முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பயில்வோம் பங்குச்சந்தை- பாகம் 3


பயில்வோம் பங்குச்சந்தை- பாகம் 3

இது போன்று அதிரடி  நிகழ்வுகள்  நடப்பதினால் சந்தையின் மீதே சந்தேகம் படும்படியான என்னம் உங்களுக்கு ஏற்பட்டிருப்பது இயற்க்கை தான், இருந்தாலும் அதற்கும் காரணம் உண்டு. அதாவது இது போன்ற உயர்வுகள் ஏற்படுவதற்கு காரணமாக அநேக விசயங்களை நாம் இங்கு பட்டியலிட முடியும், உதாரணமாக ஒரு சில விசயங்களை பார்ப்போம்.

சந்தையில் நடக்கும் அதிரடி உயர்வுக்கும், அதிரடி வீழ்ச்சிக்கும், நமது ஆசையும் ஒரு காரணமே, அதாவது ஒரு பொருளுக்கு DEMAND ஏற்படும் சூழ்நிலை வந்தால், எந்த ஒரு வியாபாரியும் எப்பாடுபட்டாவது அந்த பொருளை வாங்க முற்படுவார், அதாவது இப்பொழுது வாங்கி விட்டால்! பிறகு நல்ல லாபம் வரும் என்ற எதிர்கால யோசனையோடு வாங்க முனைவோம் இல்லையா? அது போன்று தான், இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமானால் ஒரு உதாரணத்துடன் சொல்லலாம்

உங்கள் ஊரின் பேரூர்ந்து நிலையத்தை தற்பொழுது இருக்கும் இடத்தில் இருந்து வேறு ஒரு வசதியான இடத்திற்கு மாற்ற நகராச்சியில் ஒரு யோசனை உள்ளதாக வைத்துக்கொள்ளுங்கள், (இந்த யோசனை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு (அரசாங்கம் உட்பட) நடை முறைக்கும் வரலாம், அதே நேரம் பேச்சளவிலே இருந்து நடக்காமலும் போகலாம், என்பதையும் மனதில் ஒரு பக்கம் வைத்துக்கொள்ளுங்கள்)

உங்களுக்கு நகராச்சியில் இந்த விஷயத்தை பற்றி பேசும் நபர்களில் ஒருவரோடு நல்ல தொடர்பு உள்ளது என்றும் வைத்துக்கொள்ளுங்கள், அந்த நண்பர் உங்களிடம் இந்த விஷயத்தை சொல்கிறார் என்றும் வைத்துக்கொள்ளுங்கள், மேலும் நீங்கள் சாதாரண ஒரு பிரஜை என்று இருந்தால் அந்த விசயத்திற்கு உங்களின் வெளிப்பாடு இப்படி இருக்கலாம்,

அதாவது அந்த விஷயத்தை கேள்விப்பட்டவுடன் அப்படியா வந்தால் நல்லது தான் இப்போ இருக்குற BUS STAND ரொம்ப இடைஞ்சலா இருக்கு புதிதாக வந்தால் இன்னும் வசதியாக இருக்கும் என்று சொல்லி விட்டு சென்று விடுவீர்கள்,

நீங்கள் சாதாரண நபராக இல்லாமல் ஒரு புத்திசாலியான வியாபாரியாக இருந்தால் எப்படி யோசிப்பீர்கள்? இப்படித்தான் இருக்கும்!! ஆக ஊருக்கு ஒதுக்கு புறத்தில் BUS STAND வரப்போகிறது!  இப்போ அந்த இடம் யாரும் சீண்டுவார் இல்லாமல் உள்ளது, BUS STAND வந்து விட்டால் அந்த இடங்களின் மதிப்பு எங்கோ சென்று விடும், ஆக இந்த விஷயத்தை வெளியே சொல்லாமல், அங்கு நாலு ஏக்கர் நிலம் வாங்கிப்போட்டால் பின்னால் நல்ல காசு பார்க்கலாமே! என்று எண்ணி உங்க்ளிடம் இருப்பதையும், மீதிக்கு கடனை உடனை வாங்கியாவது அங்கு நாலு ஏக்கர் நிலம் வாங்க யோசிப்பீர்கள், மேலும் வாங்கியும் விடுவீர்கள். பிறகு இந்த விஷயம் மெல்ல மெல்ல கசிய ஆரம்பித்து ஒவ்வொருவருக்காக தெரிய ஆரம்பிக்கும்.

