முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முதற்படி முதலில் படி! - 4


முதற்படி முதலில் படி! - 4


டந்த இதழ்களில் பங்கு என்றால் என்ன என்றும், அதை வாங்குவதற்கும் விற்பதற்குமாக இருக்கும் சந்தையான எக்ஸ்சேஞ்சுகள் பற்றியும் விளக்கமாகச் சொல்லி இருந்தேன். இந்த இதழில் பங்குச் சந்தையில் என்னென்ன விஷயங்கள் பரிவர்த்தனை ஆகிறது என்று பார்க்கலாம்.

கம்ப்யூட்டரினால் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் பெரிய அளவில் மாற்றம் கண்டிருப்பது போல பங்குச் சந்தையும் மாறியிருக்கிறது. முன்பு ஒரு பங்கை வாங்கவோ அல்லது விற்கவோ வேண்டுமெனில் பங்குச் சந்தைக்கே போனால்தான் உண்டு. இப்போது அப்படியில்லை; நம் வீட்டில் இருந்தபடியே எவ்வளவு பங்கை வேண்டுமானாலும் வாங்கலாம்; விற்கலாம். எல்லாம் கம்ப்யூட்டரின் கைங்கர்யம்!
கம்ப்யூட்டர் மூலம் பங்கு பரிவர்த்தனை நடப்பதால் ஏதாவது மோசடி நடந்துவிடுமோ என்கிற பயமும் தேவையில்லை. ஒரு பங்கு வாங்கப்படும் போது, அந்தப்பங்கை யார் வாங்குகிறார்கள்? என்ன விலை? எந்த நொடியில் வாங்கப்பட்டது என்கிற அளவுக்கு துல்லியமான தகவல்கள் நமக்குக் கிடைத்து விடும். எனவே, எந்த ஜித்தனாலும் சிறு மோசடியைக் கூட செய்ய முடியாது. அது மட்டுமல்ல, அரை நொடிப் பொழுதில் உங்களுக்குத் தேவையான பங்குகளை வாங்கவும் விற்கவும் முடியும். இன்று கிராமத்தில் உள்ள சாதாரண மனிதனும் பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்ய முடிகிறதென்றால் அதற்கு ஒரே காரணம், கம்ப்யூட்டர்தான்.

பங்குச் சந்தையில் கம்ப்யூட்டர் உள்ளே புகுந்ததால் விளைந்த ஒரே ஒரு பாதிப்பு, பிராந்திய சந்தைகளின் மவுசு கொஞ்சம் குறைந்ததுதான். கல்கத்தா ஸ்டாக்  எக்ஸ்சேஞ்ச், டெல்லி ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் போன்றவை ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்தன. ஆனால் இன்றோ முழுக்க முழுக்க கம்ப்யூட்டர் மூலம் பங்கு பரிவர்த்தனை செய்யும் வசதி இல்லாததால் என்.எஸ்.இ-யுடன் கூட்டணி அமைத்துச் செயல்படுகின்றன.

சரி, பங்குச் சந்தையில் என்னென்ன விற்கப்படுகிறது அல்லது வாங்கப்படுகிறது?
நம்மில் பலரும் பங்குச் சந்தை என்றாலே அங்கே பங்கு அல்லது ஷேர் மட்டுமே விற்கப்படுவதாக (அல்லது வாங்கப்படுவதாக) நினைக்கிறார்கள். இது தவறு. பங்குச் சந்தையில் நிறுவனங்களின் பங்குகள் வர்த்தகமாகின்றன. அது தவிர, வேறு சிலவும் வர்த்தகமாகின்றன. அவை:

1.        கடன் பத்திரங்கள் (அரசாங்கம் மற்றும் தனியார்)
2.       மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்
3.       இ.டி.எஃப்-கள் (தங்கம் உட்பட)
4.       எஃப் அண்ட் ஓ.
5.        கரன்சி

நம் நாட்டில் பல பிராந்திய எக்ஸ்சேஞ்சுகள் இருந்தாலும் தேசம் முழுக்கப் பரவியிருக்கிற எக்ஸ்சேஞ்சுகள் என்.எஸ்.இ.யும் பி.எஸ்.இ.யும் மட்டுமே. பெரிய நிறுவனங்களின் பங்குகள் இந்த இரண்டு பெரிய சந்தைகளிலும் வர்த்தகமாகின்றன. சில நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்கள் பி.எஸ்.இ-யில் மட்டுமே லிஸ்ட் செய்யப் படுகிறது. அதிக நிறுவனங்கள் லிஸ்ட் ஆன எக்ஸ்சேஞ்ச் என்கிற பெருமை பி.எஸ்.இ-க்கும் தினசரி வர்த்தகம் அதிகமாக நடக்கும் எக்ஸ்சேஞ்ச் என்கிற பெருமை என்.எஸ்.இ-க்கும் உண்டு.

