முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மூலிகை டீ முத்தான லாபம்!







உடல்நலனுக்கு சிறந்த மூலிகை டீ, காபித்தூள் தயாரிப்பது எளிதானது. ஆரோக்கிய விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், மூலிகை டீ, காபித்தூள் தயாரித்து விற்றால்  நல்ல லாபம் கிடைக்கும் என்று கூறுகிறார் கோவை, கோவைப்புதூர் பரிபூர்ணா எஸ்டேட்டில் தி யுனிவர்சல் குட்லைப் சென்டர் நடத்தி வரும் விநாயகம். அவர் கூறியதாவது: சிறுவனாக இருந்தபோது, தந்தை ஏலக்காய் டீ, சுக்கு காபி தயாரித்து விற்று வந்தார். பின்னர் மூலிகை டீ, காபித்தூள் விற்றார். அவருக்கு பின், நான் இந்த தொழிலை தொடர்ந்தேன். அதோடு, மூலிகை பல்பொடி, வல் லாரை, தூதுவளை, அருகம்புல் ஜூஸ், முகத்தை பளிச்சென்று வைத்து கொள்ள மூலிகை பேஸ்ட் உள்பட 150 வகை  மூலிகை பொடிகளை தயாரித்து விற்கிறேன்.

வீடுகளுக்கு நேரடி யாக சென்று விற்று வருகிறேன். ஒரு தடவை வாங்குபவர்கள் தொடர்ந்து வாங்குவதால், வாடிக்கையாளர்கள் அதிகரித்துவருகின்றனர். வழக்கமாக டீ, காபி அதிகம் குடித்தால் பித்தம் என்பர். தலைவலி, சளி, அஜீரணம், பசியின்மையை மூலிகை டீ நீக்கும். மூலிகை காபி ரத்த அணுக்களை அதிகப்படுத்தும். உடல் வலிமை, புத்துணர்ச்சி ஏற்படும். மூலிகைகள் பக்க விளைவுகள் இல்லா தவை.

உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தி பலன் பெறலாம். குறைந்த முதலீட்டில் லாபம் கிடைக்கும் மூலிகை டீ, காபி பொடியை யார் வேண்டுமானாலும் எளிதில் தயாரிக்கலாம். தங்கள் பகுதியிலேயே விற்று லாபம் பார்க்கலாம்.

தயாரிப்பது எப்படி?

மூலிகை டீத்தூள்:
மூலிகை டீத்தூள் தயாரிக்க ஆவாரம் பூ, தாமரை, ரோஜா, செம்பருத்தி, வாழை பூ, வேம்பு, அகத்திப் பூ ஆகிய 7 வகை பூக்கள் தலா ஒரு கிலோ எடுத்து கொள்ள வேண்டும். அவற்றை தனித்தனியாக நல்ல தண்ணீரில் கழுவி, சுத்தம் செய்து 2 மணிநேரம் காய வைக்க வேண்டும். பின்னர் அதை மெஷினில் அரைத்து, சலித்தால் மூன்றரை கிலோ மூலிகை பொடி கிடைக்கும். அதில் 2.5 கிலோ டீத்தூள் கலந்தால் மூலிகை டீத்தூள் தயார்.

மூலிகை காபி பொடி :
சுக்கு, மிளகு விதை, திப்பிலி, மல்லி, சீரகம், விளாமிச்சை வேர், அஷ்வகந்தா போன்ற 7 வகை பொருட்கள் தலா ஒரு கிலோ எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றை தனித்தனியாக காய வைத்து, மெஷினில் அரைத்து, சலித்தால் மூன்றரை கிலோ மூலிகை பொடி கிடைக்கும். அதில் 2.5 கிலோ காபித்தூள் கலந்தால் மூலிகை காபித்தூள் தயார். மூலிகை டீ, மூலிகை காபி தூள்களை 100 கிராம் பாக்கெட்களில் பேக்கிங் செய்து விற்பனைக்கு அனுப்பலாம்.

கிடைக்கும் இடங்கள் 

மூலிகை பொருள்கள் கோவை, மதுரை, தூத்துக்குடியில் உள்ள நாட்டு மருந்துக் கடைகளிலும், கேரள மாநிலம் மூவாட்டுப்புழா மற்றும் பாலப்பட்டியில் உள்ள நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.  மெஷின்கள் கோவை உள்பட முக்கிய நகரங்களில் கிடைக்கிறது. இதர பொருட்கள் உள்ளூரிலேயே கிடைக்கும்.

