முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முதற்படி முதலில் படி! - 36


முதற்படி முதலில் படி! - 36


ஷேர் மார்க்கெட்டில் நுழைய விரும்பும் புதியவர்களுக்கான வழிகாட்டித் தொடர்!

எஃப் அண்ட் ஓ. முதல் என்.சி.டி. வரை பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் பல்வேறு விஷயங்களைக் கடந்த இதழில் பார்த்தோம். இவ்வாரம் பங்குச் சந்தை கட்டுப்பாடுகளைக் (ரெகுலேஷன்) குறித்துப் பார்ப்போம்.  
லக அளவில் மிகச் சிறந்த கட்டுப்பாட் டோடு செயல் படும் பங்குச் சந்தைகளில் நம் இந்திய பங்குச் சந்தையும் ஒன்று. இன்றைய தேதியில் பங்குகளை வாங்கி, விற்பதில் வெளிப்படையான (டிரான்ஸ் பரன்ட்) தன்மை நிலவுகிறது. பங்கு வாங்கி/விற்ற அன்றே எஸ்.எம்.எஸ்., கான்ட்ராக்ட் நோட் என அனைத்தும் வந்து விடும். பங்குகளை வாங்கிய அன்றோ அல்லது மறுநாளோ நீங்கள் பணம் கொடுத்துவிட வேண்டும். விற்ற இரண்டாவது நாள், உங்கள் பணம் உங்கள் கைக்கு வந்துவிட வேண்டும். உங்கள் கணக்குகளை ஆன்லைனில் பார்த்துக் கொள்ளும் வசதி, குறிப்பிட்ட உங்கள் வங்கிக் கணக்கிற்கு ஆட்டோமெட்டிக்காக டிவிடெண்ட் மற்றும் பேஅவுட் பெறும் வசதி, நீங்கள் வைத்திருக்கும் பங்குகளை நேரடியாக (புரோக்கர் வெப்சைட் தவிர) என்.எஸ்.டி.எல்/ சி.டி.எஸ்.எல்.
வெப்சைட் மூலமாகப் பார்த்துக் கொள்ள வசதி என பல விஷயங்கள் வந்துவிட்டன.
இவ்வளவு வெளிப்படைத் தன்மை இருந்தும், பிரச்னைகள் இல்லாமல் இல்லை. இன்றும் பல முதலீட்டாளர்கள் ஏமாற்றப்படுவதாக புகார் வந்து கொண்டுதான் இருக்கிறது. இதிலிருந்து தப்பிக்க பங்கு களை வாங்கும் போதும், விற்கும்போதும் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை முதலில் சொல்லிவிடுகிறேன்.
1.
உங்கள் டீமேட் மற்றும் டிரேடிங் அக்கவுன்டில் உங்களது செல்போன் நம்பரை பதிவு செய்து கொள்ளுங்கள். அதன் மூலம் நீங்கள் டிரேடிங் செய்த போதெல்லாம் உங்களுக்கு தகவல் வரும். மேலும், உங்கள் டீமேட் கணக்கில் இருந்து பங்குகள் உங்களுக்குத் தெரியாமலே விற்கப்பட்டாலும் உங்களுக்குத் தகவல் வந்துவிடும்.
2.
இ-மெயில் மற்றும் இன்டர்நெட் வசதி இன்று பங்கு முதலீட்டிற்கு இன்றியமையாத ஒன்றாகி விட்டது. ஆகவே, இ-மெயில் அக்கவுன்ட் இல்லையெனில், ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் வர்த்தகம் செய்யும் போதெல்லாம், உங்களுக்கு கன்பஃர்மேஷன் மெயில் மற்றும் கான்ட்ராக்ட் வந்துவிடும்.
3. புரோக்கரிடம் உள்ள உங்கள் லெட்ஜர் அக்கவுன்டில் பணத்தை விட்டு வைக்காதீர்கள். நீங்கள் விற்க, விற்க ஆட்டோமெட்டிக்காக உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றச் சொல்லுங்கள். அதுபோலவே, பங்குகளை வாங்கிய அளவிற்குப் பணத்தை சரியாகக் கொடுத்துவிடுங்கள்.

