முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முதற்படி முதலில் படி! - 3


முதற்படி முதலில் படி! - 3

ரு பங்கு எப்படி உருவாகிறது என்பதை கடந்த இதழில் பார்த்தோம்... இனி அதை வாங்க, விற்க ஓர் இடம் வேண்டும் அல்லவா? காய்கறி வாங்க அல்லது விற்க காய்கறி சந்தை இருக்கிற மாதிரி, பங்குகளை வாங்க, விற்பதற்கான இடம்தான் பங்குச் சந்தை. பதினோராம் நூற்றாண்டில் கெய்ரோவில் (எகிப்து நாட்டின் தற்போதைய தலைநகர்) யூத மற்றும் முகலாய வியாபாரிகள் இடையே இருந்த கொடுக்கல் வாங்கல்தான் பங்குச் சந்தையின் ரிஷிமூலம் என்கிறார்கள்.
ஆனால் பெரும்பாலான தகவல்கள், பங்குச் சந்தையின் தொடக்கத்தை பன்னிரண்டாம் நூற்றாண்டு ஃபிரான்ஸ் நாட்டை சுட்டிக் காட்டுகின்றன. அந்த சமயத்தில் வங்கிகள் விவசாயிகளுக்கு கடன் கொடுத்ததை முறைப்படுத் துவதற்காக கமிஷன் அடிப்படையில் சிலரை வேலைக்கு அமர்த்தியது. இவர்கள் 'புரோக்கர்கள்என்று அழைக்கப் பட்டனர். புரோக்கரேஜ் பிஸினஸ் இப்படித்தான் ஆரம்பமானது!


1309-ல் பெல்ஜியம் நாட்டில் வசித்த 'வேன் டெர் பியூர்ஸ்என்ற நபரின் வீட்டில் அவ்வப்பொழுது அந்த நகரத்தில் உள்ள வியாபாரிகள் கூடினார்கள். இச்செய்தி விறுவிறுவென பல அண்டைய நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்து, பல இடங்களிலும் வியாபாரத்துக்காக இது மாதிரியான கூட்டங்கள் நடக்க ஆரம்பித்தன. பதின்மூன்றாம் நூற்றாண்டின் மத்தியில் வெனீஸ் நாட்டில் வங்கி நடத்துபவர்கள் அரசாங்க கடன் பத்திரங்களை வாங்கி, விற்கத் தொடங்கினர். பதினான்காம் நூற்றாண்டில் அரசாங்க கடன் பத்திரங்களை வாங்கி, விற்பது இத்தாலியின் மற்ற நகரங்களுக்கும் பரவ ஆரம்பித்தது. பிறகு டச் நாட்டினர் 'ஜாயின்ட் ஸ்டாக்கம்பெனியை அறிமுகப்படுத்தினர். இதுபோன்ற கம்பெனிகளில், பங்குதாரர்கள் முதலீடு செய்த அளவுக்கு லாபத்தையோ, நஷ்டத்தையோ ஏற்றுக் கொண்டனர். 1602-ல் டச் கிழக்கிந்திய கம்பெனி ஆம்ஸ்டர்டாம் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் தனது முதல் பங்குகளை வெளியிட்டது. இதுவே பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களை முதன்முதலில் அறிமுகம் செய்தது. இந்த ஆம்ஸ்டர்டாம் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்தான் முதன்முதலில் 17-ம் நூற்றாண்டில் தொடர்ந்து டிரேடிங் செய்வதையும் அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. டச் நாட்டுக்காரர்கள்தான் ஆப்ஷன்ஸ் டிரேடிங், ஷார்ட் செல்லிங் போன்ற பல விதமான இன்றைய டிரேடிங் முறைகளுக்கும், குறிப்பாக பங்குச் சந்தைக்கும் முன்னோடியாக இருந்தார்கள்.

இப்படி உருவான பங்குச் சந்தை, இன்று எல்லா நாடுகளுக்கும் பரவி, பங்குச் சந்தை இல்லாத நாடுகளே உலகத்தில் இல்லை என்று சொல்கிற அளவுக்கு வந்துவிட்டது. அது சரி, உலகத்தை பற்றியெல்லாம் பேசிவிட்டீர்கள், நமது நாட்டில் பங்குச் சந்தை எப்படி உருவானது என்று கேட்கிறீர்களா?

 ஆசியா கண்டத்திலேயே மிகவும் பழமை வாய்ந்தது நமது பங்குச் சந்தைதான். 1850-களில் மும்பையில் தற்போதைய ஹார்னிமன் சர்க்கிள் இருக்கும் இடத்தில் இருந்த டவுன் ஹால் முன்பு இயற்கையின் வடிவாகிய ஆலமரத்தின் அடியில் ஆரம்ப மானதுதான் நமது பங்குச் சந்தை. அந்த மர நிழலில் கூடி தங்களது டிரேடிங்கை தொடங்கினார்கள் நமது புரோக்கர்கள். சில ஆண்டுகள் கழித்து இன்றைய மும்பை மகாத்மா காந்தி ரோட்டில் இருந்த ஆல மரங்களின் அடியில் தங்களது டிரேடிங் தளத்தை மாற்றினர். புரோக்கர்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக ஒவ்வொரு இடமாக மாற்றிக் கொண்டிருந்தனர்.

