முதற்படி முதலில் படி! - 27
ஷேர் மார்க்கெட்டில் நுழைய விரும்பும்
புதியவர்களுக்கான வழிகாட்டித் தொடர்!
'டிஸ்கவுன்ட் கேஷ் ஃப்ளோ!'
சென்ற சில வாரங்களாக நிறுவனங்களையும் அதன்
பங்குகளையும் மதிப்பிடுவது குறித்து கண்டு வருகிறோம். இவ்வாரம் உலக அளவில் இன்று
மிகவும் பரவலாக நிறுவனங்களையும் அதன் பங்குகளையும் மதிப்பிட உதவும் முறையான
டி.சி.எஃப் (DCF – Discounted Cash Flow) முறையைப் பற்றி விரிவாகக் காண்போம்.
இம்முறையை என்.பி.வி (NPV – Net Present Value) முறை என்றும் ஃப்ரீ கேஷ் ஃப்ளோ (FCF – Free
Cash Flow) முறை என்றும் கூறுவர்.

இம்முறையைத்தான் பெரிய முதலீட்டாளர் களும், நிறுவன முதலீட்டாளர்களும், இன்வெஸ்ட் மென்ட் பேங்கர்ஸும், நிறுவனங் களும், இன்னும் பலரும் (நமது மும்பை
வாலாஸ் உட்பட) பயன் படுத்துகிறார்கள். அவ்வளவு ஏன் நீங்கள் பார்க்கும் புரோக்கரேஜ்
ரிப்போர்ட்களிலும் இந்த முறை தான் பயன்படுத்தப்படு கிறது. இது நாம் கூறிய மதிப்பீட்டு முறை
களிலேயே மிகவும் முக்கிய மானது என்பதால், இதைப்பற்றி சற்று விரிவாகவே
காண்போம்.
இந்த முறையைப் பற்றி விவரமாகத் தெரிந்து கொள்ளும் முன் ஒரு சிறிய உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் உங்க ளுக்கு ஒரு ஆப்ஷன் கொடுக்கிறது. நிறுவனம் உங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் போனஸாக தருவது என்று முடிவு செய்துவிட்டது. அந்த போனஸை நீங்கள் இன்றே வாங்கிக் கொள்ளலாம் அல்லது ஒரு வருடம் கழித்து வாங்கிக் கொள்ளலாம், அல்லது ஐந்து வருடம் கழித்தும் வாங்கிக் கொள்ளலாம். நீங்கள் புத்திசாலி என்றால் எந்த ஆப்ஷனைத் தேர்வு செய்வீர்கள்? இன்றே வாங்கிக் கொள்ளும் ஆப்ஷனைத்தான்! ஏனென்றால், அப்பணத்தை வாங்கி நீங்கள் உடனே வங்கி டெபாசிட்டில் போட்டால்கூட இன்னும் ஒரு வருடத்தில் அந்த பணம் 1.10 லட்ச ரூபாயாகிவிடுமே! இதைத்தான் ஆங்கிலத்தில் 'டைம் வேல்யூ ஆஃப் மணி’ (Time Value of Money) என்று கூறுவார்கள்.

|
இன்னும் ஒரு வருடத்தில் அல்லது இரண்டு
வருடத்தில் கிடைக்கப் போகும் 1 லட்ச ரூபாயின் இன்றைய மதிப்பு என்ன என்று யாராவது
உங்களிடம் கேட்டால் என்ன கூறுவீர்கள்? நாம் அனைவரும் வட்டி கொடுத்து
பழகிவிட்டோம். அதனால் நமக்கு இன்றைய லட்ச ரூபாய், ஒரு வருடம் கழித்து லட்சத்துப்
பத்தாயிரம் ஆகிவிடும் (10% வட்டியில்) என்பது நன்றாகத் தெரியும். ஆனால், இதையே ரிவர்ஸாக யோசித்துப்
பார்த்தால்...? அதாவது, எதிர்காலத்தில் கிடைக்கப் போகும் 1 லட்ச ரூபாய்க்கு இன்றைக்கு
நீங்கள் எவ்வளவு கொடுக்கலாம்? கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் விடை கண்டு பிடிக்க முடியுமே
தவிர, இந்த ரிவெர்ஸ் மூளைதான் இந்த மதிப்பீட்டு
முறைக்குத் தேவை.
இன்னும் ஒரு வருடத்தில் கிடைக்கப் போகும் 1 லட்ச ரூபாயின் இன்றைய மதிப்பு 90,909 ரூபாய். அதேபோல் இன்னும் இரண்டு வருடத்தில் கிடைக்கப் போகும் 1 லட்ச ரூபாயின் இன்றைய மதிப்பு 82,645 ரூபாய். முன்பக்கம் அட்டவணை ஒன்றை கொடுத் துள்ளேன். அதில் இனிவரும் 1, 2, 3... ஆண்டு களில் கிடைக்கப் போகும் 1 லட்ச ரூபாயின் இன்றைய மதிப்பு, வெவ்வேறு டிஸ்கவுன்ட் ரேட்டில் தந்திருக்கிறேன்.
உதாரணத்திற்கு அட்டவணையின்
கடைசி வரியை எடுத்துக் கொள்ளவும். இன்னும் 20 வருடத்தில் கிடைக்கப் போகும்
1
லட்சத்தின் இன்றைய
மதிப்பு 14,864 (10% டிஸ்கவுன்ட் ரேட்டில்) ரூபாய்தான். அதுவே 15% டிஸ்கவுன்ட் எனில் 6,110 ரூபாய், 20% டிஸ்கவுன்ட் எனில் 2,608 ரூபாய் ஆகும். ஆக, நீங்கள் எடுத்துக் கொள்ளும்
டிஸ்கவுன்ட் ரேட்டைப் பொறுத்து உங்களின் இன்றைய மதிப்பு மாறுகிறது அல்லவா? இதுதான் இந்த டி.சி.எஃப் முறையில் உள்ள தனிச்சிறப்பு!
மேலே கண்ட அட்டவணையில் இருந்து ஒன்று தெள்ளத் தெளிவாக உங்களுக்குப் புரிந்தி
ருக்கும். எதிர்காலத்தில் கிடைக்கப் போகும் பணத்திற்கு, இன்று கிடைக்கும் பணத்தைவிட
மதிப்பு குறைவு என்று!
எதிர்காலத்தில் கிடைக்கப் போகும் பணத்தை, இன்றைய மதிப்புடன் ஒப்பிடு வதற்கு குறிப்பிட்ட சதவிகிதத்தை வைத்து டிஸ்கவுன்ட் செய்வதால்தான், இந்த முறையை 'டிஸ்கவுன்டட் கேஷ் ஃப்ளோ மெத்தட்’ என்று கூறுகிறோம். சரி, இந்த டி.சி.எஃப் முறை எவ்வாறு செயல்படுகிறது?
ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால், எதிர்காலத்தில் ஒரு நிறுவனத்திற்கு வர இருக்கும் கேஷ் ஃப்ளோ அனைத்தையும் கணக்கிட்டு, அதை இன்றைய தேதிக்கு டிஸ்கவுன்ட் செய்து, அதன் மூலம் மதிப்பைக் காண்பதுதான் டி.சி.எஃப் முறை. சரி, எதிர்காலத்தில் வரப்போகும் கேஷ் ஃப்ளோவை எப்படி கணக்கிடுவது?
இன்னும் ஒரு வருடத்தில் கிடைக்கப் போகும் 1 லட்ச ரூபாயின் இன்றைய மதிப்பு 90,909 ரூபாய். அதேபோல் இன்னும் இரண்டு வருடத்தில் கிடைக்கப் போகும் 1 லட்ச ரூபாயின் இன்றைய மதிப்பு 82,645 ரூபாய். முன்பக்கம் அட்டவணை ஒன்றை கொடுத் துள்ளேன். அதில் இனிவரும் 1, 2, 3... ஆண்டு களில் கிடைக்கப் போகும் 1 லட்ச ரூபாயின் இன்றைய மதிப்பு, வெவ்வேறு டிஸ்கவுன்ட் ரேட்டில் தந்திருக்கிறேன்.

