பங்குச்சந்தை ஆத்திச்சூடி..
முதற்படி முதலில் படி!- 29
ஷேர் மார்க்கெட்டில் நுழைய விரும்பும்
புதியவர்களுக்கான வழிகாட்டித் தொடர்!

கடந்த வாரம் 'ஃப்ரீ கேஷ் ஃப்ளோ' கணக்கிடுவதற்கான ஃபார்முலாவைக் கண்டோம்... அடுத்த ஐந்து ஆண்டிற்கான இன்கம் ஸ்டேட்மென்டை கணிப்பது எப்படி என்பதையும் கடந்த வாரம் பார்த்தோம். அதிலிருந்து ஆபரேட்டிங் பிராஃபிட் மற்றும் வருமான வரிச் செலவு எவ்வளவு என்று தெரியும். ஆக, நமக்குத் தெரிய வேண்டிய வேறு இரு அயிட்டங்கள், நிகர முதலீட்டுச் செலவு மற்றும் ஒர்க்கிங் கேப்பிட்டலில் உள்ள மாற்றம் ஆகியவை மட்டுமே. முதலில் 'நெட் கேப்பிட்டல் எக்ஸ்பென்ஸ்’ எவ்வாறு கண்டுபிடிப்பது என்று பார்ப்போம்...
தமிழ்நாடு கூரியர் கம்பெனியின்
கேப்பிட்டல் எக்ஸ்பென்ஸஸ்(முதலீட்டுச் செலவுகள்) அடுத்த ஐந்து ஆண்டில் எவ்வளவு இருக்கும்
என்று நாம் கணிக்க வேண்டும். இதற்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் கேப்பிட்டல்
எக்ஸ்பென்ஸஸ் எவ்வளவு இருந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாடு
கூரியரின் கடந்த ஐந்து ஆண்டுகால முதலீட்டுச் செலவு, அட்டவணை1-ல் கொடுக்கப் பட்டுள்ளது.
இந்த செலவு, நிறுவனங்களின் கேஷ்
ஃப்ளோ ஸ்டேட்மென்டில் கிடைக்கும்.
மேலே உள்ள அட்ட வணையில் முதலீட்டுச் செலவிற்கும் விற்பனைக்கும் உள்ள விகிதத்தைக் கண்டுபிடித் துள்ளோம். இதன்படி சராசரியாக கடந்த ஐந்து ஆண்டுகளில் விற்பனையில் 4%-ஐ முதலீட்டுச் செலவாக நிறுவனம் செலவழித்துள்ளது. ஆகவே, இனிவரும் காலங் களில் குறைந்தது அந்த அளவாவது நிறுவனம் செலவழிக்க வேண்டும். விற்பனையில் 4% முதலீட்டுச் செலவு என்று எடுத்துக் கொண்டால், இனிவரும் ஆண்டுகளில் தமிழ்நாடு கூரியரின் முதலீட்டுச் செலவு அட்டவணை-2-ல் கூறப்பட்ட வாறு இருக்கும்.
மேலே உள்ள அட்ட வணையில் முதலீட்டுச் செலவிற்கும் விற்பனைக்கும் உள்ள விகிதத்தைக் கண்டுபிடித் துள்ளோம். இதன்படி சராசரியாக கடந்த ஐந்து ஆண்டுகளில் விற்பனையில் 4%-ஐ முதலீட்டுச் செலவாக நிறுவனம் செலவழித்துள்ளது. ஆகவே, இனிவரும் காலங் களில் குறைந்தது அந்த அளவாவது நிறுவனம் செலவழிக்க வேண்டும். விற்பனையில் 4% முதலீட்டுச் செலவு என்று எடுத்துக் கொண்டால், இனிவரும் ஆண்டுகளில் தமிழ்நாடு கூரியரின் முதலீட்டுச் செலவு அட்டவணை-2-ல் கூறப்பட்ட வாறு இருக்கும்.

|
முதலீட்டுச் செலவுகளை கண்டுபிடித்து விட்டோம்.
நிகர முதலீடு கண்டுபிடிப்பது எப்படி? நாம் இன்கம் ஸ்டேட்மென்டில் தேய்மானச்
செலவைப் பார்த்தோம் அல்லவா? அது வெறும் புத்தகச் செலவுதானே தவிர, பணச் செலவு அல்ல. ஆகவே, முதலீட்டுச் செலவில் இருந்து
தேய்மானச் செலவை கழித்தால் கிடைப்பதே நிகர முதலீடு.
நிகர முதலீடு = முதலீட்டுச் செலவு - தேய்மானச் செலவு
(Net Investments = Capital Expenditure – Depreciation & Amortization)
நிகர முதலீடு = முதலீட்டுச் செலவு - தேய்மானச் செலவு
(Net Investments = Capital Expenditure – Depreciation & Amortization)

ஆக, நிகர முதலீடு அடுத்த ஐந்து ஆண்டுகளில் எவ்வளவு இருக்கும் என்பதைக் கண்டுபிடித்து
விட்டோம் (அட்டவணை-3). இதில் காணும் தேய்மானச் செலவு நாம் சென்ற இதழில் கணித்த இன்கம்
ஸ்டேட்மென்டில் இருந்து எடுக்கப் பட்டுள்ளது. அடுத்ததாக, ஒர்க்கிங் கேப்பிட்டலில்
உள்ள மாற்றத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது என்று பார்ப்போம்.