கட்டமைப்பு!

அரைக்கும் மெஷின், சலிக்கும் மெஷின், பேக்கிங் மெஷின் நிறுவ குறைந்தபட்சம் 20க்கு 10 அடி அறை. மூலிகை பொருட்கள் மற்றும் பேக்கிங் பொருட்களை இருப்பு வைக்க 10க்கு 10 அடி அறை. மூலிகைகளை காய வைக்க 10க்கு 10 அடியில் சிமென்ட் தளம் போட்ட வெட்டவெளி.

முதலீடு!

அரைக்கும் மெஷின் ரூ.25 ஆயிரம், சலிக்கும் மெஷின் ரூ.5 ஆயிரம், பேக்கிங் மெஷின் ரூ.3 ஆயிரம், தராசு ரூ.4 ஆயிரம், பாத்திரங்கள் ஆயிரம் ரூபாய் என மொத்த முதலீடு ரூ.38 ஆயிரம்.

உற்பத்தி செலவு (ஒரு மாதத்துக்கு) 

ஒரு இயந்திரம் மூலம் தினசரி 6 கிலோ மூலிகை டீத்தூள்,  6 கிலோ மூலிகை காபித்தூள் உற்பத்தி செய்யலாம். 6 கிலோ மூலிகை டீ தயாரிக்க தலா ஒரு கிலோ ஆவாரம் பூ (ரூ.50), தாமரை(ரூ.160), ரோஜா (ரூ.200), செம்பருத்தி (ரூ.200), வாழைப்பூ (ரூ.40), வேம்பு (ரூ.50), அகத்தி(ரூ.200) என 7 கிலோ மூலிகை பூக்கள்  மற்றும் 2.5 கிலோ டீத்தூள் (ரூ.335) தேவை. இதன் விலை ரூ.1235. 25 நாளில் 150 கிலோ மூலிகை டீத்தூள் தயாரிக்க ரூ.30,875 தேவை.
6 கிலோ மூலிகை காபித்தூள் தயாரிக்க தலா ஒரு கிலோ சுக்கு (ரூ.240), மிளகு விதை(ரூ.300), திப்பிலி(ரூ.500), மல்லி (ரூ.40), சீரகம் (ரூ.160), விளாமிச்சை வேர் (ரூ.120), அஷ்வகந்தா (ரூ.190) மற்றும் 2.5 கிலோ காபிதூள் (ரூ.400) தேவை. இதன் விலை ரூ.1950. 25 நாளில் 150 கிலோ மூலிகை காபித்தூள் தயாரிக்க ரூ.48,750 தேவை.

 2 தொழிலாளர் சம்பளம் ரூ.12 ஆயிரம், மின் கட்டணம் ரூ.3 ஆயிரம், இதர செலவுகள் ரூ.3 ஆயிரம் என ஒரு மாத உற்பத்திக்கு ரூ.98 ஆயிரம் தேவை.
வருவாய் மூலிகை டீ, காபித்தூள் 100 கிராம் பாக்கெட்களில் பேக்கிங் செய்யப்படுகிறது. மொத்த விற்பனை விலை ரூ.32 (சில்லரை விலை ரூ.40), காபி பாக்கெட் மொத்த விற்பனை விலை ரூ.42 (சில்லரை விலை ரூ.50)க்கு விற்கலாம். வருவாய் 150 கிலோ மூலிகைடீத்தூள் மூலம் ரூ.48 ஆயிரம், 150 கிலோ மூலிகை காபித்தூள் மூலம் ரூ.63 ஆயிரம் என மொத்தம் ரூ.1.11 லட்சம் கிடைக்கும். லாபம் ரூ.13 ஆயிரம். நேரடியாக விற்றால் கூடுதல் லாபம் கிடைக்கும்.

