முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முதற்படி முதலில் படி! - 10


முதற்படி முதலில் படி! - 10


சென்ற வாரம் பங்குச் சந்தையில் உள்ள ரிஸ்க் பற்றி விளக்கமாகப் பார்த்தோம்... இனி வரும் வாரங்களில் வெவ்வேறு முதலீட்டு முறைகள் பற்றியும், அவற்றில் உள்ள நன்மை, தீமைகள் பற்றியும் பங்குகளை எவ்வாறு மதிப்பிடுவது என்பது பற்றியும் விரிவாகப் பார்ப்போம். அதற்கு முன், பங்கு மதிப்பீட்டிற்காக உபயோகிக்கும் சில வார்த்தைகளை (டெர்மினாலஜிஸ்) பற்றி  அறிந்து கொள்வது அவசியம். காரணம், பங்குகளை அலசி ஆராய இவைதான் அடிப்படை!
ஒரு சிறிய உதாரணத்துடன் இதைப் பார்க்கலாமா? 'அஆஇஎன்கிற பெயரில் நீங்கள் ஒரு சூப்பர் மார்க்கெட்டை நடத்தி வருகிறீர்கள். உங்களின் சென்ற ஆண்டு எளிமைப்படுத்தப்பட்ட இன்கம் ஸ்டேட்மென்ட், அதாவது, வருமான அறிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வருமான அறிக்கை என்பது ஒரு நிறுவனத்தின் வரவு செலவுகளைக் காண்பிக்கும்.. இதில் நிறுவனம் பெரிதாக பெரிதாக, பலவிதமான விவரங்கள் வரும். ஆனால் நாம் புரிந்து கொள்வதற்கு ஏற்ற மாதிரி எளிமையாக 'அஆஇ சூப்பர் மார்க்கெட்டின் வருமான அறிக்கையைத் தந்திருக்கிறேன். இந்த சூப்பர் மார்க்கெட் மூலம் உங்கள் தினசரி வியாபாரம் சுமார் 5,000 என்று எடுத்துக் கொள்வோம். சென்ற ஆண்டு உங்களின் மொத்த விற்பனை (டர்ன் ஓவர் என்றும் கூறுவார்கள்) 18.5 லட்சம். அதில் 50 ஆயிரம் சேதாரத்தில் (பொருட்கள் உடைந்தது, கெட்டுப் போனது, திரும்பி வந்தது போன்றவை) போய்விட்டது. ஆகையால் உங்களின் நிகர விற்பனை 18 லட்சம்.

இதில் உங்களின் கொள்முதல் செலவு 8 லட்சம். வாடகை, சம்பளம், மின்சாரம், டீ, காபி போன்ற அனைத்துச் செலவுகளும் 5 லட்சம் ஆகிறது. நீங்கள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு தேய்மானம் உண்டாகும். அதற்காக ஒரு குறிப்பிட்ட செலவை எழுதிக் கொள்ளலாம். இந்த ஸ்டோரில் அத்தொகை 10,000 என்று வைத்துக் கொள்வோம். இதன்பின் கிடைக்கும் லாபமான 4.90 லட்சத்திற்கு நீங்கள் உங்கள் நிறுவனத்தின் அமைப்பைப் பொறுத்து (உரிமையாளர், பார்ட்னர்ஷிப் அல்லது கம்பெனி) வரி கட்ட வேண்டும். நாம் இங்கு உச்சபட்ச வரியான 33.99%-ஐ கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளோம். ஆக வரி செலுத்தியபின் கிடைக்கும் லாபமான 3,23,449-தான் உங்களின் நிகர லாபம் ஆகும். இந்த அறிக்கையில் நீங்கள் கவனிக்க வேண்டியது தேய்மானச் செலவு. அந்தப் பணம் உங்கள் கையில்தான் உள்ளது - செலவு ஆகவில்லை. அதேபோல், உங்கள் நிறுவனத்தின் தற்போதைய சொத்துக்களின் புத்தக மதிப்பு (அதாவது, சொத்துகளை வாங்கிய விலையில் இருந்து தேய்மானத்தைக் கழித்த பிறகு உள்ள மதிப்பு) 1,90,000 என்றும் வைத்துக் கொள்வோம்.

