முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பயில்வோம் பங்குச்சந்தை பாகம் – 2


பயில்வோம் பங்குச்சந்தை- பாகம் 2

இது வரை· பங்குசந்தையில் பங்குகளின் விலைகளில் ஏற்ப்படும் மாற்றங்களுக்கு முக்கியமான காரணம், அந்த குறிப்பிட்ட பங்குகளின் FUNDAMENTAL விசயங்களில் ஏற்ப்படும் மாற்றங்களே என்பதை பற்றி பார்த்தோம், மேலும் பங்குகளின் விலைகளில் ஏற்ப்படும் ஏற்ற இறக்கங்கள், ஒரு குறிப்பிட்ட வழிகளை (FORMULAS) பின்பற்றியே நகர்வதாகவும், அந்த வழி முறையானது சில முக்கியமான விசயங்களை கண்டிப்பாக அதை பயன்படுத்துவோருக்கு தரவேண்டும் என்றும், அந்த முக்கியமான விஷயங்கள் எவை எவை என்பதினை பற்றியும் பார்த்தோம், இப்பொழுது· அந்த வழிகள் எப்படி தோன்றியது என்று பார்ப்போம்
TECHNICAL ANALYSIS தோன்றிய·விதம்
TECHNICAL ANALYSIS என்பது சந்தையில் வர்த்தகமாகும் பொருளுக்கு சம்பந்தமில்லாத தனியான ஒரு வாய்ப்பாடு போன்றதில்லை, அது முழுக்க முழுக்க சந்தையில் வர்த்தகமாகும் பொருள்களுடன் உடலும் உயிருமாக பின்னிப்பிணைந்த, சந்தையில் நடந்த, நடந்து கொண்டிருக்கின்ற ·நகர்வுகளே ஆகும்.

அந்த விஷயத்தைப்பற்றி பார்க்கும் முன் வேறு சில விசயங்களை நாம் தெரிந்து கொள்வது முக்கியமானதாகிறது. அதாவது·TECHNICAL ANALYSIS இன் தந்தை என்று வர்ணிக்கப்படும் திரு CHARLES DOW என்ற அதி முக்கியமானவரின் சில கருத்துகளை நாம் தெரிந்து கொள்வது முக்கியமாகிறது.

அதற்க்கு முன் CHARLES DOW அவர்களை பற்றி ஒரு சில வரிகளையாவது இங்கே சொல்ல வேண்டியது எனது கடமையாகும். ·கிபி சுமார் 1880, இந்த கால கட்டங்களில் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தவர்கள் பங்குகளின் விலைகளில் ஏற்ப்படும் ஏற்ற இறக்கங்களை சரியான முறையில் கணிக்க முடியாமல், முதலீடு செய்து தடுமாறி கொண்டிருந்த காலம்.

அந்த கால கட்டத்தில் அதாவது சுமார் 1884 ஆண்டுவாக்கில் திரு CHARLES DOW அவர்கள் சில குறிப்பிட்ட துறை சார்ந்த பங்குகளை தொகுத்து, அந்த பங்குகளின் நகர்வுகளை வைத்து அந்த துறைக்கென தனியாக ஒரு குறிஈட்டை உருவாக்கினார் ( Industrial Average).


அவர் (CHARLES DOW) இந்த பங்கு சந்தை உலகத்திற்கு இது போன்ற மிகப்பெரிய பயனுள்ள அநேக செயல்களை கொடுத்து சென்றுள்ளார், மேலும் முக்கியமாக அவர் பங்குகளில் முதலீடு செய்பவர்களுக்காக கொடுத்த விசயங்களை, இன்று நாம் DOW THEORY என்ற பெயரில் பயன்படுத்துகிறோம்.