எதிர்காலத்தில் கிடைக்கப் போகும் பணத்தை, இன்றைய மதிப்புடன் ஒப்பிடு வதற்கு குறிப்பிட்ட சதவிகிதத்தை வைத்து டிஸ்கவுன்ட் செய்வதால்தான், இந்த முறையை 'டிஸ்கவுன்டட் கேஷ் ஃப்ளோ மெத்தட்’ என்று கூறுகிறோம். சரி, இந்த டி.சி.எஃப் முறை எவ்வாறு செயல்படுகிறது?
ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால், எதிர்காலத்தில் ஒரு நிறுவனத்திற்கு வர இருக்கும் கேஷ் ஃப்ளோ அனைத்தையும் கணக்கிட்டு, அதை இன்றைய தேதிக்கு டிஸ்கவுன்ட் செய்து, அதன் மூலம் மதிப்பைக் காண்பதுதான் டி.சி.எஃப் முறை. சரி, எதிர்காலத்தில் வரப்போகும் கேஷ் ஃப்ளோவை எப்படி கணக்கிடுவது?

இதில்தான் மதிப்பீடு செய்பவர்களின் கைங்கரியம்
உள்ளது. இதைக் கணக்கு செய்வதற்கு எதிர்காலத்தில்
எவ்வளவு விற்பனை ஆகும், எவ்வளவு செலவு ஆகும், எவ்வளவு நிகர லாபம் கிடைக்கும், எவ்வளவு கேஷ் ஃப்ளோ
கிடைக்கும் என்று புரஜெக்ஷன் (projection) செய்ய வேண்டும். எவ்வாறு
இந்த முறை வேலை செய்கிறது என்பதை விரிவாக அடுத்த வாரம் தெரிந்து
கொள்ளும் முன்பு, இம்முறையில் உள்ள சாதக பாதகங்கள் என்னவென்று பார்த்து
விடுவோம். என்னிடம் பலர் ஒரு நிறுவனப் பங்கின் உண்மையான மதிப்பை எவ்வாறு
கண்டுபிடிப்பது என்று கேட்டுள்ளார்கள். பி/இ, பி/பிவி, சந்தை மதிப்பு போன்ற முறைகள்
யாவும் ஒப்பீட்டு முறைகள் தானே தவிர, ஒரு பங்கின்/நிறுவனத்தின்
உண்மையான மதிப்பைக் காண்பிப்பவை அல்ல. ஆனால், இந்த டி.சி.எஃப் முறையானது உண்மையான
மதிப்பைக் கண்டுபிடிப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
உண்மையான மதிப்பைத் தெரிந்து கொள்வதன் மூலம் முதலீட்டாளர்கள் எந்த நிறுவனத்தின் மதிப்பு அதிகமாக உள்ளது அல்லது குறைவாக உள்ளது என்று எளிதில் தெரிந்து கொள்ள முடியும். உண்மையான மதிப்பைத் தெரிந்து முதலீடு செய்வதால், பங்குகளின் மதிப்பு குறையும்போது பயப்படாமல் இருக்கலாம். மேலும், முதலீட்டாளர்களுக்குச் சேர வேண்டிய கேஷ்ஃப்ளோவை மட்டுமே இந்த முறையில் எடுத்துக் கொள்வதால், மதிப்பு சரியாக கிடைக்கும். சீரான அல்லது குறைந்த வளர்ச்சியில் இருக்கும் தொழில்களுக்கு இந்த முறை கணகச்சிதமாகப் பொருந்தும்; ஏனென்றால் துல்லியமான மதிப்பைத் தரும்.
இந்த முறையில் உள்ள பாதகங்கள் என்னென்ன? எதிர்கால விற்பனை, செலவுகள் போன்றவை மதிப்பிடுபவரால் தெரிந்த அளவு கணிக்கப்படுகிறது. இந்த கணிப்பு எப்போதும் துல்லியமாக இருக்கும் என்று கூற முடியாது. அதை வைத்து மதிப்பும் மாறுபடும். மேலும் வொர்ஸ்ட்கேஸ்/பெஸ்ட்கேஸ் காட்சி நிகழும்போது இந்த மதிப்பீடு சற்று விலகி நிற்கும். டிஸ்கவுன்ட் ரேட்டின் எதிர்பார்ப்பு ஒரு நபருக்கும் மற்றுமொரு நபருக்கும் நிறைய வித்தியாசப்படும். ஆகவே, நிறுவனத்தின் மதிப்பும் மாறுபடும். நீண்ட கால கேஷ் ஃப்ளோவின் அடிப்படையில் மதிப்பிடுவதால், இந்த முறை குறுகிய கால முதலீட்டாளர்களுக்கு உதவியாக இருக்காது.

(படி ஏறுவோம்)
கருத்துகள்
கருத்துரையிடுக