முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முதற்படி முதலில் படி! - 23


முதற்படி முதலில் படி! - 23

சென்ற வாரம் 'ரேஷியோ அனாலிசிஸ்பற்றி பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இவ்வாரமும் மேலும் சில முக்கியமான ரேஷியோக்களைப் பற்றி பார்ப்போம். எந்த ஒரு தொழிலும் லாபகரமாக நடக்கிறதா என்பது முக்கியம். அவ்வகையில் சில முக்கியமான ரேஷியோக்கள் சிலவற்றைப் பார்ப்போம். ஒன்று, ஆர்.ஓ.இ. (ROE – Return on Equity) என்பதாகும். பங்கு முதலீட்டிற்கு கிடைக்கும் வருமானம்தான் ஆர்.ஓ.இ. எனப்படுகிறது.
ஆர்.ஓ.இ. = நிகர லாபம்/ பங்குதாரர்களின் முதலீடு.
இது சதவிகிதமாக கூறப்படும். இந்த ஆர்.ஓ.இ. பெல் நிறுவனத்திற்கு மார்ச் 2010-ல் முடிந்த நிதி ஆண்டிற்கு எவ்வளவு என்று பார்ப்போம். பங்குதாரர்களின் முதலீடு என்பது ஷேர் கேப்பிட்டல் மற்றும் ரிஸர்வ்ஸ் + சர்ப்ளஸ் ஆகிய இரண்டும் சேர்ந்ததாகும். பெல் நிறுவனத்திற்கு 31-03-2010 அன்று ஷேர் கேப்பிட்டல் 489.52 கோடி ரூபாயாகும். அன்றைய தினத்தில் ரிஸர்வ்ஸ் + சர்ப்ளஸ் 15,427.84 கோடி ரூபாய். ஆக மொத்தம் 15,917.36 கோடி ரூபாய்.  அவ்வருட நிகர லாபம் 4,310.64 கோடி ரூபாய். ஆகவே பெல் நிறுவனத்தின் ஆர்.ஓ.இ. 27.08% (4,310.64/15,917.36) ஆகும். இதையே ஆர்.ஓ.என்.டபிள்யூ (RONW – Return on Net Worth) என்றும் கூறுவார்கள். இந்த ரேஷியோ, பங்குதாரர்களின் முதலீட்டை ஒரு நிர்வாகம் எந்த அளவுக்கு திறமையாகப் பயன்படுத்துகிறது என்பதைக் காட்டும்.
பங்குச் சந்தை முதலீட்டாளர் களால் பரவலாக அலசப்படும் இன்னொரு ரேஷியோ ஆர்.ஓ.ஏ. (ROA – Return on Assets) ஆகும். இது எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.
ஆர்.ஓ.ஏ. = நிகர லாபம்/மொத்த சொத்துக்கள்.

