முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பயில்வோம் பங்கு சந்தை பாகம் 14



கடந்த சில வாரஙகளாக தனிப்பட்ட கேண்டில்கள் மூலமும், ஒன்று இரண்டு கேண்டில்கள் மூலமும், ஒரு குறிப்பிட்ட பங்கின் நகர்வுகளை நாம் எப்படி முன்கூட்டியே தெரிந்து கொள்ளளாம் என்பதினை பற்றி பார்த்து வந்தோம், நாம் பார்த்து வந்த விசயங்கள் அனைத்தும், ஒரு தேர்ந்த நுட்ப ஆய்வாளகளுக்கு கை வந்த கலையாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம்,
ஒரு பங்கின் வரை படத்தை பார்த்த உடனே அதன் போக்கை புரிந்து கொள்பவரும், அதன் அடுத்த கட்ட நகர்வுகள் எப்படி இருக்கும் என்பதினை முடிவு செய்வதில் கில்லாடியாக இருப்பவரும் தான், தேர்ந்த நுட்ப ஆய்வாளர் ஆவார்.  
அது போன்று ஆக வேண்டும் என்று உங்களுக்கு ஆசை இருக்குமேயானால், அதற்க்கு உஙகளின் உழைப்பு மிகவும் கடினமாக இருக்க வேண்டும், எதையும் வென்றெடுக்கும் ஆசாத்திய திறமையுடன் கூடிய உழைப்பு மட்டுமே உஙகளை ஒரு தேர்ந்த நுட்ப ஆய்வாளர்களாக மாற்றும், அதற்க்கு இது போன்ற விசயங்கள் உஙளுக்கு கை கொடுக்கும், ஆகவே நமது பதிவுகள் ஒவ்வொன்றயும் கவனமாக படித்து மனதில் நிறுத்துங்கள், சரி இப்பொழுது மேலும் சில விசயங்களை பற்றி பார்ப்போம்,,,  
அதாவது ஒரு பங்கின் நகர்வுகளுக்கு உறுதுணையாக இருக்கும் indicator களை பற்றி கொஞ்சம் பார்த்து விடுவோம், அந்த வகையில் RSI, MACD, ADX, STOCHASTIC OSCILLATOR, PARABOLIC SAR, MOVING AVERAGE போன்றவைகளை பற்றி பார்ப்போம்  
MOVING AVERAGE:- 
MOVING AVERAGE என்பது ஒரு பங்கின் விலைகளில் ஏற்படும் மாற்றங்களை வைத்து, அதில் சில கணக்கீடுகளை செய்து, அதன் மூலம் கிடைக்கும் அளவுகளை வைத்து, அந்த பங்கின் அடுத்த கட்ட நகர்வுகள், support, resistance, targets, stop loss போன்ற விசயங்களை அறிந்து கொள்ள பயன்படுத்தப்படும் முக்கியமான Indicator என்று சொன்னால் மிகையாகாது, இன்னும் சொல்லப்போனால் நீங்கள் அனுபவம் வாய்ந்த நுட்ப ஆய்வாளர்கள் என்ற நிலைக்கு வந்தவுடன் இந்த MOVING AVERAGE களின் கலவைகளை பயன்படுத்தி, MOVING AVERAGE CROSS OVER என்ற முறையில் ஒரு பங்கை எந்த புள்ளியில் BUY / SELL பண்ணலாம் என்ற வர்த்தக முடிவுகளை எடுக்கவும் பயன்படும்,  
சரி இந்த MOVING AVERAGE ஐ பற்றி சற்று விளக்கமாக பார்ப்போம், MOVING AVERAGE ஐ பொறுத்தவரை மூன்று விதமான பெயர்களில் உள்ளது, ஒவ்வொன்றும் கணக்கீடுகள் செய்வதில் வெவேறு முறைகளை பெற்றுள்ளது, மேலும் அந்த கணக்கீடுகள் பற்றி தெரிந்து கொள்வதினால், நமக்கு ஒன்றும் பெரிய பயனில்லை என்றே சொல்வேன், ஏனெனில் பட்டனை தட்டினால் இட்லி என்ற முறையில் அனைத்து விதமான அளவுகளும் நீங்கள் பயன் படுத்தும் CHARTING S / W இல் மிகவும் தெளிவாக உள்ளது,  
இருந்தாலும் இந்த கணக்கீடுகள் எப்படி வருகிறது என்பதினை மட்டும் சற்று விளக்கிவிடுகிறேன், என்ன வென்றே தெரியாமல் பயன் படுத்துவது தவறு இல்லையா? , அதற்க்கு முன் அந்த மூன்று விதமான பெயர்களை பற்றி பார்ப்போம் SIMPLE MOVING AVERAGE, EXPONENTIAL MOVING AVERAGE, WEIGHTED MOVING AVERAGE இதில் அதிகமாக SIMPLE MOVING AVERAGE, மற்றும் EXPONENTIAL MOVING AVERAGE என்ற இரண்டையும் பயன்படுத்துவார்கள், இன்னும் அதிகமாக EXPONENTIAL MOVING AVERAGE தான் பயன்படுத்துகிறார்கள், இதில் நான் பயன்படுத்துவது EXPONENTIAL MOVING AVERAGE ஐ தான், சரி கணக்கீடுகள் எப்படி என்று பார்ப்போம்,  
