முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முதற்படி முதலில் படி! - 14


முதற்படி முதலில் படி! - 14


கடந்த மூன்று இதழ்களில் மூன்று விதமான முதலீட்டு யுக்திகள் பற்றி பார்த்தோம்... இந்த இதழில் நான்காவது முதலீட்டு யுக்தியான 'பேஸிவ் இன்வெஸ்ட்டிங்பற்றி விளக்கமாகப் பார்ப்போம்...
ஆங்கிலத்தில் 'ஆக்டிவ்’ (active) என்ற சொல்லிற்கு நேர் எதிர்மறைதான் பேஸிவ்’ (passive). 'பேஸிவ்என்றால் துரிதமான செயல்பாடு இல்லாமல் இருப்பது என்று பொருள். 'ஆக்டிவ்முதலீட்டாளர் இன்கம் ஸ்டேட்மென்ட், பேலன்ஸ் ஷீட் என ஒவ்வொரு நிறுவனங்களின் நிதி அறிக்கைகளை ஆராய்ந்து, அந்நிறு வனங்கள் செயல்படும் துறையின் செயல்பாட்டுடன், நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றியும் அறிந்து, பங்குகளை பொறுக்கி எடுப்பார்.
ஆனால் 'பேஸிவ்முதலீட்டா ளர்கள் இதற்கு நேரெதிர். நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றப் பாதையில் செல்கையில், பங்குச் சந்தை மொத்தமாக நன்றாகச் செயல்படும். அவ்வாறு செயல் படும்போது மொத்த பங்குச் சந்தையையே வாங்கினால் அதாவது நிஃப்டி அல்லது சென்செக்ஸ் குறியீடுகளில் முதலீடு செய்வது நல்லது அல்லவா? அதைவிட்டு விட்டு ஏன் சின்னச் சின்ன விஷயங்களைப் பற்றிக் கவலைப்படுவானேன்? 'எஃப்பீஷியன்ட் மார்க்கெட் தியரி’ (efficient market theory), சந்தையைவிட யாராலும் தொடர்ந்து அதிகமாக சம்பாதிக்க முடியாது என்று கூறுகிறது. அதை ஒப்புக் கொள்கிறவர்களுக்கு, இந்த பேஸிவ் இன்வெஸ்ட்டிங் ஓர் அருமையான முதலீட்டு யுக்தியாகும்.
பேஸிவ் முதலீட்டு யுக்தி எவ்வாறு செயல்படுகிறது? பொதுவாக பேஸிவ் இன்வெஸ்ட்டிங் என்று குறிப்பிடுவது இண்டெக்ஸ் ஃபண்டுகள் அல்லது இண் டெக்ஸ் இ.டி.எஃப்-களில் முதலீடு செய்வதைக் குறிக்கும். உதாரணத் திற்கு நிஃப்டி அல்லது சென்செக்ஸ் குறியீடுகளில் முதலீடு செய்வது பேஸிவ் இன்வெஸ்ட்டிங் ஆகும். இதைப் போல் இன்று இந்தியாவில் பலவிதமான குறியீடுகளில் முதலீடு செய்யலாம். இந்தியக் குறியீடுகள் மட்டுமல்லாமல், பல நாடுகளின் குறியீடுகளிலும் முதலீடு செய்வதற் கான வசதிவாய்ப்பு இன்று பெருகிக் கொண்டே வருகிறது.
இவ்விதமாகச் செயல்படும் ஃபண்டுகள் அல்லது இ.டி.எஃப்- கள் ஒரு குறிப்பிட்ட குறியீட்டை அடிப்படையாகக் கொண்டு, அந்தக் குறியீட்டின் கீழ் இருக்கும் அனைத்து பங்குகளிலும் அதே விகிதத்தில் முதலீடு செய்கின்றன. அவ்வாறு செய்யும்போது 'ட்ராக்கிங் எரர்’ (tracking error) ஒரு சிறிய அளவில் ஏற்படும். அந்த இண்டெக்ஸில் ஏதேனும் பங்குகள் மாற்றப்பட்டாலோ அல்லது சதவிகிதம் மாற்றப்பட்டாலோ, அந்த இண்டெக்ஸை டிராக் செய்யும் ஃபண்டுகளும் அதை அப்படியே மாற்றிக் கொள்ளும்.
குறியீடுகளில் முதலீடு செய்வதைத்தான் பெரும்பாலான பேஸிவ் இன்வெஸ்ட்டார்கள் செய்து வருகிறார்கள். ஆனால், இன்னும் சிலர் தாங்கள் ஒருமுறை பொறுக்கி எடுத்த பங்குகளை வாங்கி வைத்துவிட்டு மறந்துவிடு வார்கள் - அதை ஒரு சொத்தைப் போல நினைத்து! நீண்ட காலத்தில் எப்படியும் அந்தப் பங்குகள் லாபத்தைத் தந்துவிடும் என அவர்கள் உறுதியாக நினைப்பதே அதற்கு காரணம். அந்த அடிப்படையில் இதுவரை இந்தியாவில் நல்ல பங்குகளை வாங்கியவர்கள் யாரும் ஏமாந்து போகவில்லை! நல்ல லாபத்தையே அடைந்துள்ளார்கள். இதுவும் ஒரு பேஸிவ் இன்வெஸ்ட்டிங் முறைதான்!
வேறு சிலரோ சில குறிப்பிட்ட பங்குகளை ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் (எஸ்.ஐ.பி. போல) தொடர்ந்து வாங்கிக் கொண்டே இருப்பார்கள். சந்தையில் அந்தப் பங்கின் விலை ஏறியிறங்கிக் கொண்டிருப்பது பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். இவர்களும் ஒருவகையில் பேஸிவ் இன்வெஸ்ட்டார்களே!
வாரன் பஃபட் போன்றோர்கள் பங்குச் சந்தை பற்றி அதிகம் தெரியாதவர்களுக்கு இண்டெக்ஸ் ஃபண்ட் போன்ற பேஸிவ் இன்வெஸ்ட்டிங் முறையே மிகவும் சிறந்தது என்று கூறுகிறார்கள்.
பேஸிவ் இன்வெஸ்ட்டிங்கை பலரும் விரும்புவதன் நோக்கம் என்ன?

