முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பயில்வோம் பங்குச்சந்தை பாகம் 4


பயில்வோம் பங்குச்சந்தை பாகம் 4

கடந்த மூன்று பாகங்களில் TECHNICAL ANALYSIS ற்கு தேவையான சில அடிப்படையான விசயங்களை பார்த்து வந்தோம், இப்பொழுது மேலும் சில விஷயங்களை பார்த்துவிடுவோம்,

இதுவரை நாம் பார்த்துவந்த அடிப்படை விஷயங்கள் அனைத்தும் மிக முக்கியமானதும் TECHNICAL ANALYSIS பயில்வதற்கு அடிப்படையான விசயங்களும் ஆகும். இந்த விஷயங்கள்  எல்லாம் அனிச்சை செயலாக உங்கள் மூலையில் பதிந்து இருந்தால் தான் தேவையான இடத்தில் நமக்கு பேருதவியாக இருக்கும், சரி அடுத்து சந்தையில் நடக்கும் சில முக்கியமான விஷயங்களைப்பற்றி பார்ப்போம்,

இப்பொழுது சொல்லும் இந்த விஷயங்கள் தான், TECHNICAL ANALYSIS செய்வதற்கு நாம் பயன்படுத்தப்போகும் வரைபட உருவ அமைப்புகள் தோன்றுவதற்கு ஆதாரமான விஷயங்கள்,, அதாவது பங்கு சந்தையில் வர்த்தகம் தினமும் காலை மணி 9க்கு தொடங்கி மாலை மணி 3.30 க்கு முடிவடையும்,

இப்படி நடக்கும் சந்தையில் வர்த்தகமாகும் பங்குகள் அனைத்தும், காலையில் தொடங்கி (OPEN), மாலை வரை வர்த்தகமாகி இறுதியில் மாலை மணி 3.30 அளவில் முடிவடையும் (CLOSE), இந்த இடைப்பட்ட நேரத்தில் வர்த்தகமாகும் அனைத்து பங்குகளும் மேலும் (HIGH), கீழும் (LOW) நகர்ந்து, இறுதியில் ஒரு குறிபிட்ட விலையில் முடிவடையும் (CLOSE).

இப்படிப்பட்ட இந்த நகர்வுகளில் ஏற்ப்படும் மிக முக்கியமான புள்ளிகளான OPEN, HIGH, LOW, CLOSE என்ற புள்ளிகளை வைத்தே நாம் TECHNICAL வரை படங்களை உருவாக்குகிறோம். உருவாக்குகிறோம் என்றால் நாம் உக்கார்ந்து வரைவதில்லை அதற்கென SOFTWARE   உள்ளது.

ஆகவே இந்த முக்கியமான புள்ளிகள் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்பதை விளக்குவதும் முக்கியமாகிறது, ஆகவே அதனைப்பற்றியும் கொஞ்சம் பார்த்துவிடுவோம் வாருங்கள்.

பங்கு சந்தையில் ஒவ்வொரு பங்கிலும் தினமும் உருவாகும் இந்த OPEN, HIGH, LOW, CLOSE என்ற புள்ளிகள், அந்த பங்குகளின் அடுத்த நகர்வுகள் எப்படி இருக்கும் என்பதை விளக்குவதற்கு எப்படி பயன்படுகிறது என்பதினை பார்க்கலாம், அதாவது இந்த OPEN, HIGH, LOW, CLOSE பற்றி ஒரு சிறிய விளக்கத்தை பார்ப்போம், அப்பொழுதுதான் TECHNICAL ANALYSIS ஐ நாம் எப்படி பயன்படுத்தவேண்டும் என்ற கோணம் வரும்.

