விநாயகர் துதி
ஐந்து கரத்தானை - ஆனை முகத்தானை
வேலொடு விளையாடும் வேலனின் சோதரனை
விக்னங்கள் களையும் விநாயகப் பெருமானை
பரமபதம் அருளும் பார்வதி புத்திரனை
என்னாளும் மறவாமல் நினைப்பாய் நெஞ்சே!
வளைந்த துதிக்கையினை
உடையவனே! பெரிய தேகத்
தைத் கொண்டவனே பல கோடி
சூரியன்கள் ஒன்று சேர்ந்தாற்
போல ஒளிச்சுடராகத் திகழ்
பவனே நான் செய்கின்ற எ
ல்லா நற்செயல்களிலும்
தடையேதும் குறுக்கிடாமல்
முழுமையாக நிறைவேற உன்
அருளை வேண்டுகிறேன்.
முஷிக வாகன மோதக ஹஸ்த
ஷ்யாமள கர்ண விளம்பித ருத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே
ஐந்து கரத்தனை ஆனைமகத்தனை
இந்தியினிளம்பிறை போலுமெயிற்றனை
நந்தி மகந்தனை ஞானக்கொழுந்தனை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்-உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர் தம் கை.
மூத்த நாயனார் திருவிரட்டை மணிமாலை
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்-விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து
மூத்த நாயனார் திருவிரட்டை மணிமாலை
பிடியதன் உருஉமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கூடி கணபதி வர அருளினான் மிகு கொடை
வடிவினர் பயில் வலி வலமுறை இறையே
கைத்தல நிறைகனி (விநாயகர் துதி )
கப்பிய கறிமுகன் ...... அடிபேணி
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பகம் எனவினை ...... கடிதேகும்
மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள்புய ...... மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய ...... முதல்வோனே
முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்
அச்சது பொடிசெய்த ...... அதிதீரா
அத்துயர் அதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புனம் அதனிடை ...... இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கணம் மணமருள் ...... பெருமாளே .
திரிபுரத்தின்மேல் படையெடுக்கத் தொடங்குகையில் சிவபெருமான் விநாயகரை பூஜிக்க மறந்தார்.ஆதலால் சிவபெருமான் ஏறி வந்த தேரின் அச்சு முறியும்படி விநாயகர் செய்தார் என்பது சிவபுராணம் .அது இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக