முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பயில்வோம் பங்குச்சந்தை பாகம் 25


பயில்வோம் பங்குச்சந்தை பாகம் 25

கடந்த பாகத்தில் Head & Shoulder பற்றி பார்த்தோம், இந்த பாகத்தில் அடுத்த வடிவங்களை பற்றி பார்ப்போம், அந்த வகையில் இந்த வாரம் Triangle  Pattern பற்றி பார்ப்போம்

TRIANGLE PATTERN

Chart படங்களில் முக்கோணம் போன்ற அமைப்புகள் உருவாகும் பொழுது ஏற்படும் விளைவுகளை பற்றி தான் பார்க்க போகிறோம், பொதுவாக இது போன்ற அமைப்புகள் chart படங்களில்  எந்த விதமான இடங்களிலும் ஏற்படலாம், அதாவது பங்குகளின் நகர்வுகளுக்கு முந்தய நிலையில் இருக்கும் வடிவங்களை Real Pattern என்றும், நகர்வுகளின் இடையே ஏற்படும் வடிவங்களை Consolidation Pattern என்றும் இரு வகைபடுத்தலாம்,

அந்த வகையில் இந்த Triangle என்ற வடிவம் மேற்கண்ட இரு இடங்களிலும் ஏற்படலாம், எந்த இடங்களில் ஏற்பட்டாலும் இந்த வடிவத்துக்கு அதிக பலம் என்பது மட்டும் நிச்சயம், உதாரணமாக நமது ஜாதக கட்டங்களில் நல்ல இடத்துக்கு உரிய  கிரகங்கள் கேந்திர கோணங்களில் உச்சமாகும் போது ஏற்படும் பலம் இந்த அமைப்பிற்கு எப்பொழுதும் உண்டு,

மேலும் இந்த வடிவம் நமது chart படங்களில் எவளவு சிறியதாக இருந்தாலும் அதற்குரிய பலனை விரைவாக தரும் என்பது எனது அனுபவம், ஆனால் வடிவங்களின் break out புள்ளிகளை மிகச்சரியாக கண்டுபிடித்து செயலாற்ற வேண்டும், அப்பொழுது தான் சரியான வர்த்தகத்தை நாம் செயல்படுத்த முடியும்,

இன்னும் சொல்லபோனால் இந்த Triangle அமைப்பை பொறுத்தவரை அந்த கஷ்டம் கூட நமக்கு இருக்காது என்பதும் உண்மையே, இந்த அமைப்பை நாம் கண்டு கொள்வதும் எளிதானதே, மேலும் இந்த அமைப்பின் s/l கூட மிக அருகில் கிடைக்கும் வாய்ப்புகளும் ஏற்படும், மொத்தத்தில்  இந்த வடிவம் அதிக பட்ச நம்பிக்கைக்கு உரிய! சற்று பாதுகாப்பு அதிகமான! இலக்குகளை  துல்லியமாக கொடுக்கும் வடிவம் என்று சொன்னால் மிகையாகாது,

சரி இந்த வடிவத்தை பற்றி இன்னும் சில விசயங்களை பார்ப்போம், அதாவது  இந்த வடிவம் முக்கோண வடிவம் என்று சொன்னாலும், சொல்லி வைத்தார் போல் நமது மனதில் இருக்கும் முக்கோண வடிவத்தில் மட்டும் தான் ஏற்படும் என்று இல்லை, நாம் முன்னரே பார்த்தோம் இல்லையா அதாவது இயற்கையாக ஒரு விஷயத்தை நாம் பார்ப்பதற்கும் மாற்று கோணம் கொண்டு பார்ப்பதற்கும் அநேக வித்தியாசம் உண்டு என்று,

இதே போல் தான் chart படங்களில் ஏற்படும் வடிவங்கள் எப்பொழுது சொல்லி வைத்தார் போல் இருக்காது, அந்த வடிவங்களை கண்டு அதன் break out புள்ளியை தேர்ந்தேடுப்பதற்க்குள் அநேக கஷ்டங்களை நாம் சந்திக்க வேண்டி வரும், மேலும் இதனை சற்று எளிமைபடுத்திட! சற்று தெளிவுபடுத்திட கடந்த பாகங்களில் வித்தியாசமான படங்களை உங்களுக்கு  கொடுத்து சிறு பயிற்ச்சியும் அளித்தோம், அந்த பயிற்சி இது போன்ற தருணங்களில் உங்களுக்கு உதவியாக இருக்கும்,

