முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முதற்படி முதலில் படி! - 37


முதற்படி முதலில் படி! - 37




பங்குச் சந்தையில் போர்ட்ஃபோலியோ அமைப்பது என்பது முக்கியமான விஷயம். போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட் சர்வீஸ் என்கிற சேவையை சிலர் தனியாகவே தருகிறார்கள். போர்ட்ஃபோலியோ என்றால் என்னவென்று முதலில் பார்த்து விடுவோம்.
முதலீட்டில், போர்ட்ஃபோலியோ என்பது ஒரே நபரால் சேகரிக்கப்படும் பலவிதமான முதலீட்டு உபகரணங்கள் ஆகும். உதாரணத்திற்கு ஒரே நபர், பங்குகளில் முதலீடு செய்திருப்பார், பங்கு சார்ந்த முதலீடுகளில் முதலீடு செய்திருப்பார். இது தவிர, ரியல் எஸ்டேட், தங்கம்/வெள்ளி, கடன் பத்திரங்கள், டெபாசிட்டுகள் என இன்னும் பலவற்றிலும் முதலீடு செய்திருப்பார். இவை அனைத்தையும் சேர்த்துத்தான் ஒருவரின் முதலீட்டு போர்ட்ஃபோலியோ உருவாகிறது.
நம் சாப்பாட்டில் கூட்டு, பொரியல், கறி, சாம்பார், ரசம், மோர், ஊறுகாய், உப்பு, சாதம் எல்லாம் சரியான அளவில் இருந்தால் மட்டுமே சாப்பாடு ருசிக்கும். அதுபோல, நம் போர்ட்ஃபோலியோவில் அனைத்து முதலீட்டு உபகரணங்களும் சரியான விகிதத்தில் இருந்தால் மட்டுமே,
நம் முதலீடு பாதுகாப்பானதாக அமையும். இந்த போர்ட்ஃபோலியோவும் வயதிற்கேற்ற சதவிகிதத்தில் இருக்க வேண்டும். குழந்தைகள் நெய், இனிப்பு, ஐஸ்கிரீம் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவார்கள். ஆனால், வயதானவர்களும் அதே மாதிரி இனிப்பையும் ஐஸ்கிரீமையும் சாப்பிட முடியுமா? வயதுகேற்ப உணவு வகைகள் மாறுகிற மாதிரி நம் போர்ட்ஃபோலியோவும் அமைய வேண்டும்.
நான் சந்திக்கும் பல முதலீட்டாளர்கள் இன்றைய தினத்தில் ரியல் எஸ்டேட்டில் தங்கள் முழுப் பணத்தையும் போட்டு வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு ஊரிலும் ஒரு வீட்டுமனையை அல்லது விளைநிலத்தை முதலீடாக வாங்கிப் போட்டிருக்கிறார்கள். அதில் பலர் அடுத்த ஐந்து வருடத்தில் காலேஜில் சேரப் போகும் தனது குழந்தையின் படிப்புச் செலவுக்காக இன்னுமொரு நிலத்தை/பிளாட்டை வாங்கிப் போடலாமா என்று கேட்கிறார்கள்.
இது ஒருபக்கமெனில், மற்றொரு பக்கத்தில் வருடா வருடம் கட்ட வேண்டிய இன்ஷூரன்ஸ் தொகையை குழந்தையின் பள்ளிக்கூட கட்டணத்தை சேகரிப்பதற்காக பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் ஒரு வருட எஸ்.ஐ.பி. போட்டு, அதை எடுத்து இன்ஷூரன்ஸ் தொகையை/பள்ளிக்கூட கட்டணத்தைக் கட்டிவிடலாமா என்று யோசனை கேட்கிறவர்களும் உண்டு.
இன்னுமொரு வகையினர் 30 - 40 வயதுக்குட்பட்டவர்கள். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், தங்கம்/வெள்ளி போன்ற முதலீடு அனைத்துமே வீண். எதில் முதலீடு செய்தாலும் ரிஸ்க் - எனது பணம் எல்லாம் வீணாகிப் போய்விடும். ஆகவே, நான் எனது எதிர்காலத் தேவைகள் அனைத்திற்கும் அஞ்சலகத்தின் மூலமே சேமிக்கிறேன் என்று சொல்கிறவர்களும் உண்டு.