அதாவது ஏட்டு சுரக்காய் கறிக்கு உதாவது என்று ஒரு பழமொழி இருக்கிறது இல்லையா, அது போல தான் TECHNICAL RULES ஐ அப்படியே பயன்படுத்தினால் இங்கு உதவாது, ஆகவே இதை வேறு ஒரு கோணத்தில் தான் அணுக வேண்டும், ஆகவே இப்பொழுது நாம் பார்க்கப்போகும் இந்த OPEN, HIGH, LOW, CLOSE பற்றிய விளக்கங்கள் மூலம் உங்களது கற்பனை கோணங்கள் மாறும்,

அதாவது ஒரு பொருளை பார்க்கும் விதம் மாறலாம், அதாவது ரோஜா செடியில் உள்ள முட்களை பார்த்து அழகான பூவின் செடியில் கொடூரமாய் முட்கள் என்று நினைக்காமல், முக்கியமான பொருள்களுக்கு பாதுகாப்பு மிக அவசியம் என்பதை இயற்க்கை நமக்கு எப்படி இந்த ரோஜா செடியில் இருக்கும் முட்கள் மூலம் புரியவைத்துள்ளது என்று பாசிட்டிவாக எண்ணிக்கொண்டு! அதிலிருந்து நமது வாழ்க்கைக்கு தேவையான விஷயத்தை எடுத்துக்கொண்டு, அதை பயன்படுத்துவது போல உங்கள் கோணம் மாறவேண்டும், அதன் பொருட்டே இந்த விளக்கம்.

கவனமாக படியுங்கள், புரியவில்லை என்றாலும் மறுபடியும் மறுபடியும் விடாதீர்கள், நானா நீனா என்று பார்த்து விடுங்கள், ஏனெனில் புரிந்து கொண்டு செல்வது முக்கியம் இல்லையேல், இந்த முயற்ச்சியே தோல்வி அடையும், ஆகவே புரிந்து கொண்டு அடுத்த கட்டத்திற்கு செல்வதே நல்லது,,

சரி இப்பொழுது ஒவ்வொன்றாக பார்ப்போம், அதாவது இந்த OPEN, HIGH, LOW, CLOSE மூலம் அந்த பங்குகள் நமக்கு என்ன சொல்ல வருகிறது என்பதை பார்க்கும் ஒரு முயற்ச்சியே நாம் இப்பொழுது செய்து கொண்டிருப்பது,

முதல் நாள் மாலை மணி 3.30 க்கு முடிவடையும் ஒரு பங்கு, அடுத்த நாள் சரியாக காலை மணி 9 க்கு தொடங்கும், அப்படி தொடங்கும் போது பங்கு சந்தையில் வர்த்தகமாகும் அனைத்து பங்குகளையும் வர்த்தகத்திற்காக திறந்து விடுவார்கள்,(NSE), (அந்த திறந்து விடும் நேரம் தான் மணி 9, அப்படி வர்த்தகத்திற்காக திறந்துவிடப்படும் அனைத்து பங்குகளிலும் 9 மணியிலிருந்தே பங்குசந்தையில் வர்த்தகம்  செய்ய கணக்குகள்  வைத்து  இருப்பவர்கள்  அனைவரும் வர்த்தகம்  செய்யலாம்), அப்படி சந்தை வர்த்தகத்திற்காக திறந்தவுடன் முதலில் வர்த்தகமாகும் விலையே OPEN PRICE (துவக்க விலை) ஆகும், இந்த விலையை பற்றி தான் இப்பொழுது நாம் பார்க்கப்போகிறோம்,

OPEN PRICE

எப்பொழுதும் நேற்று முடிவடைந்த விலையிலே மறுநாள் எந்தப்பங்கும் வர்த்தகத்தை துவங்குவதில்லை, இதில் தான் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் உள்ளது, அதாவது முந்தய பதிவில் நாம் பார்த்த BUS STAND உதாரணத்தில் ஒரு பொருளுக்கு இருக்கும் DEMAND ஐ பொறுத்து தான் அதன் விலைகளில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் என்று படித்து இருப்பீர்கள் இல்லையா, அந்த விஷயம் தான் பங்குசந்தையில் வர்த்தகமாகும் எந்த ஒரு பங்கினுடைய OPEN விலையையும் முடிவு செய்யும், மேலும்  ஒரு பங்கு இன்று இந்த விலையில் தான் தொடங்கும் என்று கண்டுபிடிக்க எந்த விதமான TECHNICAL கூறுகளும் இங்கு (எனக்கு தெரிந்து) இல்லை,