மேற்கண்ட இந்த· DOW THEORY ·ஐ வைத்து ஒரு முதளீட்டாளர் எப்பொழுது ஒரு பங்கில் முதலீடு செய்யலாம், எப்பொழுது ஒரு பங்கில் லாபத்தினை உறுதி செய்யலாம் என்ற செயல்பாடுகளை மிக எளிதாக· முடிவு செய்யமுடியும்,

மேலும் திரு·CHARLES DOW அவர்கள் இந்த TECHNICAL ANALYSIS ற்கென்று முக்கியமான சில விதிமுறைகளை ஆராய்ச்சி செய்து நமக்கு கொடுத்துள்ளார், அந்த முக்கியமான விதிமுறைகளில் ஒரு சிலவற்றை ·பற்றி கொஞ்சம் பார்த்து விடுவோம்….

PRINCIPLES OF TECHNICAL ANALYZING - BY CHARLES DOW
1-HISTORY REPETS IT SELF
2-AVERAGES ARE DISCOUNTS EVERY THING,· (MARKETS ARE ALWAYS RIGHT)
3-PRIMARY TREND CAN NOT BE MANIPULATED


திரு CHARLES DOW அவர்கள் கொடுத்த இந்த முக்கியமான மூன்று விசயங்களை வைத்து, சந்தையின் போக்குகளை நாம் எப்படி TECHNICAL ANALYSIS துணை கொண்டு கணிக்க வேண்டும் என்பதினை பற்றி சற்று விரிவாக அறிந்து கொள்ளலாம் ·வாருங்கள். 
முதல் விதி:-
HISTORY REPETS IT SELF 
பங்கு சந்தையை பொறுத்த வரை சந்தையில் முன்னர் நடந்த விஷயங்கள் தான் (உயர்வுகளும், வீழ்ச்சிகளும்) மறுபடியும், மறுபடியும் தொடர்ந்து வரும். அனால் வரும் முறைகளும், வழிகளும் வேண்டுமானால் மாறி இருக்கலாம்.· இதை இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமானால் ஒரு உதாரணத்துடன் சொல்லலாம்.
அதாவது மனிதன் இந்த உலகத்தில் தோன்றி, ஓரளவு ஆறாவது அறிவு வேலை செய்ய தொடங்கியது முதல் போர் என்பது இருந்து வருவது நாம் அறிந்ததே, ஆனால் நாளாக நாளாக மனிதன் பயன்படுத்திய ஆயுதங்கள், கற்களில் இருந்து இன்று அணு ஆயுதம் வரை மாறி வருவதும் நாம் அறிந்ததே, இன்னும் நாளாக நாளாக ஆயுதங்கள் மாறும் ஆனால் போர் என்ற ஒன்று மாறுவதில்லை, தாவது ஆயுதங்கள் மாறினாலும், காரண காரியங்கள் மாறினாலும், இருவருக்கோ அல்லது இரு நாட்டிற்கோ நடக்கும் போர் என்றும் மாறாது. இதே போல் தான் சந்தையில் உயர்வுகளும், தாழ்வுகளும் என்றுமே மாறாது. அனால் எதனால் ஏற வேண்டும் அல்லது இறங்க வேண்டும், எவளவு தூரம் ஏற வேண்டும் அல்லது இறங்க வேண்டும் என்ற காரண காரியங்கள் வேண்டுமானால் மாறி மாறி வரலாம். அனால் உயர்வு தாழ்வுகள் என்றுமே பங்கு சந்தையில் உடலும் உயிருமாக இருந்து கொண்டே இருக்கும். இதைத்தான் "HISTORY REPEATS IT SELF" என்று திரு CHARLES DOW அவர்கள் சொல்லி இருந்தார். என்ன·புரிகிறதா, சரி வாங்க·அடுத்த விதியை பார்ப்போம்… 

இரண்டாம் விதி:-
AVERAGES ARE DISCOUNTS EVERY THING (MARKETS ARE ALWAYS RIGHT) 
இந்த விதி மிக முக்கியமானது! சந்தை எப்பொழுதெல்லாம் மிகப்பெரிய சரிவுகளை சந்திக்கின்றதோ! அப்பொழுதெல்லாம் ஒரு· சில கேள்விகள் நம் மனதில் எழும், ஏன் பங்கு சந்தை இவளவு தூரம் வீழ்ச்சியடைய வேண்டும்? இதற்கான காரணம் என்ன? என்பன போன்ற· கேள்விகள், ·இது போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடையை 1884 ஆம் ஆண்டு வாக்கிலே திரு CHARLES DOW அவர்கள் தனது ஆராய்ச்சியின் மூலம் இந்த பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்களுக்காக கொடுத்துவிட்டு சென்றுள்ளார், அதைப்பற்றி கொஞ்சம்· விளக்கமாக பார்ப்போம் வாருங்கள்.

