற்போது தலையணை உறை தயாரிக்கிறேன். இத...