மேலும் யார் முதலில் வர்த்தகத்தை தொடங்கி அந்த வர்த்தகம் நடந்து முடிகிறதோ அந்த விலைதான் அன்றைய தினத்தின் துவக்க விலை, இதை யார் வேண்டுமானாலும் நிர்ணயிக்கலாம் (அதாவது நீங்கள் நிர்ணயிக்கும் விலை வர்த்தகம் ஆகும் அனைத்து தகுதிகளையும் பெற்று இருந்தால் OPEN விலையை நிர்ணயித்த பாக்கியம் உங்களை சேரும்),

ஆகவே இந்த OPEN விலையை எந்த TECHNICAL கூறுகளாலும் நிர்ணயிக்கமுடியாது என்ற சூழ்நிலையில் தானாக வரும் (யாராவது ஒரு TRADER மூலம்) இந்த OPEN விலை அனைத்து பங்குகளின் அன்றைய தினத்தின் INITIAL என்று சொல்லலாம், அதாவது கடவுளின் விலை என்று கூட வைத்துக்கொள்ளலாம்.

சில பங்குகளில் அந்த பங்கை OPERATE செய்பவர்கள் அதன் அனைத்து விலைகளையும் முடிவு செய்வார்கள், ஆனால் நாம் அனைத்து பங்குகளையும் பற்றி பொதுவாக பேசிக்கொண்டிருப்பதால் அதை பற்றி தவிர்த்துவிடுவோம், சரி இந்த OPEN என்ற விலையின் மூலம் நாம் அறிந்து கொள்வது என்னவென்றால் அதாவது மாற்றுக்கோணம் என்னவென்றால்

OPEN PRICE “A DEEP ANALYSIS “

OPEN PRICE என்பது வெறும் ஒரு பங்கின் தொடக்க விலை மட்டும் இல்லை, அன்றைய தினத்தின் அந்த பங்கின் வர்த்தக பாய்ச்சலை நிர்ணயிக்கும் முதல் புள்ளி, அதாவது அந்த பங்கில் வர்த்தகம் செய்ய நினைப்பவர்கள் அன்றைய தினத்தில் அந்த பங்கில் காட்டும் ஆர்வம் என்ன என்பதினையும், அந்த பங்கிற்கு உள்ள DEMAND என்ன என்பதினையும் சுட்டிக்காட்டும் முக்கியமான புள்ளியாக நாம் எடுத்துக்கொள்ளலாம், அந்த வகையில் இந்த புள்ளி முக்கியமானது,

சில நேரங்களில் சில பங்குகளில் OPEN மற்றும் HIGH என்ற இரண்டு நிலையும் ஒரே புள்ளியாக இருக்கும், அப்படி இருக்கும் போது தொடர்ந்து முன்னேற முடியாமல் அந்த குறிப்பிட்ட புள்ளியில் தடையை சந்தித்து கீழே வரும் என்று எடுத்துக்கொள்ளலாம், அதாவது நாம் ஒரு ஊருக்கு செல்லவேண்டி கிளம்புகிறோம் ஆனால் நம்மை அடிக்கும் அளவுக்கு சக்தி பெற்ற நம்  எதிரி பேரூர்ந்து நிலையத்தில் இருந்தால் நமது பயணம் மேற்கொண்டு தொடருமா? அந்த  எதிரி அந்த இடத்தை விட்டு நகர்ந்தால் தானே நாம் செல்லமுடியும்? அவர்  செல்லவில்லை என்றால்? அன்றைய பயணம் ரத்து தானே,

அது மாதிரி தான் OPEN & HIGH ஒன்றாக இருந்து HIGH புள்ளிகள் மேலே கடக்கப்படவில்லை என்றால்   அதவாது எதிரி  அந்த பக்கம் நகரவில்லை என்றால், தொடர்ந்து உயராமல் கீழ் நோக்கியே வரும். அதே நேரம் எதிரி நகர்ந்து விட்டால்!  நமது பயணம் தொடரும் இல்லையா, அதாவது OPEN HIGH ஒன்றாக இருக்கும் பங்கில் HIGH புள்ளி கடக்கப்பட்டால் தொடர் உயர்வுகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு,