சொல்லப் போனால், மேற்கண்ட ஒவ்வொரு வகையினரும் மிகச் சரியானது என்று நினைத்துக் கொண்டு தவறான ஒன்றை செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு முழுச் சாப்பாட்டில் நாம் எவ்வாறு அயிட்டங்கள் கணகச்சிதமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ, அது போலத்தான் நமது போர்ட்ஃபோலியோவும் இருக்க வேண்டும். உங்களது தேவைகளுக்கு ஏற்ப உங்களின் முதலீடு அமைய வேண்டும்.
ஒவ்வொருவருடைய வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகளான குழந்தைகள் கல்வி மற்றும் திருமணம், வீடு, ஓய்வுகால வாழ்க்கை, தருமம் போன்றவற்றிற்காக சேமிப்பதை முறையாக ஒரு போர்ட்ஃபோலியோ வரையறைக்குள் சேமியுங்கள்/முதலீடு செய்யுங்கள். அதுபோல உங்களின் செல்வம் வளர வேண்டும் என்றாலும் ஒரு முறையான போர்ட்ஃபோலியோ அணுகுமுறை தேவை.
உங்களது அன்றாடத் தேவைகளை மூன்று காலகட்டத் திற்குள் அடக்கலாம். அவை முறையே குறுகிய காலத் தேவைகள், நடுத்தர காலத் தேவைகள் மற்றும் நீண்ட காலத் தேவைகள். தேவைக்கு ஏற்றாற் போல் உங்களின் முதலீடுகளும் அமைய வேண்டும்.
தேவைகள்
முதலீட்டு வகை (தேவை மற்றும் கால அளவைப் பொறுத்து கீழ்க்கண்ட முதலீடுகளை மேற்கொள்ளலாம்)
குறுகிய காலத் தேவைகள் (மூன்று வருடத்திற்குள்)
சேவிங்ஸ் கணக்கு, லிக்விட் மியூச்சுவல் ஃபண்ட், ரெக்கரிங் டெபாசிட், ஃபிக்ஸட் டெபாசிட்.
நடுத்தர காலத் தேவைகள் (4 - 7 வருடங்கள்)
எம்.ஐ.பி., பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்டுகள், பாண்டுஃபண்டுகள், இ.டி.எஃப், லார்ஜ்கேப் ஃபண்டுகள் மற்றும் லார்ஜ்கேப் பங்குகள். தங்கம்/வெள்ளி.
நீண்ட காலத் தேவைகள் (ஏழு வருடங்களுக்கு மேல்)
லார்ஜ்கேப் மற்றும் மிட்கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்/பங்குகள், இ.டி.எஃப்., ரியல் எஸ்டேட், தங்கம்/வெள்ளி, சொந்தத் தொழில் அல்லது தொழில் சார்ந்த முதலீடுகள், ஆர்ட் மற்றும் கலெக்டர்ஸ் அயிட்டங்கள்.
மேலே ஒவ்வொருவரின் தேவைக்கு ஏற்ற முதலீட்டு வகைகளைப் பார்த்தோம்.
கீழே உங்களின் வயதிற்கேற்ற முதலீட்டு போர்ட்ஃபோலியோவைப் பார்ப்போம். இன்றைய காலகட்டத்தில் நடுத்தர வர்க்கத் தினர் முதலீடு செய்யக்கூடிய சொத்து வகைகள் நான்கு:
1.
பங்கு சார்ந்த முதலீடுகள்.
2.
கடன் சார்ந்தமுதலீடுகள்.
3.
ரியல் எஸ்டேட்.
4.
தங்கம்/வெள்ளி.
மேற்கண்டவாறு உருவாக்கிய உங்களின் போர்ட்ஃபோலியோவை ஒரு வருடத்திற்கு அல்லது இரண்டு வருடத்திற்கு ஒரு முறையாவது பேலன்ஸ் செய்து கொள்வது நல்லது.
இவ்வாறு ஒரு வரையறைக்குள் முதலீடு செய்யும்போது, நீங்கள் சில லாப வாய்ப்புகளை இழக்க வாய்ப்புண்டு. இதனால் உங்கள் செல்வத்தை இழக்க வாய்ப்பில்லை. முதலீடு என்பது முதலில் பாதுகாப்பைத் தர வேண்டும் - அதற்குமேல் வருமானத்தைத் தர வேண்டும். இவற்றை மனதில் கொண்டு உங்கள் முதலீட்டு பயணத்தைத் தொடங்குங்கள்!
(படி ஏறுவோம்)