அப்படி வரும் போது உங்களை போல் எத்தினை புத்திசாலி வியாபாரிகள் இருப்பார்கள்! ஆக அனைவரும் முண்டியடித்து வாங்க ஆரம்பிப்பார்கள், ஆக விலை ஜரூராக ஏற ஆரம்பிக்கும், முதலிலேயே நீங்கள் வாங்கி விட்டதால் இப்பொழுது உங்களுக்கு நல்ல லாபம் இருக்கும், அதே நேரம் அந்த இடத்தின் மதிப்பு உயர உயர தரகர்கள் என்ன செய்வார்கள்?

நில உரிமையாளர்களிடம் பேசி நல்ல விலைக்கு விற்று தருவதாக மேலும் விலையை ஏற்றி விடுவார்கள். இந்த தரகர்கள் மூலம் வெளியூரில் உள்ளவர்கள் கூட என்ன ஏது என்று தெரியாமல் நிலத்தில் தானே போடுகிறோம் என்று வாங்குவார்கள். இது போன்று அனைவரும் BUS STAND வரும் என்ற கோணத்தில் எங்கேயோ உள்ள நிலத்தின் விலையை எங்கேயோ ஏற்றி விடுவார்கள்,

இதில் உண்மை என்ன வென்றால் BUS STAND வந்த பிறகு இந்த நிலத்தின் மதிப்பு என்னவாக இருக்கும் என்று யாருக்கும் தெரியாது, இருந்தாலும் முண்டியடித்து வாங்கி விடுவார்கள் (இப்பொழுது நீங்கள் வாங்கிய நிலத்தின் விலை நீங்கள் வாங்கியதை விட எங்கேயோ இருக்கும், அதே நேரம் நேற்று, அதற்க்கு முந்தய தினம் அந்த நிலங்களை வாங்கியவர்கள் உச்ச விலையில் தான் வாங்கி இருப்பார்கள் இல்லையா),

சரி வாங்கி ஆகிவிட்டது! வாங்கியவர்கள் எல்லாம் எதற்காக வாங்கினார்கள் அது முக்கியம் இல்லையா, அதாவது BUS STAND இந்த AREA வில் வரப்போகிறது என்ற யூகத்தினால், இப்பொழுது BUS STAND வந்தால் என்ன நடக்கும்! வரவில்லை என்றால் என்ன நடக்கும் என்று பார்ப்போம்! அது முக்கியம் இல்லையா,

சரி BUS STAND வந்து விட்டதாக வைத்துக்கொள்ளுங்கள், இது வரை ஊகத்தில் இருந்த விஷயம் நடந்தே விட்டது! அப்படியானால் விஷயம் வெளி வந்தவுடன் இது வரை வாங்கியவர்கள் தங்களது விலைகளை அதிகமாக சொல்வார்கள், அதே நேரம் இன்னும் நிலம் வாங்காமல் விஷயம் வந்த பிறகு வாங்கிக்கொள்ளலாம் என்று இருந்தவர்கள் எல்லாம் முண்டியடித்துக்கொண்டு வாங்க முர்ப்படுவார்கள், விளைவு! விலை கண்ணா பிண்ணா என்று உயரும் ஆகவே அனைவருக்கும் முண்டியடிக்கும் ஆசை அதிகமாகும்,

அதே நேரம் இந்த BUS STAND இங்கு வந்ததினால் இந்த இடத்தின் மதிப்பு என்னவாக இருக்கும் என்று மெல்ல சில அதி புத்திசாலிகளின் மனதில் ஒரு கேள்வி எழும், அவர்கள் அந்த விஷயம், இந்த விஷயம் என்று எல்லாத்தையும் கணக்கிட்டு இது தான் அதன் உண்மையான விலையாக இருக்கும் என்று ஒரு அனுமானத்திற்கு வருவார்கள், அப்படி வந்த பின் தற்பொழுது விற்றுக்கொண்டு இருக்கும் விலையையும், இவர்கள் கணக்கிட்ட விலையும் ஒப்பிட்டு பார்க்கும் போது விலை மிக அதிகமாக இருந்தால் மெல்ல யாருக்கும் தெரியாமல் விற்க ஆரம்பிப்பார்கள்,

