முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தலையணை உறை.. தூள் கிளப்பும் லாபம்







பெண்கள்  வீட்டு வேலை  போக மற்ற நேரங்களில் சுயமாக வேலை செய்து சம்பாதிக்க ஏற்ற தொழில் தையல். ஜாக்கெட், சுடிதார் போன்ற நுட்பம் நிறைந்த தையல் வேலைகள் மேற்கொள்ள பயிற்சி வேண்டும். ஆனால் தலையணை உறை தைக்க எவ்வித பயிற்சியும் தேவை இல்லை. நுணுக்கமான தையல் தெரியாதவர்கள் தலையணை உறை தயாரித்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் என்கிறார் கோவை வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரிநாயக்கன்பாளையத்தை சேர்ந்த செல்வி.

அவர் கூறியதாவது:
கணவர் ஆட்டோ டிரைவர். குடும்ப வருமானம் போதவில்லை. அதை சமாளிக்க 4 ஆண்டுகளுக்கு முன்பு தையல் கற்றேன். வீட்டிலேயே பழைய தையல் மெஷின் வாங்கி போட்டு, ஜாக்கெட், சுடிதார் தைத்து வந்தேன். அப்போது எங்கள் பகுதியில் உள்ள பெண்கள் 13 பேர் சேர்ந்து அம்மன் சுய உதவி குழு துவக்கினோம். ரூ.10 ஆயிரம் கடனுதவி கிடைத்தது. அதன்மூலம் ஈரோட்டில் தலையணை உறை துணி வாங்கி வந்து தைத்தேன். அவற்றை கணவர் கடைகளுக்கு எடுத்து சென்று விற்று வந்தார். பின்னர் நானே ஆட்டோவில் ஏற்றி அபார்ட்மென்ட்கள், பள்ளி, கல்லூரி விடுதிகள், வீடுகளில் விற்றேன். நல்ல லாபம் கிடைத்தது.

முழு நேர தொழிலாக தற்போது தலையணை உறை தயாரிக்கிறேன். இதன் மூலம்   நாள் தவறாமல் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. மாதம் ஆயிரம் தலையணை உறைகள் விற்கிறது. இதன்மூலம் ஓரளவு லாபம் வருகிறது. இடையிடையே வாடிக்கையாளர்களுக்கு ஜாக்கெட், சுடிதார் தைத்து தருகிறேன். அதன்மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கிறது.

தலையணை உறை விற்க செல்லும்போது போர்வை, பாவாடை, ஜாக்கெட் துணிகள் கிடைக்குமா என்று நிறைய பேர் கேட்டனர். இதனால் ஈரோட்டில் தலையணை உறை துணி வாங்கும்போது, பாவாடை, ஜாக்கெட் துணியும் வாங்கி வந்து விற்கிறேன். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள்  தவணை முறையில் வாங்குகிறார்கள். அதில் உடனடியாக லாபம் கிடைக்காது. ஆனால் விற்பனையாகும் பொருட்கள் அதிகரிக்கும்.

வீட்டில் உள்ள பெண்கள் வீட்டு வேலை நேரம் போக மற்ற நேரங்களில் பொறுப்புடன் அமர்ந்து தலையணை உறை தைத்தால் தினசரி 4 டஜன் வரை தைக்கலாம். உறை தைக்க நெளிவு சுளிவுகள் தேவையில்லை. உழைப்பும் தொழில் நேர்த்தியும் போதும். நெருக்கமில்லாமல் தைத்தால் பிரிந்து விடும், அடுத்து நம்மிடம் வாங்க மாட்டார்கள். நல்ல நூலில், நெருக்கமாக தைத்தால் பிரியாது. வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள்.

கடைகளுக்கு சப்ளை செய்தால் குறைந்த லாபம் கிடைக்கும். ஆனால் உடனடியாக மொத்தமாக போட்ட காசை எடுத்து விடலாம். வீடு, வீடாக விற்றால் அதிக லாபம் கிடைக்கும். ஒரு மாதத்தில் உற்பத்தியான உறைகளை அந்தந்த மாதத்துக்குள் விற்றால் தான் அடுத்த மாதத்துக்கான முதலீடு கிடைக்கும். ஒரு பழைய தையல் மெஷினை மட்டும் வாங்கி போட்டால் போதும். உறை தைக்க பெரிய பயிற்சி வேண்டியதில்லை. ஒரு மணி நேரத்தில் தலையணை  பழகிவிடலாம். தலையணை உறையோடு டர்க்கி டவல் மற்றும்  சிறிய டவல்களும் தைத்து விற்கலாம்.

தைப்பது எப்படி?