4.
பவர் ஆஃப் அட்டார்னி புரோக்கரிடம் கொடுக்காமல், நீங்கள் ஒவ்வொரு தடவையும் செக் (காசோலை) போல டீமேட் ஸ்லிப் எழுதிக் கொடுக்கலாம்.  நீங்கள் ஆக்டிவ் வான முதலீட்டாளர் இல்லை எனில், இம்முறை உங்களுக்கு சரிப்பட்டு வராது.
5.
டிரேடிங் அக்கவுன்டை ஒரு இடத்திலும், டீமேட் அக்கவுன்டை வேறொரு இடத்திலும் வைத்துக் கொள்ளலாம். இதிலும் அசௌகரியங்கள் அதிகம்.
6.
நீங்கள் பங்குச் சந்தை பற்றி முற்றிலும் அறிந்தவர் எனில், எங்கு வேண்டுமானாலும் உங்கள் அக்கவுன்டை இன்டர்நெட் மூலம் திறந்து அதைத் தொடர்ந்து கண்காணியுங்கள். பங்குச் சந்தை பற்றி அதிகம் பரிச்சயம் இல்லாதவர் எனில், ஒரு நல்ல நிதி ஆலோசகரின் உதவியுடன் உங்கள் டீமேட் மற்றும் டிரேடிங் அக்கவுன்டை திறந்து கொள்வது நல்லது.
7. எந்த ஒரு முதலீட்டிற்கும் கண்காணிப்பு என்பது அவசியம். அதை மனதில் கொண்டு, அவ்வப்போது உங்கள் டீமேட் மற்றும் டிரேடிங் அக்கவுன்டை கண்காணித்துக் கொள்ளுங்கள்.
8.
எவரேனும் உங்களை அணுகி நீங்கள் லட்ச ரூபாய் முதலீடு செய்யுங்கள். நான் மாதத்திற்கு 5% அல்லது 10% பங்குச் சந்தையில் முதலீடு செய்து லாபம் சம்பாதித்துத் தருகிறேன் என்று கூறினால், நம்பாதீர்கள்! அப்படி நம்பினீர்கள் எனில் நீங்கள் ஏமாறுவது உறுதி!
9.
எக்காரணம் கொண்டும் புரோக்கிங் நிறுவனத்தில் வேலை செய்யும் டீலர்களிடம் உங்களது அக்கவுன்டை அவரே ஆப்ரேட் செய்து, சம்பாதித்துத் தருமாறு கூறாதீர்கள்.
10.
குறைந்தது ஒவ்வொரு ஆண்டு முடிவிலும், நீங்கள் முதலீடு செய்த பணம் எவ்வளவு, விற்றது எவ்வளவு, இருப்பு எவ்வளவு என்ற கணக்கைப் பாருங்கள்.
மேற்கண்ட விஷயங்களை எல்லாம் பின்பற்றிய பின்பும் நீங்கள் ஏமாற்றப்படுகிறீர்கள்  என்றால், என்ன செய்யலாம் என்பது பற்றி கீழே பார்ப்போம்.
நீங்கள் சொல்லாமலே, உங்கள் புரோக்கர் ஒரு பங்கை வாங்கி/விற்றுவிட்டார் எனில்,  ஒவ்வொரு புரோக்கரிடமும் கம்ப்ளையன்ஸ் ஆபீஃஸர் என்று ஒருவர் இருப்பார். அவருக்கும், பிராஞ்ச் மேனேஜருக்கும் உங்கள் புகாரை உடனடியாக இ-மெயிலில் அனுப்புங்கள். மேலும், உங்கள் புகாரை கடிதம் எழுதி புரோக்கரிடம் கொடுங்கள். அக்கடிதம் கொடுத்ததற்கான அத்தாட்சியையும் பெற்றுக் கொள்ளுங்கள். இதன்மூலம், உரிய தருணத்தில் நீங்கள் புகார் சொல்லவில்லை என்கிற குற்றச்சாட்டு உங்கள் மீது வருவதைத் தடுக்க முடியும். அந்த புகாருக்கு உரிய பதில் கிடைக்கவில்லை என்றால், மேற்கொண்டு ஸ்டாக் எக்ஸ்சேஞ்சிற்குப் புகாரை அனுப்பலாம்.
தேசிய பங்குச் சந்தை (என்.எஸ்.இ) தனது இணைய  தளத்தில் புகார் செய்வது பற்றிய விவரங்களை தெளிவாகத் தந்துள்ளது. ஆன்லைன் மூலமாகவும் புகாரை பதிவு செய்யலாம். தபால்/கூரியர் மூலமாகவும் புகாரை பதிவு செய்யலாம். அதற்குத் தேவையான விண்ணப்பப் படிவங்கள் இணையதளத்தி லேயே உள்ளன.
தவிர, தேசிய பங்குச் சந்தை சென்னை, மும்பை, புது டெல்லி, கொல்கத்தா போன்ற இடங்களில் முதலீட்டாளர் சேவை மையங்களை அமைத்துள்ளது. அம்மையங்களை தொடர்பு கொண்டு உங்களது பிரச்னை களுக்குத் தீர்வு காணலாம். அதுபோல, மும்பை பங்குச் சந்தை (பி.எஸ்.இ) அதன் புரோக்கர்கள் மீது  புகார் செய்வதற்கு வசதி செய்து தந்திருக்கிறது. விவரங்கள் அதன் இணையதளத்தில் உள்ளது.
பங்குச் சந்தைகளில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ள பங்கு நிறுவனங்கள் பற்றி உங்களுக்கு ஏதாவது புகார் இருந்தாலும், பங்குச் சந்தை புகார் மையத்தில் புகாரைப் பதிவு செய்யலாம். பொதுவாக பெரிய, தரமான நிறுவனப் பங்குகளை வாங்கும்போது இது மாதிரியானப் பிரச்னைக்கு இடம் இல்லை.
நீங்கள் ஒவ்வொரு முறையும் உங்கள் புரோக்கரிடம் அல்லது பங்குச் சந்தையிடம் புகார் செய்யும்போது, செபிக்கும் ஒரு நகல் அனுப்புவது நல்லது. செபி-யின் இணையதளத்தில் புரோக்கர் குறித்த புகார்களை ஏற்றுக் கொண்டு சரி செய்ய ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் தனி செல்கள் நியமிக்கப் பட்டுள்ளன. நமது தென் பிராந்தியத்திற்கான செபி அலுவலகம் சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ளது.
(படி ஏறுவோம்)

