முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முதற்படி முதலில் படி! - 17


முதற்படி முதலில் படி! - 17

ஷேர் மார்க்கெட்டில் நுழைய விரும்பும்
புதியவர்களுக்கான வழிகாட்டித் தொடர்!
ரு நல்ல பங்கைத் தேர்வு செய்ய அதன் நிர்வாகத்தைக் கவனிக்க வேண்டும் என்று கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். நிர்வாகத்தின் தரத்தைப் பார்க்கிற அதே நேரத்தில் வேறு என்னென்ன விஷயங்களையும் கவனிக்க வேண்டும் என்பதை இப்போது விளக்கமாகச் சொல்கிறோம்.
நிறுவனத்தின் வயது:
ஒரு நிறுவனத்திற்கு நெடிய வரலாறு இருப்பது நல்லது. நீண்ட வரலாறு கொண்ட நிறுவனங்களுக்கு பல்வேறு ஏற்றயிறக்கங்களைச் சந்தித்த அனுபவம் இருக்கும். எந்த விஷயத்தை எப்படித் தீர்ப்பது என்று அதற்குத் தெரிந்திருக்கும். இனிவரும் காலத்தில் திடீரென பொருளாதார ஏற்றத்தாழ்வு வந்தால் அதை எப்படிச் சமாளிப்பது என்கிற அனுபவமும் அதற்கிருக்கும். அந்த வகையில் அந்த நிறுவனத்தின் மேனேஜ்மென்ட்டைப் பற்றி, அந்நிறுவனத்தின் புரமோட்டர்கள் பற்றி, அந்நிறுவனம் தயாரிக்கும் பொருட்கள் பற்றி, அதன் தரத்தைப் பற்றி, வாடிக்கையாளர் சேவையைப் பற்றி, முதலீட்டாளர் சேவையைப் பற்றி என பலவற்றையும் அறிந்து கொள்ள உதவும். அதிக வரலாறு இல்லாத புதிய நிறுவனங்களை விட்டு கொஞ்சம் தள்ளியிருப்பதே நல்லது. புதிய நிறுவனப் பங்குகளை வாங்குவதில் ரிஸ்க் அதிகமாக இருக்கும். இளவட்டங்கள் எப்போதும் அதிரடியாக இருப்பார்கள். ஆனால், அதிரடியாக இருந்தாலே வெற்றி கிடைத்துவிடும் என்று சொல்ல முடியாது. வெற்றிக்குத் தேவை வேகத்துடன் கூடிய விவேகம். நீண்ட வரலாறு கொண்ட நிறுவனங்கள் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப் பட்டவையாக இருக்க வேண்டும்? இதற்கென குறிப்பிட்ட வரையறை ஒன்றும் கிடையாது. எவ்வளவு அதிகமாக இருக்க முடியுமோ, அவ்வளவு நல்லது. குறைந்தபட்சம் இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பாகவாவது தொடங்கப்பட்ட நிறுவனமாக இருந்தால் நல்லது.
பொருட்களின் தரம்:

ஒரு பங்கை நீண்ட காலத்துக்கு நாம் வாங்கி வைத்திருக்கத் தயாராக இருக்கும்போது அந்த நிறுவனம் தயாரிக்கும் பொருட்களின் தரம் பற்றி அறிவதும் முக்கியம். ''இன்றைய தினத்தில் அனைத்து நிறுவனங்களுமே தரமான பொருட்களைத்தானே தயாரிக் கிறார்கள்?'' என்று நீங்கள் கேட்கலாம்.
நீங்கள் அனைத்து நிறுவனங்கள் என்று குறிப்பிடுவது ஐ.டி.சி- யாக இருக்கலாம், அல்லது பிரிட்டானியாவாக இருக்கலாம் அல்லது கோத்ரெஜ் நிறுவனமாக இருக்கலாம். இது மாதிரி மிகச் சில நிறுவனங்களின் பொருட்களையே நாம் வாங்கிப் பயன்படுத்துகிறோம். ஆனால், பெரும்பாலான நேரங்களில் பல நிறுவனங்கள் தயார் செய்யும் பொருட்களின் தரத்தை நம்மால் நேரடியாக வாங்கித் தெரிந்து கொள்ள முடிவதில்லை. இந்த பிரச்னைக்கு ஒரே வழி, ஒவ்வொரு நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களின் விற்பனை பற்றி நமக்குத் தெரிந்த வகையில் கேட்டும் படித்தும் அறிந்து கொள்வதே.
நிறுவனங்கள் தயார் செய்யும் பொருட்கள் தரமாக இருப்பின், அந்த நிறுவனத்தின் பொருட்கள் எப்போதும் டிமாண்ட்-ஆக இருக்கும். அதனால் உங்கள் முதலீடும் பாதுகாப்பாக இருந்து வளரச் செய்யும்.
பொருட்களின் அவசியம்:
நீங்கள் வாங்கும் பங்கு நிறுவனங்கள் எவ்விதமான பொருட்களைத் தயாரிக்கின்றன என்பதைக் காணுங்கள். தினம் தினம் தேவைப்படக்கூடிய பால், மின்சாரம், மருந்துகள், போக்கு வரத்து, சாலைகள் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளனவா அல்லது சொகுசு கார்கள், சொகுசு எலெக்ட்ரானிக் சாதனங்கள் போன்றவற்றைத் தயாரிக்கின்றனவா என்று பாருங்கள். வேல்யூ இன்வெஸ்ட்டர்கள் தினசரித் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய நிறுவனப் பங்குகளை நாடிச் செல்வர். அவ்வகையான பங்குகள் பாதுகாப்பானதும்கூட. அவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய நிறுவனங்களின் பணவரத்து (சிணீsலீ யீறீஷீஷ்) தொடர்ந்து நன்றாக இருக்கும். சொகுசுப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களின் விற்பனை பொருளாதாரத்தைப் பொறுத்து ஏற்றயிறக்கம் அதிகமாக இருக்கும்.

ஃபோகஸ் செய்யும் செக்மென்ட்:

நீங்கள் பங்குகளை வாங்கப் போகும் நிறுவனத்தின் பொருட்கள் எந்த வர்க்கத்து மக்களுக்காகத் தயாரிக்கப்படுகின்றன என்று அலசுங்கள். ஐ.டி.சி., பிரிட்டானியா போல அனைத்து தர மக்களுக்குமானதைத் தயாரிக்கிறார்களா, அல்லது ஓபராய் ஓட்டல்ஸ் போன்று உயர்தட்டு மக்களுக்கானதா, அல்லது இன்ஃபோசிஸ் போன்று வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமே பயன் படுத்துவதற்கா என்று பாருங்கள். பொருளாதாரம் அடிபடும்போது ரீடெய்ல் வாடிக்கையாளர்களை ஃபோகஸ் செய்யும் நிறுவனங்கள் அவ்வளவாக அடிபடாது. ஏனென்றால், பொருளாதாரம் அடிபடும்போது ரீடெய்ல் வாடிக்கையாளர்கள் அவர்களுடைய தேவைகளைக் குறைத்து கொள்வார்களே தவிர, அடியோடு நிறுத்திவிட மாட்டார்கள். ஆனால், பொருளாதாரம் பாதிப்படையும் நிறுவன வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள நிறுவனங்கள் அதிகமாக அடிபட வாய்ப்புள்ளது. ஏனென்றால், நிறுவனங்கள் தங்களுடைய செலவினங்களை குறைக்க பொருட்களையோ அல்லது சேவைகளையோ வாங்கு வதை அடியோடு நிறுத்தக்கூட செய்வார்கள். ஆனால், பொருளாதாரம் ஏறும்போது இதுவே தலைகீழாகவும் மாற வாய்ப்புள்ளது.
தொழில் செய்யும் பகுதிகள்/நாடுகள்:
இன்றைய பொருளாதாரம் பன்னாட்டுமயமாக்கப்பட்டு விட்டது. நமது நாட்டு ஐ.டி நிறுவனங்கள் உலகெங்கிலும் தொழில் செய்கின்றன. சொல்லப் போனால் உள்நாட்டு விற்பனையை விட அவர்களின் வெளிநாட்டு விற்பனை பன்மடங்கு அதிகம். அப்படி இருக்கும்போது ஒரு வெளிநாட்டிலிருந்து வரும் வருமானம் அந்நிறுவனத்திற்கு அதிகம் என்றால், அந்நாட்டின் பொருளாதார நிலைமை இந்நிறு வனத்தையும் பாதிக்கும்.
உதாரணத்திற்கு, இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு வெளிநாட்டிலிருந்து வரும் வருமானம் 97.8% (டிசம்பர் 31, 2010). உள்நாட்டிலிருந்து வரும் வருமானம் வெறும் 2.2%-தான். ஆக, இந்தியப் பொருளாதாரத்தைவிட வெளிநாடுகளின் பொருளாதாரம் தான் அதிகமாக இன்ஃபோசிஸைப் பாதிக்கும். அதிலும் வடஅமெரிக்க பொருளாதாரம்தான் இன்னும் அதிகமாக பாதிக்கும். ஏனென்றால் அந்தப் பகுதியில் இருந்துதான் 65% வருமானம் வருகிறது.  அமெரிக்க சட்டதிட்டங்களில் மாற்றங்கள், வரிகளில் மாற்றங்கள் அல்லது அரசியல் மாற்றங்கள் இந்நிறுவனத்தைப் பாதிக்கலாம்.
அதே சமயத்தில் ஐ.டி.சி. போன்ற நிறுவனத்தின் பெரும்பகுதியான வருமானம் நம் மண்ணில் இருந்துதான் வருகிறது. சமீபத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியின்மை நிகழ்ந்து வருகிறது. ஆகவே, அங்கு அதிகமாக தொழில் புரிந்துவரும் இந்தியக் கம்பெனிகளுக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. புஞ்ச்லாய்ட் என்ற நிறுவனம் லிபியாவில் பெரிய ஆர்டரைப் பெற்றிருந்தது. மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் அதிக தொழில் செய்து வந்தது. ஏற்கெனவே அந்நிறுவனத்திற்கு பல பிரச்னைகள். இப்போது இதுவும் சேர்ந்து கொள்ள, சமீபகாலத்தில் அதன் பங்கு சரிபாதியாகக் குறைந்துள்ளது. ஆகவே முதலீட்டாளராகிய நீங்கள் அந்நிறுவனம் எங்கெங்கு தொழில் செய்கிறது, அதனால் ஏற்படும் பலன் மற்றும் பலவீனத்தை அறிய வேண்டியது முக்கியம்.
சுற்றுப்புறச்சூழல்:
இன்று ஒவ்வொரு நிறுவனமும் சுற்றுப்புறச்சூழலை மதித்து நடக்க வேண்டியுள்ளது. இல்லையெனில் அரசாங்கம் மற்றும் பொதுமக்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டியுள்ளது. இதனால் தொழில்கள் பெருமளவு பாதிப்படையலாம். உதாரணத்திற்கு, தோல் தொழிற்சாலைகள் மற்றும் டெக்ஸ்டைல் சார்ந்த தொழிற்சாலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். கோர்ட் உத்தர வினால் திருப்பூர் பாதிக்கப்பட்டது நாம் அனைவரும் அறிந்த விஷயம். அதேபோல் பல ஆண்டுகளுக்கு முன் தோல் பதனிடும் தொழிற் சாலைகள் தமிழ்நாட்டில் பெரும்
பாதிப்பிற்கு உள்ளாகின. சமீபத்தில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரிஸை மூடச் சொன்னது நாம் அனைவரும் அறிந்ததே. ஆகவே நீங்கள் நுழையப் போகும் பங்கு சுற்றுப்புறச்சூழலிற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதா என்பதையும் பார்ப்பது அவசியம்.
(படி ஏறுவோம்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவகிரக துதி

