முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முதற்படி முதலில் படி! - 28


முதற்படி முதலில் படி! - 28


சென்ற வாரம் நாம் பார்த்த 'டிஸ்கவுன்ட் கேஷ் ஃப்ளோமுறை பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக பார்ப்போம். இம்முறையில், வரும் ஆண்டுகளில் நிறுவனத்திற்கு வரப்போகும் வருமானத்தை முடிந்தவரை துல்லியமாகக் கணிப்பது; அவ்வாறு கணித்த வருமானத்தை வைத்து அந்நிறுவனத்திற்கு கையில் கிடைக்கும் கேஷ் எவ்வளவு என்று கணக்கிடுவது; சரியான டிஸ்கவுன்ட் ரேட் உபயோகித்து என்.பி.வி., அதாவது 'நெட் பிரஸன்ட் வேல்யூகண்டுபிடிப்பது என மூன்று விஷயங்கள் தேவை.
திர்கால வருமானத்தை எவ்வாறு கணிப்பது? பலருக்கும் இது ஒரு கடினமான காரியம். சமீபத்தில் தொடங்கப் பட்ட நிறுவனமாக இருந்தால், அதன் தொழில் எவ்வாறு நடக்கும் என்பதை கணிப்பது கடினம்.
ஆனால், நிறுவனம் பல ஆண்டு களாக நடந்துவரும் பட்சத்தில், எதிர்காலத்தைக் கணிப்பது சுலபமே.
ஒரு எளிமையான உதாரணத் திலிருந்து தொடங்கலாம். நீங்கள் ஒரு கூரியர் கம்பெனியை நடத்து கிறீர்கள். அதற்கு தமிழ்நாடு கூரியர் கம்பெனி என பெயர் வைத்துக் கொள்வோம். இந்தியா முழுக்க உங்களுக்கு கிளை உண்டு. வெளிநாட்டு நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்துள்ளீர்கள். உங்கள் நிறுவனத்தின் கடந்த ஐந்து ஆண்டு களின் இன்கம் ஸ்டேட்மென்ட் கீழே (அட்டவணை 1) கொடுக்கப் பட்டுள்ளது.

