
இந்த FIBONACCI அளவுகளை எப்பொழுது பங்கு சந்தையில் பயன்படுத்த வேண்டும் என்று பார்ப்போம், அதாவது ஒரு வடிவம் தொடர்ந்து உயர்வதற்க்காகவோ அல்லது தொடர்ந்து வீழ்ச்சி அடைவதற்காகவோ BREAK OUT பெற்றுள்ளது என்று நிலை வரும் பொழுது, அந்த வடிவத்தின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட புள்ளியை இலக்காக பெற்று இருக்கும்,
அதே நேரம் BREAK OUT பெற்ற உடனே நேராக அந்த புள்ளியை சென்று அடையாது! நாம் முன்னர் பார்த்த HIGHER TOP, HIGHER BOTTOM, அல்லது LOWER TOP LOWER BOTTOM என்ற முறையில் தான் நகரும், அதே நேரம் ஒரே வீச்சில் (IN A SINGLE SWING) முழுவதுமான இலக்கையும் அடைந்து விடாது,.
முதலில் அடைய வேண்டிய இலக்கில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை அடையும், அடுத்து சற்று இளைப்பாறல் அல்லது PROFIT BOOKING என்ற காரணத்திற்க்காக சற்று கீழே வரும், பிறகு மறுபடியும் உயரத்துவங்கும், இவ்வாறு மெல்ல மெல்ல தனது முழுமையான இலக்கை அடையும், இங்கே தான் நாம் நமது FIBONACCI அளவுகளை பயன்படுத்தி அந்த இளைப்பாறல் அல்லது PROFIT BOOKING எந்த புள்ளியில் வரும் என்பதை அந்த வடிவம் BREAK OUT பெற்றவுடனே நாம் அறிந்து கொள்ளலாம்,
அதாவது நாம் முந்தய பதிவில் பார்த்த FIBONACCI RETRACEMENT அளவுகலான 23.6%, 38.2%, 50%, 61.8%, 76.4%, 85.4% 100% இந்த சதவிகிதங்களின் அடிப்படையில் தான் BREAK OUT பெற்றவுடன் பங்குகள் நகரும், சரி இந்த FIBONACCI அளவை எப்படி பங்குகளின் வரை படங்களில் அளக்க வேண்டும் என்று பார்ப்போம்,
அதாவது இந்த FIBONACCI அளவை அளக்க இரண்டு புள்ளிகள் நமக்கு தேவை, அதாவது ஒரு LOW புள்ளி, மற்றும் ஒரு HIGH புள்ளி, எதற்க்காக இந்த இரண்டு புள்ளிகள் என்று முதலில் கொஞ்சம் பார்த்து விடுவோம், அதாவது ஒரு மனிதனின் உயரத்தை காண வேண்டுமாயின் அவனது பாதத்தில் இருந்து (LOW POINT) தலை வரை (HIGH POINT) அளந்து தானே உயர்த்தை காண்போம்,
அதே போல் தான் ஒரு வடிவத்தின் உயரத்தை அறிய அந்த வடிவத்தின் LOW புள்ளி மற்றும் HIGH புள்ளியை வைத்து தான் அந்த உயரத்தை அறிய முடியும், அப்படி கிடைத்த உயரம் தான் அந்த குறிப்பிட்ட பங்கு BREAK OUT பெற்றவுடன் அதன் இலக்காக இருக்கும், ஆகவே இப்படி கிடைத்த இலக்கை (உயரத்தை) நாம் நமது FIBONACCI அளவுகளில் பார்த்த சதவிகிதங்களின் அடிப்படையில் தான் அந்த பங்கு நகர்ந்து அடையும் ,