பேஸிவ் முதலீட்டில் பெரிய பிளஸ் பாயிண்ட் குறைந்த ஃபண்ட் செலவாகும். இந்தியாவில் ஆக்டிவ்வாக மேனேஜ் செய்யப் படும் பல ஃபண்டுகளின் 'எக்ஸ்பன்ஸ் ரேஷியோஅதிக பட்சமாக ஆண்டிற்கு 2.25% ஆகும். அதே சமயத்தில் பல இண்டெக்ஸ் ஃபண்டுகள் மற்றும் இ.டி.எஃப்-களின் 'எக்ஸ்பன்ஸ் ரேஷியோஅதிகபட்சமாக 1% ஆகும். இந்த 'எக்ஸ்பன்ஸ் ரேஷியோவில் மீதமாகும் தொகையே நீண்டகால அடிப்படையில் முதலீட்டாளர் களுக்கு லாபத்தை அள்ளித் தரும். ஒரு இண்டெக்ஸை வாங்குவதால் நல்ல டைவர்ஸிபிகேஷன் கிடைக் கும். அதற்கு மேல் டென்ஷனும் குறையும். சந்தை ஏறினாலும், இறங்கினாலும் உங்களது முதலீடும் அதே அளவில் ஏற்ற இறக்கத்தைக் காணும். மேலும், பேஸிவ் முதலீட்டாளர் கள் பெரும்பாலும் நீண்டகால முதலீட்டாளர்களே. ஆகவே மூலதன ஆதாய வரி எதுவும் கட்ட வேண்டியதில்லை. குறுகிய கால முதலீட்டாளர்கள் இந்தியாவில் கேப்பிட்டல் கெயின்ஸ் டாக்ஸாக லாபத்தில் 15% செலுத்த வேண்டும். ஆகவே அதுவும் ஒரு பெரிய மிச்சம். இதைவிடவெல்லாம் பெரிய மிச்சம் குறைந்த புரோக் கரேஜ் செலுத்துவது! பேஸிவ் இன்வெஸ்ட்டார் என்பதால் அடிக்கடி வாங்கி விற்க மாட்டீர்கள் அல்லவா? பேஸிவ் இன்வெஸ்ட்டிங்கில் ஃபண்ட் மேனேஜரின் திறமையைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.
பேஸிவ் இன்வெஸ்ட்டிங்கில் தீமை ஏதும் உள்ளதா?
இண்டெக்ஸில் இடம் பெற்றிருக் கும் ஓரிரு துறைகளோ அல்லது ஓரிரு பங்குகளோ உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், இண்டெக்ஸை மொத்தமாக வாங்குவதால், நீங்கள் அவற்றையும் சேர்த்தே வாங்க வேண்டும்! தவிர, இந்திய சந்தை இன்னும் முழுத் திறனோடு செயல்படத் தொடங்கவில்லை. எனவே, ஆக்டிவ்-ஆகச் செயல்படும் ஃபண்டுகளும் முதலீட்டாளர்களும் பேஸிவ் முதலீட்டாளர்களைவிட நன்றாகவே சம்பாதித்துள்ளனர். ஆனால், அவர்கள் அடைந்த லாபமும் இண்டெக்ஸ் ரிட்டர்னுக் கும் குறைவாகவே இருக்கிறது என்பது உண்மை.
அமெரிக்காவில் செயல்படும் சில மிகப் பெரிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்/இ.டி.எஃப்-கள் பேஸிவ் இன்வெஸ்ட்டிங் முறையில் தான் செயல்படுகின்றன. இந்த பேஸிவ் இன்வெஸ்ட்டிங்கின் மார்க்கெட் சைஸ் அமெரிக்காவில் மட்டும் பல நூறு பில்லியன் டாலர்கள். உலக அளவில்
எஸ் அண்டு பி-ஐ அடிப்படையாகக் கொண்ட ஸ்பைடர்ஸ் (SPDRs - Spiders), எம்.எஸ்.சி.ஐ. குறியீட்டை அடிப்படையாகக் கொண்ட ஐஷேர்ஸ் (iShares), நாஸ்டாக்-100-ஐ அடிப்படையாகக் கொண்ட QQQQ, ஹேங் சேங் குறியீட்டை அடிப்படையாகக் கொண்ட ட்ரேக்ஸ் (TRAHK - Tracks) போன்றவை பேஸிவ் இன்வெஸ்ட்டிங் முறையில் பிரசித்தம்.
சரி, எனக்கு எது சரிப்பட்டு வரும்? ஆக்டிவ்வா? அல்லது பேஸிவா? என்கிறீர்களா?
பேஸிவ் இன்வெஸ்ட்டிங் எதை அடிப்படையாகக் கொண்டு உள்ளதோ (உதாரணத்திற்கு நிஃப்டி 50 பங்கு குறியீட்டை அடிப்படையாகக் கொண்டுள்ள இ.டி.எஃப்.) அந்தப் பொருள் ஏறும் அளவிற்கு, எனக்குக் கிடைக்கும் வருமானமும் இருந்தால் போதுமானது - கூடவோ குறையவோ வேண்டாம் என்று நினப்பவர்கள், நேரம் அதிகமில்லாதவர்கள், பங்குச் சந்தை குறித்து அதிகம் தெரியாதவர்கள், அலுத்துக் கொள்ளாமல் முதலீடு செய்பவர்கள், சந்தையில் உடனே நுழைய வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளவர்களுக்கு பேஸிவ் இன்வெஸ்ட்டிங் சிறந்ததாகும்.
அதிக நேரத்தைச் செலவிட முடிந்தவர்கள், பங்குச் சந்தை  விஷயங்களை நன்கு அறிந்தவர்கள், என்னால் சந்தையின் வருமானத் தைவிட அதிகமாகச் சம்பாதிக்க முடியும் என நினைப்பவர்கள், ரிஸ்க் எடுக்கத் தயாராக உள்ள வர்கள்  ஆக்டிவ் இன்வெஸ்டிங் வகையினர்.
(படி ஏறுவோம்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவகிரக துதி