Source - Vikatan Magazine

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவகிரக துதி

சூரியன் சீலமாய் வாழ சீரருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி! சூரியா போற்றி! சுந்தரா போற்றி! வீரியா போற்றி! வினைகள் களைவாய் சந்திரன் எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி! திருவருள் தருவாய் சந்திரா போற்றி! சற்குணா போற்றி! சங்கடந்தீர்ப்பாய் சதுராய் போற்றி! அங்காரகன் (செவ்வாய்) சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ மங்கள செவ்வாய் மலரடி போற்றி! அங்காரகனே அவதிகள் நீக்கு! புதன் இதமுற வாழ இன்னல்கள் நீக்கு புத பகவானே பொன்னடி போற்றி! பதந்தந்தாள்வாய் பண்ணொளியானே உதவியே யருளும் உத்தமா போற்றி! குரு குணமிகு வியாழக் குருபகவானே மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய் ; பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா கிரகதோஷமின்றி கடாஷித்தருள்வாய் சுக்கிரன் சுக்கிரமூர்த்தி சுப சுக மீவாய் வக்ரமின்றி வரமிகத் தருவாய் வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே சனி சங்கடந் தீர்ககுஞ் சனி பகவானே! மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றி சனீஸ்வரத் தேவே இச்சகம் வாழ இன்னருள் தா தா ராகு அரவெனும் ராகு அய்யனே போற...

சோப் ஆயிலில் சூப்பர் லாபம்!

வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் இயந்திரங்கள் எதுவும் இல்லாமல் சோப் ஆயில் தயாரிக்கலாம். இதன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை காளம்பாளையத்தில் ஹக் புராடக்ட்ஸ் சோப் ஆயில் தயாரிக்கும் ரமணன். அவர் கூறியதாவது: கோவையில் தேசிய பஞ்சாலை கழக தரக்கட்டுப்பாட்டு பிரிவில் உதவி ஸ்பின்னிங் மாஸ்டராக 28 ஆண்டுகள் பணிபுரிந்தேன். 7 ஆண்டுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றேன். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற என் போன்றவர்களை, கோவையில் உள்ள சிறு தொழில் சேவை மையத்தினர் சுய தொழில் செய்வதற்கான பயிற்சிக்கு அழைத்தனர். அங்கு ஒரு மாதம் நறுமண சொட்டு நீலம், பினாயில், சோப் பவுடர் போன்றவை தயாரிக்க கற்றுக் கொடுத்தனர். ரூ.5 ஆயிரம் முதலீட்டில் சோப் ஆயில் தயாரிப்பதற்கான தொழிலை துவக்கினேன். நானே முதலாளியாகவும், தொழிலாளியாகவும் இருந்து மாதம் 200 லிட்டர் சோப் ஆயில் தயாரித்து விற்கிறேன். சோப் ஆயில் தயாரித்து விற்பவர்கள் பலர் இருந்தாலும், தரமாக தயாரித்து விற்பதால் ஆர்டர் தொய்வு இல்லாமல் கிடைக்கிறது. தினசரி 5 மணி நேரம் உழைத்தால் 10 லிட்டர் சோப் ஆயில் தயாரிக்க முடியும். 20...

Various Herbs & Spices English & Hindi Names

English/ ஆ ங்கிலம் Tamil/ தமிழ் Hindi/ हिन्दी/ ஹிந்தி Rice Arisi( அரிசி) Chaval Black gram Kadalai Parruppu ( கடலை பருப்பு) Channa Dhal Black Gram Ulluththam Paruppu ( உளுதம் பருப்பு) Urad Dhal Green gram dhal Payaththam Parruppu( பயத்தம் பருப்பு) Moog Dhal Green gram Whole Paasi Parruppu( பாசி பருப்பு) Moog Sabut Yellow split peas Thuvaram Parruppu( துவரம் பருப்பு) Toor Dhal Green gram  Split Pachchai payiru( பச்சைப்பயறு) Moong Chilka Garbanzo beans Kondai Kadalai( கொண்டை கடலை) Kabuli Channa Peanuts Veerkadalai( வேற்கடலை) Moong falee All Purpose Flour Maida Maavu( மைதா மாவு) Maida Gram flour Kadalai Maavu( கடலை மாவு) Besan Wheat flour Godhumai maavu( கோதுமை மாவு) ...