அதிலிருந்து உங்களால் என்ன புரிந்துகொள்ள முடிகிறது? விற்பனை (டேர்னோவர்) சீராக வளர்ந்து வருகிறது - சராசரியாக இதுவரை ஆண்டுக்கு 16% [(15% + 15% + 17% + 18%) /4] வளர்ந்துள்ளது. ஆபரேட்டிங் செலவுகள் (சராசரியாக) விற்பனையில் 80.4% ஆக உள்ளது. விற்பனையோடு ஒப்பிடும்போது வட்டிச் செலவு சராசரியாக கடந்த ஐந்து ஆண்டுகளில் 2.5% உள்ளது. நிகர லாப மார்ஜின் கடந்த ஐந்தாண்டுகளில் சராசரியாக 9.2%-மாக உள்ளது. இந்த சராசரி சதவிகிதங்களை வைத்து உங்களால் உங்கள் நிறுவனத்தின் நிதிநிலைமை இனிவரும் ஆண்டுகளில் எவ்வாறு இருக்கும் என்று கணிக்க முடியுமல்லவா?
கன்ஸர்வேட்டிவாகப் பார்க்கும்போது, அடுத்த ஐந்து ஆண்டுகளில், குறைந்தபட்சம் கடைசி ஐந்தாண்டுகளில் கண்ட வளர்ச்சியாவது இருக்க வேண்டும்.மற்றுமொரு கோணத்தில் பார்த்தால், இப்போதிருக்கும் வளர்ச்சியைவிட நிறுவனத்தின் வளர்ச்சி இன்னும் அதிகமாக இருக்க சாத்தியக்கூறுகள் அதிகம் என்று தோன்றுகிறது. பெஸ்ட் கேஸ் ஸீனரியோவிற்கு போகும் முன், கன்ஸர்வேட்டிவ் ஸீனரியோவைப் பார்த்துவிடுவோம். ஏனென்றால் உங்கள் நிறுவனத்தின் தற்போதைய கன்ஸர்வேட்டிவ் மதிப்பு என்ன என்பதை நீங்கள் அறிய ஆவலாக உள்ளீர்கள் அல்லவா, அதனால்தான்!
அட்டவணை 1-ல் நாம் கணக்கிட்டுள்ள சதவிகிதம் அனைத்தும் விற்பனையை (டேர்னோவர்) அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு விற்பனை சராசரியாக 16% வளர்ந்துள்ளது. ஆகவே, இனிவரும் ஆண்டுகளிலும் குறைந்தபட்சம் அந்த அளவாவது வளரும். அதனால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒவ்வொரு வருடமும் 16% விற்பனையை உயர்த்திக் கணக்கிட்டு உள்ளோம் (காண்க அட்டவணை 2).
அதேபோல் இதுவரை ஆபரேட் டிங் செலவுகள் சராசரியாக விற்பனையுடன் ஒப்பிடும்போது 80.4% இருந்துள்ளது. ஆகவே, அதே சதவிகித செலவை இனிவரும் ஐந்து ஆண்டுகளுக்கு எடுத்துக் கொள்வோம். அந்தந்த ஆண்டு விற்பனையை 80.4%-ஆல் பெருக்கினால் அந்தந்த ஆண்டுக் குரிய ஆபரேட்டிங் செலவு கிடைத்துவிடும். அதேபோல் வட்டிச் செலவு மற்றும் தேய்மானச் செலவின் கடந்த ஐந்து ஆண்டுகால சராசரி (முறையே 2.5% அண்ட் 3.2%) என்ன வென்று நமக்குத் தெரியும்.
அந்த சராசரியைக் கொண்டு அடுத்த ஐந்து ஆண்டில் வட்டி மற்றும் தேய்மானச் செலவு எவ்வளவு இருக்கும் என்பதை அட்டவணை 2-ல் கணக்கு செய்துள்ளோம் (குறிப்பிட்ட சதவிகிதத்தை அந்தந்த ஆண்டு விற்பனையுடன் பெருக்குவதன் மூலம்).
ஆக, இப்போது அடுத்த ஐந்து ஆண்டிற்கான இன்கம் ஸ்டேட் மென்ட் கணிப்பு (ஃபோர்காஸ்ட்) தயார். இனி அடுத்த கட்டமாக 'ஃப்ஃரீ கேஷ் ஃப்ளோவைக் (free cash flow) கணக்கிட வேண்டும். சரி, முதலில் 'ஃப்ரீ கேஷ் ஃப்ளோஎன்றால் என்னவென்று பார்த்து விடுவோம். நாம் நிறுவனத்திற்கு நிகர லாபம் என்று கூறுவது புத்தக லாபம்தானே தவிர, நிறுவனத்திற்கு கையில் கிடைக்கும் பணம் அல்ல! மேலும், தேய்மானச் செலவு போன்றவை புத்தகச் செலவுதானே, தவிர நிஜமான செலவு அல்ல!
அதேபோல், முதலீட்டிற்காக செலவு செய்யப்படும் கேஷ் நமது இன்கம் ஸ்டேட்மென்டில் வருவதில்லை. இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு வருவதுதான் 'ஃப்ரீ கேஷ் ஃப்ளோ’. 'ஃப்ரீ கேஷ் ஃப்ளோஎவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள சூத்திரம் உதவியாக இருக்கும்.
ஃப்ரீ கேஷ் ஃப்ளோ = ஆபரேட்டிங் பிராஃபிட் - வருமான வரி - முதலீட்டுச் செலவு (கேப்பிட்டல் எக்ஸ்பென்ஸஸ்) - ஓர்க்கிங் கேப்பிட்டல்
உங்களது தமிழ்நாடு கூரியர் கம்பெனி லிமிடெட்டிற்கு இனி வரும் வாரங்களில் ஃப்ரீ கேஷ் ஃப்ளோ கணக்கிட்டு, டிஸ்கவுன்ட் ரேட் கண்டுபிடித்து, என்.பி.வி-யைக் கணக்கிடு வோம்.
(படி ஏறுவோம்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவகிரக துதி