பொதுவாக AVERAGE என்றால் என்ன என்பது நாம் அனைவருக்கும் தெரிந்து இருக்கும், சர்ரசரி என்று சொல்லுவோம் இல்லையா அது தான், இன்னும் உங்களுக்கு விளக்கமாக சொல்லவேண்டுமானால், உங்களை வைத்தே சொல்லலாம் உதாரணமாக நீங்கள் ஒரு பங்கை 100 ரூபாய் என்ற விலைக்கு வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள், இப்பொழுது அந்த பங்கு 80 என்ற விலைக்கு வந்து விட்டது, அப்படியானால் உங்களின் விலை இறக்கம் கண்டுள்ளது, அதே நேரம் இந்த பங்கு சீக்கிரமே உயரப்போகிறது, மேலும் நீங்கள் 100 ரூபாய்க்கு வேறு வாங்கி உள்ளீர்கள், அனால் இப்பொழுது அந்த பங்கு 80 ரூபாய்க்கு கிடைக்கிறது, அப்படி என்றால் மேலும் கொஞ்சம் வாங்கிப்போட்டால், குறைந்த விலைக்கு வாங்கியது போலவும் ஆகும், அதே நேரம் உங்கள் விலையை AVERAGE செய்த மாதிரியும் ஆகும் என்ற கோணத்தில் வாங்கு வீர்கள் இல்லையால், அது போலதான்,,,  
100 ரூபாய்க்கு வாங்கிய பங்கை, அதே அளவுகளில் மறுபடியும் 80 ரூபாய்க்கு வாங்கினால் உங்களின் AVERAGE விலை 90 என்ற அளவில் வந்து விடும் இல்லையா, அப்படியானால், இப்போதுள்ள விலையில் இருந்து மறுபடியும் 90 என்ற விலையை தாண்டினாலே உங்களின் லாபம் ஆரம்பம் ஆகிவிடும், மேலும் 100 ரூபாய்க்கு வந்த பின்னால் தான் உங்கள் லாபம் ஆரம்பம் ஆகிறது என்று இல்லை இல்லையா, அது போல தான் ஒரு பங்கின் நகர்வுகளின் சராசரியை வைத்து இங்கு என்ன என்னவோ செய்யலாம், இன்னும் விளக்கமாக சொல்கிறேன் கேளுங்கள்,  
அதாவது ஒரு பங்கின் நகர்வின் சராசரி ! சராசரி ! (MOVING AVERAGE) என்று சொல்கிறோமே, எதன் சராசரி என்ற குழப்பம் உங்களுக்கு வரலாம், அதை பற்றியும் சற்று விளக்கமாக பார்த்து விடுவோம், உதாரணமாக ஒரு பங்கின் நகர்வில் முக்கியமான நான்கு விஷயங்கள் இருப்பதாக நாம் முன்னர் பார்த்து இருந்தோம் இல்லையா, அதாவது OPEN, HIGH, LOW, CLOSE என்ற அளவுகளை பற்றி, இந்த நன்கு அளவுகளின் MOVING AVERAGE களை தான் நீங்கள் அறிந்து கொள்ளலாம்,  
அதாவது தோராயமாக கடந்த 10 நாட்களாக ஒரு பங்கின் HIGH புள்ளியின் MOVING AVERAGE யும், கடந்த 10 நாட்களாக ஒரு பங்கின் LOW புள்ளியின் MOVING AVERAGE யும், கடந்த 10 நாட்களாக ஒரு பங்கின் OPEN புள்ளியின் MOVING AVERAGE யும், கடந்த 10 நாட்களாக ஒரு பங்கின் CLOSE புள்ளியின் MOVING AVERAGE யும், பற்றி நீங்கள் அறிந்து கொள்ளலாம், இதில் எந்த விஷயம் அதிகம் முக்கியத்த்துவம் வாய்ந்தது என்று ஒரு கேள்வி உங்களுக்கு வந்தால்,  
அதற்க்கு பதிலாக ஒரு பங்கின் CLOSE புள்ளியின் MOVING AVERAGE, நாம் அநேக முக்கியமான விசயங்களை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும் என்று சொல்லமுடியும், சரி இப்பொழுது இந்த MOVING AVERAGE இன் கணக்கீடுகள் எப்படி என்று சொல்கிறேன், முதலில் SIMPLE MOVING AVERAGE இன் கணக்கீடுகளை பற்றி பார்ப்போம் (இந்த கணக்கீடை வைத்து தான் மற்ற இரண்டின் கணக்கீடுகளையும் கணக்கீடு செய்வார்கள்,)  
SIMPLE MOVING AVERAGE  
SIMPLE MOVING AVERAGE இல் ஒரு பங்கின் CLOSING MOVING AVERAGE ஐ கணக்கீடு செய்ய, முதலில் எத்தினை நாட்களுக்கான AVERAGE நமக்கு வேண்டும் என்பதினை முடிவு செய்து கொள்ள வேண்டும், உதாரணமாக 10 நாட்களுக்கு தேவையான AVERAGE வேண்டும் என்றால், அந்த பங்கின் 10 நாள் CLOSING புள்ளியை குறித்துக்கொண்டு, அதை மொத்தமாக கூடி 10 ஆல் வகுத்தால், வரும் விடையே அந்த பங்கின் CLOSING புள்ளியின் 10 நாட்களுக்கான SIMPLE MOVING AVERAGE ஆகும்,  