1874-
ம் ஆண்டில் கடைசியாக ஒரு நிரந்தரமான இடத்தை அடைந்தனர். அதுதான் இன்றைய தலால் ஸ்ட்ரீட் (புரோக்கர் வீதி). தி ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச், மும்பை என்று அழைக்கப்பட்டு வந்த இந்த சந்தை 2002-ல்,  பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2005-ல் கம்பெனியாக மாற்றப்பட்டது. 1994-ல் தேசிய பங்குச் சந்தை (என்.எஸ்.இ) வந்தது. இதையடுத்து இன்று இரு பெரும் பங்குச் சந்தைகள் இருக்கின்றன.

உலகத்திலேயே மிகவும் பெரிய பங்குச் சந்தை நியூயார்க் பங்குச் சந்தை தான். இரண்டாவது பெரிய பங்குச் சந்தையும் அமெரிக்காவில் தான் - நாஸ்டக் பங்குச்சந்தை ஆகும்.
(படி ஏறுவோம்),


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவகிரக துதி

சூரியன் சீலமாய் வாழ சீரருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி! சூரியா போற்றி! சுந்தரா போற்றி! வீரியா போற்றி! வினைகள் களைவாய் சந்திரன் எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி! திருவருள் தருவாய் சந்திரா போற்றி! சற்குணா போற்றி! சங்கடந்தீர்ப்பாய் சதுராய் போற்றி! அங்காரகன் (செவ்வாய்) சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ மங்கள செவ்வாய் மலரடி போற்றி! அங்காரகனே அவதிகள் நீக்கு! புதன் இதமுற வாழ இன்னல்கள் நீக்கு புத பகவானே பொன்னடி போற்றி! பதந்தந்தாள்வாய் பண்ணொளியானே உதவியே யருளும் உத்தமா போற்றி! குரு குணமிகு வியாழக் குருபகவானே மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய் ; பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா கிரகதோஷமின்றி கடாஷித்தருள்வாய் சுக்கிரன் சுக்கிரமூர்த்தி சுப சுக மீவாய் வக்ரமின்றி வரமிகத் தருவாய் வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே சனி சங்கடந் தீர்ககுஞ் சனி பகவானே! மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றி சனீஸ்வரத் தேவே இச்சகம் வாழ இன்னருள் தா தா ராகு அரவெனும் ராகு அய்யனே போற...

சோப் ஆயிலில் சூப்பர் லாபம்!

வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் இயந்திரங்கள் எதுவும் இல்லாமல் சோப் ஆயில் தயாரிக்கலாம். இதன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை காளம்பாளையத்தில் ஹக் புராடக்ட்ஸ் சோப் ஆயில் தயாரிக்கும் ரமணன். அவர் கூறியதாவது: கோவையில் தேசிய பஞ்சாலை கழக தரக்கட்டுப்பாட்டு பிரிவில் உதவி ஸ்பின்னிங் மாஸ்டராக 28 ஆண்டுகள் பணிபுரிந்தேன். 7 ஆண்டுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றேன். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற என் போன்றவர்களை, கோவையில் உள்ள சிறு தொழில் சேவை மையத்தினர் சுய தொழில் செய்வதற்கான பயிற்சிக்கு அழைத்தனர். அங்கு ஒரு மாதம் நறுமண சொட்டு நீலம், பினாயில், சோப் பவுடர் போன்றவை தயாரிக்க கற்றுக் கொடுத்தனர். ரூ.5 ஆயிரம் முதலீட்டில் சோப் ஆயில் தயாரிப்பதற்கான தொழிலை துவக்கினேன். நானே முதலாளியாகவும், தொழிலாளியாகவும் இருந்து மாதம் 200 லிட்டர் சோப் ஆயில் தயாரித்து விற்கிறேன். சோப் ஆயில் தயாரித்து விற்பவர்கள் பலர் இருந்தாலும், தரமாக தயாரித்து விற்பதால் ஆர்டர் தொய்வு இல்லாமல் கிடைக்கிறது. தினசரி 5 மணி நேரம் உழைத்தால் 10 லிட்டர் சோப் ஆயில் தயாரிக்க முடியும். 20...

Various Herbs & Spices English & Hindi Names

English/ ஆ ங்கிலம் Tamil/ தமிழ் Hindi/ हिन्दी/ ஹிந்தி Rice Arisi( அரிசி) Chaval Black gram Kadalai Parruppu ( கடலை பருப்பு) Channa Dhal Black Gram Ulluththam Paruppu ( உளுதம் பருப்பு) Urad Dhal Green gram dhal Payaththam Parruppu( பயத்தம் பருப்பு) Moog Dhal Green gram Whole Paasi Parruppu( பாசி பருப்பு) Moog Sabut Yellow split peas Thuvaram Parruppu( துவரம் பருப்பு) Toor Dhal Green gram  Split Pachchai payiru( பச்சைப்பயறு) Moong Chilka Garbanzo beans Kondai Kadalai( கொண்டை கடலை) Kabuli Channa Peanuts Veerkadalai( வேற்கடலை) Moong falee All Purpose Flour Maida Maavu( மைதா மாவு) Maida Gram flour Kadalai Maavu( கடலை மாவு) Besan Wheat flour Godhumai maavu( கோதுமை மாவு) ...