முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முதற்படி முதலில் படி! - 34 (இ.டி.எஃப்!)


முதற்படி முதலில் படி! - 34 (இ.டி.எஃப்!)


ஷேர் மார்க்கெட்டில் நுழைய விரும்பும் புதியவர்களுக்கான வழிகாட்டித் தொடர்!
இ.டி.எஃப்.!
சில வாரங்களுக்கு முன்பு பேஸிவ் இன்வெஸ்டிங் முறை பற்றி பார்த்தோம். அம்முறையின் ஒரு பகுதிதான் இ.டி.எஃப். என்று சொல்லப்படுகிற 'எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டுகள். அதுபற்றி இந்த இதழில் சற்று விரிவாகப் பார்ப்போம்.
ங்குச் சந்தையில் ஆயிரக்கணக்கான பங்குகள் இருக்கின்றன. இதில் ஒவ்வொரு பங்கையும் ஆராய்ந்து முதலீடு செய்ய நேரமில்லை. எனவே, சந்தையையே விலைக்கு வாங்கிவிட்டால் என்ன என்று நீங்கள் நினைத்தால், அதுதான் இ.டி.எஃப்!
'கோல்டு இ.டி.எஃப்...இப்போது நம்மூரில் வேகமாகப் பிரபலமாகி வருகிறது. தங்கத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதுதான் 'கோல்டு இ.டி.எஃப்.இதுவே ஒரு குறியீட்டை அடிப்படையாகக் கொண்டு செயல் பட்டால்? அதாவது, 'பேங்க் இண்டெக்ஸ்என்கிற குறியீட்டை எடுத்துக் கொள்வோம். இந்த இண்டெக்ஸில் உள்ள சில பங்குகளை மட்டும் ஒரு குரூப்பாக்கி, அதில் முதலீடு செய்தால் அதுதான் இ.டிஎஃப். பேங்க் இண்டெக்ஸில் உள்ள வங்கிகள் நன்றாக செயல்பட்டால், அதனால் அந்த இண்டெக்ஸ் உயர்ந்து நமக்கு லாபம் கிடைக்கும். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு குறிப்பிட்ட குறியீட்டின் ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்ப, இ.டி.எஃபின் விலையிலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். இது எக்ஸ்சேஞ்சில் டிரேட் ஆகும் என்றாலும், இதை நிர்வாகம் செய்வது மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனிகள்தான்.
உலக அளவில் இ.டி.எஃப்- களின் வரலாறு மிகக் குறுகியது. கடந்த 20 வருடங்களாகத்தான் இ.டி.எஃப்-கள் நடைமுறையில் உள்ளன. இருந்தபோதிலும் வளர்ந்த நாடுகளில் இம்முறை முதலீடு மிகவும் பிரசித்தம்.
இ.டி.எஃப்.-ல் முதலீடு செய்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? ஒன்றல்ல, இரண்டல்ல, பல நன்மைகள் கிடைக்கும்.
1.
பங்குச் சந்தையில் எந்த ஒரு பங்கையும் வாங்குவது/ விற்பது போல, இ.டி.எஃபையும் எளிதில் வாங்கலாம்; விற்கலாம் - அதுவும் மிகக் குறைந்த கமிஷனில். தவிர, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இதை நிர்வாகம் செய்ய எடுத்துக் கொள்ளும் தொகையும் மிக மிகக் குறைவு (low expense ratio).
2.
சந்தையின் ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்ப நம் லாப நஷ்டமும் இருக்கும்.
  3.
மியூச்சுவல் ஃபண்டில் ஒரு நாளில் எப்போது முதலீடு செய்தாலும், அன்றைய முடிவில் தரப்படும் என்.ஏ.வி. தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஆனால், இ.டி.எஃப்.பில் முதலீடு செய்யும்போது பங்குகளைப் போல ஒரே நாளில் பல விலைகளில் வாங்க/விற்க முடியும்.
4. அலுத்துக் கொள்ளாமல் பங்குச் சந்தையில் முதலீடு (passive investment) செய்ய விரும்புபவர்களுக்கு இ.டி.எஃப்.கள் பெஸ்ட் சாய்ஸ். இத்தகைய முதலீடுகளை 'கவலை இல்லாத முதலீடு’ (in-vestment minus worries) என்றும் கூறலாம்.
5.
இந்தியா அடுத்த 20/30 வருடங்களுக்கு உலக அளவில் ஒரு தலை சிறந்த பொருளாதாரமாக விளங்கி முதலீட்டாளர்களுக்கு நல்ல வருவாயை ஈட்டித் தரும். அவ்வாறு வளரும் தருணத்தில் இந்திய பங்குச் சந்தையும் அதன் குறியீடுகளும் நன்றாக வளரும். அந்த வளர்ச்சியை இ.டி.எஃப்.களில் நேரடியாகக் காணலாம்.
6.
மியூச்சுவல் ஃபண்டுகளில் நீண்ட கால முதலீட்டாளர் களும், குறுகிய கால முதலீட்டாளர் களும் அடிக்கடி உள்ளே வந்து செல்வதால் ஏற்றயிறக்கம் இருக்கும். இ.டி.எஃப்.பில் அந்தப் பிரச்னை இல்லை.
7.
பங்கு சார்ந்த இ.டி.எஃப்.களுக்கு வருமான வரி, பங்குகளைப் போலவே பாவிக்கப்படும். கடன் சார்ந்த இ.டி.எஃப்.களுக்கு, கடன் திட்டங்களைப் போல பாவிக்கப்படும்.
இப்படி எத்தனையோ விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
பலவிதமான இ.டி.எஃப்.கள் நம் நாட்டில் உள்ளன. பங்கு சார்ந்தவை, கடன் சார்ந்தவை, துறை சார்ந்தவை, கமாடிட்டி சார்ந்தவை (தங்கம்) என பல வகைகளில் கிடைக்கிறது.
எவ்வகையான முதலீட்டாளர்கள் இ.டி.எஃப்.களில் முதலீடு செய்யலாம்?
இ.டி.எஃப். எதை அடிப்படையாகக் கொண்டு உள்ளதோ (உதாரணத்திற்கு நிஃப்டி 50 பங்கு குறியீட்டை அடிப்படையாகக் கொண்டுள்ள இ.டி.எஃப்) அந்த பொருள் ஏறுமளவுக்கு, எனக்கு கிடைக்கும் வருமானம் இருந்தால் போதுமானது - கூடவோ, குறையவோ வேண்டாம் என்று நினைப்பவர்கள், அலுத்துக் கொள்ளாமல் முதலீடு செய்ய விரும்புபவர்கள், சந்தையில் உடனே நுழைய வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளவர்கள், சந்தையின்/ குறியீட்டின் ஏற்ற இறக்கத்தைப் பயன்படுத்தி வருமானம் செய்ய நினைப்பவர்கள், ஹெட்ஜ் செய்ய விரும்புபவர்கள் போன்ற முதலீட்டாளர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.
டே டிரேடிங் அல்லது மிகக் குறுகிய காலத்திற்காக வர்த்தகம் செய்பவர்கள், இ.டி.எஃப்-ஐ உலகெங்கிலும் அதிகமாக உபயோகிக்கிறார்கள்.
இந்தியாவில் இ.டி.எஃப்.களில் முதலீடு செய்யும்போது கவனிக்க வேண்டியவை என்னென்ன?
இந்தியாவில் இ.டி.எஃப்.கள் இப்போதுதான் பிரபலமாகி வருகிறது. எனவே, சில இ.டி.எஃப்.கள் வர்த்தகமாகும் அளவு (volume) குறைவாக உள்ளது. முதலீட்டாளர்கள் இ.டி.எஃப்.களை முதலீடு செய்ய தேர்வு செய்யும்போது, தினசரி வர்த்தகமாகும் அளவை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். மேலும், அத்திட்டத்தை நிர்வாகம் செய்ய வசூலிக்கப்படும் தொகை, அதை நிர்வகிக்கும் நிறுவனம், அத்திட்டத்தின் செயல்பாடு, எந்தக் குறியீட்டை அடிப்படையாகக் கொண்டுள்ளதோ அக்குறி யீட்டை தொடர்ச்சியாக மிகச் சரியாக பிரதிபலிக்கிறதா என்பனவற்றையும் கவனிப்பது அவசியம்.