விற்பனை வாய்ப்பு

டிபார்ட்மென்டல் ஸ்டோர், மொத்த மளிகைக் கடைகளுக்கு விற்பனை செய்யலாம்.  சிறிய மளிகைக்கடைகளுக்கும் சப்ளை செய்யலாம், வீடு, வீடாகவும் அறிமுகப்படுத்தி விற்கலாம். சாதாரண டீ, காபியை விட மூலிகை டீ, காபி குடிப்பது ஆரோக்கியத்தை தருவதால் வாடிக்கையாளர் அதிகரிக்கின்றனர். விற்பனை பெருகி வருகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவகிரக துதி

சூரியன் சீலமாய் வாழ சீரருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி! சூரியா போற்றி! சுந்தரா போற்றி! வீரியா போற்றி! வினைகள் களைவாய் சந்திரன் எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி! திருவருள் தருவாய் சந்திரா போற்றி! சற்குணா போற்றி! சங்கடந்தீர்ப்பாய் சதுராய் போற்றி! அங்காரகன் (செவ்வாய்) சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ மங்கள செவ்வாய் மலரடி போற்றி! அங்காரகனே அவதிகள் நீக்கு! புதன் இதமுற வாழ இன்னல்கள் நீக்கு புத பகவானே பொன்னடி போற்றி! பதந்தந்தாள்வாய் பண்ணொளியானே உதவியே யருளும் உத்தமா போற்றி! குரு குணமிகு வியாழக் குருபகவானே மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய் ; பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா கிரகதோஷமின்றி கடாஷித்தருள்வாய் சுக்கிரன் சுக்கிரமூர்த்தி சுப சுக மீவாய் வக்ரமின்றி வரமிகத் தருவாய் வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே சனி சங்கடந் தீர்ககுஞ் சனி பகவானே! மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றி சனீஸ்வரத் தேவே இச்சகம் வாழ இன்னருள் தா தா ராகு அரவெனும் ராகு அய்யனே போற...

சோப் ஆயிலில் சூப்பர் லாபம்!

வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் இயந்திரங்கள் எதுவும் இல்லாமல் சோப் ஆயில் தயாரிக்கலாம். இதன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை காளம்பாளையத்தில் ஹக் புராடக்ட்ஸ் சோப் ஆயில் தயாரிக்கும் ரமணன். அவர் கூறியதாவது: கோவையில் தேசிய பஞ்சாலை கழக தரக்கட்டுப்பாட்டு பிரிவில் உதவி ஸ்பின்னிங் மாஸ்டராக 28 ஆண்டுகள் பணிபுரிந்தேன். 7 ஆண்டுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றேன். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற என் போன்றவர்களை, கோவையில் உள்ள சிறு தொழில் சேவை மையத்தினர் சுய தொழில் செய்வதற்கான பயிற்சிக்கு அழைத்தனர். அங்கு ஒரு மாதம் நறுமண சொட்டு நீலம், பினாயில், சோப் பவுடர் போன்றவை தயாரிக்க கற்றுக் கொடுத்தனர். ரூ.5 ஆயிரம் முதலீட்டில் சோப் ஆயில் தயாரிப்பதற்கான தொழிலை துவக்கினேன். நானே முதலாளியாகவும், தொழிலாளியாகவும் இருந்து மாதம் 200 லிட்டர் சோப் ஆயில் தயாரித்து விற்கிறேன். சோப் ஆயில் தயாரித்து விற்பவர்கள் பலர் இருந்தாலும், தரமாக தயாரித்து விற்பதால் ஆர்டர் தொய்வு இல்லாமல் கிடைக்கிறது. தினசரி 5 மணி நேரம் உழைத்தால் 10 லிட்டர் சோப் ஆயில் தயாரிக்க முடியும். 20...

Various Herbs & Spices English & Hindi Names

English/ ஆ ங்கிலம் Tamil/ தமிழ் Hindi/ हिन्दी/ ஹிந்தி Rice Arisi( அரிசி) Chaval Black gram Kadalai Parruppu ( கடலை பருப்பு) Channa Dhal Black Gram Ulluththam Paruppu ( உளுதம் பருப்பு) Urad Dhal Green gram dhal Payaththam Parruppu( பயத்தம் பருப்பு) Moog Dhal Green gram Whole Paasi Parruppu( பாசி பருப்பு) Moog Sabut Yellow split peas Thuvaram Parruppu( துவரம் பருப்பு) Toor Dhal Green gram  Split Pachchai payiru( பச்சைப்பயறு) Moong Chilka Garbanzo beans Kondai Kadalai( கொண்டை கடலை) Kabuli Channa Peanuts Veerkadalai( வேற்கடலை) Moong falee All Purpose Flour Maida Maavu( மைதா மாவு) Maida Gram flour Kadalai Maavu( கடலை மாவு) Besan Wheat flour Godhumai maavu( கோதுமை மாவு) ...