முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பயில்வோம் பங்கு சந்தை பாகம் 19


நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி! கால தாமதம் ஆனது வருத்தத்தை  தந்தாலும் அநேக நண்பர்களின் தொடர் ஆதரவு மீண்டும் சீக்கிரமே தொடரை தொடரும் என்னத்தை  தந்ததால்  இன்னும் சில நாட்கள் கழித்து தொடர வேண்டிய சூழ்நிலையிலும்! உங்களுக்காக இப்பொழுதே தொடர்கிறேன்.
முதலில் புத்தாண்டு வாழ்த்துகளை சற்றே தாமதமாக சொல்ல வேண்டிய நிலை! இருந்தாலும் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

கடந்த பதிவில்  சில படங்களை உங்களுக்கு தந்து இருந்தேன், அதைப்பற்றி பெரிதாக யாரும் எந்த கருத்தையும் சொல்ல வில்லை, ஒரு வேளை அனைவருக்கும் சரியாக புரிந்து இருக்கும் போல என்ற எண்ணத்தில் மேலே தொடர்கிறேன்.  பொதுவில் பங்குகளின் வரை படங்கள் ஒவ்வொரு candle களாக அமைய தொடங்கி! அவைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து நமக்கு  காசா முசா வென காட்சி அளிக்கும்.

இந்த காசா முசா வடிவங்களை வைத்து தான் நாம் ஒரு நிதர்சனமான, உண்மையான சில விசயங்களை  கண்டு பிடித்து! அதிலிருந்து ஒரு தெளிவான  புள்ளிகளை கண்டு பிடித்து நமது வர்த்தகத்தை மேற்கொண்டு வெற்றி பெற வேண்டும்.  உண்மையில் ஒரு பொருளை உடைத்து உடைத்து உள் சென்று! இன்னும் உடைத்து இன்னும்  உள் சென்று அவைகளின் அணுக்களை பற்றி அதன் பண்புகளை பற்றி கண்டு பிடிப்பார்களே அதற்க்கு நேர் எதிர்மறையானது. 

இது பல்வேறுபட்ட  பண்புகளை உடைய அணுக்களை ஒன்று  சேர்ந்து! (ஒவ்வொரு நாள் வர்த்தகத்தில் கிடைக்கும் candle களின் தொகுப்பு) ஒன்று சேர்ந்து! இறுதியில் கிடைக்கும் பொருளின் (வடிவத்தின்) பண்புகளை (விளைவுகளை) கண்டறிந்து அதை பயன்படுத்துவது போன்றது. ஆகவே இது ஒன்றும் பெரிய கம்ப சித்திரம் இல்லை. கஷ்டப்பட்டு உழைத்து  அறுவடை செய்து! கதிர் அடித்து நெல்லாக வைத்து இருக்கும் விவசாயி இடம் சென்று எந்த நெல் நல்ல நெல் என்று கண்டு பிடித்து வாங்கி அதை லாபத்துடன் விற்கும் ஒரு தரகரின் நோகாமல் நொங்கு எடுக்கும்  ஒரு வேலை தான்!  

இருந்தாலும்  இங்கு ஒரு மூட்டை நெல்லை மட்டும் sample க்கு காட்டி மற்ற மூட்டைகளில்  எல்லாம்    நெல்லுடன் வேறு சில கலவைகளை கலந்து விற்கும் விவசாய்கள் அதிகம் (false break out patterns), ஆகவே தரகு தொழிலும் அனேக கஷ்டங்கள் உண்டு. ஆகவே எச்சரிக்கையாக இருக்க வேண்டியது முக்கியம் இல்லையேல் வெறுப்பும்! விரக்தியும்! சந்தையின் மேல் ஏற்பட்டுப்போகும். சரி விசயத்திற்கு வருவோம் வாருங்கள்!