உதாரணமாக கீழ் கண்ட வகையில் ஒரு பங்கின் CLOSE புள்ளிகள் அமைந்தால் அவற்றின் MOVING AVERAGE என்ன என்று பார்ப்போம் வாருங்கள்,  
நாள் / விலை  
1/110, 2/105, 3/107, 4/110, 5/103, 6/105, 7/111, 8/105, 9/114, 10/114, இப்படியாக ஒரு பங்கின் CLOSING அமைந்தால் அந்த 10 நாட்களுக்கான  
CLOSING AVERAGE = 110 + 105 + 107 + 110, + 103 + 105 + 111 + 105 + 114 + 114 = 1084,  
இதை 10 ஆல் வகுக்க 1084 / 10 = 108.4,  
ஆக இந்த 108.4 என்ற புள்ளி தான் அந்த பங்கின் 10 நாட்களுக்கான SIMPLE MOVING AVERAGE ஆகும் (CLOSE புள்ளிகளின் அடிப்படையில்), ஆனால் இந்த 10 நாட்களுக்கான EXPONENTIAL MOVING AVERAGE (EMA) கணக்கீடு செய்தால் 108.4 என்ற புள்ளியில் இருந்து சற்று வித்தியாசப்படும்,  
மேலும் SIMPLE MOVING AVERAGE ஐ விட EXPONENTIAL MOVING AVERAGE இதுவரை நான் கண்டத்தில் மிகவும் சரியான முடிவுகளை (SUPPORT, RESISTANCE ) தந்து வருகிறது, ஆகவே எனது அனுபவத்தில் நான் இந்த EMA வை உங்களுக்கு பரிந்துரைக்கின்றேன், மேலும் நீங்களும் உங்களுக்கு எது ஏற்றதாக இருக்கின்றதோ, அதனை பயன்படுத்தலாம்,  
சரி எந்த எந்த கால அளவுகளை MOVING AVERAGE இல் பயன்படுத்தலாம் என்பதினை பற்றி பார்ப்போம், பொதுவாக 5 முக்கிய கால அளவுகள் உள்ளது, அவைகள் 4 நாட்களுக்கான EMA (CLOSE BASE), 9 நாட்களுக்கானவை, 18 நாட்களுக்கானவை, 50 நாட்களுக்கானவை, 200 நாட்களுக்கானவை ஆகிய 5 உம் முக்கியமானவை, இந்த MOVING AVERAGE அனைத்தும் நாம் பயன்படுத்தும் CHARTING S / W இல் கோடுகளாக அமைந்து இருக்கும், இவ்வாறு இருக்கும் இந்த EMA கோடுகளின் மூலம் நாம் எப்படி சில முடிவுகளை எடுக்கலாம், எப்படி நமது வர்த்தகத்திற்கு பயன்படுத்தலாம் என்பதினை அடுத்த வாரம் பார்ப்போம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவகிரக துதி

சூரியன் சீலமாய் வாழ சீரருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி! சூரியா போற்றி! சுந்தரா போற்றி! வீரியா போற்றி! வினைகள் களைவாய் சந்திரன் எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி! திருவருள் தருவாய் சந்திரா போற்றி! சற்குணா போற்றி! சங்கடந்தீர்ப்பாய் சதுராய் போற்றி! அங்காரகன் (செவ்வாய்) சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ மங்கள செவ்வாய் மலரடி போற்றி! அங்காரகனே அவதிகள் நீக்கு! புதன் இதமுற வாழ இன்னல்கள் நீக்கு புத பகவானே பொன்னடி போற்றி! பதந்தந்தாள்வாய் பண்ணொளியானே உதவியே யருளும் உத்தமா போற்றி! குரு குணமிகு வியாழக் குருபகவானே மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய் ; பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா கிரகதோஷமின்றி கடாஷித்தருள்வாய் சுக்கிரன் சுக்கிரமூர்த்தி சுப சுக மீவாய் வக்ரமின்றி வரமிகத் தருவாய் வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே சனி சங்கடந் தீர்ககுஞ் சனி பகவானே! மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றி சனீஸ்வரத் தேவே இச்சகம் வாழ இன்னருள் தா தா ராகு அரவெனும் ராகு அய்யனே போற...