ஆனால் உலகத்தின் மிகப் பெரிய பொருளாதாரமாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்தியாவுக்கு இரு எக்ஸ்சேஞ்ச் மட்டும் போதாது. இன்னும் நான்கைந்தாவது வேண்டும். சமீபத்தில் ஃபைனான்ஷியல் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனம் இன்னுமொரு பங்குச்சந்தையை மிகப் பெரிய அளவிலும், அதிவேகமான தொழில்நுட்பத்துடனும் தொடங்க முயற்சி செய்து வருகிறது. அடுத்த ஆண்டில் அதற்கு செபியிடமிருந்து அனுமதி கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எல்லாம் சரி, நம் நாட்டில் பங்குச் சந்தையின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்று கேட்கிறீர்களா? கவலையே வேண்டாம்! அடுத்த பதினைந்து வருடங்களுக்கு வளர்ச்சி மிகவும் அபாரமாக இருக்கும். முதலீட்டாளர்கள் பெரும் அளவு சம்பாதிக்க வாய்ப்புள்ளது. வியாபாரங்களும், அதனால் லாபமும் உயர்வதால் பங்குகளின் மார்க்கெட் மதிப்பு உயரும். உலக அளவில் பெயர் சொல்லக்கூடிய பல பெரிய நிறுவனங்கள் நம் இந்தியாவில் உருவாகும். பல நிறுவனங்கள் தங்கள் தொழில்களை விரிவுபடுத்த, சந்தையில் தங்களது பங்குகளை விற்கும். வெளிப்படைத்தன்மை இன்னும் அதிகரிக்கும். முதலீட்டாளர்களின் பாதுகாப்பு இன்னும் அதிகரிக்கும். சுருக்கமாகச் சொன்னால் இனி வரும் ஆண்டுகளில் பங்குச் சந்தையின் வளர்ச்சியும் அதனால் முதலீட்டாளர்களின் வளர்ச்சியும் ஒளிமயமாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இன்னொரு சந்தேகம்கூட உங்களுக்கு வரலாம். பங்குச் சந்தை முதலீடு எந்த அளவு பாதுகாப்பானது? முக்கியமான இந்த கேள்விக்கும் பதில் சொல்லிவிடுகிறேன். பங்குச் சந்தை என்பது குதிரைப் பந்தயத்தில் கலந்து கொள்வது போன்ற சூதாட்டமல்ல. அது ஒரு வகையான முதலீடு. நீண்ட காலத்துக்கு உங்கள் பணத்தைப் போட்டு பொறுமையாகக் காத்திருக்க வேண்டிய முதலீடு. ஒரு வீடு வாங்குகிறோம். அதன் மதிப்பு என்ன, என்ன என்று தினமும் நாமும் கேட்பதில்லை. நம் வீட்டில் இருக்கும் தங்கத்தை இன்று விற்றால் எவ்வளவு பணம் கிடைக்கும் என தினமும் கணக்கு போட்டுப் பார்ப்பதில்லை. அது போலத்தான் நாம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் பணமும். தினமும் அதன் மதிப்பை பார்ப்பதால் நமக்கு டென்ஷன்தான் அதிகரிக்குமே ஒழிய, பங்கின் விலை ஏறிவிடாது.

வீடு, நிலத்தில் முதலீடு செய்வது போல நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்தீர்களேயானால், பங்குச் சந்தை முதலீடும் முழுக்க முழுக்க பாதுகாப்பானதே! நீங்கள் வீடு வாங்கும் போது சந்தை நிலவரம் எப்படி இருக்கிறது, நீங்கள் கொடுக்கும் பணத்துக்கு அந்த வீடு தகுதியானதா, இன்னும் குறைவான விலைக்கு வாங்க முடியுமா என பல கோணங்களில் சிந்தித்து வாங்குகிற மாதிரி பங்குகளையும் பல விதங்களில் ஆராய்ந்து வாங்கினால் உங்களுக்கு இழப்பு வர வாய்ப்பேயில்லை.

ஆனாலும் பங்குச் சந்தையில் பலரும் ஏமாறக் காரணம், சரியான வழிகாட்டி இல்லாததுதான். அல்லது போதிய அனுபவம் இல்லாமல் தினசரி வர்த்தகத்தில் ஈடுபட்டதால்தான். இந்த இரண்டையும் நீக்கி விட்டு, முறையான வழிகளைக் கையாண்டு முதலீடு செய்து, பொறுமையாக இருந்தால் நீங்களும் ஒரு வெற்றிகரமான முதலீட்டாளர் ஆவது உறுதி.
(படி ஏறுவோம்),

