முதற்படி முதலில் படி! - 25
வேறு எப்படியெல்லாம் மதிப்பீடு செய்யலாம்?
சென்ற வாரம் பி/இ முறையில் எவ்வாறு பங்குகளையும் தொழில்களையும் மதிப்பிடுவது என்று பார்த்தோம்... இவ்வாரம் பிற முறைகளில் மதிப்பீடு செய்வது பற்றி குறிப்பிட்டுள்ளோம்.
புத்தக மதிப்பு முறை மூலம் மதிப்பிடுதல்:
சென்ற வாரம் ஒரு கஸ்டமர் அவர் வாங்கப் போகும்
நிறுவனத்தின் தளவாடச் சாமான்களின் மதிப்பைத்தான் கொடுப்பதற்கு தயாராக இருந்தார்
என்று கூறினேன் அல்லவா? அவர் சொன்னது கிட்டத்தட்ட அந்த நிறுவனத்தின் புத்தக மதிப்பைத் தான்.
நிறுவனத்தின் புத்தக மதிப்பில், அவர் அந்நிறுவனத்தை விலைக்கு வாங்க முயன்றார். ஆனால் விற்பவரோ ஒப்புக் கொள்ளவில்லை.
நிறுவனத்தின் அல்லது பங்கின் புத்தக மதிப்பை சரியாக கணக்கிட்டு அதன் மூலம்
நிறுவனத்தின்/ பங்கின் மதிப்பைக் கண்டறிவதுதான் புத்தக மதிப்பீட்டுமுறை ஆகும்.
புத்தக மதிப்பை வைத்து கணக்கிடுவது எல்லாத் தொழில் களுக்கும் பொருந்தாது. உதாரணத் திற்கு நீங்கள் ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோர் வைத்துள்ளீர்கள். அந்த ஸ்டோரை நீங்கள் ஆரம்பித்து 15 வருடங்கள் ஆகிவிட்டன என்று வைத்துக் கொள்வோம். உங்கள் ஸ்டோரின் தற்போதைய தளவாடச் சாமான்களின் மதிப்பு 10 லட்சம் ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் ஸ்டோரின் ஆண்டு நிகர லாபம் சுமார் 15 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் உங்கள் ஸ்டோரின் புத்தக மதிப்பில், அந்த ஸ்டோரை வெளிநபருக்கு விற்க தயாராக இருப்பீர்களா? சற்று சிந்தியுங்கள்!

|
ஆக ஒன்றை உறுதி செய்து கொள்ளுங்கள் -
ஒவ்வொரு மதிப்பீட்டு முறையும் ஒவ்வொரு விதமான தொழில்களுக்குத்தான்
உகந்தது. சேவைப் பொருளாதார நிறுவனங்களுக்கு (சர்வீஸ் இண்டஸ்ட்ரிஸ்) புத்தக
மதிப்பீட்டு முறை ஒத்துவராது. கேப்பிட்டல் இன்டென்ஸிவ் என்று சொல்லக்கூடிய அதிகமாக
மூலதனம் தேவைப்படும் தொழில்களை (ஷிப்பிங், மின்சாரம் தயாரிப்பு, வங்கி மற்றும் ஃபைனான்ஸ் துறை)
புத்தக மதிப்பை வைத்து கணக்கிடலாம்.
அதேபோல் பழைய பொருளா தார தொழில்கள் பலவற்றை புத்தக மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடலாம். புத்தக மதிப்பைவிட எப்பொழுது குறைவாக வாங்கலாம்? எதுபோன்ற நிறுவனப் பங்குகளை அச்சமயத்தில் வாங்கலாம்?
வளர்ச்சி அதிகம் இல்லாத துறைகள்/ பங்குகள், கடன் அதிகம் உள்ள நிறுவனங்கள் தங்களது புத்தக மதிப்பைவிட குறைவாக கிடைக்கலாம்.
நம் நாட்டு பொருளாதாரத்தில் பிரச்னைகள் இருக்கும்பொழுதோ அல்லது நல்ல நிறுவனங்களில் பிரச்னைகள் எழும்பொழுதோ அல்லது நல்ல நிறுவனங்களைப் பற்றி அதிகமாக வெளியுலகுக்கு பரிச்சயம் இல்லாமல் இருக்கும் பொழுதோ நிறுவனங்கள்/ நிறுவனப் பங்குகள் தங்களது புத்தக மதிப்பிலிருந்து குறைவாக கிடைக்க வாய்ப்புள்ளது. அது போன்ற சமயங்களில் நல்ல வரலாறு உள்ள தரமான நிறுவனப் பங்குகளாகப் பார்த்து வாங்குவது நல்லது.