ஆக முன்பை போலவே இந்த விசயமும் மெல்ல அனைவருக்கும் பரவ ஆரம்பிக்கும், ஆக அனைவருக்கும் இந்த  விஷயம்  தெரிந்தால் என்ன ஆகும்! வந்த வரைக்கும் லாபம் என்று அனைவரும் விற்க ஆரம்பிப்பார்கள், அப்படி  அனைவரும் விற்கும் போது விலை இயல்பாகவே இறங்க ஆரம்பிக்கும் ஏனெனில் விற்பவர்களின் கூட்டம் அதிகமாகவும், வாங்குபவர்களின் கூட்டம் குறைவாகவும் இருக்கும் இல்லையா, மேலும் DEMAND உம் குறைந்து விடும்,

அப்படியானால் உச்ச விலையில் இருந்தபொழுது வாங்கியவர்களின் நிலை என்ன ஆகும், நீங்களே யோசித்து பாருங்கள் இப்படித்தான் பங்கு சந்தையில் உச்சத்தில் இருக்கும் போது வாங்கியவர்களின் நிலைமை மோசமாகி விடுகிறது, சரி நாம் மேலே பார்ப்போம்,

முன்னால் நிலத்தின் விலையை கணக்கிட்டு இது தான் சரியான விலை என்று முடிவு செய்தவர்கள், அந்த குறிப்பிட்ட விலைக்கு கீழே அந்த  நிலத்தின்  விலை வந்தவுடன்! மறுபடியும் விற்றதை மீண்டும் லாபத்துடன் வாங்க ஆரம்பிப்பார்கள், அப்படியானால் விலை மறுபடியும் உயரும்! நாளாக நாளாக அந்த நிலத்தின் மதிப்பு அந்த இடத்தில் உருவாகும் வியாபார வாய்ப்புகள் தேவைகள் இவற்றை பொறுத்து உயரவோ அல்லது வீழ்ச்சியடயவோ செய்யும்.

எப்படி பார்த்தாலும் BUS STAND உள்ள இடம் வியாபார வாய்ப்புக்களினாலும், தேவைகளினாலும் உயர வாய்ப்புகள் உள்ளதால்! முன்பு உச்சத்தில் வாங்கியவர்கள் பொறுத்து இருந்து லாபத்துடன் கொடுக்கலாம், அல்லது பயந்து பதட்டப்பட்டு முன்பே கொடுத்து நட்டம் ஆகியும் இருக்கலாம், அது அவர்களின் மன நிலையை பொறுத்தது,

சரி இப்பொழுது அங்கு BUS STAND வர வில்லை! இந்த விஷயம் தள்ளுபடி ஆகி விட்டது என்ற விஷயம் வெளியே வருகிறது என்று  வைத்துக்கொள்ளுங்கள், அப்பொழுது என்ன நடக்கும்! வந்த வரைக்கும் போதும் என்று அடித்து பிடித்து விற்க ஆரம்பிப்பார்கள், முதலில் சில பேர் விவரம் தெரியாமல் வாங்கி மட்டிக்கொள்ளவும் செய்வார்கள், (இங்கு BUS STAND வரவில்லை என்ற விவரம் தெரியாமல் தற்பொழுது இறங்கி வருகிறதே வாங்கி விடலாம் என்று புதிதாக வாங்கி மாட்டிக்கொள்ளவும் செய்வார்கள்),

இப்படி தான் அதிகமானோர் குறிப்பிட்ட பங்குகளில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் "ஆகா நாம் எவளவு முயன்றும் வாங்க முடியாமல் விலை ஏறிய பங்கு இப்பொழுது இறங்கி உள்ளதே! என்ன வேகமாக ஏறியது இந்த பங்கு! அது மாதிரி மறுபடியும் ஏறினாலும் ஏறிவிடும் நாம் வாழ்க்கையில தவறு செய்யக்கூடாது! வாங்கிப்போட்டு விட வேண்டும் என்று எதிர்பார்த்த விஷயம் நடக்காததினால் இறங்கிக்கொண்டு இருக்கும் பங்கை வாங்கி (ஆனால் விஷயம் தெரிந்தவர்கள் விற்றுக் கொண்டிருப்பார்கள்) மாட்டிக்கொள்வார்கள்”,

பிறகு விஷயம் அனைவருக்கும் தெரிந்த பின் விற்க ஆரம்பிப்பார்கள் அப்பொழுது என்ன நடக்கும், முன்னால் விற்ற விலையை விட கீழே கூட வந்து விடும், அப்பொழுது உச்சத்தில் வாங்கியவர்களின் நிலை என்ன நீங்களே முடிவு செய்யுங்கள்…

சரி இந்த மிக நீண்ட கதையினை  அப்படியே அழுத்தம் திருத்தமாக பங்கு சந்தையுடன்  ஒப்பிட்டு  பொருத்தி பாருங்கள், தெளிவாக உங்களுக்கு நிறைய விஷயங்கள் புரியும்,

இங்கு நடந்த உயர்வு, தாழ்வுகள் எல்லாம் ஒரு விஷயம் நடந்தால் (BUS STAND வரப்போகிறது)  என்ன ஆகும் என்ற யூகத்தின் அடிப்படையில் நடந்தது, இதில் விவரம் தெளிவாக தெரிந்து வாங்கியவர்கள் அநேகம் பேர், அதே போல் விவரம் இன்னதென்றே தெரியாமல் வாங்கி மாட்டியவர்கள் அநேகம் பேர்.

