ஓவியம், சிற்பம் ஆகியவற்றை பரிசுப்பொருட்களாக வழங்குகிறோம். இவற்றை இணைத்து புதுவிதமாக, கலைநயத்துடன் கூடிய பரிசுப்பொருளாக வழங்கினால் அனைவரையும் ஈர்க்கும். இதையே தொழிலாக மேற்கொண்டால், வீட்டில் இருந்தபடியே வருவாய் பார்க்கலாம் என்று கூறுகிறார் கோவை பாப்பநாயக்கன்புதூரை சேர்ந்த உமாதேவி. அவர் கூறியதாவது: கல்லூரி படிப்பை முடித்தது முதலே சொந்தமாக தொழில் துவங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. திருமணத்துக்கு பிறகு கோவை அவிநாசிலிங்கம் பல்கலைக்கழக தொழிற்பயிற்சி மையத்தில் சேர்ந்து தையல், ஓவியம், பரிசு பொருட்கள், மசாலா பொடி தயாரிப்பு பயிற்சி பெற்றேன். பரிசுப்பொருள் தயாரிப்பை ஒரு வாரத்தில் கற்றேன். ஓவியத்தில் ஆர்வம் இருந்ததால், ஓவியம், சிற்பத்திறமையை இணைத்து பரிசு பொருட் களை செய்து பார்த்தேன். அதை உறவினர், நண்பர்களின் குடும்ப விழா, பிறந்த நாள் விழாவின்போது அளித்தேன். அது அவர்களை கவர்ந்தது. அவர்கள் தங்களுக்கு தேவையான பரிசுப்பொருட்களை தயாரித்து தருமாறு கூறினார்கள். நாளடைவில் இதற்கு உள்ள வரவேற்பை பார்த்து, இதையே தொழிலாக செய்யலாம் என்று கணவர் யோசனை கூறினார். அதன்படி பல்வேறு பரிசு பொருட்களை தயாரித்து எனது...