சூரியன் சீலமாய் வாழ சீரருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி! சூரியா போற்றி! சுந்தரா போற்றி! வீரியா போற்றி! வினைகள் களைவாய் சந்திரன் எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி! திருவருள் தருவாய் சந்திரா போற்றி! சற்குணா போற்றி! சங்கடந்தீர்ப்பாய் சதுராய் போற்றி! அங்காரகன் (செவ்வாய்) சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ மங்கள செவ்வாய் மலரடி போற்றி! அங்காரகனே அவதிகள் நீக்கு! புதன் இதமுற வாழ இன்னல்கள் நீக்கு புத பகவானே பொன்னடி போற்றி! பதந்தந்தாள்வாய் பண்ணொளியானே உதவியே யருளும் உத்தமா போற்றி! குரு குணமிகு வியாழக் குருபகவானே மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய் ; பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா கிரகதோஷமின்றி கடாஷித்தருள்வாய் சுக்கிரன் சுக்கிரமூர்த்தி சுப சுக மீவாய் வக்ரமின்றி வரமிகத் தருவாய் வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே சனி சங்கடந் தீர்ககுஞ் சனி பகவானே! மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றி சனீஸ்வரத் தேவே இச்சகம் வாழ இன்னருள் தா தா ராகு அரவெனும் ராகு அய்யனே போற...