ஒவ்வொரு candle களாக சேர்ந்து ஒரு  வடிவமாக மாறும் என்று பார்த்தோம் இல்லையா. அது போன்ற வடிவங்கள் என்ன என்ன என்று முதலில் சொல்லி விடுகிறேன். பிறகு  அவைகள் ஒவ்வொன்றை பற்றி விவரமாக பார்ப்போம்

வடிவங்களின் பெயர்கள் (TYPES OF PATTERNS) :
CUP PATTERN
HEAD & SHOULDER PATTERN
CHANNEL PATTERN
TRIANGLE PATTERN
FLAG PATTERN
PENANT PATTERN
"W” PATTERN

இவ்வாறாக  தான்  ஒவ்வொரு CHART   படங்களிலும் ஒவொரு CANDLE களாக ஒருங்கிணைந்து! மேற்கண்ட வடிவங்களில் வந்து நிற்கும். இதனை கண்டு பிடித்து எந்த புள்ளியில் வர்த்தகத்தை தொடங்கினால் வெற்றி பெறலாம் என்பதினை அறிந்து செயல் பட்டால் பங்கு சந்தையில் வெற்றி பெறலாம்...

சரி ஒவ்வொரு  PATTERN ஆக விளக்கமாக பார்ப்போம் வாருங்கள். அதற்க்கு முன் ஒரு விஷயத்தை உங்களுக்கு சொல்ல வேண்டியது எனது கடமையும் கூட. அதாவது ECHNICAL ANALYSIS இல் உள்ள நுட்பமான  சில விசயங்களையும் 100  வீத எழுத்தின்  மூலம்  மட்டுமே கொடுத்து விடவும் முடியாது. இந்த தொடர் முழுமையாக முடிந்த  பின்புஒரு முறைக்கு மறு முறை படித்து TECHNICAL ANALYSIS பற்றிய ஒரு தெளிவை  பெற்ற பின்பு!  உங்களுக்கு அருகில் இருக்கும்  யாராவது   ஒரு தேர்ந்த TECHNICAL ANALYST  நடத்தும் TECHNICAL ANALYSIS வகுப்பிற்கு  ஒரு முறையாவது சென்று வாருங்கள்.

ஏன் என்றால்  இந்த தொடரின் மூலம் உங்களுக்கு நல்ல பயிற்ச்சிகள் ஏற்பட்டாலும் அநேக சந்தேகங்கள் வரும்இ இவ்வாறு வரும் சந்தேகங்கள் அனைத்தும் ஒரு தேர்ந்த நுட்ப ஆய்வாளர் மூலம் நிவர்த்தி செய்ய முடியும். அதே நேரம் என்னிடம் நீங்கள் கேள்வியாக கேட்டாலும்! இதில் ஏற்படும் சந்தேகங்கள் எல்லாம் நேருக்கு நேர்  அமர்ந்து சில விசயங்களை உங்களுக்கு காட்டினால் மட்டுமே இது சாத்தியம். ஆகவே உங்களுக்கு அருகில் நல்ல தேர்ந்த நுட்ப ஆய்வாளரிடம் ஒரு முறையாவது அவர்கள் நடத்தும் வகுப்பில் உங்கள் சந்தேகங்களுடன்  கலந்து கொள்ளுங்கள். மேலும் சிறப்பான பயிற்சி கிடைக்கும். சரி விசயத்திற்கு வருவோம்

CUP:

இந்தPATTERN தான் TECHNICAL ANALYSIS இல் முக்கியமான வடிவமாகும்.  அனைத்து வடிவங்களிலும் மறைமுகமாக இருக்கும் ஒரு வடிவமும் ஆகும். பொதுவாக ஒரு CUP ஐ போல் இருப்பதால் இதற்க்கு  இந்த பெயர் வைத்து இருக்கின்றார்கள். பொதுவாக ஒரு பங்கின் நகர்வுகள் இதற்குள் தான் இருக்கும். அதாவது ஒரு உயர்வு, மறுபடியும் வீழ்ச்சி, வீழ்ச்சி முடிந்து மறுபடியும் உயர்வுஇவ்வாறு  உயர்ந்து முன்னர் எங்கிருந்து வீழ்ச்சி அடைய ஆரம்பித்ததோ அந்த புள்ளியை மறுபடியும் உயர்ந்து  சென்று அடையும்  போது  முழுவதுமாக ஒருCUP என்ற வடிவம் உருவாகிறது.

