முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முதற்படி முதலில் படி! - 2


முதற்படி முதலில் படி! - 2

நிறைய பேர்களுக்கு ஷேர் மார்க்கெட்டில் இறங்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும்கூட, அது புரிந்துகொள்வதற்கு கஷ்டமான விஷயம் என்று நினைத்து ஒதுங்கிவிடுகிறார்கள். இது தவறான எண்ணம்! உண்மையில் ஒரு பள்ளி மாணவன்கூட பங்குச் சந்தை பற்றி எந்தக் குழப்பமும் இல்லாமல் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்!

எல்லா ஊர்களிலும் இருக்கும் காய்கறி மார்க்கெட் போன்றது தான் பங்குச் சந்தையும். காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகளை விற்பனை செய்வார்கள். பங்குச் சந்தையில் ஒரு கம்பெனியின் பங்குகளை விற்பனை செய்வார்கள். காய்கறி மார்க்கெட்டில், 'அரைக் கிலோ கத்திரிக்காய் போடுங்கஎன்று  கேட்கிற மாதிரி, '100 அசோக் லேலண்ட் பங்கு கொடுங்க; 100 இந்தியன் பேங்க் கொடுங்கஎன்று வாங்கலாம். பங்குச் சந்தையில் இன்னொரு வசதி, வாங்கிய பங்குகள் வேண்டாம் என்று நினைத்தால் உடனே விற்கவும் செய்யலாம்! முன்பெல்லாம் காய்கறி வாங்க வேண்டும் என்றால் கடைக்குத்தான் போயாக வேண்டும். ஆனால் இப்போது பெரிய நகரங்களில் ஒரு போன் செய்தாலே நாம் கேட்கிற காய்கறியை நம் வீட்டுக்கே கொண்டு வந்து கொடுத்துவிடுகிறார்கள். அது மாதிரிதான் முன்பெல்லாம், பங்குச் சந்தைக்கு நேரடியாகப் போய்த்தான் பங்குகளை வாங்க வேண்டும் அல்லது விற்க வேண்டும். ஆனால் இப்போது நாம் எங்கும் அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தபடியே பங்குச் சந்தை புரோக்கருக்கு ஒரு போன் செய்தால் போதும்; நமக்குத் தேவையான பங்கை வாங்கித் தந்துவிடுவார், அல்லது விற்றுக் கொடுத்துவிடுவார்.