Source - Vikatan Magazine

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவகிரக துதி

சூரியன் சீலமாய் வாழ சீரருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி! சூரியா போற்றி! சுந்தரா போற்றி! வீரியா போற்றி! வினைகள் களைவாய் சந்திரன் எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி! திருவருள் தருவாய் சந்திரா போற்றி! சற்குணா போற்றி! சங்கடந்தீர்ப்பாய் சதுராய் போற்றி! அங்காரகன் (செவ்வாய்) சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ மங்கள செவ்வாய் மலரடி போற்றி! அங்காரகனே அவதிகள் நீக்கு! புதன் இதமுற வாழ இன்னல்கள் நீக்கு புத பகவானே பொன்னடி போற்றி! பதந்தந்தாள்வாய் பண்ணொளியானே உதவியே யருளும் உத்தமா போற்றி! குரு குணமிகு வியாழக் குருபகவானே மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய் ; பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா கிரகதோஷமின்றி கடாஷித்தருள்வாய் சுக்கிரன் சுக்கிரமூர்த்தி சுப சுக மீவாய் வக்ரமின்றி வரமிகத் தருவாய் வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே சனி சங்கடந் தீர்ககுஞ் சனி பகவானே! மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றி சனீஸ்வரத் தேவே இச்சகம் வாழ இன்னருள் தா தா ராகு அரவெனும் ராகு அய்யனே போற...