சோப் ஆயிலில் சூப்பர் லாபம்!

வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் இயந்திரங்கள் எதுவும் இல்லாமல் சோப் ஆயில் தயாரிக்கலாம். இதன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை காளம்பாளையத்தில் ஹக் புராடக்ட்ஸ் சோப் ஆயில் தயாரிக்கும் ரமணன். அவர் கூறியதாவது: கோவையில் தேசிய பஞ்சாலை கழக தரக்கட்டுப்பாட்டு பிரிவில் உதவி ஸ்பின்னிங் மாஸ்டராக 28 ஆண்டுகள் பணிபுரிந்தேன். 7 ஆண்டுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றேன். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற என் போன்றவர்களை, கோவையில் உள்ள சிறு தொழில் சேவை மையத்தினர் சுய தொழில் செய்வதற்கான பயிற்சிக்கு அழைத்தனர். அங்கு ஒரு மாதம் நறுமண சொட்டு நீலம், பினாயில், சோப் பவுடர் போன்றவை தயாரிக்க கற்றுக் கொடுத்தனர். ரூ.5 ஆயிரம் முதலீட்டில் சோப் ஆயில் தயாரிப்பதற்கான தொழிலை துவக்கினேன். நானே முதலாளியாகவும், தொழிலாளியாகவும் இருந்து மாதம் 200 லிட்டர் சோப் ஆயில் தயாரித்து விற்கிறேன். சோப் ஆயில் தயாரித்து விற்பவர்கள் பலர் இருந்தாலும், தரமாக தயாரித்து விற்பதால் ஆர்டர் தொய்வு இல்லாமல் கிடைக்கிறது. தினசரி 5 மணி நேரம் உழைத்தால் 10 லிட்டர் சோப் ஆயில் தயாரிக்க முடியும். 20...

தலையணை உறை.. தூள் கிளப்பும் லாபம்

பெண்கள்  வீட்டு வேலை  போக மற்ற நேரங்களில் சுயமாக வேலை செய்து சம்பாதிக்க ஏற்ற தொழில் தையல். ஜாக்கெட், சுடிதார் போன்ற நுட்பம் நிறைந்த தையல் வேலைகள் மேற்கொள்ள பயிற்சி வேண்டும். ஆனால் தலையணை உறை தைக்க எவ்வித பயிற்சியும் தேவை இல்லை. நுணுக்கமான தையல் தெரியாதவர்கள் தலையணை உறை தயாரித்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் என்கிறார் கோவை வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரிநாயக்கன்பாளையத்தை சேர்ந்த செல்வி. அவர் கூறியதாவது: கணவர் ஆட்டோ டிரைவர். குடும்ப வருமானம் போதவில்லை. அதை சமாளிக்க 4 ஆண்டுகளுக்கு முன்பு தையல் கற்றேன். வீட்டிலேயே பழைய தையல் மெஷின் வாங்கி போட்டு, ஜாக்கெட், சுடிதார் தைத்து வந்தேன். அப்போது எங்கள் பகுதியில் உள்ள பெண்கள் 13 பேர் சேர்ந்து அம்மன் சுய உதவி குழு துவக்கினோம். ரூ.10 ஆயிரம் கடனுதவி கிடைத்தது. அதன்மூலம் ஈரோட்டில் தலையணை உறை துணி வாங்கி வந்து தைத்தேன். அவற்றை கணவர் கடைகளுக்கு எடுத்து சென்று விற்று வந்தார். பின்னர் நானே ஆட்டோவில் ஏற்றி அபார்ட்மென்ட்கள், பள்ளி, கல்லூரி விடுதிகள், வீடுகளில் விற்றேன். நல்ல லாபம் கிடைத்தது. முழு நேர தொழிலாக தற்போது தலையணை உறை தயாரிக்கிறேன். இத...