இ.பி.எஸ். (EPS – Earnings Per Share): இ.பி.எஸ் என்பது நிறுவனத்தில் ஒரு பங்கிற்கு உள்ள வருமானம்.  நிகர லாபத்தை மொத்த பங்குகளின் எண்ணிக்கையால் வகுத்தால் கிடைப்பதுதான் இ.பி.எஸ்.

இ.பி.எஸ் = நிகர லாபம்/பங்குகளின் எண்ணிக்கை.

மேற்கண்ட உதாரணத்தில் இ.பி.எஸ். 16.17 (3,23,449/20,000) ஆகும். அதிகமான இ.பி.எஸ்., ஒரு நிறுவனம் லாபகரமாகச் செயல்படுவதைக் காண்பிக்கும்.

புக் வேல்யூ (Book Value (BV) Per Share): புக் வேல்யூ என்பது நிறுவனத்தில் ஒரு பங்கிற்கு உள்ள புத்தக மதிப்பு ஆகும். இதில் நாம் கணக்கிடுவது புத்தக மதிப்பைத்தானே தவிர, நிறுவனச் சொத்துக்களின் மார்க்கெட் மதிப்பை அல்ல. ஒரு நிறுவனத்தின் கடன்களை அதன் சொத்துக்களில் இருந்து கழித்த பிறகு மிஞ்சுவதே புத்தக மதிப்பு என்கிறோம்.

புத்தக மதிப்பு = சொத்துக்கள் - கடன்கள் (Book Value = Assets - Liabilities)

ஒரு பங்கின் புத்தக மதிப்பு = புத்தக மதிப்பு/பங்குகளின் எண்ணிக்கை

இந்த மொத்த புத்தக மதிப்பை, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள பங்குகளினால் வகுத்தால் கிடைப்பதுதான் ஒரு பங்கின் புத்தக மதிப்பாகும்.

ஒரு கம்பெனியின் மதிப்பை பலவாறாகக் கணக்கிடலாம். அவற்றுள் புத்தக மதிப்பும் ஒன்றாகும். மற்றுமொரு வகையில் பார்த்தால், ஒரு நிறுவனம் ஏதோ ஒரு காரணத்தினால் மூடப்பட்டால், அதன் சொத்துக்களை விற்றால் பங்கு வைத்திருப்பவர்களுக்கு எவ்வளவு பணம் திரும்பக் கிடைக்கும் என்பதுதான் புத்தக மதிப்பு. இந்த மதிப்பு அனைத்து கம்பெனிகளின் ஐந்தொகையில் (Balance Sheet) கிடைக்கும்.

மேற்கண்ட உதாரணத்தில் ஒரு பங்கின் புத்தக மதிப்பு 9.50 (1,90,000/20,000) ஆகும். இந்த உதாரணத்தில் நிறுவனத்திற்கு எந்தவிதமான கடனும் இல்லை என்று எடுத்துக்கொள்வோம். இந்த புத்தக மதிப்பு நிறுவனம் இருக்கும் துறையைப் பொறுத்து மாறுபடும். சில தொழில்களுக்கு (மின் உற்பத்தி போன்றவை) முதலீடு அதிகம் தேவைப்படும். அதே சமயம் சர்வீஸ் சார்ந்த துறைகளுக்கு முதலீடு அதிகம் தேவைப்படாது.

பங்கின் மார்க்கெட் மதிப்பு (அ) விலை: பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் விலை. இந்த உதாரணத்தில் பங்கின் சந்தை விலை 66 என்று எடுத்துக் கொள்வோம்.
பி/இ (P/E – Price/Earnings Per Share): இது பங்கின் சந்தை விலைக்கும், இ.பி.எஸ்-ஸிற்கும் உள்ள விகிதமாகும். ஒரு பங்கின் வருமானத்தைப் போல அப்பங்கின் சந்தை விலை எத்தனை மடங்காக உள்ளது என்பதை இந்த விகிதம் காண்பிக்கும். பொதுவாக இவ்விகிதம் குறைவாக இருப்பது நல்லது - அதாவது, சந்தை விலை குறைவாகவும், இ.பி.எஸ் அதிகமாகவும் இருப்பது நல்லது.