இவ்வாறு ஒரு வடிவம் அமைந்த பிறகு  இதற்க்கான விளைவுகள் கீழ் கண்ட முறையில் இருந்தது. அதாவது இந்த CUP என்ற அமைப்பின் உயரம் எவளவோ அந்த உயரத்திற்கு மறுபடியும் உயர்ந்தது. அதாவது CUP இன் TOP ஐ நிறைவு செய்த பிறகு, அந்த TOP இல் இருந்து (எந்த புள்ளியில் இருந்து வீழ்ச்சி அடைய ஆரம்பித்து மறுபடியும் அந்த புள்ளியை வந்த அடைந்த இடம் அல்லது புள்ளி ) அந்த CUP இன் உயரம் மேலே சென்றது. இது தான் CUP என்ற வடிவம் ஏற்பட்ட பின்பு ஏற்படும் விளைவு… 

மேலும்  இந்த CUP என்ற அமைப்பு பல வடிவங்களில் அமைந்து வந்தது. இவ்வாறு அமையும் ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒவ்வொரு விளைவுகள் ஏற்பட்டன. அவைகளை பற்றியும் பார்த்து விடுவோம். அதாவது CUP என்ற அமைப்பில் எத்தினை வடிவங்கள் இருக்கின்றன என்று பார்ப்போம்  

அதற்க்கு  முன் CUP என்ற வடிவத்தின் படத்தையும் பார்த்து விடுங்கள்     





சரி CUP என்ற வடிவம் எந்த  மாதிரி எல்லாம் CHART படங்களில் உருவாகும் என்பதினை பார்ப்போம்.  முதலில் அவைகளின் பெயர்களை பார்த்து விடுவோம்  

TYPES OF CUP - CUP என்ற வடிவத்தின் வகைகள:-
CUP
CUP WITH HANDLE 
SEMI CUP
SEMI CUP WITH HANDLE
INVERTED CUP
INVERTED CUP WITH HANDLE
INVERTED SEMI CUP 
INVERTED SEMI CUP WITH HANDLE

சரி இவைகளை பற்றி விவரமாக இனி வரும்  வாரங்களில் ஒவ்வொன்றாக  பார்ப்போம்       

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவகிரக துதி

சூரியன் சீலமாய் வாழ சீரருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி! சூரியா போற்றி! சுந்தரா போற்றி! வீரியா போற்றி! வினைகள் களைவாய் சந்திரன் எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி! திருவருள் தருவாய் சந்திரா போற்றி! சற்குணா போற்றி! சங்கடந்தீர்ப்பாய் சதுராய் போற்றி! அங்காரகன் (செவ்வாய்) சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ மங்கள செவ்வாய் மலரடி போற்றி! அங்காரகனே அவதிகள் நீக்கு! புதன் இதமுற வாழ இன்னல்கள் நீக்கு புத பகவானே பொன்னடி போற்றி! பதந்தந்தாள்வாய் பண்ணொளியானே உதவியே யருளும் உத்தமா போற்றி! குரு குணமிகு வியாழக் குருபகவானே மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய் ; பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா கிரகதோஷமின்றி கடாஷித்தருள்வாய் சுக்கிரன் சுக்கிரமூர்த்தி சுப சுக மீவாய் வக்ரமின்றி வரமிகத் தருவாய் வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே சனி சங்கடந் தீர்ககுஞ் சனி பகவானே! மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றி சனீஸ்வரத் தேவே இச்சகம் வாழ இன்னருள் தா தா ராகு அரவெனும் ராகு அய்யனே போற...