பெல்லின் மார்ச் 2010-ம் ஆண்டிற்கான நிகர லாபம் 4,310 கோடி ரூபாய். அந்த ஆண்டின் மொத்த சொத்துக்களின் மதிப்பு  16,045 கோடி ரூபாய். ஆகவே, அதன் ஆர்.ஓ.ஏ. (4310/16045) 26.9% ஆகும். ஆர்.ஓ.ஏ. அதிகமாக இருப்பது நன்று. வங்கிகள் போன்ற அதிகமாக சொத்துக்கள் தேவைப்படும் துறைகளுக்கு ஆர்.ஓ.ஏ. என்பது 1% - 2% என்ற
ரேஞ்சில் பொதுவாக இருக்கும். இந்த விகிதத்தையும் துறை சார்ந்த நிறுவனங்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதே சிறந்தது. இந்த விகிதத் தில் இருந்து அந்த குறிப்பிட்ட தொழிலுக்கு எவ்வளவு சொத்துக்கள் (பணம்) தேவைப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
'
அஸட் டேன்ஓவர் ரேஷியோஎன்பது ஒவ்வொரு ரூபாய் சொத்துக்கும் எவ்வளவு விற்பனை நடந்துள்ளது என்பதைக் காட்டுவ தாகும். இது நிறுவனத்தின் சொத்துக்களை நிர்வாகம் எந்த அளவுக்கு திறமையாக உபயோகித்துள்ளது என்பதைக் காட்டும்.
அஸட் டேன்ஓவர் = மொத்த விற்பனை/ மொத்த சொத்துக்கள்.
பெல் நிறுவனத்தின் மார்ச் 2010-ம் ஆண்டின் மொத்த விற்பனை 34,396.67 கோடி ரூபாய். அந்த ஆண்டு மொத்த சொத்துக்களின் மதிப்பு 16,045 கோடி ரூபாய். ஆகவே அஸட் டேன்ஓவர் ரேஷியோ 2.14 (34396.67/16045) ஆகும். பொதுவாக குறைந்த லாப மார்ஜின் உள்ள நிறுவனங்களுக்கு அதிக அஸட் டேன்ஓவர் இருக்கும். அதேபோல் அதிவேகமாக வளரும் நிறுவனங்கள் லாபத்துடன் வளர்கின்றனவா என்பதையும் இந்த ரேஷியோ மூலம் தெரிந்து கொள்ளலாம்.
'
இன்ட்ரஸ்ட் கவரேஜ் ரேஷியோ’ (Interest Coverage Ratio) இன்னுமொரு முக்கியமான விகிதமாகும். இந்த ரேஷியோ, கடன் வாங்கியிருக்கும் பல நிறுவனங்களுக்கும் தனி நபர்களுக்கும் மிக முக்கியமான ஒன்று. அதேபோல் தனி நபர்களுக்கும் மற்றும் நிறுவனங்களுக்கும், கடன் கொடுப்பவர்களுக்கும் (டெபாசிட் கொடுப்பவர்கள் என்று படிக்கவும்) இது ஒரு முக்கியமான விகிதம். இவ்விகிதம் கடன் வாங்கும் நிறுவனம் எந்த அளவு தனது கடனை சர்வீஸ் செய்ய முடியும் என்பதைக் காண்பிக்கும்.
இன்ட்ரஸ்ட் கவரேஜ் ரேஷியோ = வட்டி மற்றும் வரிக்கு முந்தைய லாபம்/வட்டிச் செலவு.
பெல் நிறுவனத்திற்கு மார்ச் 2010-ல் முடிந்த நிதி ஆண்டிற்கு வட்டி மற்றும் வரிக்கு முந்தைய லாபம் 6,590 கோடி ரூபாயாகும். அவ்வருட வட்டிச் செலவு 33.5 கோடி ரூபாய். ஆகவே, இன்ட்ரஸ்ட் கவரேஜ் கிட்டத்தட்ட 199.6 (6727/33) ஆகும்.
இந்த விகிதம் அதிகமாக இருப்பது பொதுவாக நல்லது. பெல் போன்ற இன்ட்ரஸ்ட் கவரேஜ் உள்ள நிறுவனத்திற்கு வங்கிகளும் தனிநபர்களும் கடன் கொடுப்பதற்கு வரிசையில் நிற்பர். அதோடு மட்டுமல்ல குறைந்த வட்டி விகிதத்திலும் கடன் கிடைக்கும்.
டிவிடெண்ட் பே அவுட் ரேஷியோ (Dividend Payout Ratio) என்பது ஒவ்வொரு வருடமும் தான் ஈட்டும் மொத்த லாபத்தில் இருந்து எந்த அளவு பங்குதாரர்களுக்கு டிவிடெண்டாக நிறுவனம் கொடுக்கிறது என்பதை எடுத்துக் காட்டும்.
டிவிடெண்ட் பே அவுட் ரேஷியோ = மொத்த டிவிடெண்ட்/நிகர லாபம்.
பெல் நிறுவனம் மார்ச் 2010-ம் ஆண்டு பங்குதாரர்களுக்கு வழங்கிய மொத்த டிவிடெண்ட் (டிவிடெண்ட் டேக்ஸ் உட்பட) 1,350 கோடி ரூபாய். அவ்வருட நிகர லாபம் 4,310 கோடி ரூபாய். ஆகவே, டிவிடெண்ட் பே அவுட் ரேஷியோ 31.3% (1350/4310) ஆகும். மீதி உள்ள லாபத்தை தனது தொழில் வளர்ச்சிக்காக பெல் நிறுவனம் பயன்படுத்திக் கொள்ளும். இந்தியா போன்ற வளரும் பொருளாதாரங்களில் உள்ள நிறுவனங்களின் டிவிடெண்ட்  பே அவுட் ரேஷியோ சற்று குறைவாகவே இருக்கும். அமெரிக்கா போன்ற வளர்ந்த பொருளாதாரங்களில் இந்த ரேஷியோ பொதுவாக அதிகமாக இருக்கும். இந்தியாவிலும் அதிக பே அவுட் கொடுக்கக்கூடிய நிறுவனங்களும் உள்ளன. பங்கு முதலீட்டில் சற்று ரிஸ்க் குறைவாக எடுக்க நினைப்பவர்கள் அதிக டிவிடெண்ட் பே அவுட் கொடுக்கக்கூடிய நிறுவனங்களாகப் பார்த்து முதலீடு செய்யலாம்.
இதுவரை நாம் முக்கியமான ரேஷியோக்கள் பற்றிப் பார்த்தோம். இதுபோல் பல ரேஷியோக்கள் உள்ளன. இது ஒரு ஆரம்பமே; முடிவல்ல! நீங்கள் வாங்கப் போகும் நிறுவனங்களின் விகிதாச்சாரங் களை அலசி ஆராய்வதன் மூலம் ஒரு தெளிவான முடிவை எடுக்கலாம்.
(படி ஏறுவோம்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவகிரக துதி

