பயில்வோம் பங்குச்சந்தை பாகம் 27
கடந்த பாகத்தில் CHANNEL என்ற வடிவத்தின் ஆதி அந்தம் பார்த்தோம், இப்பொழுது மீதம் உள்ள சில விசயங்களை பற்றி பார்ப்போம், அதன் அடிப்படையில் FLAG PATTERN, PENNANT PATTERN , W PATTERN போன்றவைகளை பற்றி பார்ப்போம்,,,
FLAG PATTERN
பொதுவாக இந்த வடிவம் அடிக்கடி தொடர் உயர்வுகளுக்கு இடையே ஏற்படும், இது போன்ற அமைப்புகள் பார்ப்பதற்கு கம்பத்துடன் கூடிய கொடிகளை ஞாபக படுத்துவதால் இதற்க்கு இந்த பெயர் வைத்தார்கள், அதாவது நாம் முன்னர் பார்த்த வடிவங்களில் (HEAD&SHOULDER, CUP, TRIANGLE, CHANNEL) BREAK OUT என்ற நிலையை பெற்று ஒரு பங்கு உயரும் போது ஒரு குறிப்பிட்ட தொலைவை அடைந்த பிறகு சற்று இளைப்பாறல் அடைவதற்காகவோ அல்லது கொஞ்சம் PROFIT BOOKING செய்வதர்க்காவோ சற்று தயங்கி பிறகு தனது இலக்குகளை நோக்கி நகர முற்படும்,
இது போன்று தயங்கி நிற்கும் செயல் சில நாட்களுக்கு நடைபெறும், இது போன்று நடைபெறும் செயல்கள் ஏதோ வாச்சான் போச்சான் கதையாக இல்லாமல் அதற்க்கென்று சில விதிமுறைகளை வைத்து செயல்படுவார்கள், இவ்வாறு செயல்படும் போது குறிப்பட்ட நாட்களுக்கு பிறகு அந்த இளைப்பாறல் நடந்த இடத்தை பார்த்தால் எதோ ஒரு வடிவம் உருவாக்கி இருப்பதை நாம் பார்க்கலாம்,
இவ்வாறு ஏற்படும் வடிவங்களுக்கு அல்லது உருவங்களுக்கு தகுந்தார்ப்போல் அந்த பங்கின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும், இது போன்று consolidation நடைபெறும் நேரங்களில் அடிக்கடி ஏற்படும் உருவத்தின் வகையை சேர்ந்தது தான் இந்த FLAG என்ற வடிவம், இதன் விதிமுறைகளாக நாம் இந்த FLAG அமைப்பின் TOP RESISTANCE எனப்படும் புள்ளிகள் உடைபடும் போது BREAK OUT என்ற நிலையை அடைந்து தொடர்ந்து உயர ஆரம்பிக்கும்,
இதன் முதல் இலக்காக அந்த FLAG அமைப்பின் BODY யும், இரண்டாவது இலக்காக அந்த FLAG அமைப்பின் கம்பத்தின் அளவையும் எடுத்துக்கொள்ளலாம், இதன் S/L ஆக அந்த FLAG அமைப்பின் BODY யின் அடிப்பகுதி செயல்படும், அதே போல் FLAG அமைப்பின் அடிப்பகுதி BREAK DOWN என்ற முறையில் உடைபட்டு தொடர்ந்து இறங்குவதற்கு முற்பட்டால், மேலே சொன்னது போலவே அதன் இலக்குகள அளக்கப்படும், அதே நேரம் இதன் S/L ஆக TOP RESISTANCE என்ற புள்ளிகள் செயல்படும், இவளவு தான் இந்த FLAG வடிவத்தின் விசயங்கள்,
மேலும் சில விசயங்களை எப்பொழுதும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்! அதாவது எந்த ஒரு வடிவமும் அல்வா துண்டு போல் CHART படங்களில் உருவாகாது, சித்தன் போக்காகவும் சிவன் போக்காகவும் தான் உருவாகும், இதனை சரியான முறையில் புரிந்து கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், சரி இந்த FLAG PATTERN படங்களை பாருங்கள்
FLAG PATTERN PICTURE 1
PENNANT PATTERN