நம்மில் பலருக்கு ஒரு சந்தேகம் எழும். 'இண்டெக்ஸ் மியூச்சுவல் ஃபண்டுகளுக்கும் இ.டி.எஃப்-களுக்கும் என்ன வித்தியாசம் என்பதுதான் அது. இரண்டுமே குறியீட்டை அடிப்படையாகக் கொண்டவைதான் என்றாலும், நிர்வகிக்கப்படும் விதம், வர்த்தகம் செய்யப்படும் விதம், ஃபண்டு செலவு சதவிகிதம், என்.ஏ.வி அறிவிப்பு போன்ற அனைத்தும் வித்தியாசப்படும். பல கோணங்களில் இருந்து பார்க்கும்போது, இ.டி.எஃப். இண்டெக்ஸ், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைவிடச் சிறந்தது என்றே சொல்ல வேண்டும். 'பங்கு சார்ந்த, கடன் சார்ந்த, துறை சார்ந்த மற்றும் தங்கம் சார்ந்த இ.டி.எஃப்.கள் கிடைக்கின்றன. சமீப காலத்தில் பெஞ்ச்மார்க் மியூச்சுவல் ஃபண்டைப் போல இ.டி.எஃப்.களை முதன்மையான தொழிலாகக் கொண்டு மோத்திலால் ஆஸ்வால்  மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் களமிறங்கியுள்ளது.
இந்தியாவில் தற்போது எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் இ.டி.எஃப். திட்டங்கள் தங்கம் சார்ந்தவைதான். கோல்டு இ.டிஎஃப். திட்டங்களில் கோல்டுபீஸ், நிஃப்டி 50-ஐ அடிப்படையாகக் கொண்ட நிஃப்டி பீஸ், வங்கி குறியீட்டை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் பேங்க் பீஸ் போன்ற இ.டி.எஃப்.கள் பிரபலமாக இருக்கின்றன. ஜூனியர் நிஃப்டியை வைத்து ஜூனியர்பீஸ், சி.என்.எக்ஸ். மிட்கேப் குறியீட்டை வைத்து எம்-100-ம் சமீப காலமாகப் பிரபலமாகி வருகிறது. இது தவிர இன்ப்ஃராபீஸ், லிக்விட்பீஸ் போன்றவையும் வர்த்தகமாகிறது. வெளிநாட்டுக் குறியீடுகளை வைத்தும் இந்தியாவில் இப்போது ஹேங்செங்பீஸ் மற்றும் நாஸ்டாக்-100 போன்ற இ.டி.எஃப்.களும் கிடைக்கின்றன.
(படி ஏறுவோம்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவகிரக துதி