பங்குச் சந்தை பற்றி மேலும் அறிந்து கொள் வதற்கு முன்பாக, ஷேர் அல்லது பங்கு என்றால் என்ன என்பதை முதலில் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் ஜூவல்லரி கடை நடத்தும் ஒரு பிஸினஸ்மேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு நான்கைந்து ஊர்களில் நகைக்கடை இருக்கிறது. கடந்த பல வருடங்களாக அவை லாபகரமாகவும் நடந்து வருகிறது... தரம், வாடிக்கையாளர் சேவை, குறைந்த விலை போன்றவற்றால் உங்கள் தொழிலுக்கு  இன்னும் நல்ல வாய்ப்பு உள்ளது என்று தெரிகிறது. இந்நிலையில் பிஸினஸை டெவலப் செய்தால் இன்னும் பெரிய லெவலுக்குப் போய்விடலாம் என்று நினைக்கிறீர்கள். ஆனால் தொழிலை விரிவு படுத்த நிறைய பணம் தேவைப்படுகிறது. கையில் அவ்வளவு பணம் இல்லை. கடன் வாங்கி இறங்கவும் விருப்பமில்லை... இதுபோன்ற நிலையில் என்ன செய்வது? ஒன்று செய்யலாம்... யாராவது ஒருவரையோ அல்லது சிலரையோ உங்கள் தொழிலில் பார்ட்னராகச் சேர்த்துக்கொண்டு இறங்கலாம்.
ஆனால், ஒருவரையோ அல்லது ஒரு சிலரையோ பார்ட்னர்களாகக் வைத்துக் கொள்வதைவிட பல பேர்களை பார்ட்னராகச் சேர்த்துக்கொள்வது தான் புத்திசாலித்தனம். எப்படி என்கிறீர்களா? ஒருவேளை யாராவது ஒருவரிடம் அதிகப் பங்குகள் இருந்தது என்றால் பின்னாளில் அவர்கள் உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தலாம். ஒருவேளை நீங்கள் அந்தத் தொழிலை விட்டே வெளியேற வேண்டிய நிலைகூட ஏற்படலாம். அதுவே ஆளுக்குக் கொஞ்சமாக நிறைய பேர்கள் பங்குகளை வைத்திருந்தால் அவர்களால் உங்களுடைய தொழிலுக்கு பெரிய அளவில் சிக்கல்கள் ஏற்படாது. இது போல் இன்னும் பல சௌகரியங்கள் இதில் உள்ளன. (அதற்காக அசௌகரியங்களே இல்லாமல் போய்விடுமா என்ன! அதை பிற்பாடு பார்ப்போம்!)
சரி, நீங்கள் தொழிலை விரிவுபடுத்த பங்கு முதல்* (சிணீஜீவீtணீறீ) திரட்டுவது என்று முடிவு செய்துவிட்டீர்கள். தற்போது உங்கள் தொழிலில் உங்களது பங்கு முதல் 8 கோடி (10 முகமதிப்பு* கொண்ட 80 லட்சம் பங்குகளாக இருக்கிறது) என்று வைத்துக் கொள்வோம். மேலும் சில நகரங்களில் கடை ஆரம்பிக்க இன்னும் நாற்பது கோடி தேவைப்படுகிறது. நீங்கள் உங்களது 80 லட்சம் பங்குகளை அப்படியே வைத்துக் கொண்டு, உங்கள் நிறுவனத்தில் புதிதாக 10 முகமதிப்புள்ள, 20 லட்சம் பங்குகளை சந்தையில் சென்று விற்கிறீர்கள். நீங்கள் இவ்வளவு நாள் தொழிலில் வெற்றிகரமாக இருந்ததால், பத்து ரூபாய் பங்கை 200 க்கு விற்கிறீர்கள். அதாவது, ஒரு பங்குக்கு 190- பிரீமியமாக வைத்து விற்கிறீர்கள்!

'இதென்ன கதை? பத்து ரூபாய் பங்கை இருநூறு ரூபாய் கொடுத்து யாராவது வாங்குவார்களா?’ என்று நீங்கள் கேட்கலாம். சாதாரண ஓட்டலில் இரண்டு இட்லி 8. இரண்டு தெரு தாண்டிப் போனால் அந்த பெரிய ஓட்டலில் இரண்டு இட்லி 14. 'அதே இட்லிதானே! எதற்கு 6 அதிகம் கொடுக்க வேண்டும்என்று நாம் கேட்பதில்லையே! காரணம், அந்த 6 தான் அந்த ஓட்டலுக்கு நாம் கொடுக்கும் பிரீமியம்! அந்த ஓட்டலில் நாம் இட்லி சாப்பிட வேண்டும் என்றால் அந்த விலையைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும். இந்த பிரீமியத்தை எவ்வாறு கணக்கிடுகிறார்கள் என்பதை வரும் வாரங்களில் விளக்கமாகப் பார்ப்போம். இப்போதைக்கு, லாபகரமாக நடந்து கொண்டிருக்கும் ஒரு கடையை நீங்கள் விற்றால் குட்வில் அல்லது நிந்தம் என்பதை எதிர்பார்ப்பீர்கள் அல்லவா? அது போலத்தான் இந்த 190 பிரீமியமும் என்பதைத் தெரிந்து கொண்டால் போதும்.

ஆக இப்போது உங்கள் நிறுவனத்தில் மொத்தம் ஒரு கோடி (ஏற்கனவே உங்களிடம் இருந்த பங்குகள் 80 லட்சம்+புதிதாக நீங்கள் விற்ற 20 லட்சம் பங்குகள்) பங்குகள் உள்ளன. பொதுமக்களிடம் இப்பங்குகளை விற்றதால், நீங்கள் உங்களது நிறுவனப் பங்குகளை பங்குச் சந்தையில் (என்.எஸ்.இ/பி.எஸ்.இ* போன்ற சந்தையில்) சென்று லிஸ்ட் செய்ய வேண்டும். இம்முறையினால் யார் வேண்டுமானாலும் உங்களது நிறுவனப் பங்குகளை வாங்கலாம் அல்லது விற்கலாம். இதுதான்