அதாவது பங்கு சந்தையில் வர்த்தகமாகும் பங்குகளின் விலைகளை, நாம் அந்த பங்கின் இன்றைய சொத்து மதிப்புடன் (அசையும் மற்றும் அசையா சொத்துகளின் படி (இவ்விரண்டில் அந்த நிறுவனத்தின் அனைத்து விசயங்களும் அடங்கும் என்று வைத்துக்கொள்ளுங்கள்)) ஒப்பிட்டுப்பார்த்தால் பங்குகளின் விலைகளில் அநேக ஒற்றுமயின்மையை நீங்கள் காணலாம்,

உதாரணமாக ஒரு XYZ என்ற நிறுவனத்தின் இன்றைய சொத்து மதிப்பு 200 கோடி என்று வைத்துக்கொள்ளுங்கள், அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகள் 2 கோடி என்றும் வைத்துக்கொள்ளுங்கள், அப்படியானால் அந்த XYZ என்ற நிறுவனத்தின் ஒரு பங்கின் உண்மையான விலை சரியாக 100 ரூபாய் என்று இருக்க வேண்டும் அல்லவா, ஆனால் அந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை பங்கு சந்தைகளில் 100 ரூபாய்க்கா வர்த்தகம் ஆகிறது? நீங்கள் பங்கு சந்தையில் பார்த்தால் அந்த விலையில் வர்த்தகம் ஆகாது, அதற்க்கு பதில் ரூ 150/-என்ற விலையிலோ, அல்லது ரூ 200/- என்ற விலையிலோ கூட வர்த்தகம் ஆகலாம்,
ஏன் அப்படி? சரியான விலையில் வர்த்தக ஆகாமல் குத்து மதிப்பாக, இல்லாத விலையில் வர்த்தகம் ஆகிறதே? அப்படியானால் பங்கு சந்தை என்றால் ஏமாற்று வேலையா? இங்கு வியாபாரம் செய்வது சூதாட்டம் என்று சிலர் சொல்கின்றனரே!!! அது உண்மையா? ஏகப்பட்ட பணத்தினை கைகளில் வைத்துள்ளவர்கள் முடிவு செய்து நிர்ணயிப்பது தான் பங்கு சந்தையா? இப்படி எல்லாம் உங்கள் மனதில் அடுக்கடுக்காக· கேள்விகள் எழுகிறதா? ·இதற்கான உண்மையான காரணம் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கின்றதா? அப்படி எனில் பொறுமையாக தொடர்ந்து· படியுங்கள்·…

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவகிரக துதி

சூரியன் சீலமாய் வாழ சீரருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி! சூரியா போற்றி! சுந்தரா போற்றி! வீரியா போற்றி! வினைகள் களைவாய் சந்திரன் எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி! திருவருள் தருவாய் சந்திரா போற்றி! சற்குணா போற்றி! சங்கடந்தீர்ப்பாய் சதுராய் போற்றி! அங்காரகன் (செவ்வாய்) சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ மங்கள செவ்வாய் மலரடி போற்றி! அங்காரகனே அவதிகள் நீக்கு! புதன் இதமுற வாழ இன்னல்கள் நீக்கு புத பகவானே பொன்னடி போற்றி! பதந்தந்தாள்வாய் பண்ணொளியானே உதவியே யருளும் உத்தமா போற்றி! குரு குணமிகு வியாழக் குருபகவானே மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய் ; பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா கிரகதோஷமின்றி கடாஷித்தருள்வாய் சுக்கிரன் சுக்கிரமூர்த்தி சுப சுக மீவாய் வக்ரமின்றி வரமிகத் தருவாய் வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே சனி சங்கடந் தீர்ககுஞ் சனி பகவானே! மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றி சனீஸ்வரத் தேவே இச்சகம் வாழ இன்னருள் தா தா ராகு அரவெனும் ராகு அய்யனே போற...