இதுவும் பங்குகளின் தொடர் உயர்வுகளுக்கு நடுவே அடிக்கடி ஏற்படும் வடிவம் தான், நாம் முன்னர் பார்த்த FLAG அமைப்பினை ஒத்த அதே விளைவுகளை தருவது தான் இந்த வடிவம், FLAG என்றால் கொடி போன்று இருக்கும் என்று பார்த்தோம் இல்லையா, ஆனால் இது (PENNANT) சற்று வித்தியாசமானது,
அதாவது எந்த ஒரு கட்டுக்குள்ளும் அடங்காத நகர்வுகளை வைத்து இருக்கும் அதாவது ஒரு பங்கு சில வடிவங்களினால் BREAK OUT என்ற முறையில் தொடர்ந்து உயர முற்படும் போது ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு சென்ற பின், அந்த பங்கில் கண்ணா பின்னா வென PROFIT BOOKING வருவது, அதாவது GAP UP இல் துவங்கி அதே நிலையில் முடிவதும் அடுத்த நாளே GAP DOWN இல் தொடங்கி கீழேயே முடிவது போன்ற நடவடிக்கைகளை தன்னகத்தே வைத்து இருக்கும், அதே நேரம் எல்லாமே ஒரு வட்டத்திற்குள் நடைபெறும் இது போன்ற வடிவங்கள் வரும் போது சில விளைவுகள் ஏற்படும் அவைகளை பற்றி பார்ப்போம்,
அதாவது இந்த வடிவத்தை பார்க்கும் போது நாம் ஆங்கில எழுத்தில் பயன்படுத்தும் "P" எழுத்தை நமக்கு ஞாபகப்படுத்தும், இதனால் தான் இதற்க்கு இந்த பெயர் வைத்துள்ளார்கள், ஆகவே இந்த அமைப்பின் படி இதன் HIGH புள்ளி உடைபட்ட உடன் தொடர்ந்து உயரும் வாய்ப்புகளை பெரும், இதன் S/L ஆக இந்த P என்ற வடிவத்தின் BODY யின் LOW புள்ளி செயல்படும், இலக்குகள் முதலில் P அமைப்பின் BODY யின் அளவும், அடுத்து கம்பத்தின் அளவுமாக இருக்கும், இது சற்று குழப்பத்தை தரும் வடிவம் ஆகவே சரியான பயிற்சி ஏற்பட்டவுடன் இது எளிதாக புரிந்து விடும், அதே நேரம் இதன் LOW புள்ளிகளின் அருகே வரும் போது வாங்குவது சிறந்த முறையாகும், சரி இதன் படத்தை பாருங்கள்
PENANT PATTERN PICTURE 2
“W” PATTERN
இதில் சொல்வதற்கு ஒன்றும் அதிக விஷயங்கள் இல்லை, பார்ப்பதற்கு W என்ற எழுத்தை ஞாபகபடுத்தும், இதை எளிதாக புரிந்து கொள்ள ஒரு வழி இருக்கு, அதாவது ஒரு உயர்வுக்கு பிறகு ஒரு நல்ல வீழ்ச்சி ஏற்பட்டு பிறகு அந்த வீழ்ச்சியில் ஒரு குறிப்பிட்ட அளவு உயர்ந்து மறுபடியும் கீழே வரும், இவ்வாறு கீழே வரும் புள்ளி இதற்க்கு முன் வந்த LOW புள்ளியின் அருகில் அல்லது அதற்கும் சற்று கீழோ அல்லது அதே புள்ளிக்கோ வந்து திரும்பும், இந்த இடம் முக்கியமான DOUBLE BOTTOM என்ற சூழ்நிலைகள் ஏற்பட்டு உயர முற்படும்,
இவ்வாறு உயரும் போது முதலில் எந்த இடத்தில் இருந்து திரும்பியதோ அந்த புள்ளி நமக்கு W என்ற எழுத்தின் பாதியில் உள்ள உயரத்தை நிறைவு செய்து தொடர்ந்து உயர்ந்தால் அது BREAK OUT எனப்படும், இதன் முதல் இலக்காக முதன் முதலில் எந்த இடத்தில் இருந்து கீழே வர ஆரம்பித்ததோ அந்த TOP என்ற புள்ளியும், அதை தொடர்ந்து அந்த W என்ற வடிவத்தின் முழு உயரமும் மேலே செல்ல வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும், இதற்க்கான S/L ஆக DOUBLE BOTTOM என்ற புள்ளி இருக்கும், இதை வேறு ஒரு கோணத்தில் பார்த்தால் ஒரு மாதிரியான TRIANGLE வடிவத்தை ஒத்து இருக்கும், இதன் படத்தை பாருங்கள்
W PATTERN PICTURE 3

கருத்துகள்
கருத்துரையிடுக