சோப் ஆயிலில் சூப்பர் லாபம்!

வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் இயந்திரங்கள் எதுவும் இல்லாமல் சோப் ஆயில் தயாரிக்கலாம். இதன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை காளம்பாளையத்தில் ஹக் புராடக்ட்ஸ் சோப் ஆயில் தயாரிக்கும் ரமணன். அவர் கூறியதாவது: கோவையில் தேசிய பஞ்சாலை கழக தரக்கட்டுப்பாட்டு பிரிவில் உதவி ஸ்பின்னிங் மாஸ்டராக 28 ஆண்டுகள் பணிபுரிந்தேன். 7 ஆண்டுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றேன். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற என் போன்றவர்களை, கோவையில் உள்ள சிறு தொழில் சேவை மையத்தினர் சுய தொழில் செய்வதற்கான பயிற்சிக்கு அழைத்தனர். அங்கு ஒரு மாதம் நறுமண சொட்டு நீலம், பினாயில், சோப் பவுடர் போன்றவை தயாரிக்க கற்றுக் கொடுத்தனர். ரூ.5 ஆயிரம் முதலீட்டில் சோப் ஆயில் தயாரிப்பதற்கான தொழிலை துவக்கினேன். நானே முதலாளியாகவும், தொழிலாளியாகவும் இருந்து மாதம் 200 லிட்டர் சோப் ஆயில் தயாரித்து விற்கிறேன். சோப் ஆயில் தயாரித்து விற்பவர்கள் பலர் இருந்தாலும், தரமாக தயாரித்து விற்பதால் ஆர்டர் தொய்வு இல்லாமல் கிடைக்கிறது. தினசரி 5 மணி நேரம் உழைத்தால் 10 லிட்டர் சோப் ஆயில் தயாரிக்க முடியும். 20...

தலையணை உறை.. தூள் கிளப்பும் லாபம்

பெண்கள்  வீட்டு வேலை  போக மற்ற நேரங்களில் சுயமாக வேலை செய்து சம்பாதிக்க ஏற்ற தொழில் தையல். ஜாக்கெட், சுடிதார் போன்ற நுட்பம் நிறைந்த தையல் வேலைகள் மேற்கொள்ள பயிற்சி வேண்டும். ஆனால் தலையணை உறை தைக்க எவ்வித பயிற்சியும் தேவை இல்லை. நுணுக்கமான தையல் தெரியாதவர்கள் தலையணை உறை தயாரித்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் என்கிறார் கோவை வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரிநாயக்கன்பாளையத்தை சேர்ந்த செல்வி. அவர் கூறியதாவது: கணவர் ஆட்டோ டிரைவர். குடும்ப வருமானம் போதவில்லை. அதை சமாளிக்க 4 ஆண்டுகளுக்கு முன்பு தையல் கற்றேன். வீட்டிலேயே பழைய தையல் மெஷின் வாங்கி போட்டு, ஜாக்கெட், சுடிதார் தைத்து வந்தேன். அப்போது எங்கள் பகுதியில் உள்ள பெண்கள் 13 பேர் சேர்ந்து அம்மன் சுய உதவி குழு துவக்கினோம். ரூ.10 ஆயிரம் கடனுதவி கிடைத்தது. அதன்மூலம் ஈரோட்டில் தலையணை உறை துணி வாங்கி வந்து தைத்தேன். அவற்றை கணவர் கடைகளுக்கு எடுத்து சென்று விற்று வந்தார். பின்னர் நானே ஆட்டோவில் ஏற்றி அபார்ட்மென்ட்கள், பள்ளி, கல்லூரி விடுதிகள், வீடுகளில் விற்றேன். நல்ல லாபம் கிடைத்தது. முழு நேர தொழிலாக தற்போது தலையணை உறை தயாரிக்கிறேன். இத...