முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பயில்வோம் பங்குச்சந்தை பாகம் 16


பயில்வோம் பங்குச்சந்தை பாகம் 16
கடந்த வாரம் முக்கியமான Indicator களாக Moving Average , RSI ஆகிய  இரண்டை  பற்றியும்  பார்த்து வந்தோம், தற்பொழுது  மேலும் சில  முக்கியமான Indicator களை பற்றி பார்ப்போம்  
MACD
MACD என்பது Moving Average Convergence and Divergence என்று அழைக்கப்படும், இந்த Indicator ஐ வைத்து நாம் ஒரு பங்கை எந்த புள்ளியில் வாங்கலாம், எந்த புள்ளியில் விற்கலாம் என்ற முடிவுக்கு வரலாம், இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமானால் இந்த indicator இல் இரண்டு கோடுகள் மேலும் கீழும் சென்று வரும், இதில் ஒரு கோடு MACD என்று அழைக்கப்படும் மற்றொன்று நாம் முன்னர் பார்த்த EXPONENTIAL MOVING AVERAGE கோடு ஆகும் இந்த EMA கோடானது 9 என்ற நாட்களின் அளவை கொண்ட EMA ஆகும்,  
சரி இந்த indicator ஐ எப்படி நாம் பார்க்க வேண்டும் என்று சொல்கிறேன், அதாவது இந்த இரண்டு கோட்டில் MACD என்ற கோடு "0" என்ற புள்ளியை மேலே கடந்தால் அந்த குறிப்பிட்ட பங்கை நாம் வாங்கலாம், அதே போல் இந்த MACD கோடானது "0" என்ற புள்ளியை கீழே கடந்தால் அந்த குறிப்பிட்ட பங்கை விற்கலாம், இவ்வாறு நாம் இந்த indicator ஐ பயன்படுத்தி வர்த்தக முடிவுகளை எடுக்கலாம், (வெறும் இந்த indicator ஐ மட்டும் வைத்து 100% சரியான முடிவுக்கு வரமுடியாது, இதனுடன் நமது Technical Analysis அறிவையும் சேர்த்து தான் சரியான முடிவுகளை எடுக்க முடியும்), 
அதே நேரம்  இதில் மற்றொரு EMA 9 என்ற கோடும் உள்ளது என்று பார்த்தோம் இல்லையா, இந்த இரண்டு கோடுகளும் (EMA, MACD) ஒன்றுக்கொன்று cross ஆவதை வைத்தும் நாம் Buying மற்றும் Selling  முடிவுகளையும் எடுக்கலாம், அதாவது இந்த MACD என்ற கோடு EMA 9  என்ற கோட்டை மேலே கடந்தால் அது முதல் Buying Signal ஆகும், இவ்வாறு ஏற்பட்ட பின் அடுத்து நாம் முன்னர் பார்த்தது போல MACD கோடு  "0" என்ற புள்ளியை மேலே கடந்தால் அது இரண்டாவது  Buying Signal ஆகும்,  
இப்படி  ஏற்பட்டு Technical  ஆக  சில  வடிவங்கள் break out என்ற நிலையை பெற்று நல்ல volume நடக்குமானால்! நன்றாக அந்த பங்கை வாங்கலாம், அதே போல் இந்த MACD என்ற கோடு EMA 9  என்ற கோட்டை கீழே  கடந்தால் அது முதல் Selling  Signal ஆகும், இவ்வாறு ஏற்பட்ட பின் அடுத்து நாம் முன்னர் பார்த்தது போல MACD கோடு  "0" என்ற புள்ளியை கீழே  கடந்தால் அது இரண்டாவது Selling  Signal ஆகும், இதற்க்கு பின் முன்னர் பார்த்த விஷயங்கள் யாவும் தொடர்ந்து நடந்தால் Selling செய்யலாம், இப்படியாக இந்த indicator நாம் நமது வர்த்தகத்திற்கு பயன்படுத்தலாம்,  
சரி இந்த MACD என்று கோடு எப்படி வந்தது என்றும் பார்த்து விடுவோம்,   அதாவது இரண்டு அளவுள்ள  Moving Average கோடுகள் ஒன்றுடன் ஒன்று Cross ஆகும் போது, ஏற்படும் விளைவுகளை வெளிப்படுத்தும் ஒரு Indicator ஆகும்,   இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால், நாம் முன்னர் பார்த்த EMA (EXPONENTIAL MOVING AVERAGE) களில் 26  என்ற நாட்களின் அளவுள்ள EMA வையும், 12 என்ற நாட்களின் அளவுள்ள EMA வையும் எடுத்துஇதில் 12 என்ற EMA கோடு 26 என்ற EMA கோட்டை மேலே கடந்தால் இந்த MACD indicator இங்கு "0" என்ற புள்ளியை மேலே கடக்கும், அதே போல் 12 என்ற EMA கோடு 26 என்ற EMA கோட்டை கீழே  கடந்தால் இந்த MACD indicator இங்கு "0" என்ற புள்ளியை கீழே கடக்கும்,  
ஆகவே இந்த 12 EMA மற்றும் 26 EMA என்ற இரண்டு கோடுகளும் ஒன்றுக்கொன்று தங்களை Cross செய்வதை வெளிப்படுத்தும் விதமாக இந்த MACD என்ற indicator செயல்படுகிறது, இதில் இந்த 12 EMA, 26 EMA என்ற அளவுகளுக்கு பதில் வேறு சில எண்களை போட்டு! அதன் விளைவுகள் சரியாக இருந்தால்! அதை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம், அது உங்களின் ஆராய்ச்சியையும் அனுபவத்தையும் பொறுத்தது ,,, சரி MACD யின் படத்தை பாருங்கள்     
MACD Picture:   
ADX
ADX என்பது Averages Direction Movement Index என்று அழைக்கப்படும், இந்த ADX indicator வெறும் Buying, மற்றும் selling signal மட்டும் தராமல் அந்த குறிப்பிட்ட   Trend இன் சக்தியையும் நமக்கு வெளிப்படுத்துகிறது , சரி இதை பற்றி விளக்கமாக பார்ப்போம், இந்த ADX Indicator இல் மூன்று விதமான கோடுகள் இருக்கும், இந்த கோடுகளை வைத்து தான் நாம் நமது buy அல்லது sell முடிவுகளை எடுக்கவேண்டி இருக்கும், 
அதாவது இந்த ADX எனப்படும் மொத்த indicator இல் “ D+ ” மற்றும் “ D - “ என்ற indicator கோடுகளும்,  ADX எனப்படும் மற்றுமொரு  supporting tool கோடும் இருக்கும் , (இதை indicator என்று சொல்வதைவிட Catalyst! அதாவது  வினை  ஊக்கி என்று சொல்வது தான் சரியாக இருக்கும்), இந்த மூன்று கோடுகள் தங்களுக்குள் நகர்ந்து கொள்வதை வைத்து தான்! நாம் நமது buying மற்றும் selling முடிவுகளை எடுக்க வேண்டும், அது எப்படி என்று அடுத்த வாரம்  பார்ப்போம், நண்பர்களே தொடரை படிப்பவர்கள் தங்கள் கருத்துகளை  சொல்லுங்கள்,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவகிரக துதி