பி/இ = பங்கின் சந்தை விலை/ ஒரு பங்கின் வருமானம்.




பி/பிவி (P/BV – Price/Book Value Per Share):  புத்தக மதிப்பு ஒரு நல்ல குறியீடு என்றாலும், அதை தனியாகக் காண்பதைக் காட்டிலும் மற்றொன்றோடு ஒப்பிட்டுப் பார்த்தால்தான் மிகவும் பயனுள்ளதாக அமையும். அவ்விகிதம்தான் பரவலாக உபயோகிக்கப்படும் பங்கின் விலைக்கும் புத்தக மதிப்பிற்கும் உள்ள விகிதம் (Market Price/ Book Value or P/BV). இவ்விகிதம் ஒரு பங்கின் புத்தக மதிப்பைப் போல் அப்பங்கின் சந்தை விலை எத்தனை மடங்கு உள்ளது என்பதைக் காண்பிக்கும்.

பி/பிவி = பங்கின் சந்தை விலை/ ஒரு பங்கின் புத்தக மதிப்பு

டிவிடெண்ட் (Dividend): நிறுவனங்கள் தங்களுக்கு வரும் லாபத்தில் ஒரு பகுதியை ஆண்டுதோறும் தங்களின் பங்குதாரர்களுக்கு பிரித்துக் கொடுப்பதை டிவிடெண்ட் என்று கூறுகிறோம். இந்த டிவிடெண்ட் கொடுக்கும்முன் நிறுவனங்களே வரி கட்டிவிடுவதால், பங்குதாரர்கள் இதற்கு வருமான வரி கட்ட வேண்டாம்.

டிவிடெண்ட் யீல்ட் (Dividend Yield): டிவிடெண்டுக்கும் பங்கின் சந்தை விலைக்கும் உள்ள விகிதம். உதாரணத்திற்கு, நீங்கள் வைத்திருக்கும் 'அஆஇபங்கு ஒன்றிற்கு 3.30 டிவிடெண்ட்-ஆக சென்ற ஆண்டு வழங்கப்பட்டது என்று வைத்துக் கொள்வோம். மேலும், அப்பங்கின் சந்தை விலை 66 என்று எடுத்துக் கொள்வோம். அப்படி என்றால் நீங்கள் வைத்திருக்கும் பங்கின் டிவிடெண்ட் யீல்ட் 5% (3.30/66 ஜ் 100) ஆகும்.

டிவிடெண்ட் யீல்ட் = டிவிடெண்ட் தொகை/ பங்கின் சந்தை விலை X 100

பங்குச் சந்தையில் உள்ள வெவ்வேறு முதலீட்டு யுத்திகள் யாவை? முதலீட்டில் பலவிதமான யுத்திகள் உள்ளன. அவற்றில் சில இதோ கீழே:

1.
வேல்யூ இன்வெஸ்ட்டிங்
2.
குரோத் இன்வெஸ்ட்டிங்
3.
கான்ட்ரா இன்வெஸ்ட்டிங்
4.
பேஸிவ் இன்வெஸ்ட்டிங்

இவை தவிர வேறு சில யுத்தி களும் உள்ளன. ஆனால், அவற்றை எல்லாம் இந்த நான்கிற்குள்  கொண்டு வந்துவிடலாம். ஒருவரின் மனநிலைக்கு ஏற்ப அவரின் முதலீட்டு யுத்தியும்/முறையும் அமைய வேண்டும். வேகமான மனநிலையில் இருப்பவர்கள் குரோத்பங்குகளை நாடிச் செல்வர். தாம் வாங்கும் பங்கில் வேல்யூ இருக்க வேண்டும் என்பவர்கள், 'வேல்யூபங்குகளை நாடிச் செல்வர்; மாத்தி யோசிப்பவர்கள் 'கான்ட்ராபங்குகளை நோக்கிச் செல்வர்.  மார்க்கெட் ரிஸ்க்கைவிட ஒரு துளி கூடவோ அல்லது குறையவோ எனக்கு வேண்டாம் என்று நினைப்பவர்கள் 'பேஸிவ்முறையை நாடிச் செல்வர்.
(படி ஏறுவோம்)


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவகிரக துதி

சூரியன் சீலமாய் வாழ சீரருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி! சூரியா போற்றி! சுந்தரா போற்றி! வீரியா போற்றி! வினைகள் களைவாய் சந்திரன் எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி! திருவருள் தருவாய் சந்திரா போற்றி! சற்குணா போற்றி! சங்கடந்தீர்ப்பாய் சதுராய் போற்றி! அங்காரகன் (செவ்வாய்) சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ மங்கள செவ்வாய் மலரடி போற்றி! அங்காரகனே அவதிகள் நீக்கு! புதன் இதமுற வாழ இன்னல்கள் நீக்கு புத பகவானே பொன்னடி போற்றி! பதந்தந்தாள்வாய் பண்ணொளியானே உதவியே யருளும் உத்தமா போற்றி! குரு குணமிகு வியாழக் குருபகவானே மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய் ; பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா கிரகதோஷமின்றி கடாஷித்தருள்வாய் சுக்கிரன் சுக்கிரமூர்த்தி சுப சுக மீவாய் வக்ரமின்றி வரமிகத் தருவாய் வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே சனி சங்கடந் தீர்ககுஞ் சனி பகவானே! மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றி சனீஸ்வரத் தேவே இச்சகம் வாழ இன்னருள் தா தா ராகு அரவெனும் ராகு அய்யனே போற...

சோப் ஆயிலில் சூப்பர் லாபம்!

வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் இயந்திரங்கள் எதுவும் இல்லாமல் சோப் ஆயில் தயாரிக்கலாம். இதன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை காளம்பாளையத்தில் ஹக் புராடக்ட்ஸ் சோப் ஆயில் தயாரிக்கும் ரமணன். அவர் கூறியதாவது: கோவையில் தேசிய பஞ்சாலை கழக தரக்கட்டுப்பாட்டு பிரிவில் உதவி ஸ்பின்னிங் மாஸ்டராக 28 ஆண்டுகள் பணிபுரிந்தேன். 7 ஆண்டுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றேன். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற என் போன்றவர்களை, கோவையில் உள்ள சிறு தொழில் சேவை மையத்தினர் சுய தொழில் செய்வதற்கான பயிற்சிக்கு அழைத்தனர். அங்கு ஒரு மாதம் நறுமண சொட்டு நீலம், பினாயில், சோப் பவுடர் போன்றவை தயாரிக்க கற்றுக் கொடுத்தனர். ரூ.5 ஆயிரம் முதலீட்டில் சோப் ஆயில் தயாரிப்பதற்கான தொழிலை துவக்கினேன். நானே முதலாளியாகவும், தொழிலாளியாகவும் இருந்து மாதம் 200 லிட்டர் சோப் ஆயில் தயாரித்து விற்கிறேன். சோப் ஆயில் தயாரித்து விற்பவர்கள் பலர் இருந்தாலும், தரமாக தயாரித்து விற்பதால் ஆர்டர் தொய்வு இல்லாமல் கிடைக்கிறது. தினசரி 5 மணி நேரம் உழைத்தால் 10 லிட்டர் சோப் ஆயில் தயாரிக்க முடியும். 20...

Various Herbs & Spices English & Hindi Names

English/ ஆ ங்கிலம் Tamil/ தமிழ் Hindi/ हिन्दी/ ஹிந்தி Rice Arisi( அரிசி) Chaval Black gram Kadalai Parruppu ( கடலை பருப்பு) Channa Dhal Black Gram Ulluththam Paruppu ( உளுதம் பருப்பு) Urad Dhal Green gram dhal Payaththam Parruppu( பயத்தம் பருப்பு) Moog Dhal Green gram Whole Paasi Parruppu( பாசி பருப்பு) Moog Sabut Yellow split peas Thuvaram Parruppu( துவரம் பருப்பு) Toor Dhal Green gram  Split Pachchai payiru( பச்சைப்பயறு) Moong Chilka Garbanzo beans Kondai Kadalai( கொண்டை கடலை) Kabuli Channa Peanuts Veerkadalai( வேற்கடலை) Moong falee All Purpose Flour Maida Maavu( மைதா மாவு) Maida Gram flour Kadalai Maavu( கடலை மாவு) Besan Wheat flour Godhumai maavu( கோதுமை மாவு) ...