இப்படித்தான் பங்கு சந்தையிலும் நடக்கிறது, இப்படி நிலத்தின் விலை தேவையில்லாமல் உயர்ந்ததுக்கும், மறுபடியும் விஷயம் நடக்க வில்லை என்றதால் வீழ்ந்ததுக்கும் யார் காரணம்? நம்முடைய லாபம் பார்க்கும் ஆசை தானே? இதே விஷயம் தான் பங்கு சந்தையிலும் நடக்கிறது.

நான் சொன்னது ஒரு உதாரணம் தான், இது போல அநேக விஷயங்கள் உள்ளது, அனைத்து விசயங்களும் சில விளைவுகளை தரும், அந்த விளைவுகள் நல்லதாகவும் இருக்கலாம், கெட்டவயாகவும் இருக்கலாம், எது எப்படியோ நாம் அதில்  பங்கு கொண்டால் அந்த விளைவுகளை நாம் அனுபவித்து தான் ஆகவேண்டும் இல்லையா,

சரி அதை விடுங்கள், இப்பொழுது நிலத்தின் விலை உயர்ந்ததுக்கு நம்முடைய லாபம் பார்க்கும் அதிக ஆசை தான்  காரணம் என்று புரிந்துகொண்டு இருப்பீர்கள், அதே நேரம் இந்த இடத்தின் உண்மையான கணக்கீட்டு விலை தற்பொழுது விற்கும் விலையை விட குறைவு என்ற அளவு தெரிந்த பின்! சந்தை தானாக கீழே வந்ததிற்கு நமது பயம் காரணம்,

இந்த விஷயம் (BUS STAND) நடக்க வாய்ப்பே இல்லை என்ற விஷயம் தெரிந்ததும், பழைய விலைக்கும் கீழே வந்ததிற்கும் நமது பயம் காரணம், ஆக சந்தை தன்னை எப்பொழுதும் சரியாகவே வைத்துக்கொள்ளும், அதே நேரம் தவறுதலாக ஏறி விட்டாலும் மறுபடியும் கீழே வந்து விடும் என்பது இந்த உதாரணத்தில் இருந்து உங்களுக்கு தெளிவாக தெரிந்து இருக்கும்,  இதை தான் CHARLES DOW அவர்கள் AVERAGES ARE DISCOUNTS EVERY THING (MARKETS ARE ALWAYS RIGHT)” என்று இரண்டாவது விதியாக சொல்லி இருந்தார், என்ன இந்த இரண்டாவது விதியின் உள் கருத்து இப்பொழுது தெளிவாக  புரிகிறதா, சரி அடுத்த விதிக்கு போகலாம் வாங்க

மூன்றாவது விதி

PRIMARY TREND CAN NOT BE MANIPULATED
இந்த மூன்றாம் விதி முழுக்க முழுக்க TECHNICAL ANALYZING ஐ சார்ந்தது அதாவது ஒரு பங்கை ஆராய்வதற்கு அந்த பங்கின் விலைகளை வைத்து உருவாக்கப்பட்ட வரைபடத்தை தான் பயன்படுத்துவோம், அப்படி பயன்படுத்தும் போது அங்கு உருவாகும் உருவ அமைப்புகளில் இதுவரைக்கும் ஏற்ப்பட்ட LOW புள்ளிகளில் முக்கியமான இரண்டு புள்ளிகளை இணைத்து வரையப்படும் கோட்டினை இனி வரும் தினங்களில் அந்த பங்கில் ஏற்ப்படும் எந்த ஒரு பெரிய வீழ்ச்சியும் கடந்து கீழே செல்லாது என்பதினை தான் சொல்லி இருக்கின்றார், (இந்த விஷயத்தை இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் அது இப்பொழுது சொன்னால் சரியாக இருக்காது இனி வரும் காலங்களில் வரை படங்களுடன் தேவையான நேரத்தில் இதை சொன்னால் தான் நன்றாக புரியும் அப்பொழுது சொல்கிறேன், சரி அடுத்த பதிவில் சிந்திப்போம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவகிரக துதி