சோப் ஆயிலில் சூப்பர் லாபம்!

வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் இயந்திரங்கள் எதுவும் இல்லாமல் சோப் ஆயில் தயாரிக்கலாம். இதன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை காளம்பாளையத்தில் ஹக் புராடக்ட்ஸ் சோப் ஆயில் தயாரிக்கும் ரமணன். அவர் கூறியதாவது: கோவையில் தேசிய பஞ்சாலை கழக தரக்கட்டுப்பாட்டு பிரிவில் உதவி ஸ்பின்னிங் மாஸ்டராக 28 ஆண்டுகள் பணிபுரிந்தேன். 7 ஆண்டுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றேன். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற என் போன்றவர்களை, கோவையில் உள்ள சிறு தொழில் சேவை மையத்தினர் சுய தொழில் செய்வதற்கான பயிற்சிக்கு அழைத்தனர். அங்கு ஒரு மாதம் நறுமண சொட்டு நீலம், பினாயில், சோப் பவுடர் போன்றவை தயாரிக்க கற்றுக் கொடுத்தனர். ரூ.5 ஆயிரம் முதலீட்டில் சோப் ஆயில் தயாரிப்பதற்கான தொழிலை துவக்கினேன். நானே முதலாளியாகவும், தொழிலாளியாகவும் இருந்து மாதம் 200 லிட்டர் சோப் ஆயில் தயாரித்து விற்கிறேன். சோப் ஆயில் தயாரித்து விற்பவர்கள் பலர் இருந்தாலும், தரமாக தயாரித்து விற்பதால் ஆர்டர் தொய்வு இல்லாமல் கிடைக்கிறது. தினசரி 5 மணி நேரம் உழைத்தால் 10 லிட்டர் சோப் ஆயில் தயாரிக்க முடியும். 20...

Various Herbs & Spices English & Hindi Names

English/ ஆ ங்கிலம் Tamil/ தமிழ் Hindi/ हिन्दी/ ஹிந்தி Rice Arisi( அரிசி) Chaval Black gram Kadalai Parruppu ( கடலை பருப்பு) Channa Dhal Black Gram Ulluththam Paruppu ( உளுதம் பருப்பு) Urad Dhal Green gram dhal Payaththam Parruppu( பயத்தம் பருப்பு) Moog Dhal Green gram Whole Paasi Parruppu( பாசி பருப்பு) Moog Sabut Yellow split peas Thuvaram Parruppu( துவரம் பருப்பு) Toor Dhal Green gram  Split Pachchai payiru( பச்சைப்பயறு) Moong Chilka Garbanzo beans Kondai Kadalai( கொண்டை கடலை) Kabuli Channa Peanuts Veerkadalai( வேற்கடலை) Moong falee All Purpose Flour Maida Maavu( மைதா மாவு) Maida Gram flour Kadalai Maavu( கடலை மாவு) Besan Wheat flour Godhumai maavu( கோதுமை மாவு) ...