சில நேரங்களில் OPEN & HIGH ஒன்றாக இருக்கும் பங்குகளில் HIGH புள்ளிகள் மேலே கடக்கப்பட்ட பிறகும் சிறிது தூரம் மேலே சென்று கீழே வருவதும் உண்டு, அதற்க்கு என்ன அர்த்தம்? அடுத்த பலமான எதிரி அடுத்த இடத்தில் இருக்கின்றான் என்று தானே அர்த்தம், அது போன்ற அடுத்த அடுத்த எதிரிகள் எங்கெங்கு இருக்கின்றார்கள் என்பதினை கண்டறிய அநேக  சாத்தியக்கூறுகள் TECHNICAL ANALYSIS உள்ளது அவைகளை பற்றி வர வர பார்த்து வருவோம் இப்பொழுது இந்த OPEN மற்றும் HIGH விஷயத்தை மட்டும் மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்

அதே போல் OPEN மற்றும் LOW ஆகிய இரண்டு நிலைகளையும் ஒன்றாக பெற்று இருந்தால் தொடர்ந்து கீழே இறங்க முடியாமல் அந்த குறிப்பிட்ட புள்ளியில் SUPPORT களை பெற்று தொடர்ந்து உயரும் வாய்ப்புகள் உள்ளது என்று எடுத்துக்கொள்ளலாம், அதாவது எவளவு பிரச்சனைகள் வந்தாலும் நம்மை தாங்கிப்பிடிக்கும் தகுதி வாய்ந்த தம்பிகளும் நண்பர்களும் நம்மிடம் இருப்பது போல,

இவர்கள் இருக்கும் வரை நமக்கு கவலை இல்லை, நாம் ஆட்டம் போடலாம், ஒரு வேலை இவர்கள் வீழ்ந்து விட்டால்? அதாவது OPEN LOW ஒன்றாக இருக்கும் பங்கில் LOW புள்ளி கீழே கடக்கப்பட்டால்? அது நமக்கு உறுதுணையாக இருக்கும் தம்பிகளும், நண்பர்களும் வீழ்ந்ததிற்க்கு சமம் இல்லையா, அதன் பிறகு  நமக்கு சிரமம் தானே,

இதிலும் முன்னர் பார்த்தது போல அடுத்த அடுத்த நண்பர்கள், தம்பிகளை கண்டு கொள்ளும் வழிகளும் உள்ளது அவைகளை பின்பு பார்ப்போம்.

ஆக மேற்கண்ட விசயங்களை வைத்து OPEN PRICE ஐ  வெறும் OPEN PRICE என்று எடுத்துக்கொள்ளாமல் அநேக விசயங்களை நமக்கு சொல்லிக்கொடுக்கும்   மனிதன்  என்ற கோணத்தில் அதனுடன் பேசிப்பழகும்  சுவார்யசத்தை  நாம் ஏற்படுத்திக்கொள்ளலாம்,  மேலும் இந்த  புள்ளியை வைத்து அந்த பங்கின் நகர்வுகள் எதை நோக்கி இருக்கும் என்றும் நாம் அனுபவம் வர வர எளிதாக தெரிந்து கொள்ளலாம் …

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவகிரக துதி

சூரியன் சீலமாய் வாழ சீரருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி! சூரியா போற்றி! சுந்தரா போற்றி! வீரியா போற்றி! வினைகள் களைவாய் சந்திரன் எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி! திருவருள் தருவாய் சந்திரா போற்றி! சற்குணா போற்றி! சங்கடந்தீர்ப்பாய் சதுராய் போற்றி! அங்காரகன் (செவ்வாய்) சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ மங்கள செவ்வாய் மலரடி போற்றி! அங்காரகனே அவதிகள் நீக்கு! புதன் இதமுற வாழ இன்னல்கள் நீக்கு புத பகவானே பொன்னடி போற்றி! பதந்தந்தாள்வாய் பண்ணொளியானே உதவியே யருளும் உத்தமா போற்றி! குரு குணமிகு வியாழக் குருபகவானே மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய் ; பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா கிரகதோஷமின்றி கடாஷித்தருள்வாய் சுக்கிரன் சுக்கிரமூர்த்தி சுப சுக மீவாய் வக்ரமின்றி வரமிகத் தருவாய் வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே சனி சங்கடந் தீர்ககுஞ் சனி பகவானே! மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றி சனீஸ்வரத் தேவே இச்சகம் வாழ இன்னருள் தா தா ராகு அரவெனும் ராகு அய்யனே போற...