ஒர்க்கிங் கேப்பிட்டலில் உள்ள மாற்றத்தைக்
கண்டுபிடிப்பதற்கு, ஒர்க்கிங் கேப்பிட்டலை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். ஒர்க்கிங் கேப்பிட்டல் என்றால் என்ன? எந்த ஒரு தொழிலிலும் அசையும்
சொத்துக்கள் மற்றும் அசையாச் சொத்துக்கள் என இரு வகை
இருக்கும். அசையாச் சொத்துக்களை எளிதில் பணமாக்க முடியாது. அதேசமயத்தில் அசையும்
சொத்துக்களான பேங்க் டெபாசிட், இன்வென்டரி (குடோனில் உள்ள பொருட்கள்), வரவேண்டிய சிறு கடன்கள், வேலை நடந்து கொண்டிருக்கும்
பொருட்கள் போன்றவற்றை எளிதில் குறுகிய காலத்தில் பணமாக்கக் முடியும்.


செயல்பாட்டு மூலதனம் = நடப்பு கால சொத்துக்கள் - நடப்பு கால கடன்கள்.
(Working Capital = Current Assets – Current Liabilities)
தொழில் வளரும்போது, ஒர்க்கிங் கேப்பிட்டலின் தேவையும் அதிகமாகும். தமிழ்நாடு கூரியரின் கடந்தகால ஒர்க்கிங் கேப்பிட்டல் கணக்கை அட்டவணை-4-ல் கொடுத்துள்ளோம். குறுகிய கால சொத்துக்கள் மற்றும் கடன்கள் தமிழ்நாடு கூரியரின் பேலன்ஸ்ஷீட்டில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள அட்டவணையில் நாம் ஒர்க்கிங் கேப்பிட்டலை கண்டுபிடித்துள்ளோம். பிறகு ஒர்க்கிங் கேப்பிட்டலுக்கும் விற்பனைக்கும் உள்ள விகிதத்தைக் கண்டுபிடித்துள்ளோம். அதன்படி கடந்த ஐந்து ஆண்டுகளில் சராசரியாக விற்பனையில் 3.1% ஒர்க்கிங் கேப்பிட்டலாக தேவைப்பட்டுள்ளது. அதே அளவு இனிவரும் காலங்களிலும் தேவைப்படும் என்று வைத்துக் கொள்வோம். அவ்வாறு எடுத்துக்கொண்ட சதவிகிதத்தைக் கொண்டு இனி அடுத்து வரும் 5 ஆண்டுகளுக்கான ஒர்க்கிங் கேப்பிட்டல் தேவை அட்டவணை-5-ல் கணிக்கப் பட்டுள்ளது.

நாம் சராசரி என்று கண்டு பிடித்த 3.1%-ஐ அந்தந்த ஆண்டு விற்பனையுடன் பெருக்கினால், அந்தந்த ஆண்டிற்கு உள்ள
ஒர்க்கிங் கேப்பிட்டல் தேவை எவ்வளவு என்பது நமக்குத்
தெரிந்துவிடும். ஆனால், நமக்குத் தேவை ஒர்க்கிங் கேப்பிட்டலில் உள்ள மாற்றம்.
அடுத்த ஆண்டின் ஒர்க்கிங் கேப்பிட்டல் தேவையை இந்த ஆண்டின் தேவையிலிருந்து
கழித்தால், நமக்கு ஒர்க்கிங்
கேப்பிட்டலில் உள்ள மாற்றம் கிடைத்துவிடும். அட்ட வணை- 5-ல் உள்ள மார்ச் 2013 மற்றும் மார்ச் 2012-ல் ஒர்க்கிங் கேப்பிட்டல் தேவை முறையே 76 லட்ச ரூபாய் மற்றும் 66 லட்ச ரூபாய். ஆகவே, மார்ச் 2013-ல் ஒர்க்கிங் கேப்பிட்டல்
மாற்றம் 10 (76 - 66 = 10) லட்ச ரூபாய் ஆகும்.
ஆக நமக்கு 'ஃப்ரீ கேஷ் ஃப்ளோ’ கண்டுபிடிப்பதற்குத் தேவையான அனைத்து விவரங்களும் தற்போது நம் கையில் உள்ளது. அடுத்த வாரம் 'ஃப்ரீ கேஷ் ஃப்ளோ’வைக் கண்டுபிடிப்போம்.
ஆக நமக்கு 'ஃப்ரீ கேஷ் ஃப்ளோ’ கண்டுபிடிப்பதற்குத் தேவையான அனைத்து விவரங்களும் தற்போது நம் கையில் உள்ளது. அடுத்த வாரம் 'ஃப்ரீ கேஷ் ஃப்ளோ’வைக் கண்டுபிடிப்போம்.
(படி ஏறுவோம்)
Source - Vikatan Magazine
கருத்துகள்
கருத்துரையிடுக