மேலும் பல சமயங்களில் நிறுவனங்கள் தங்களது சொத்துக்
களை வாங்கிய விலையிலேயே புத்தகத்தில் காண்பித்துக் கொண்டிருப்பார்கள். அதுபோன்ற பங்குகளில் மதிப்பு மறைந்து இருக்கும்.
அப்பங்குகளை ஆராய்ந் தறிந்து வாங்கினால் நல்ல லாபத்தை ஈட்டலாம்.
கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் நம் நாட்டில் வெகுவாக உயர்ந்துள்ளது. பல நிறுவனங்கள் இன்னும் தங்களது ரியல் எஸ்டேட்டை அக்காலத்தில் வாங்கிய விலை யிலேயே புத்தகத்தில் காண்பித்துக் கொண்டிருக்கின்றன. சமீப காலத்தில் வடநாட்டில் உள்ள சில
டெக்ஸ்டைல் துறையைச் சார்ந்த பங்குகள் திடீரென்று உயர்வதற்குக் காரணம் - அவற்றின் வசம் உள்ள காலியிடங்களில் குடியிப்பு மற்றும் வர்த்தகக் கட்டடங்களை கட்டி விற்று வருவது அல்லது வாடகைக்கு கொடுத்து வருவதன் மூலம் வருமானம் ஈட்டுவது தான்.
புத்தக மதிப்பை வைத்து மதிப்பிடும் முறையை முதலீட்டா ளர்கள் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். பியர் குரூப் உண்டு பண்ணி, பி/பிவி (பங்கின் சந்தை விலை/ புத்தக மதிப்பு) கண்டுபிடித்து ஒப்பிட்டுப் பார்த்தால், எந்தப் பங்கு முதலீட்டிற்கு உகந்தது என்று தெரிய வரும். தனியாக ஒரு பங்கின் புத்தக மதிப்பை மட்டும் வைத்தோ அல்லது பி/பிவி-யை மட்டும் வைத்தோ முதலீடு செய்யாதீர்கள்! ஏனென்றால் புத்தக மதிப்பைவிட மிகவும் விலை குறைவாகக் கிடைக்கும் சில நிறுவனங்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே, பியர் குரூப்பை வைத்து ஒப்பிட்டு அல்லது வேறு பங்குகளுடன்/ தொழில்களுடன் வைத்து ஒப்பிட்டு முதலீடு செய்யுங்கள்.

சந்தை மதிப்பு முறை மூலம் மதிப்பிடுதல்:
சென்ற வாரம் ஒருவர் தான் பிளாட் வாங்குவதற்காக
சந்தை விலையை ஒப்பிட்டுப் பார்த்ததை கண்டோம் அல்லவா? சந்தையில் மக்கள் வாங்க/
விற்க ரெடியாக இருக்கும் விலையை வைத்து கணக்கிடுவதுதான் இந்த முறை. இந்த முறையில் சாதகமும் உள்ளது;
அதே சமயத்தில் எந்த முறையையும் போல பாதகமும் உள்ளது. முதலில் பாதகத்தைப் பார்த்து விடுவோம்.
சந்தை விலை பலவற்றை வைத்து நிர்ணயிக்கப்படுகிறது - அவற்றில் முக்கியமான ஒன்று டிமாண்ட் மற்றும் சப்ளை. சந்தை உச்சத்திற்கு செல்வதும் பிறகு பாதாளத்திற்கு வருவதும் சகஜமான ஒன்று. ஆனால் நம்மில் இன்னும் பல அமெச்சூர் முதலீட்டாளர்கள் உச்சியில் வாங்குவதும் பிறகு திட்டிக்கொண்டு பாதாளத்தில் விற்பதும் சகஜம்.
சந்தை உச்சியில் இருக்கும்போது பல பங்குகளின்/ நிறுவனங்களின் மதிப்பு, டிமாண்ட் அதிகமாக இருப்பதால், எட்ட முடியாத தூரத்தில் இருக்கும். இதுபோல் அதிக விலையில் வாங்கி பிறகு வருத்தப்படுவது சிறிய முதலீட் டாளர்கள் மட்டும் அல்ல - டாடா போன்ற நிறுவனங்களுக்கும் அனுபவம் உண்டு.
2007-ல் டாடா ஸ்டீல் நிறுவனம் பிரிட்டனைச் சார்ந்த கோரஸ் நிறுவனத்தை 12.2 பில்லியன் டாலருக்கு சந்தை உச்சத்தில் வாங்கியது. அதேபோல் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பிரிட்டனில் உள்ள ஜேகுவார் நிறுவனத்தை 2008-ல் 2.3 பில்லியன் டாலருக்கு வாங்கியது. பிறகு நமது பங்குச் சந்தை சரிந்த பொழுது இந்நிறுவனப் பங்குகளும் வெகுவாகச் சரிந்தன. ரத்தன் டாடா பிறகு தனது நேர்காணலில் ஒருமுறை கூறும்போது - அந்த இரண்டு நிறுவனங்களையும் இன்னும் விலை குறைத்து வாங்கி யிருக்கலாம் என்று கூறினார்.
ஆகவே சந்தை விலை உண்மையான விலைதானா என்று அறிந்து வாங்க வேண்டும்.

இந்த முறையில் சாதகம் என்ன?
பொருளாதாரத்தில் அல்லது குறிப்பிட்ட துறையில்/ நிறுவனத்தில் பிரச்னை
ஏற்படும்போது அந்தப் பங்குகளுக்கு/ நிறுவனங்களுக்கு டிமாண்ட் குறைவாக இருக்கும். அதனால்
அதுபோன்ற சமயங்களில் தங்களது உண்மையான மதிப்பி லிருந்து மிகவும் விலை குறைவாகக்
கிடைக்கும்.
உதாரணத்திற்கு எஸ்.கே.எஃப் பியரிங்ஸ் என்ற பியரிங்ஸ் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனப் பங்கின் விலை ரூ 125 அளவிற்கு 2008-ல் சரிந்தது. இன்று அதன் விலை ரூ 600+. அதேபோல் 2008-09 சரிவில் வோல்டாஸ் நிறுவனத்தின் பங்கு ரூ 33 வரை சரிந்து வந்தது (2007-08 உச்சத்தில் ரூ 250-ற்குமேல் சென்றது). அதன் தற்போதைய விலை (ரூ 250-ற்கு மேல் சென்றுவிட்டு) ரூ 165+.
ஆகவே சந்தை மதிப்பு மிகவும் வெளிப்படையான மதிப்பு என்றாலும், சந்தையை நமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள தெரிந்திருக்க வேண்டும்.

(படி ஏறுவோம்)
கருத்துகள்
கருத்துரையிடுக