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவகிரக துதி

சூரியன் சீலமாய் வாழ சீரருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி! சூரியா போற்றி! சுந்தரா போற்றி! வீரியா போற்றி! வினைகள் களைவாய் சந்திரன் எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி! திருவருள் தருவாய் சந்திரா போற்றி! சற்குணா போற்றி! சங்கடந்தீர்ப்பாய் சதுராய் போற்றி! அங்காரகன் (செவ்வாய்) சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ மங்கள செவ்வாய் மலரடி போற்றி! அங்காரகனே அவதிகள் நீக்கு! புதன் இதமுற வாழ இன்னல்கள் நீக்கு புத பகவானே பொன்னடி போற்றி! பதந்தந்தாள்வாய் பண்ணொளியானே உதவியே யருளும் உத்தமா போற்றி! குரு குணமிகு வியாழக் குருபகவானே மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய் ; பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா கிரகதோஷமின்றி கடாஷித்தருள்வாய் சுக்கிரன் சுக்கிரமூர்த்தி சுப சுக மீவாய் வக்ரமின்றி வரமிகத் தருவாய் வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே சனி சங்கடந் தீர்ககுஞ் சனி பகவானே! மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றி சனீஸ்வரத் தேவே இச்சகம் வாழ இன்னருள் தா தா ராகு அரவெனும் ராகு அய்யனே போற...

சோப் ஆயிலில் சூப்பர் லாபம்!

வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் இயந்திரங்கள் எதுவும் இல்லாமல் சோப் ஆயில் தயாரிக்கலாம். இதன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை காளம்பாளையத்தில் ஹக் புராடக்ட்ஸ் சோப் ஆயில் தயாரிக்கும் ரமணன். அவர் கூறியதாவது: கோவையில் தேசிய பஞ்சாலை கழக தரக்கட்டுப்பாட்டு பிரிவில் உதவி ஸ்பின்னிங் மாஸ்டராக 28 ஆண்டுகள் பணிபுரிந்தேன். 7 ஆண்டுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றேன். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற என் போன்றவர்களை, கோவையில் உள்ள சிறு தொழில் சேவை மையத்தினர் சுய தொழில் செய்வதற்கான பயிற்சிக்கு அழைத்தனர். அங்கு ஒரு மாதம் நறுமண சொட்டு நீலம், பினாயில், சோப் பவுடர் போன்றவை தயாரிக்க கற்றுக் கொடுத்தனர். ரூ.5 ஆயிரம் முதலீட்டில் சோப் ஆயில் தயாரிப்பதற்கான தொழிலை துவக்கினேன். நானே முதலாளியாகவும், தொழிலாளியாகவும் இருந்து மாதம் 200 லிட்டர் சோப் ஆயில் தயாரித்து விற்கிறேன். சோப் ஆயில் தயாரித்து விற்பவர்கள் பலர் இருந்தாலும், தரமாக தயாரித்து விற்பதால் ஆர்டர் தொய்வு இல்லாமல் கிடைக்கிறது. தினசரி 5 மணி நேரம் உழைத்தால் 10 லிட்டர் சோப் ஆயில் தயாரிக்க முடியும். 20...

Various Herbs & Spices English & Hindi Names

English/ ஆ ங்கிலம் Tamil/ தமிழ் Hindi/ हिन्दी/ ஹிந்தி Rice Arisi( அரிசி) Chaval Black gram Kadalai Parruppu ( கடலை பருப்பு) Channa Dhal Black Gram Ulluththam Paruppu ( உளுதம் பருப்பு) Urad Dhal Green gram dhal Payaththam Parruppu( பயத்தம் பருப்பு) Moog Dhal Green gram Whole Paasi Parruppu( பாசி பருப்பு) Moog Sabut Yellow split peas Thuvaram Parruppu( துவரம் பருப்பு) Toor Dhal Green gram  Split Pachchai payiru( பச்சைப்பயறு) Moong Chilka Garbanzo beans Kondai Kadalai( கொண்டை கடலை) Kabuli Channa Peanuts Veerkadalai( வேற்கடலை) Moong falee All Purpose Flour Maida Maavu( மைதா மாவு) Maida Gram flour Kadalai Maavu( கடலை மாவு) Besan Wheat flour Godhumai maavu( கோதுமை மாவு) ...