சூரியன் சீலமாய் வாழ சீரருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி! சூரியா போற்றி! சுந்தரா போற்றி! வீரியா போற்றி! வினைகள் களைவாய் சந்திரன் எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி! திருவருள் தருவாய் சந்திரா போற்றி! சற்குணா போற்றி! சங்கடந்தீர்ப்பாய் சதுராய் போற்றி! அங்காரகன் (செவ்வாய்) சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ மங்கள செவ்வாய் மலரடி போற்றி! அங்காரகனே அவதிகள் நீக்கு! புதன் இதமுற வாழ இன்னல்கள் நீக்கு புத பகவானே பொன்னடி போற்றி! பதந்தந்தாள்வாய் பண்ணொளியானே உதவியே யருளும் உத்தமா போற்றி! குரு குணமிகு வியாழக் குருபகவானே மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய் ; பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா கிரகதோஷமின்றி கடாஷித்தருள்வாய் சுக்கிரன் சுக்கிரமூர்த்தி சுப சுக மீவாய் வக்ரமின்றி வரமிகத் தருவாய் வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே சனி சங்கடந் தீர்ககுஞ் சனி பகவானே! மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றி சனீஸ்வரத் தேவே இச்சகம் வாழ இன்னருள் தா தா ராகு அரவெனும் ராகு அய்யனே போற...

சோப் ஆயிலில் சூப்பர் லாபம்!

வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் இயந்திரங்கள் எதுவும் இல்லாமல் சோப் ஆயில் தயாரிக்கலாம். இதன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை காளம்பாளையத்தில் ஹக் புராடக்ட்ஸ் சோப் ஆயில் தயாரிக்கும் ரமணன். அவர் கூறியதாவது: கோவையில் தேசிய பஞ்சாலை கழக தரக்கட்டுப்பாட்டு பிரிவில் உதவி ஸ்பின்னிங் மாஸ்டராக 28 ஆண்டுகள் பணிபுரிந்தேன். 7 ஆண்டுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றேன். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற என் போன்றவர்களை, கோவையில் உள்ள சிறு தொழில் சேவை மையத்தினர் சுய தொழில் செய்வதற்கான பயிற்சிக்கு அழைத்தனர். அங்கு ஒரு மாதம் நறுமண சொட்டு நீலம், பினாயில், சோப் பவுடர் போன்றவை தயாரிக்க கற்றுக் கொடுத்தனர். ரூ.5 ஆயிரம் முதலீட்டில் சோப் ஆயில் தயாரிப்பதற்கான தொழிலை துவக்கினேன். நானே முதலாளியாகவும், தொழிலாளியாகவும் இருந்து மாதம் 200 லிட்டர் சோப் ஆயில் தயாரித்து விற்கிறேன். சோப் ஆயில் தயாரித்து விற்பவர்கள் பலர் இருந்தாலும், தரமாக தயாரித்து விற்பதால் ஆர்டர் தொய்வு இல்லாமல் கிடைக்கிறது. தினசரி 5 மணி நேரம் உழைத்தால் 10 லிட்டர் சோப் ஆயில் தயாரிக்க முடியும். 20...

Various Herbs & Spices English & Hindi Names

English/ ஆ ங்கிலம் Tamil/ தமிழ் Hindi/ हिन्दी/ ஹிந்தி Rice Arisi( அரிசி) Chaval Black gram Kadalai Parruppu ( கடலை பருப்பு) Channa Dhal Black Gram Ulluththam Paruppu ( உளுதம் பருப்பு) Urad Dhal Green gram dhal Payaththam Parruppu( பயத்தம் பருப்பு) Moog Dhal Green gram Whole Paasi Parruppu( பாசி பருப்பு) Moog Sabut Yellow split peas Thuvaram Parruppu( துவரம் பருப்பு) Toor Dhal Green gram  Split Pachchai payiru( பச்சைப்பயறு) Moong Chilka Garbanzo beans Kondai Kadalai( கொண்டை கடலை) Kabuli Channa Peanuts Veerkadalai( வேற்கடலை) Moong falee All Purpose Flour Maida Maavu( மைதா மாவு) Maida Gram flour Kadalai Maavu( கடலை மாவு) Besan Wheat flour Godhumai maavu( கோதுமை மாவு) ...