சூரியன் சீலமாய் வாழ சீரருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி! சூரியா போற்றி! சுந்தரா போற்றி! வீரியா போற்றி! வினைகள் களைவாய் சந்திரன் எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி! திருவருள் தருவாய் சந்திரா போற்றி! சற்குணா போற்றி! சங்கடந்தீர்ப்பாய் சதுராய் போற்றி! அங்காரகன் (செவ்வாய்) சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ மங்கள செவ்வாய் மலரடி போற்றி! அங்காரகனே அவதிகள் நீக்கு! புதன் இதமுற வாழ இன்னல்கள் நீக்கு புத பகவானே பொன்னடி போற்றி! பதந்தந்தாள்வாய் பண்ணொளியானே உதவியே யருளும் உத்தமா போற்றி! குரு குணமிகு வியாழக் குருபகவானே மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய் ; பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா கிரகதோஷமின்றி கடாஷித்தருள்வாய் சுக்கிரன் சுக்கிரமூர்த்தி சுப சுக மீவாய் வக்ரமின்றி வரமிகத் தருவாய் வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே சனி சங்கடந் தீர்ககுஞ் சனி பகவானே! மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றி சனீஸ்வரத் தேவே இச்சகம் வாழ இன்னருள் தா தா ராகு அரவெனும் ராகு அய்யனே போற...

சோப் ஆயிலில் சூப்பர் லாபம்!

வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் இயந்திரங்கள் எதுவும் இல்லாமல் சோப் ஆயில் தயாரிக்கலாம். இதன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை காளம்பாளையத்தில் ஹக் புராடக்ட்ஸ் சோப் ஆயில் தயாரிக்கும் ரமணன். அவர் கூறியதாவது: கோவையில் தேசிய பஞ்சாலை கழக தரக்கட்டுப்பாட்டு பிரிவில் உதவி ஸ்பின்னிங் மாஸ்டராக 28 ஆண்டுகள் பணிபுரிந்தேன். 7 ஆண்டுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றேன். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற என் போன்றவர்களை, கோவையில் உள்ள சிறு தொழில் சேவை மையத்தினர் சுய தொழில் செய்வதற்கான பயிற்சிக்கு அழைத்தனர். அங்கு ஒரு மாதம் நறுமண சொட்டு நீலம், பினாயில், சோப் பவுடர் போன்றவை தயாரிக்க கற்றுக் கொடுத்தனர். ரூ.5 ஆயிரம் முதலீட்டில் சோப் ஆயில் தயாரிப்பதற்கான தொழிலை துவக்கினேன். நானே முதலாளியாகவும், தொழிலாளியாகவும் இருந்து மாதம் 200 லிட்டர் சோப் ஆயில் தயாரித்து விற்கிறேன். சோப் ஆயில் தயாரித்து விற்பவர்கள் பலர் இருந்தாலும், தரமாக தயாரித்து விற்பதால் ஆர்டர் தொய்வு இல்லாமல் கிடைக்கிறது. தினசரி 5 மணி நேரம் உழைத்தால் 10 லிட்டர் சோப் ஆயில் தயாரிக்க முடியும். 20...

Various Herbs & Spices English & Hindi Names

English/ ஆ ங்கிலம் Tamil/ தமிழ் Hindi/ हिन्दी/ ஹிந்தி Rice Arisi( அரிசி) Chaval Black gram Kadalai Parruppu ( கடலை பருப்பு) Channa Dhal Black Gram Ulluththam Paruppu ( உளுதம் பருப்பு) Urad Dhal Green gram dhal Payaththam Parruppu( பயத்தம் பருப்பு) Moog Dhal Green gram Whole Paasi Parruppu( பாசி பருப்பு) Moog Sabut Yellow split peas Thuvaram Parruppu( துவரம் பருப்பு) Toor Dhal Green gram  Split Pachchai payiru( பச்சைப்பயறு) Moong Chilka Garbanzo beans Kondai Kadalai( கொண்டை கடலை) Kabuli Channa Peanuts Veerkadalai( வேற்கடலை) Moong falee All Purpose Flour Maida Maavu( மைதா மாவு) Maida Gram flour Kadalai Maavu( கடலை மாவு) Besan Wheat flour Godhumai maavu( கோதுமை மாவு) ...