முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிப்பிக் காளான் வளர்ப்பு


சிப்பிக் காளான் வளர்ப்பு





பருவம் மற்றும் இரகங்கள்
·          வருடம் முழுவதும் காளான் வளர்க்கலாம்
·          காளான் வளர்ப்பை வீட்டிலேயே செய்யலாம் அல்லது காளான் குடில் அமைத்து செய்யலாம்.
·          வெள்ளைச்சிப்பி (கோ-1), சாம்பல்சிப்பி (எம்.டி.யு-2), ஏ.பி.கே.-1 (சிப்பி) ஏ.பி.கே.-2 (பால் காளான்), ஊட்டி-1 மற்றும் ஊட்டி-2 (மொட்டுக்காளான்) ஆகிய காளான் தமிழ்நாட்டிற்கு ஏற்றவை
  காளான் குடில்
·          16 சதுர மீட்டர் பரப்பு கொண்ட கூரை மேயப்பட்ட குடில் போதுமானதாகும்.குடிலை, வித்துப் பரவும் அறையாகவும், காளான் வளர்ப்பு அறையாகவும் பிரிக்கவும்.
·          வித்து பரவும் அறை :25-300சி வெப்பநிலை, நல்ல காற்றோட்டம், இருட்டு இல்லாமல் இருக்க வேண்டும்.
·          வளர்ப்பு அறை :23-250சி வெப்பம், 75-80% ஈரப்பதம், மிதமான வெளிச்சம்,நல்ல காற்றோட்டம் தேவை.
(தெர்மாமீட்டர், ஈரப்பத மீட்டர் போன்றவை எலக்ட்ரிக் கடைகளில் விற்பனைக்கு கிடைக்கும்).
  காளான் வித்து
·          ஏற்ற தானியங்கள் :சோளம் / மக்காச்சோளம் / கோதுமை
·          வித்து தயார் செய்தல் : தானியங்களை அரை வேக்காடு வேகவைத்து, காற்றில் உலர்த்தி, 2% சுண்ணாம்புடன் கலந்து, காலியான குளுக்கோஸ் பாட்டில்களில்இடவேண்டும். பின்பு தண்ணீர் உறிஞ்சாப் பஞ்சினால் அடைத்து நுண்கிருமிகளை அழிக்க குக்கரில் அடுக்கி 2 மணிநேரம் வேகவைக்க வேண்டும்.
·          வேளாண் பல்கலைக் கழகமோ, வேளாண் துறையோ உற்பத்தி செய்த தூய்மையான தாய் காளான் வித்தை தானியம் நிரப்பப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலில் கலந்து, சாதாரண வெப்ப நிலையில் 15 நாட்கள் தனியாக வைக்க வேண்டும். பிறகு 15-18 நாட்கள் வயதுடைய காளான் வித்தை காளான் தயாரிப்புக்கு பயன்படுத்த வேண்டும்.
காளான் படுக்கை அமைத்தல்
·          ஏற்ற பொருட்கள்: வைக்கோல்/ கரும்புச்சக்கை, உமி நீக்கிய மக்காச்சோளக்கருது
·          மூலப்பொருள் தயாரித்தல் : முழு வைக்கோலை 5 செ.மீ நீளமுள்ள சிறுதுண்டுகளாக வெட்டி, 5 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து 1 மணி நேரம் வேக வைத்து, தண்ணீரை வடிகட்டி, 65% ஈரப்பதம் வரை காற்றில் உலர்த்திய (கைகளால் வைக்கோலைப் பிழிந்தால் தண்ணீர் சொட்டாமல் இருக்கும் வரை) வைக்கோலை பயன்படுத்த வேண்டும்.
  காளான் பைகள் / படுக்கைகள் தயார் செய்தல்
·          காளான் படுக்கைகள் தயார் செய்ய 60 X 30 செ.மீ பாலீத்தின் பைகளைஉபயோகிக்க வேண்டும் (உபயோகபபடுத்தும் பைகள் இரு பக்கமும் திறந்திருக்க வேண்டும்).
·          பாலித்தீன் பையை ஒரு பக்கத்தில் கட்ட வேண்டும். 1 செ.மீ அளவிற்கு நடுவில் 2 ஓட்டை போடவும்.
·          வைக்கோலை ஒரு பக்கம் கட்டப்பட்ட வட்ட வடிவப் பைக்குள் 5 செ.மீ உயரத்திற்கு நன்கு அழுத்தவும். பின்பு 25 கிராம் காளான் வித்தைத் தூவ வேண்டும்.
·          இதே போல் 25 செ.மீ வைக்கோல் தளத்தை அமைக்கவும். காளான் வித்து தளத்தையும் வைக்கோல் தளத்தையும் 4 அல்லது 5 அடுக்குள் மாறி மாறி நிரப்ப வேண்டும். வாயிலை நன்றாகக் கட்டி, குடிலினுள் உள்ள பரண் போன்றஇருப்பில் வைக்க வேண்டும்.
·          விதைத்த 15-20 நாட்களில் காளான் படுக்கை முழுவதும் வெண்மையான காளான் இழைகள் படர்ந்திருக்கும். பின்னர் சுத்தமான கத்தியைக் கொண்டு பாலித்தீன் பையைக் கிழிக்க வேண்டும்.
·          காளான் படுக்கை காயாமல் இருக்க தினமும் தண்ணீரைக் கைதெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
அறுவடை
·          பைகளை கிழித்த 3 ஆம் நாளில் காளானின் மொட்டுகள் சிறு திறள் போன்று காணப்படும். 3 நாட்களில் முழுவளர்ச்சி அடையும்.
·          தண்ணீர் தெளிக்கும் முன் காளான் அறுவடை செய்ய வேண்டும். அறுவடையை தினமுமோ அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாளோ செய்யலாம்.
·          முதல் அறுவடைக்குப் பின் காளான் படுக்கையை ஒரு தகடு கொண்டு லேசாகச் சுரண்டி விட்டு, பின்பு தண்ணீர் தெளித்து வந்தால் இரண்டாம்,மூன்றாம் அறுவடை செய்யலாம்.

மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் அலுவலகங்களையோ அல்லது வேளாண்மை பல்கலைக்கழகத்தின் விரிவாக்க மையங்களையோ அணுகவும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவகிரக துதி

சூரியன் சீலமாய் வாழ சீரருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி! சூரியா போற்றி! சுந்தரா போற்றி! வீரியா போற்றி! வினைகள் களைவாய் சந்திரன் எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி! திருவருள் தருவாய் சந்திரா போற்றி! சற்குணா போற்றி! சங்கடந்தீர்ப்பாய் சதுராய் போற்றி! அங்காரகன் (செவ்வாய்) சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ மங்கள செவ்வாய் மலரடி போற்றி! அங்காரகனே அவதிகள் நீக்கு! புதன் இதமுற வாழ இன்னல்கள் நீக்கு புத பகவானே பொன்னடி போற்றி! பதந்தந்தாள்வாய் பண்ணொளியானே உதவியே யருளும் உத்தமா போற்றி! குரு குணமிகு வியாழக் குருபகவானே மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய் ; பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா கிரகதோஷமின்றி கடாஷித்தருள்வாய் சுக்கிரன் சுக்கிரமூர்த்தி சுப சுக மீவாய் வக்ரமின்றி வரமிகத் தருவாய் வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே சனி சங்கடந் தீர்ககுஞ் சனி பகவானே! மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றி சனீஸ்வரத் தேவே இச்சகம் வாழ இன்னருள் தா தா ராகு அரவெனும் ராகு அய்யனே போற...

சோப் ஆயிலில் சூப்பர் லாபம்!

வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் இயந்திரங்கள் எதுவும் இல்லாமல் சோப் ஆயில் தயாரிக்கலாம். இதன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை காளம்பாளையத்தில் ஹக் புராடக்ட்ஸ் சோப் ஆயில் தயாரிக்கும் ரமணன். அவர் கூறியதாவது: கோவையில் தேசிய பஞ்சாலை கழக தரக்கட்டுப்பாட்டு பிரிவில் உதவி ஸ்பின்னிங் மாஸ்டராக 28 ஆண்டுகள் பணிபுரிந்தேன். 7 ஆண்டுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றேன். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற என் போன்றவர்களை, கோவையில் உள்ள சிறு தொழில் சேவை மையத்தினர் சுய தொழில் செய்வதற்கான பயிற்சிக்கு அழைத்தனர். அங்கு ஒரு மாதம் நறுமண சொட்டு நீலம், பினாயில், சோப் பவுடர் போன்றவை தயாரிக்க கற்றுக் கொடுத்தனர். ரூ.5 ஆயிரம் முதலீட்டில் சோப் ஆயில் தயாரிப்பதற்கான தொழிலை துவக்கினேன். நானே முதலாளியாகவும், தொழிலாளியாகவும் இருந்து மாதம் 200 லிட்டர் சோப் ஆயில் தயாரித்து விற்கிறேன். சோப் ஆயில் தயாரித்து விற்பவர்கள் பலர் இருந்தாலும், தரமாக தயாரித்து விற்பதால் ஆர்டர் தொய்வு இல்லாமல் கிடைக்கிறது. தினசரி 5 மணி நேரம் உழைத்தால் 10 லிட்டர் சோப் ஆயில் தயாரிக்க முடியும். 20...

தலையணை உறை.. தூள் கிளப்பும் லாபம்

பெண்கள்  வீட்டு வேலை  போக மற்ற நேரங்களில் சுயமாக வேலை செய்து சம்பாதிக்க ஏற்ற தொழில் தையல். ஜாக்கெட், சுடிதார் போன்ற நுட்பம் நிறைந்த தையல் வேலைகள் மேற்கொள்ள பயிற்சி வேண்டும். ஆனால் தலையணை உறை தைக்க எவ்வித பயிற்சியும் தேவை இல்லை. நுணுக்கமான தையல் தெரியாதவர்கள் தலையணை உறை தயாரித்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் என்கிறார் கோவை வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரிநாயக்கன்பாளையத்தை சேர்ந்த செல்வி. அவர் கூறியதாவது: கணவர் ஆட்டோ டிரைவர். குடும்ப வருமானம் போதவில்லை. அதை சமாளிக்க 4 ஆண்டுகளுக்கு முன்பு தையல் கற்றேன். வீட்டிலேயே பழைய தையல் மெஷின் வாங்கி போட்டு, ஜாக்கெட், சுடிதார் தைத்து வந்தேன். அப்போது எங்கள் பகுதியில் உள்ள பெண்கள் 13 பேர் சேர்ந்து அம்மன் சுய உதவி குழு துவக்கினோம். ரூ.10 ஆயிரம் கடனுதவி கிடைத்தது. அதன்மூலம் ஈரோட்டில் தலையணை உறை துணி வாங்கி வந்து தைத்தேன். அவற்றை கணவர் கடைகளுக்கு எடுத்து சென்று விற்று வந்தார். பின்னர் நானே ஆட்டோவில் ஏற்றி அபார்ட்மென்ட்கள், பள்ளி, கல்லூரி விடுதிகள், வீடுகளில் விற்றேன். நல்ல லாபம் கிடைத்தது. முழு நேர தொழிலாக தற்போது தலையணை உறை தயாரிக்கிறேன். இத...