மேலும் எனது வகுப்புகளில் கலந்து கொள்பவர்களுக்கு தொடர் பயிற்ச்சிகள் கொடுக்க வேண்டும் என்பதற்காக வகுப்புகள் முடிந்து மூன்று மாதத்திற்கு அடுத்த நாள் எந்த பங்குகள் உயரலாம், அந்த பங்குகள் உயர்வதற்கு என்ன விதமான வடிவங்கள் காரணமாக இருக்கிறது என்பதினை chart படங்களுடன் அனைவரது மின் அஞ்சலுக்கும் தினமும்  மாலை  அனுப்பி வைக்கின்றோம்,

இவ்வாறு செய்யும் போது நமது வகுப்புகளில் கலந்து கொள்பவர்களுக்கு  அவர்களை  அறியாமலேயே  இந்த  chart படங்களில் இந்த வடிவம் ஏற்படுகிறது            என்ற எண்ணமும், ஒரு chart படத்தை பார்க்கும் போது இதில் இந்த வடிவம் புதைந்துள்ளது என்ற பயிற்ச்சியும் அனிச்சை செயலாக வந்துவிடும், இதற்காக தான் இந்த பயிற்ச்சியை நாங்கள் அளிக்கின்றோம், இந்த பதிவுகளை படிப்பவர்கள் இது மாதிரியான பயிற்ச்சியை மேற்கொள்வது முக்கியம், சித்திரமும் கைபழக்கம் என்ற பழமொழி இதற்க்கு சால பொருந்தும்,

ஆகவே பயிற்சி செய்யுங்கள், சரி இந்த முக்கோண வடிவம் பல வகைகளில் ஏற்படும் அதாவது

எப்பொழுதும் போல் உள்ள முக்கோணம்,
சற்று சாய்ந்து கீழே நோக்கி நிற்கும் முக்கோணம்,
சற்று உயர்ந்து மேல் நோக்கி நிற்கும் முக்கோணம்,
அனைத்திற்கும் மேலாக  ஒரு மாதிரி இது முக்கோணமா  இல்லை வேறு ஏதுமா என்ற என்னத்தை கொடுக்கும் முக்கோணம்

என்று வகைபடுத்தலாம், எது எப்படி ஆனாலும், அப்படி இப்படி என்று இருந்தாலும் பரவாயில்லை முக்கோணத்தின் சற்றேறக்குறைய உருவங்கள் வந்து விட்டாலே அது முக்கோணம் தான் break out கிடைத்தவுடன் வர்த்தகத்தை ஆரம்பித்து விட வேண்டியது தான், போதிய பயிற்சி ஏற்பட்டவுடன் உங்களுக்கு எளிமையாக புரிந்துவிடும் கவலைபடாதீர்கள்,

இவைகளை எல்லாம் எனது அநுபவத்தி நான் கண்ட உண்மைகள், பங்கு சந்தைகளில் ஏட்டு சுரைக்காய் என்றும் உதவாது, ஆகவே நான் இங்கு உங்களுக்கு தருவதெல்லாம் எனது அனுபவங்கள், அதிலும் வெற்றிகளை தொடர்ந்து தந்து கொண்டிருக்கும் அனுபவங்கள், ஆகவே சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள், இலவசமாக கிடைப்பதால் மேம்போக்காக சென்று விடாதீர்கள், என்னால் முடிந்த வரை எவளவு எளிமைபடுத்தி தர முடியுமோ அவளவு எளிமைபடுத்தி தந்துள்ளேன், ஆகவே கவனமாகவே படியுங்கள்,

சரி இந்த முக்கோணத்தின்  இலக்குகளை நாம் எப்படி கண்டறிவது, பொதுவாக முக்கோண அமைப்பின் உயரம் தான் அந்த அமைப்பு break out பெறும்போது அதன் இலக்காக இருக்கும், இதன் s/l ஆக அந்த முக்கோணத்தின் support கோடு எந்த புள்ளியில் வருகிறது அந்த புள்ளி s/l ஆக செயல் படும்,

சரி இந்த அமைப்பின் படங்களை பாருங்கள் சந்தேகம் இருந்தால் கேளுங்கள்

PICTURE 1 
PICTURE_1_TRIANGLE_NORMAL

PICTURE 2
PICTURE_2_TRIANGLE_UP

PICTURE 3
PICTURE_3_TRIANGLE_UP

PICTURE 4
PICTURE4_TRIANGLE_DOWN

PICTURE 5
PICTURE5_TRIANGLE

PICTURE 6
PICTURE_6_TRIANGLE

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவகிரக துதி

சூரியன் சீலமாய் வாழ சீரருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி! சூரியா போற்றி! சுந்தரா போற்றி! வீரியா போற்றி! வினைகள் களைவாய் சந்திரன் எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி! திருவருள் தருவாய் சந்திரா போற்றி! சற்குணா போற்றி! சங்கடந்தீர்ப்பாய் சதுராய் போற்றி! அங்காரகன் (செவ்வாய்) சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ மங்கள செவ்வாய் மலரடி போற்றி! அங்காரகனே அவதிகள் நீக்கு! புதன் இதமுற வாழ இன்னல்கள் நீக்கு புத பகவானே பொன்னடி போற்றி! பதந்தந்தாள்வாய் பண்ணொளியானே உதவியே யருளும் உத்தமா போற்றி! குரு குணமிகு வியாழக் குருபகவானே மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய் ; பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா கிரகதோஷமின்றி கடாஷித்தருள்வாய் சுக்கிரன் சுக்கிரமூர்த்தி சுப சுக மீவாய் வக்ரமின்றி வரமிகத் தருவாய் வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே சனி சங்கடந் தீர்ககுஞ் சனி பகவானே! மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றி சனீஸ்வரத் தேவே இச்சகம் வாழ இன்னருள் தா தா ராகு அரவெனும் ராகு அய்யனே போற...

சோப் ஆயிலில் சூப்பர் லாபம்!

வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் இயந்திரங்கள் எதுவும் இல்லாமல் சோப் ஆயில் தயாரிக்கலாம். இதன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை காளம்பாளையத்தில் ஹக் புராடக்ட்ஸ் சோப் ஆயில் தயாரிக்கும் ரமணன். அவர் கூறியதாவது: கோவையில் தேசிய பஞ்சாலை கழக தரக்கட்டுப்பாட்டு பிரிவில் உதவி ஸ்பின்னிங் மாஸ்டராக 28 ஆண்டுகள் பணிபுரிந்தேன். 7 ஆண்டுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றேன். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற என் போன்றவர்களை, கோவையில் உள்ள சிறு தொழில் சேவை மையத்தினர் சுய தொழில் செய்வதற்கான பயிற்சிக்கு அழைத்தனர். அங்கு ஒரு மாதம் நறுமண சொட்டு நீலம், பினாயில், சோப் பவுடர் போன்றவை தயாரிக்க கற்றுக் கொடுத்தனர். ரூ.5 ஆயிரம் முதலீட்டில் சோப் ஆயில் தயாரிப்பதற்கான தொழிலை துவக்கினேன். நானே முதலாளியாகவும், தொழிலாளியாகவும் இருந்து மாதம் 200 லிட்டர் சோப் ஆயில் தயாரித்து விற்கிறேன். சோப் ஆயில் தயாரித்து விற்பவர்கள் பலர் இருந்தாலும், தரமாக தயாரித்து விற்பதால் ஆர்டர் தொய்வு இல்லாமல் கிடைக்கிறது. தினசரி 5 மணி நேரம் உழைத்தால் 10 லிட்டர் சோப் ஆயில் தயாரிக்க முடியும். 20...

Various Herbs & Spices English & Hindi Names

English/ ஆ ங்கிலம் Tamil/ தமிழ் Hindi/ हिन्दी/ ஹிந்தி Rice Arisi( அரிசி) Chaval Black gram Kadalai Parruppu ( கடலை பருப்பு) Channa Dhal Black Gram Ulluththam Paruppu ( உளுதம் பருப்பு) Urad Dhal Green gram dhal Payaththam Parruppu( பயத்தம் பருப்பு) Moog Dhal Green gram Whole Paasi Parruppu( பாசி பருப்பு) Moog Sabut Yellow split peas Thuvaram Parruppu( துவரம் பருப்பு) Toor Dhal Green gram  Split Pachchai payiru( பச்சைப்பயறு) Moong Chilka Garbanzo beans Kondai Kadalai( கொண்டை கடலை) Kabuli Channa Peanuts Veerkadalai( வேற்கடலை) Moong falee All Purpose Flour Maida Maavu( மைதா மாவு) Maida Gram flour Kadalai Maavu( கடலை மாவு) Besan Wheat flour Godhumai maavu( கோதுமை மாவு) ...