சூரியன் சீலமாய் வாழ சீரருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி! சூரியா போற்றி! சுந்தரா போற்றி! வீரியா போற்றி! வினைகள் களைவாய் சந்திரன் எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி! திருவருள் தருவாய் சந்திரா போற்றி! சற்குணா போற்றி! சங்கடந்தீர்ப்பாய் சதுராய் போற்றி! அங்காரகன் (செவ்வாய்) சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ மங்கள செவ்வாய் மலரடி போற்றி! அங்காரகனே அவதிகள் நீக்கு! புதன் இதமுற வாழ இன்னல்கள் நீக்கு புத பகவானே பொன்னடி போற்றி! பதந்தந்தாள்வாய் பண்ணொளியானே உதவியே யருளும் உத்தமா போற்றி! குரு குணமிகு வியாழக் குருபகவானே மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய் ; பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா கிரகதோஷமின்றி கடாஷித்தருள்வாய் சுக்கிரன் சுக்கிரமூர்த்தி சுப சுக மீவாய் வக்ரமின்றி வரமிகத் தருவாய் வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே சனி சங்கடந் தீர்ககுஞ் சனி பகவானே! மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றி சனீஸ்வரத் தேவே இச்சகம் வாழ இன்னருள் தா தா ராகு அரவெனும் ராகு அய்யனே போற...

சோப் ஆயிலில் சூப்பர் லாபம்!

வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் இயந்திரங்கள் எதுவும் இல்லாமல் சோப் ஆயில் தயாரிக்கலாம். இதன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை காளம்பாளையத்தில் ஹக் புராடக்ட்ஸ் சோப் ஆயில் தயாரிக்கும் ரமணன். அவர் கூறியதாவது: கோவையில் தேசிய பஞ்சாலை கழக தரக்கட்டுப்பாட்டு பிரிவில் உதவி ஸ்பின்னிங் மாஸ்டராக 28 ஆண்டுகள் பணிபுரிந்தேன். 7 ஆண்டுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றேன். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற என் போன்றவர்களை, கோவையில் உள்ள சிறு தொழில் சேவை மையத்தினர் சுய தொழில் செய்வதற்கான பயிற்சிக்கு அழைத்தனர். அங்கு ஒரு மாதம் நறுமண சொட்டு நீலம், பினாயில், சோப் பவுடர் போன்றவை தயாரிக்க கற்றுக் கொடுத்தனர். ரூ.5 ஆயிரம் முதலீட்டில் சோப் ஆயில் தயாரிப்பதற்கான தொழிலை துவக்கினேன். நானே முதலாளியாகவும், தொழிலாளியாகவும் இருந்து மாதம் 200 லிட்டர் சோப் ஆயில் தயாரித்து விற்கிறேன். சோப் ஆயில் தயாரித்து விற்பவர்கள் பலர் இருந்தாலும், தரமாக தயாரித்து விற்பதால் ஆர்டர் தொய்வு இல்லாமல் கிடைக்கிறது. தினசரி 5 மணி நேரம் உழைத்தால் 10 லிட்டர் சோப் ஆயில் தயாரிக்க முடியும். 20...

Various Herbs & Spices English & Hindi Names

English/ ஆ ங்கிலம் Tamil/ தமிழ் Hindi/ हिन्दी/ ஹிந்தி Rice Arisi( அரிசி) Chaval Black gram Kadalai Parruppu ( கடலை பருப்பு) Channa Dhal Black Gram Ulluththam Paruppu ( உளுதம் பருப்பு) Urad Dhal Green gram dhal Payaththam Parruppu( பயத்தம் பருப்பு) Moog Dhal Green gram Whole Paasi Parruppu( பாசி பருப்பு) Moog Sabut Yellow split peas Thuvaram Parruppu( துவரம் பருப்பு) Toor Dhal Green gram  Split Pachchai payiru( பச்சைப்பயறு) Moong Chilka Garbanzo beans Kondai Kadalai( கொண்டை கடலை) Kabuli Channa Peanuts Veerkadalai( வேற்கடலை) Moong falee All Purpose Flour Maida Maavu( மைதா மாவு) Maida Gram flour Kadalai Maavu( கடலை மாவு) Besan Wheat flour Godhumai maavu( கோதுமை மாவு) ...