சூரியன் சீலமாய் வாழ சீரருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி! சூரியா போற்றி! சுந்தரா போற்றி! வீரியா போற்றி! வினைகள் களைவாய் சந்திரன் எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி! திருவருள் தருவாய் சந்திரா போற்றி! சற்குணா போற்றி! சங்கடந்தீர்ப்பாய் சதுராய் போற்றி! அங்காரகன் (செவ்வாய்) சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ மங்கள செவ்வாய் மலரடி போற்றி! அங்காரகனே அவதிகள் நீக்கு! புதன் இதமுற வாழ இன்னல்கள் நீக்கு புத பகவானே பொன்னடி போற்றி! பதந்தந்தாள்வாய் பண்ணொளியானே உதவியே யருளும் உத்தமா போற்றி! குரு குணமிகு வியாழக் குருபகவானே மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய் ; பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா கிரகதோஷமின்றி கடாஷித்தருள்வாய் சுக்கிரன் சுக்கிரமூர்த்தி சுப சுக மீவாய் வக்ரமின்றி வரமிகத் தருவாய் வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே சனி சங்கடந் தீர்ககுஞ் சனி பகவானே! மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றி சனீஸ்வரத் தேவே இச்சகம் வாழ இன்னருள் தா தா ராகு அரவெனும் ராகு அய்யனே போற...

சோப் ஆயிலில் சூப்பர் லாபம்!

வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் இயந்திரங்கள் எதுவும் இல்லாமல் சோப் ஆயில் தயாரிக்கலாம். இதன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை காளம்பாளையத்தில் ஹக் புராடக்ட்ஸ் சோப் ஆயில் தயாரிக்கும் ரமணன். அவர் கூறியதாவது: கோவையில் தேசிய பஞ்சாலை கழக தரக்கட்டுப்பாட்டு பிரிவில் உதவி ஸ்பின்னிங் மாஸ்டராக 28 ஆண்டுகள் பணிபுரிந்தேன். 7 ஆண்டுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றேன். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற என் போன்றவர்களை, கோவையில் உள்ள சிறு தொழில் சேவை மையத்தினர் சுய தொழில் செய்வதற்கான பயிற்சிக்கு அழைத்தனர். அங்கு ஒரு மாதம் நறுமண சொட்டு நீலம், பினாயில், சோப் பவுடர் போன்றவை தயாரிக்க கற்றுக் கொடுத்தனர். ரூ.5 ஆயிரம் முதலீட்டில் சோப் ஆயில் தயாரிப்பதற்கான தொழிலை துவக்கினேன். நானே முதலாளியாகவும், தொழிலாளியாகவும் இருந்து மாதம் 200 லிட்டர் சோப் ஆயில் தயாரித்து விற்கிறேன். சோப் ஆயில் தயாரித்து விற்பவர்கள் பலர் இருந்தாலும், தரமாக தயாரித்து விற்பதால் ஆர்டர் தொய்வு இல்லாமல் கிடைக்கிறது. தினசரி 5 மணி நேரம் உழைத்தால் 10 லிட்டர் சோப் ஆயில் தயாரிக்க முடியும். 20...

Various Herbs & Spices English & Hindi Names

English/ ஆ ங்கிலம் Tamil/ தமிழ் Hindi/ हिन्दी/ ஹிந்தி Rice Arisi( அரிசி) Chaval Black gram Kadalai Parruppu ( கடலை பருப்பு) Channa Dhal Black Gram Ulluththam Paruppu ( உளுதம் பருப்பு) Urad Dhal Green gram dhal Payaththam Parruppu( பயத்தம் பருப்பு) Moog Dhal Green gram Whole Paasi Parruppu( பாசி பருப்பு) Moog Sabut Yellow split peas Thuvaram Parruppu( துவரம் பருப்பு) Toor Dhal Green gram  Split Pachchai payiru( பச்சைப்பயறு) Moong Chilka Garbanzo beans Kondai Kadalai( கொண்டை கடலை) Kabuli Channa Peanuts Veerkadalai( வேற்கடலை) Moong falee All Purpose Flour Maida Maavu( மைதா மாவு) Maida Gram flour Kadalai Maavu( கடலை மாவு) Besan Wheat flour Godhumai maavu( கோதுமை மாவு) ...