சூரியன் சீலமாய் வாழ சீரருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி! சூரியா போற்றி! சுந்தரா போற்றி! வீரியா போற்றி! வினைகள் களைவாய் சந்திரன் எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி! திருவருள் தருவாய் சந்திரா போற்றி! சற்குணா போற்றி! சங்கடந்தீர்ப்பாய் சதுராய் போற்றி! அங்காரகன் (செவ்வாய்) சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ மங்கள செவ்வாய் மலரடி போற்றி! அங்காரகனே அவதிகள் நீக்கு! புதன் இதமுற வாழ இன்னல்கள் நீக்கு புத பகவானே பொன்னடி போற்றி! பதந்தந்தாள்வாய் பண்ணொளியானே உதவியே யருளும் உத்தமா போற்றி! குரு குணமிகு வியாழக் குருபகவானே மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய் ; பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா கிரகதோஷமின்றி கடாஷித்தருள்வாய் சுக்கிரன் சுக்கிரமூர்த்தி சுப சுக மீவாய் வக்ரமின்றி வரமிகத் தருவாய் வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே சனி சங்கடந் தீர்ககுஞ் சனி பகவானே! மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றி சனீஸ்வரத் தேவே இச்சகம் வாழ இன்னருள் தா தா ராகு அரவெனும் ராகு அய்யனே போற...

சோப் ஆயிலில் சூப்பர் லாபம்!

வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் இயந்திரங்கள் எதுவும் இல்லாமல் சோப் ஆயில் தயாரிக்கலாம். இதன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை காளம்பாளையத்தில் ஹக் புராடக்ட்ஸ் சோப் ஆயில் தயாரிக்கும் ரமணன். அவர் கூறியதாவது: கோவையில் தேசிய பஞ்சாலை கழக தரக்கட்டுப்பாட்டு பிரிவில் உதவி ஸ்பின்னிங் மாஸ்டராக 28 ஆண்டுகள் பணிபுரிந்தேன். 7 ஆண்டுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றேன். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற என் போன்றவர்களை, கோவையில் உள்ள சிறு தொழில் சேவை மையத்தினர் சுய தொழில் செய்வதற்கான பயிற்சிக்கு அழைத்தனர். அங்கு ஒரு மாதம் நறுமண சொட்டு நீலம், பினாயில், சோப் பவுடர் போன்றவை தயாரிக்க கற்றுக் கொடுத்தனர். ரூ.5 ஆயிரம் முதலீட்டில் சோப் ஆயில் தயாரிப்பதற்கான தொழிலை துவக்கினேன். நானே முதலாளியாகவும், தொழிலாளியாகவும் இருந்து மாதம் 200 லிட்டர் சோப் ஆயில் தயாரித்து விற்கிறேன். சோப் ஆயில் தயாரித்து விற்பவர்கள் பலர் இருந்தாலும், தரமாக தயாரித்து விற்பதால் ஆர்டர் தொய்வு இல்லாமல் கிடைக்கிறது. தினசரி 5 மணி நேரம் உழைத்தால் 10 லிட்டர் சோப் ஆயில் தயாரிக்க முடியும். 20...

Various Herbs & Spices English & Hindi Names

English/ ஆ ங்கிலம் Tamil/ தமிழ் Hindi/ हिन्दी/ ஹிந்தி Rice Arisi( அரிசி) Chaval Black gram Kadalai Parruppu ( கடலை பருப்பு) Channa Dhal Black Gram Ulluththam Paruppu ( உளுதம் பருப்பு) Urad Dhal Green gram dhal Payaththam Parruppu( பயத்தம் பருப்பு) Moog Dhal Green gram Whole Paasi Parruppu( பாசி பருப்பு) Moog Sabut Yellow split peas Thuvaram Parruppu( துவரம் பருப்பு) Toor Dhal Green gram  Split Pachchai payiru( பச்சைப்பயறு) Moong Chilka Garbanzo beans Kondai Kadalai( கொண்டை கடலை) Kabuli Channa Peanuts Veerkadalai( வேற்கடலை) Moong falee All Purpose Flour Maida Maavu( மைதா மாவு) Maida Gram flour Kadalai Maavu( கடலை மாவு) Besan Wheat flour Godhumai maavu( கோதுமை மாவு) ...