சூரியன் சீலமாய் வாழ சீரருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி! சூரியா போற்றி! சுந்தரா போற்றி! வீரியா போற்றி! வினைகள் களைவாய் சந்திரன் எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி! திருவருள் தருவாய் சந்திரா போற்றி! சற்குணா போற்றி! சங்கடந்தீர்ப்பாய் சதுராய் போற்றி! அங்காரகன் (செவ்வாய்) சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ மங்கள செவ்வாய் மலரடி போற்றி! அங்காரகனே அவதிகள் நீக்கு! புதன் இதமுற வாழ இன்னல்கள் நீக்கு புத பகவானே பொன்னடி போற்றி! பதந்தந்தாள்வாய் பண்ணொளியானே உதவியே யருளும் உத்தமா போற்றி! குரு குணமிகு வியாழக் குருபகவானே மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய் ; பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா கிரகதோஷமின்றி கடாஷித்தருள்வாய் சுக்கிரன் சுக்கிரமூர்த்தி சுப சுக மீவாய் வக்ரமின்றி வரமிகத் தருவாய் வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே சனி சங்கடந் தீர்ககுஞ் சனி பகவானே! மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றி சனீஸ்வரத் தேவே இச்சகம் வாழ இன்னருள் தா தா ராகு அரவெனும் ராகு அய்யனே போற...

சோப் ஆயிலில் சூப்பர் லாபம்!

வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் இயந்திரங்கள் எதுவும் இல்லாமல் சோப் ஆயில் தயாரிக்கலாம். இதன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை காளம்பாளையத்தில் ஹக் புராடக்ட்ஸ் சோப் ஆயில் தயாரிக்கும் ரமணன். அவர் கூறியதாவது: கோவையில் தேசிய பஞ்சாலை கழக தரக்கட்டுப்பாட்டு பிரிவில் உதவி ஸ்பின்னிங் மாஸ்டராக 28 ஆண்டுகள் பணிபுரிந்தேன். 7 ஆண்டுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றேன். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற என் போன்றவர்களை, கோவையில் உள்ள சிறு தொழில் சேவை மையத்தினர் சுய தொழில் செய்வதற்கான பயிற்சிக்கு அழைத்தனர். அங்கு ஒரு மாதம் நறுமண சொட்டு நீலம், பினாயில், சோப் பவுடர் போன்றவை தயாரிக்க கற்றுக் கொடுத்தனர். ரூ.5 ஆயிரம் முதலீட்டில் சோப் ஆயில் தயாரிப்பதற்கான தொழிலை துவக்கினேன். நானே முதலாளியாகவும், தொழிலாளியாகவும் இருந்து மாதம் 200 லிட்டர் சோப் ஆயில் தயாரித்து விற்கிறேன். சோப் ஆயில் தயாரித்து விற்பவர்கள் பலர் இருந்தாலும், தரமாக தயாரித்து விற்பதால் ஆர்டர் தொய்வு இல்லாமல் கிடைக்கிறது. தினசரி 5 மணி நேரம் உழைத்தால் 10 லிட்டர் சோப் ஆயில் தயாரிக்க முடியும். 20...

Various Herbs & Spices English & Hindi Names

English/ ஆ ங்கிலம் Tamil/ தமிழ் Hindi/ हिन्दी/ ஹிந்தி Rice Arisi( அரிசி) Chaval Black gram Kadalai Parruppu ( கடலை பருப்பு) Channa Dhal Black Gram Ulluththam Paruppu ( உளுதம் பருப்பு) Urad Dhal Green gram dhal Payaththam Parruppu( பயத்தம் பருப்பு) Moog Dhal Green gram Whole Paasi Parruppu( பாசி பருப்பு) Moog Sabut Yellow split peas Thuvaram Parruppu( துவரம் பருப்பு) Toor Dhal Green gram  Split Pachchai payiru( பச்சைப்பயறு) Moong Chilka Garbanzo beans Kondai Kadalai( கொண்டை கடலை) Kabuli Channa Peanuts Veerkadalai( வேற்கடலை) Moong falee All Purpose Flour Maida Maavu( மைதா மாவு) Maida Gram flour Kadalai Maavu( கடலை மாவு) Besan Wheat flour Godhumai maavu( கோதுமை மாவு) ...