ஒருவர் மற்றும் இருவர் பயன்படுத்துவது என பல்வேறு நீள அளவில் தலையணைகள் உள் ளன. அதற்கேற்ற நீளங்களில்  துணிகளை வெட்டி கொள்ள வேண்டும். வெட்டிய துணிகளை 3 புறமும் தைத்து கொள்ள வேண்டும். 4வது புறத்தில் தலையணை திணிக்க திறப்பு இருக்கும். தலையணை திணித்தவுடன், அது வெளியேறாமல் இருப்பதற்காக உள்புறமாக துணியை மூடிபோல் மடித்து தைக்க வேண்டும். தைக்கப்பட்ட நூல் பிசிறுகளை நீக்கினால் தலையணை உறை தயார்.

தையல் மெஷினில் ‘பவர்‘ பெடலை பொருத்தி சிலர் தைக்கிறார்கள். இதற்கு மின்சார செலவு ஆகும். லாபத்தில் ஒரு பகுதி மின்கட்டணத்துக்கு சென்று விடும். மேலும் பவர் பெடல் விலை ரூ.9 ஆயிரம். அதை வாங்குவதால் முதலீடும் அதிகரிக்கும். பவர் பெடல் இல்லாத தையல் மெஷினை பயன்படுத்துவதே நல்லது. தையல் மெஷினை காலால் இயக்குவதால்  நடை பயிற்சி மற்றும் உடல் பயிற்சி மேற்கொண்ட பலன் கிடைக்கிறது. சர்க்கரை நோயாளிகள், வெளியே நடை பயிற்சி மேற்கொள்ள முடியாத பெண்கள் தையல் மெஷின் இயக்கினால் உடற்பயிற்சியாக அமைவதோடு லாபமும் கிடைக்கும்.

முதலீடு

குறைந்தபட்சம் 10க்கு 15 அடி நீள, அகலமுள்ள அறை. தையல் மெஷின், ஸ்டூல், கட்டிங் டேபிள், கத்தரி, அலமாரி ஆகியவை தேவை.  பழைய தையல் மெஷின் ரூ.3 ஆயிரம், ஸ்டூல் ரூ.400, கட்டிங் டேபிள் ரூ.1000,  கத்தரி ரூ.200, அலமாரி ரூ.3 ஆயிரம் என மொத்தம் ரூ.7,600.

உற்பத்தி செலவு 

ஒரு நாளில் 50 தலையணை உறை தைக்கலாம். ஒரு தலையணை உறை தைக்க ஒரு மீட்டர் துணி தேவை. ஒரு மாதத்தில் 25 நாள் உற்பத்தியில் ஈடுபட்டால் 1250 மீட்டர் துணி தேவை. ஒரு மீட்டர் குறைந்தபட்ச விலை ரூ.25 வீதம் ரூ.31,250 அல்லது அதிகபட்ச விலை ரூ.40 வீதம் ரூ.50 ஆயிரம். துணி கொள்முதல் மற்றும் விற்பனைக்கான போக்குவரத்து செலவு ரூ.2 ஆயிரம், தைக்க தேவையான பல வண்ண நூல் ரூ.100, தையல் இயந்திர பராமரிப்பு ரூ.100. உழைப்பு கூலி ரூ.250 வீதம் ரூ.6,250 என ஒரு மாத உற்பத்திக்கு குறைந்தபட்சம் ரூ.39,700, அதிகபட்சம் ரூ.58,700 தேவை. முதலீடு மற்றும் உற்பத்தி செலவு ஆகியவை சேர்த்து துவக்கத்தில் தொழில் துவங்க குறைந்தபட்சம் ரூ.47,300, அதிகபட்சம் ரூ.66,300 தேவை.

வருவாய் 

ஒரு தலையணை உறை  ரூ.50 முதல் ரூ.70 வரை விலை வைத்து, 1250 தலையணை உறை விற்பதன் மூலம் வருமானம் ரூ.62,500 முதல் ரூ.87,500 வரை இருக்கும். இதன் மூலம் லாபம் குறைந்தபட்சம் ரூ.15,200. அதிகபட்சம் ரூ.28,800 கிடைக்கும். கூடுதலாக தையல் மெஷின் போட்டு, பெண்களை வேலைக்கு அமர்த்தி கூடுதலாக தைக்கலாம். லாபம் அதிகரிக்கும்.

சந்தை வாய்ப்பு 

ஜவுளி கடைகளுக்கு மொத்தமாக சப்ளை செய்யலாம். பள்ளி, கல்லூரி விடுதிகள், மருத்துவமனைகள், தனியார் தங்கும் விடுதிகள், குடியிருப்புகள் ஆகியவற்றில் சில்லரையாக விற்கலாம். கண்காட்சிகள், பொருட்காட்சிகளில் கடை போட்டு விற்கலாம்.