மேலும் இந்த சதவிகிதங்கள் எந்த எந்த புள்ளிகளில் சரியாக இருக்கும் என்பதினை அறிய தான் இந்த LOW மற்றும் HIGH புள்ளிகள், முதலில் இந்த FIBONACCI அளவை LOW புள்ளியில் இருந்து HIGH புள்ளிக்கு கொண்டு சென்று சேர்தோமானால், அடுத்த ஒவ்வொரு சதவிகித அளவுகளும் எந்த எந்த புள்ளிகளில் வரும் என்பது நமக்கு தெரியும், இப்படியாக நாம் நமது இலக்குகள் அடைவதற்கு முன் எந்த எந்த இடங்களில் சில சில தடைகள் வரும் என்பதினை அறிந்து இதன் உதவியுடன் நமது வர்த்தகத்தை செம்மையாக செய்யலாம்,
சரி அடுத்த வடிவத்தினை பற்றி பார்ப்போம், இது வரை CUP மற்றும் CUP WITH HANDLE என்ற வடிவங்களை பற்றி பார்த்தோம், அடுத்து SEMI CUP, SEMI CUP WITH HANDLE என்ற வடிவங்களை பற்றி பார்ப்போம்,
SEMI CUP வடிவம்
CUP வடிவம் என்பது U வடிவில் அமைந்து இருப்பது, இதில் TOP என்ற தொடக்கம் ஆரம்பித்து, LOW என்ற BOTTOM புள்ளி வரை சென்று, மறுபடியும் அந்த TOP என்ற புள்ளியை அடையும் போது CUP என்ற வடிவம் முழுமை அடையும்,
அதே போல் தான், ஆனால் இதில் SEMI CUP என்பது அந்த CUP இன் TOP என்ற புள்ளியை அடையும் முன்பே சில தடைகளை சந்தித்து, சற்று கீழே வந்து ஒரு சில நாட்கள் கழித்து, சில ஏற்ற இறக்கங்கள் முடிந்த பிறகு மறுபடியும் எந்த புள்ளியில் இருந்து சற்று கீழே இறங்க ஆரம்பித்ததோ, அந்த புள்ளியை மறுபடியும் மேலே கடக்கும் போது SEMI CUP என்ற வடிவம் BREAK OUT பெற்று முன்னேற ஆரம்பிக்கும்,
இதில் SEMI CUP இன் உயரம் மேலே இலக்காக அமையும், இதன் முழு இலக்குகளும் அடையும் முன் நாம் முன்னர் பார்த்த FIBONACCI அளவுகளின் படி வருசயாக தனது இலக்கை அடையும், மேலும் இதில் CUP என்ற வடிவம் முழுமையாக இல்லாமல் சற்று அரை குறையாக இருப்பதால் இதனை SEMI CUP என்று அழைக்கின்றோம், சரி SEMI CUP ன் படத்தை பாருங்கள்
-----------------------
அடுத்து SEMI CUP WITH HANDLE
இந்த வடிவத்தை பொறுத்த வரை முன்னர் பார்த்த SEMI CUP ஐ போன்று வடிவம் ஏற்பட்டு பிறகு HANDLE என்ற வடிவம் சற்று நாட்கள் TIME எடுத்து ஒரு சிறிய CUP போன்ற வடிவத்தை, அந்த பெரிய CUP வடிவத்திற்கு அருகிலேயே HANDLE ஆக பெற்று இருப்பது ஆகும்,
இதில் முதல் இலக்காக HANDLE இன் உயரமும், அது முடிந்த பின்பு அடுத்து சில இளைப்பாறல் மற்றும் CONSOLIDATION பெற்று மறுபடியும் CUP இன் இலக்கை அடையும், இதுவும் நாம் முன்னர் பார்த்த FIBONACCI அளவுகளின் படி நகரும், இதிலும் CUP என்ற வடிவம் முழுமையாக இல்லாமல் சற்று அரை குறையாக இருப்பதால், இதனை SEMI CUP WITH HANDLE என்று அழைக்கின்றோம், சரி இந்த SEMI CUP WITH HANDLE வடிவத்தின் படத்தையும் பாருங்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக