முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முதற்படி முதலில் படி! - 26


முதற்படி முதலில் படி! - 26

இரு அத்தியாயங்களில் சில மதிப்பீட்டு முறைகள் பற்றி கண்டோம். இப்போது மதிப்பீட்டு முறைகளின் தொடர்ச்சியாக, 'ரீப்ளேஸ்மென்ட் காஸ்ட் முறை’ (Replacement Cost Method) பற்றி காண்போம். இம்முறைக்கும் புத்தக மதிப்பு முறைக்கும் சிறிய தொடர்பு உண்டு என்று கூறலாம். புத்தக மதிப்பு முறை கடந்த கால (புத்தகத்தில் உள்ள மதிப்பு) மதிப்பைக் கொண்டு கணக்கிடுவதாகும்.
னால், 'ரீப்ளேஸ்மென்ட் காஸ்ட் முறைதற்போது அந்த தொழிலைத் தொடங்கினால் எவ்வளவு செலவாகும் என்று கணக்கிடுவதாகும்.
உதாரணத்திற்கு நீங்கள் ஜல்லி உடைக்கும் தொழிற்சாலையை நடத்துகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் தொழில் தொடங்கி சில ஆண்டுகள் ஆகிவிட்டன. சில காரணங் களினால் உங்களால் தொழிலை சரிவர நடத்த முடியவில்லை என்பதால் அதை வேறு யாருக்காவது விற்றுவிட முடிவு செய்கிறீர்கள். உங்கள் தொழிற் சாலையில் உள்ள இயந்திரங்கள் எல்லாம் நல்ல நிலையில் உள்ளன - தேய்மானத்தைத் தவிர! உங்கள் தொழிற்சாலையின் புத்தக மதிப்பு ரூபாய் ஐந்து லட்சம். ஆனால், விற்பதற்காக நீங்கள் சொல்லும் விலையோ, ரூபாய் பத்து லட்சம்.
உங்கள் ஊரில் கட்டடம் கட்டும் புரமோட்டர் ஒருவர் உங்கள் தொழிற்சாலையை வாங்க விருப்பமாக இருக்கிறார். ஏற்கெனவே நடந்துவரும் ஒரு தொழிற்சாலையை வாங்குவதற்கும், புதிதாக ஒரு தொழிற்சாலையை ஆரம்பிப்பதற்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தையும் கணக்குப் போட்டு பார்க்கிறார். இன்றைய நிலையில் புதிதாக ஒரு தொழிற்சாலையைத் தொடங்க 15 லட்ச ரூபாய் ஆகும் என்பது அவர் போட்ட கணக்கு. அதே சமயம், உங்கள் தொழிற்சாலையின் உபகரணங்கள் பழையதாக இருப்பதால் நீங்கள் பத்து லட்சம் தான் கேட்கிறீர்கள். அவருக்கோ ஐந்து லட்ச ரூபாய் குறைவில், இயங்கிக் கொண்டிருக்கும்   தொழிற்சாலை கிடைக்கிறது என்று நினைத்து உங்களுடன் பேச ஆரம்பிக்கிறார்.  ஆக வாங்குபவர் 'ரீப்ளேஸ்மென்ட் காஸ்ட்டை ஒப்பிட்டுப் பார்த்து உங்களிடம் டீல் பேசுகிறார். தொழில் நன்றாக நடந்து கொண்டிருக்கும்பட்சத்தில், 'ரீப்ளேஸ்மென்ட் காஸ்ட்டைவிட கொஞ்சம் அதிகமாகவே நீங்கள் கேட்கலாம். இந்த 'ரீப்ளேஸ்மென்ட் காஸ்ட்டை எவ்வாறு கணக்கிடலாம்?
உபகரணங்களுக்கான விலையை இரண்டு அல்லது மூன்று தயாரிப்பாளர்களிடம் 'கொட்டேஷன்கேட்டுப் பெறலாம். இடத்தின் விலைக்கான மதிப்பை அறிந்து கொள்ளலாம். கட்டடம் மற்றும் மதில் சுவர் கட்டுவதற்கான கொட்டேஷனை ஒரு என்ஜினீயரிடம் பெறலாம். இயந்திரங்களை அமைப்பதற்கான செலவை நீங்கள் இயந்திரம் வாங்கப் போகும் நிறுவனத்திடமே கொட்டேஷனாகப் பெற்றுக் கொள்ளலாம். வாகனங்களுக்கான விலையை ஒரு வாகன டீலரிடம் இருந்து கொட்டேஷனாகப் பெறலாம். மீதி விலைகளை உங்களுக்குத் தெரிந்த அளவில் நீங்கள் கணக்கிட்டுக் கொள்ளலாம். அல்லது ஒரு கன்சல்டன்ட் உதவியை நாடலாம். பெரிய தொழிற்சாலையாக இருக்கும் பட்சத்தில் பெஞ்ச்மார்க் ரேட்டை எடுத்துக் கொண்டு 'ரீப்ளேஸ்மென்ட் காஸ்ட்டை கணக்கிடலாம்.
இந்த மதிப்பீட்டு முறையில் சாதக-பாதகங்கள் என்னென்ன?

பாதகங்கள்:
இந்த முறையில் தொழிலில் இருந்துவரும் கேஷ் ஃபுளோவோ அல்லது தொழிலின் மதிப்பையும் எதிர்கால வாய்ப்புக் களையும் யாரும் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. இது அன்றைய தேதியில் ஒரு தோராய மான மதிப்புத்தானே தவிர மிகவும் துல்லியமானது என்று எடுத்துக் கொள்ள முடியாது. இதை ஒரு ஒப்பீட்டு மதிப்பாக எடுத்துக் கொள்ளலாமே தவிர, இதையே மதிப்பாக எடுத்துக் கொள்ள முடியாது - ஏனென்றால் தொழிலில் வேறு பல காரணிகள் உள்ளன.
சாதகங்கள் என்று பார்த்தால் ஒரு தொழிலை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு இந்த முறை ஓர் அருமையான உபகரணமாகும். அதிக விலை கொடுக்கிறோமா, குறைவான விலை கொடுக்கிறோமா அல்லது சரியான விலைதான் கொடுத்து வாங்குகிறோமா என்பது தெரியவரும். அதைப்போலவே பங்குச் சந்தையில் சில துறைகள் சில சமயங்களில் சில காரணங் களுக்காக அடிபட்டு இருக்கும். அப்போது அப்பங்குகள் 'ரீப்ளேஸ் மென்ட் காஸ்ட்டைவிட மிகவும் குறைவான விலைக்கு கிடைக்கும். கான்ட்ரா முதலீட்டாளர்கள் அதுபோன்ற பங்குகளை குறி வைத்து வாங்கிச் சேர்ப்பார்கள்.
அதிக கடன் உள்ள நிறுவனங்கள், 'ரீப்ளேஸ்மென்ட் காஸ்ட்டைவிட மிகக் குறைவான விலையில் சில சமயங்களில் கிடைக்கும். அதுபோன்ற தருணங்களில் மீதி அளவுகோல்களை கண்டறிந்து கவனத்துடன் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய வேண்டும்.
வொர்ஸ்ட் கேஸ்/பெஸ்ட் கேஸ் முறை:
பொதுவாக எந்த ஒரு சொத்தையும் வாங்குபவர் அது இன்னும் விலை ஏறும் அல்லது அதனால் அவருக்கு லாபம் உண்டாகும் என்று நினைத்து வாங்குவார். சொத்தை விற்பவர் அதற்கு எதிர்மறையாக சிந்திப்பார். சுருக்கமாகச் சொன்னால், வாங்குபவர் பாசிட்டிவ் ஆகவும், விற்பர் நெகட்டிவ் ஆகவும் சிந்திப்பார்கள். பாசிட்டிவ் ஆக நினைப்பவர் எல்லாமே நல்லதாக நடக்கும் என்று நினைப்பார். அதனால் வாங்கும்போது சற்று விலை அதிகமாக கொடுத்து வாங்க தயங்க மாட்டார். ஆனால், வாங்கியபிறகு அந்த சொத்தின் விலை குறைய வாய்ப்பிருக்கிறது. அப்போது சற்று அதிக விலை கொடுத்து வாங்கியவர் மனச்சோர்வுக்கு உள்ளாவார். அவ்வாறு சோர்வடையாமல் இருப் பதற்குத்தான் இந்த வொர்ஸ்ட் கேஸ்/பெஸ்ட் கேஸ் ஆய்வு.
எந்த ஒரு முதலீடானாலும் (பங்கு முதலீடு உட்பட) ஏற்ற இறக்கம் இருக்கும். முதலீடு செய்தபிறகு அதன் விலை நமது கட்டுப்பாட்டில் இருக்காது. ஆனால், என்ன விலை கொடுத்து வாங்குகிறோம் என்பது நமது கட்டுப்பாட்டில்தான் உள்ளது. ஆகவே, நமது முதலீட்டில் வெகுவாக பணத்தை இழக்கக் கூடாது என்றால், பங்குகளையோ அல்லது தொழில்களையோ அல்லது சொத்தையோ வாங்கும் போது மிக கவனத்துடன் வாங்க வேண்டும். வாங்குவதற்கு முன்னால் செய்யும் ஆய்வில், இந்த சொத்தை (அனைத்தும் இந்த வார்த்தைக்குள் அடக்கம் - பங்கு முதலீடு உட்பட) உலகமே கவிழ்ந்து விடும் நிலையில் இருந்தால் எந்த விலைக்கு வாங்கலாம் என்று ஆராய வேண்டும். அதுதான் வொர்ஸ்ட் கேஸ் விலை. இதற்கு அந்த சொத்தின் கடந்த கால விலையையும் (மிகவும் மோசமான நேரங்களில்) உபயோகித்துக் கொள்ளலாம். பங்குச் சந்தையில் 52 வார லோ மற்றும் லைஃப் டைம் லோ போன்ற விலைகளை வாங் கும் முன்பு பார்க்க வேண்டும்.
அதேபோல் உலகமெல்லாம் ரோஜாப் பூக்களாக இருந்தால் (எல்லாமே நல்லதாக இருந்தால்) இந்த சொத்தின் விலை என்னவாக இருக்கும் என்பதையும் ஆராய வேண்டும். பங்குச் சந்தையில் 52 வார ஹை மற்றும் லைஃப் டைம் ஹை விலைகளை ஆய்விற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இது பெஸ்ட் கேஸ் விலை ஆகும். இந்த இரண்டு விலைகளையும் ஆராயும்போது நாம் சரியான விலைதான் கொடுத்து வாங்குகிறோமா அல்லது எந்த அளவு பிரீமியத்தில்/ டிஸ்கவுன்டில் வாங்குகிறோமா என்பது புரியவரும்.
இந்த ஆய்விற்கு வளர்ந்த நாட்டுப் பொருளாதாரங்கள், கடந்த பல ஆண்டுகளில் மிகவும் மோசமான மற்றும் சிறப்பான காலங்களில் எவ்வளவு வருமானத்தைத் தந்துள்ளன அல்லது எவ்வளவு குறைவாக/அதிகமாக சொத்துக்களின் விலை கள் சென்றுள்ளன என்பதை எடுத்துக் கொள்ளலாம்.
அதேபோல் வட்டி விகித ஏற்றயிறக்கம்போல், சுழற்சியில் அடிக்கடி நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளையும் ஆய்வில் எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு வட்டி விகிதம் குறைவாக இருப்பது பங்குச் சந்தைக்கு நல்லது. அதிகமாக இருந்தால் நிறுவனத்தின் லாபம் குறைந்து, பங்கு விலைகளிலும் வீழ்ச்சி ஏற்படச் செய்யும். அதே சமயம் வட்டி விகிதம் ஏறாமலே இருப்பது (ஜப்பானைப் போல்) பொருளாதாரம் அடிபட்டு கிடப்பதைக் குறிக்கும். அதுவும் நல்லதல்ல.
உதாரணத்திற்கு வட்டி விகிதங் கள் அதிகமாக இருக்கும்போது வங்கிப் பங்குகளை வாங்கினால் விலை மலிவாகக் கிடைக்கும். ஆகவே, அப்பங்குகள் சென்ற வட்டிவிகித சுழற்சியில் என்ன விலையில் கிடைத்துள்ளன என்று நிகழ்கால விலையுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அப்போது அதன் விலை பிரீமியத்தில் (அதிகமாக) உள்ளதா அல்லது டிஸ்கவுன்டில் (குறைவாக) உள்ளதா என்று தெரியவரும். அதை வைத்து இந்த பங்கை வாங்க இது சரியான தருணமா அல்லது விற்கத் தகுந்த தருணமா என்று தெரிந்து கொள்ளலாம்.
(படி ஏறுவோம்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவகிரக துதி

சூரியன் சீலமாய் வாழ சீரருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி! சூரியா போற்றி! சுந்தரா போற்றி! வீரியா போற்றி! வினைகள் களைவாய் சந்திரன் எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி! திருவருள் தருவாய் சந்திரா போற்றி! சற்குணா போற்றி! சங்கடந்தீர்ப்பாய் சதுராய் போற்றி! அங்காரகன் (செவ்வாய்) சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ மங்கள செவ்வாய் மலரடி போற்றி! அங்காரகனே அவதிகள் நீக்கு! புதன் இதமுற வாழ இன்னல்கள் நீக்கு புத பகவானே பொன்னடி போற்றி! பதந்தந்தாள்வாய் பண்ணொளியானே உதவியே யருளும் உத்தமா போற்றி! குரு குணமிகு வியாழக் குருபகவானே மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய் ; பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா கிரகதோஷமின்றி கடாஷித்தருள்வாய் சுக்கிரன் சுக்கிரமூர்த்தி சுப சுக மீவாய் வக்ரமின்றி வரமிகத் தருவாய் வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே சனி சங்கடந் தீர்ககுஞ் சனி பகவானே! மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றி சனீஸ்வரத் தேவே இச்சகம் வாழ இன்னருள் தா தா ராகு அரவெனும் ராகு அய்யனே போற...

சோப் ஆயிலில் சூப்பர் லாபம்!

வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் இயந்திரங்கள் எதுவும் இல்லாமல் சோப் ஆயில் தயாரிக்கலாம். இதன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை காளம்பாளையத்தில் ஹக் புராடக்ட்ஸ் சோப் ஆயில் தயாரிக்கும் ரமணன். அவர் கூறியதாவது: கோவையில் தேசிய பஞ்சாலை கழக தரக்கட்டுப்பாட்டு பிரிவில் உதவி ஸ்பின்னிங் மாஸ்டராக 28 ஆண்டுகள் பணிபுரிந்தேன். 7 ஆண்டுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றேன். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற என் போன்றவர்களை, கோவையில் உள்ள சிறு தொழில் சேவை மையத்தினர் சுய தொழில் செய்வதற்கான பயிற்சிக்கு அழைத்தனர். அங்கு ஒரு மாதம் நறுமண சொட்டு நீலம், பினாயில், சோப் பவுடர் போன்றவை தயாரிக்க கற்றுக் கொடுத்தனர். ரூ.5 ஆயிரம் முதலீட்டில் சோப் ஆயில் தயாரிப்பதற்கான தொழிலை துவக்கினேன். நானே முதலாளியாகவும், தொழிலாளியாகவும் இருந்து மாதம் 200 லிட்டர் சோப் ஆயில் தயாரித்து விற்கிறேன். சோப் ஆயில் தயாரித்து விற்பவர்கள் பலர் இருந்தாலும், தரமாக தயாரித்து விற்பதால் ஆர்டர் தொய்வு இல்லாமல் கிடைக்கிறது. தினசரி 5 மணி நேரம் உழைத்தால் 10 லிட்டர் சோப் ஆயில் தயாரிக்க முடியும். 20...

Various Herbs & Spices English & Hindi Names

English/ ஆ ங்கிலம் Tamil/ தமிழ் Hindi/ हिन्दी/ ஹிந்தி Rice Arisi( அரிசி) Chaval Black gram Kadalai Parruppu ( கடலை பருப்பு) Channa Dhal Black Gram Ulluththam Paruppu ( உளுதம் பருப்பு) Urad Dhal Green gram dhal Payaththam Parruppu( பயத்தம் பருப்பு) Moog Dhal Green gram Whole Paasi Parruppu( பாசி பருப்பு) Moog Sabut Yellow split peas Thuvaram Parruppu( துவரம் பருப்பு) Toor Dhal Green gram  Split Pachchai payiru( பச்சைப்பயறு) Moong Chilka Garbanzo beans Kondai Kadalai( கொண்டை கடலை) Kabuli Channa Peanuts Veerkadalai( வேற்கடலை) Moong falee All Purpose Flour Maida Maavu( மைதா மாவு) Maida Gram flour Kadalai Maavu( கடலை மாவு) Besan Wheat flour Godhumai maavu( கோதுமை மாவு) ...