சோப் ஆயிலில் சூப்பர் லாபம்!

வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் இயந்திரங்கள் எதுவும் இல்லாமல் சோப் ஆயில் தயாரிக்கலாம். இதன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை காளம்பாளையத்தில் ஹக் புராடக்ட்ஸ் சோப் ஆயில் தயாரிக்கும் ரமணன். அவர் கூறியதாவது: கோவையில் தேசிய பஞ்சாலை கழக தரக்கட்டுப்பாட்டு பிரிவில் உதவி ஸ்பின்னிங் மாஸ்டராக 28 ஆண்டுகள் பணிபுரிந்தேன். 7 ஆண்டுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றேன். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற என் போன்றவர்களை, கோவையில் உள்ள சிறு தொழில் சேவை மையத்தினர் சுய தொழில் செய்வதற்கான பயிற்சிக்கு அழைத்தனர். அங்கு ஒரு மாதம் நறுமண சொட்டு நீலம், பினாயில், சோப் பவுடர் போன்றவை தயாரிக்க கற்றுக் கொடுத்தனர். ரூ.5 ஆயிரம் முதலீட்டில் சோப் ஆயில் தயாரிப்பதற்கான தொழிலை துவக்கினேன். நானே முதலாளியாகவும், தொழிலாளியாகவும் இருந்து மாதம் 200 லிட்டர் சோப் ஆயில் தயாரித்து விற்கிறேன். சோப் ஆயில் தயாரித்து விற்பவர்கள் பலர் இருந்தாலும், தரமாக தயாரித்து விற்பதால் ஆர்டர் தொய்வு இல்லாமல் கிடைக்கிறது. தினசரி 5 மணி நேரம் உழைத்தால் 10 லிட்டர் சோப் ஆயில் தயாரிக்க முடியும். 20...

தலையணை உறை.. தூள் கிளப்பும் லாபம்

பெண்கள்  வீட்டு வேலை  போக மற்ற நேரங்களில் சுயமாக வேலை செய்து சம்பாதிக்க ஏற்ற தொழில் தையல். ஜாக்கெட், சுடிதார் போன்ற நுட்பம் நிறைந்த தையல் வேலைகள் மேற்கொள்ள பயிற்சி வேண்டும். ஆனால் தலையணை உறை தைக்க எவ்வித பயிற்சியும் தேவை இல்லை. நுணுக்கமான தையல் தெரியாதவர்கள் தலையணை உறை தயாரித்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் என்கிறார் கோவை வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரிநாயக்கன்பாளையத்தை சேர்ந்த செல்வி. அவர் கூறியதாவது: கணவர் ஆட்டோ டிரைவர். குடும்ப வருமானம் போதவில்லை. அதை சமாளிக்க 4 ஆண்டுகளுக்கு முன்பு தையல் கற்றேன். வீட்டிலேயே பழைய தையல் மெஷின் வாங்கி போட்டு, ஜாக்கெட், சுடிதார் தைத்து வந்தேன். அப்போது எங்கள் பகுதியில் உள்ள பெண்கள் 13 பேர் சேர்ந்து அம்மன் சுய உதவி குழு துவக்கினோம். ரூ.10 ஆயிரம் கடனுதவி கிடைத்தது. அதன்மூலம் ஈரோட்டில் தலையணை உறை துணி வாங்கி வந்து தைத்தேன். அவற்றை கணவர் கடைகளுக்கு எடுத்து சென்று விற்று வந்தார். பின்னர் நானே ஆட்டோவில் ஏற்றி அபார்ட்மென்ட்கள், பள்ளி, கல்லூரி விடுதிகள், வீடுகளில் விற்றேன். நல்ல லாபம் கிடைத்தது. முழு நேர தொழிலாக தற்போது தலையணை உறை தயாரிக்கிறேன். இத...