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவகிரக துதி

சூரியன் சீலமாய் வாழ சீரருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி! சூரியா போற்றி! சுந்தரா போற்றி! வீரியா போற்றி! வினைகள் களைவாய் சந்திரன் எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி! திருவருள் தருவாய் சந்திரா போற்றி! சற்குணா போற்றி! சங்கடந்தீர்ப்பாய் சதுராய் போற்றி! அங்காரகன் (செவ்வாய்) சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ மங்கள செவ்வாய் மலரடி போற்றி! அங்காரகனே அவதிகள் நீக்கு! புதன் இதமுற வாழ இன்னல்கள் நீக்கு புத பகவானே பொன்னடி போற்றி! பதந்தந்தாள்வாய் பண்ணொளியானே உதவியே யருளும் உத்தமா போற்றி! குரு குணமிகு வியாழக் குருபகவானே மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய் ; பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா கிரகதோஷமின்றி கடாஷித்தருள்வாய் சுக்கிரன் சுக்கிரமூர்த்தி சுப சுக மீவாய் வக்ரமின்றி வரமிகத் தருவாய் வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே சனி சங்கடந் தீர்ககுஞ் சனி பகவானே! மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றி சனீஸ்வரத் தேவே இச்சகம் வாழ இன்னருள் தா தா ராகு அரவெனும் ராகு அய்யனே போற...

சோப் ஆயிலில் சூப்பர் லாபம்!

வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் இயந்திரங்கள் எதுவும் இல்லாமல் சோப் ஆயில் தயாரிக்கலாம். இதன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை காளம்பாளையத்தில் ஹக் புராடக்ட்ஸ் சோப் ஆயில் தயாரிக்கும் ரமணன். அவர் கூறியதாவது: கோவையில் தேசிய பஞ்சாலை கழக தரக்கட்டுப்பாட்டு பிரிவில் உதவி ஸ்பின்னிங் மாஸ்டராக 28 ஆண்டுகள் பணிபுரிந்தேன். 7 ஆண்டுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றேன். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற என் போன்றவர்களை, கோவையில் உள்ள சிறு தொழில் சேவை மையத்தினர் சுய தொழில் செய்வதற்கான பயிற்சிக்கு அழைத்தனர். அங்கு ஒரு மாதம் நறுமண சொட்டு நீலம், பினாயில், சோப் பவுடர் போன்றவை தயாரிக்க கற்றுக் கொடுத்தனர். ரூ.5 ஆயிரம் முதலீட்டில் சோப் ஆயில் தயாரிப்பதற்கான தொழிலை துவக்கினேன். நானே முதலாளியாகவும், தொழிலாளியாகவும் இருந்து மாதம் 200 லிட்டர் சோப் ஆயில் தயாரித்து விற்கிறேன். சோப் ஆயில் தயாரித்து விற்பவர்கள் பலர் இருந்தாலும், தரமாக தயாரித்து விற்பதால் ஆர்டர் தொய்வு இல்லாமல் கிடைக்கிறது. தினசரி 5 மணி நேரம் உழைத்தால் 10 லிட்டர் சோப் ஆயில் தயாரிக்க முடியும். 20...

தலையணை உறை.. தூள் கிளப்பும் லாபம்

பெண்கள்  வீட்டு வேலை  போக மற்ற நேரங்களில் சுயமாக வேலை செய்து சம்பாதிக்க ஏற்ற தொழில் தையல். ஜாக்கெட், சுடிதார் போன்ற நுட்பம் நிறைந்த தையல் வேலைகள் மேற்கொள்ள பயிற்சி வேண்டும். ஆனால் தலையணை உறை தைக்க எவ்வித பயிற்சியும் தேவை இல்லை. நுணுக்கமான தையல் தெரியாதவர்கள் தலையணை உறை தயாரித்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் என்கிறார் கோவை வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரிநாயக்கன்பாளையத்தை சேர்ந்த செல்வி. அவர் கூறியதாவது: கணவர் ஆட்டோ டிரைவர். குடும்ப வருமானம் போதவில்லை. அதை சமாளிக்க 4 ஆண்டுகளுக்கு முன்பு தையல் கற்றேன். வீட்டிலேயே பழைய தையல் மெஷின் வாங்கி போட்டு, ஜாக்கெட், சுடிதார் தைத்து வந்தேன். அப்போது எங்கள் பகுதியில் உள்ள பெண்கள் 13 பேர் சேர்ந்து அம்மன் சுய உதவி குழு துவக்கினோம். ரூ.10 ஆயிரம் கடனுதவி கிடைத்தது. அதன்மூலம் ஈரோட்டில் தலையணை உறை துணி வாங்கி வந்து தைத்தேன். அவற்றை கணவர் கடைகளுக்கு எடுத்து சென்று விற்று வந்தார். பின்னர் நானே ஆட்டோவில் ஏற்றி அபார்ட்மென்ட்கள், பள்ளி, கல்லூரி விடுதிகள், வீடுகளில் விற்றேன். நல்ல லாபம் கிடைத்தது. முழு நேர தொழிலாக தற்போது தலையணை உறை தயாரிக்கிறேன். இத...