கிடைக்கும் இடங்கள்


தலையணை உறைக்கென்று குறைந்த அகலமான 20 இஞ்ச் அளவில் நெய்யப்படும் துணிகளை வாங்க வேண்டும். ஈரோடு கனி மார்க்கெட்டில் செவ்வாய்தோறும் நடக்கும் ஜவுளி சந்தையில் பல்வேறு ரகங்கள், வண்ணங்கள், டிசைன்களில் தலையணை உறை துணிகள் குறைந்த விலையில் கிடைக்கும். இதே பகுதியில் பெட்ஷீட், பெட்கவர், டர்க்கி டவல், கைலி, பாவாடை, ஜாக்கெட் துணிகள் மொத்தமாக, பல ரகங்களில் கிடைக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவகிரக துதி

சூரியன் சீலமாய் வாழ சீரருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி! சூரியா போற்றி! சுந்தரா போற்றி! வீரியா போற்றி! வினைகள் களைவாய் சந்திரன் எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி! திருவருள் தருவாய் சந்திரா போற்றி! சற்குணா போற்றி! சங்கடந்தீர்ப்பாய் சதுராய் போற்றி! அங்காரகன் (செவ்வாய்) சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ மங்கள செவ்வாய் மலரடி போற்றி! அங்காரகனே அவதிகள் நீக்கு! புதன் இதமுற வாழ இன்னல்கள் நீக்கு புத பகவானே பொன்னடி போற்றி! பதந்தந்தாள்வாய் பண்ணொளியானே உதவியே யருளும் உத்தமா போற்றி! குரு குணமிகு வியாழக் குருபகவானே மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய் ; பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா கிரகதோஷமின்றி கடாஷித்தருள்வாய் சுக்கிரன் சுக்கிரமூர்த்தி சுப சுக மீவாய் வக்ரமின்றி வரமிகத் தருவாய் வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே சனி சங்கடந் தீர்ககுஞ் சனி பகவானே! மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றி சனீஸ்வரத் தேவே இச்சகம் வாழ இன்னருள் தா தா ராகு அரவெனும் ராகு அய்யனே போற...

சோப் ஆயிலில் சூப்பர் லாபம்!

வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் இயந்திரங்கள் எதுவும் இல்லாமல் சோப் ஆயில் தயாரிக்கலாம். இதன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை காளம்பாளையத்தில் ஹக் புராடக்ட்ஸ் சோப் ஆயில் தயாரிக்கும் ரமணன். அவர் கூறியதாவது: கோவையில் தேசிய பஞ்சாலை கழக தரக்கட்டுப்பாட்டு பிரிவில் உதவி ஸ்பின்னிங் மாஸ்டராக 28 ஆண்டுகள் பணிபுரிந்தேன். 7 ஆண்டுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றேன். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற என் போன்றவர்களை, கோவையில் உள்ள சிறு தொழில் சேவை மையத்தினர் சுய தொழில் செய்வதற்கான பயிற்சிக்கு அழைத்தனர். அங்கு ஒரு மாதம் நறுமண சொட்டு நீலம், பினாயில், சோப் பவுடர் போன்றவை தயாரிக்க கற்றுக் கொடுத்தனர். ரூ.5 ஆயிரம் முதலீட்டில் சோப் ஆயில் தயாரிப்பதற்கான தொழிலை துவக்கினேன். நானே முதலாளியாகவும், தொழிலாளியாகவும் இருந்து மாதம் 200 லிட்டர் சோப் ஆயில் தயாரித்து விற்கிறேன். சோப் ஆயில் தயாரித்து விற்பவர்கள் பலர் இருந்தாலும், தரமாக தயாரித்து விற்பதால் ஆர்டர் தொய்வு இல்லாமல் கிடைக்கிறது. தினசரி 5 மணி நேரம் உழைத்தால் 10 லிட்டர் சோப் ஆயில் தயாரிக்க முடியும். 20...

Various Herbs & Spices English & Hindi Names

English/ ஆ ங்கிலம் Tamil/ தமிழ் Hindi/ हिन्दी/ ஹிந்தி Rice Arisi( அரிசி) Chaval Black gram Kadalai Parruppu ( கடலை பருப்பு) Channa Dhal Black Gram Ulluththam Paruppu ( உளுதம் பருப்பு) Urad Dhal Green gram dhal Payaththam Parruppu( பயத்தம் பருப்பு) Moog Dhal Green gram Whole Paasi Parruppu( பாசி பருப்பு) Moog Sabut Yellow split peas Thuvaram Parruppu( துவரம் பருப்பு) Toor Dhal Green gram  Split Pachchai payiru( பச்சைப்பயறு) Moong Chilka Garbanzo beans Kondai Kadalai( கொண்டை கடலை) Kabuli Channa Peanuts Veerkadalai( வேற்கடலை) Moong falee All Purpose Flour Maida Maavu( மைதா மாவு) Maida Gram flour Kadalai Maavu( கடலை மாவு) Besan Wheat flour Godhumai maavu( கோதுமை மாவு) ...