சோப் ஆயிலில் சூப்பர் லாபம்!

வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் இயந்திரங்கள் எதுவும் இல்லாமல் சோப் ஆயில் தயாரிக்கலாம். இதன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை காளம்பாளையத்தில் ஹக் புராடக்ட்ஸ் சோப் ஆயில் தயாரிக்கும் ரமணன். அவர் கூறியதாவது: கோவையில் தேசிய பஞ்சாலை கழக தரக்கட்டுப்பாட்டு பிரிவில் உதவி ஸ்பின்னிங் மாஸ்டராக 28 ஆண்டுகள் பணிபுரிந்தேன். 7 ஆண்டுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றேன். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற என் போன்றவர்களை, கோவையில் உள்ள சிறு தொழில் சேவை மையத்தினர் சுய தொழில் செய்வதற்கான பயிற்சிக்கு அழைத்தனர். அங்கு ஒரு மாதம் நறுமண சொட்டு நீலம், பினாயில், சோப் பவுடர் போன்றவை தயாரிக்க கற்றுக் கொடுத்தனர். ரூ.5 ஆயிரம் முதலீட்டில் சோப் ஆயில் தயாரிப்பதற்கான தொழிலை துவக்கினேன். நானே முதலாளியாகவும், தொழிலாளியாகவும் இருந்து மாதம் 200 லிட்டர் சோப் ஆயில் தயாரித்து விற்கிறேன். சோப் ஆயில் தயாரித்து விற்பவர்கள் பலர் இருந்தாலும், தரமாக தயாரித்து விற்பதால் ஆர்டர் தொய்வு இல்லாமல் கிடைக்கிறது. தினசரி 5 மணி நேரம் உழைத்தால் 10 லிட்டர் சோப் ஆயில் தயாரிக்க முடியும். 20...

தலையணை உறை.. தூள் கிளப்பும் லாபம்

பெண்கள்  வீட்டு வேலை  போக மற்ற நேரங்களில் சுயமாக வேலை செய்து சம்பாதிக்க ஏற்ற தொழில் தையல். ஜாக்கெட், சுடிதார் போன்ற நுட்பம் நிறைந்த தையல் வேலைகள் மேற்கொள்ள பயிற்சி வேண்டும். ஆனால் தலையணை உறை தைக்க எவ்வித பயிற்சியும் தேவை இல்லை. நுணுக்கமான தையல் தெரியாதவர்கள் தலையணை உறை தயாரித்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் என்கிறார் கோவை வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரிநாயக்கன்பாளையத்தை சேர்ந்த செல்வி. அவர் கூறியதாவது: கணவர் ஆட்டோ டிரைவர். குடும்ப வருமானம் போதவில்லை. அதை சமாளிக்க 4 ஆண்டுகளுக்கு முன்பு தையல் கற்றேன். வீட்டிலேயே பழைய தையல் மெஷின் வாங்கி போட்டு, ஜாக்கெட், சுடிதார் தைத்து வந்தேன். அப்போது எங்கள் பகுதியில் உள்ள பெண்கள் 13 பேர் சேர்ந்து அம்மன் சுய உதவி குழு துவக்கினோம். ரூ.10 ஆயிரம் கடனுதவி கிடைத்தது. அதன்மூலம் ஈரோட்டில் தலையணை உறை துணி வாங்கி வந்து தைத்தேன். அவற்றை கணவர் கடைகளுக்கு எடுத்து சென்று விற்று வந்தார். பின்னர் நானே ஆட்டோவில் ஏற்றி அபார்ட்மென்ட்கள், பள்ளி, கல்லூரி விடுதிகள், வீடுகளில் விற்றேன். நல்ல லாபம் கிடைத்தது. முழு நேர தொழிலாக தற்போது தலையணை உறை தயாரிக்கிறேன். இத...