சோப் ஆயிலில் சூப்பர் லாபம்!

வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் இயந்திரங்கள் எதுவும் இல்லாமல் சோப் ஆயில் தயாரிக்கலாம். இதன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை காளம்பாளையத்தில் ஹக் புராடக்ட்ஸ் சோப் ஆயில் தயாரிக்கும் ரமணன். அவர் கூறியதாவது: கோவையில் தேசிய பஞ்சாலை கழக தரக்கட்டுப்பாட்டு பிரிவில் உதவி ஸ்பின்னிங் மாஸ்டராக 28 ஆண்டுகள் பணிபுரிந்தேன். 7 ஆண்டுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றேன். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற என் போன்றவர்களை, கோவையில் உள்ள சிறு தொழில் சேவை மையத்தினர் சுய தொழில் செய்வதற்கான பயிற்சிக்கு அழைத்தனர். அங்கு ஒரு மாதம் நறுமண சொட்டு நீலம், பினாயில், சோப் பவுடர் போன்றவை தயாரிக்க கற்றுக் கொடுத்தனர். ரூ.5 ஆயிரம் முதலீட்டில் சோப் ஆயில் தயாரிப்பதற்கான தொழிலை துவக்கினேன். நானே முதலாளியாகவும், தொழிலாளியாகவும் இருந்து மாதம் 200 லிட்டர் சோப் ஆயில் தயாரித்து விற்கிறேன். சோப் ஆயில் தயாரித்து விற்பவர்கள் பலர் இருந்தாலும், தரமாக தயாரித்து விற்பதால் ஆர்டர் தொய்வு இல்லாமல் கிடைக்கிறது. தினசரி 5 மணி நேரம் உழைத்தால் 10 லிட்டர் சோப் ஆயில் தயாரிக்க முடியும். 20...

தலையணை உறை.. தூள் கிளப்பும் லாபம்

பெண்கள்  வீட்டு வேலை  போக மற்ற நேரங்களில் சுயமாக வேலை செய்து சம்பாதிக்க ஏற்ற தொழில் தையல். ஜாக்கெட், சுடிதார் போன்ற நுட்பம் நிறைந்த தையல் வேலைகள் மேற்கொள்ள பயிற்சி வேண்டும். ஆனால் தலையணை உறை தைக்க எவ்வித பயிற்சியும் தேவை இல்லை. நுணுக்கமான தையல் தெரியாதவர்கள் தலையணை உறை தயாரித்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் என்கிறார் கோவை வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரிநாயக்கன்பாளையத்தை சேர்ந்த செல்வி. அவர் கூறியதாவது: கணவர் ஆட்டோ டிரைவர். குடும்ப வருமானம் போதவில்லை. அதை சமாளிக்க 4 ஆண்டுகளுக்கு முன்பு தையல் கற்றேன். வீட்டிலேயே பழைய தையல் மெஷின் வாங்கி போட்டு, ஜாக்கெட், சுடிதார் தைத்து வந்தேன். அப்போது எங்கள் பகுதியில் உள்ள பெண்கள் 13 பேர் சேர்ந்து அம்மன் சுய உதவி குழு துவக்கினோம். ரூ.10 ஆயிரம் கடனுதவி கிடைத்தது. அதன்மூலம் ஈரோட்டில் தலையணை உறை துணி வாங்கி வந்து தைத்தேன். அவற்றை கணவர் கடைகளுக்கு எடுத்து சென்று விற்று வந்தார். பின்னர் நானே ஆட்டோவில் ஏற்றி அபார்ட்மென்ட்கள், பள்ளி, கல்லூரி விடுதிகள், வீடுகளில் விற்றேன். நல்ல லாபம் கிடைத்தது. முழு நேர தொழிலாக தற்போது தலையணை உறை தயாரிக்கிறேன். இத...