முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காளான் வளர்ப்பு தொழில் தொடங்க முழு விவரம்


காளான் வளர்ப்பு தொழில் தொடங்க முழு விவரம்


சைவ பிரியர்களுக்கு மட்டுமல்ல, இப்போ தெல்லாம் அசைவ பிரியர்களுக்கும் பிடித்த உணவாகிவிட்டது காளான். நாக்கிற்கு நல்ல சுவை, உடலுக்கு நல்ல சத்து தரும் உணவாக இருக்கும் இதில், வைட்டமின் சி மற்றும் டி அதிகளவிலும் மற்றும் தாது வகைகளான இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பேட், காப்பர் மற்றும் பொட்டாசியம் சத்துகளும் இருக்கின்றன. பல்வேறு சத்துக்களும் சரியான விகிதத்தில் இதில் கலந்திருப்பதால் ஒரு பர்ஃபெக்ட்டான சரிவிகித உணவாகவும் சிபாரிசு செய்கிறார்கள் டயட்டீஸியன்கள்.

காளானில் பட்டன் காளான், பால் காளான் மற்றும் சிப்பி காளான் என பலவகை இருக்கிறது. இதில் சிப்பி காளான் வளர்ப்பது சுலபமானது.



சந்தை வாய்ப்பு:
இறைச்சி மற்றும் அசைவ உணவு வகைகளுக்குப் பதிலாக பயன்படுத்தப்படுகிறது காளான். சீக்கிரத்தில் ஜீரணமாவதுடன் சைவப் பிரியர்களின் விருப்ப உணவாகவும் இருக்கிறது. காளான் வளர்ப்பு வளர்ந்த நாடுகளில் ஏற்கெனவே வர்த்தக அந்தஸ்தை பெற்றுவிட்டது. தற்போது வளரும் நாடுகளிலும் இந்த தொழிலுக்கு நல்ல வர்த்தக வாய்ப்பு உருவாகி வருகிறது.
சூப் தயாரிக்க, காய்கறிகளுடன் சேர்த்து சமைக்க, வெஜிடபிள் பிரியாணி செய்ய, ஊறுகாய் செய்ய என  பல வகைகளில் உணவுப் பிரியர்களால் விரும்பப் படுகிறது. காளான் பவுடர் பால் கொதித்த நீரில் கலந்து டானிக்காக குடிக்கவும் பயன்படுகின்றது.
பெரிய நகரங்களில் இப்போது அதிகளவில் காளான் பயன் படுத்தப்படுவதால் நகரங்களில் காளான் வளர்ப்பு யூனிட் அதிகளவில் வரத் துவங்கியுள்ளது. தவிர, காளான் வளர்ப்பில் இன்னமும் பலரது கவனம் அதிக அளவில் விழாததால், இத்தொழி லுக்கு இப்போது நல்ல சந்தை வாய்ப்பு இருக்கிறது.


உற்பத்தி முறை:
தரமான சிப்பி காளானை உற்பத்தி செய்ய வேண்டும் எனில், அதனை சிறந்த முறையில் வளர்க்க வேண்டும். அதாவது, சிறந்த மூலப்பொருள் மற்றும் சரியான வெப்பநிலை போன்றவை காளான் வளர்ப்புக்கு அத்தியாவசிய தேவைகள் ஆகும். 20 முதல் 25 சென்டிகிரேடு வெப்பநிலையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சிப்பி காளான் தயாரிக்க வைக் கோலை அதற்கென இருக்கும் பிரத்யேக இயந்திரத்தில் போட்டு வேக வைக்க வேண்டும். பிறகு அதனை 50% காய வைத்து பாலித்தீன் கவரில் போட வேண்டும். இதே கவருக்குள் காளான் விதையையும் போட்டு கட்டி தொங்கவிட வேண்டும். 300 கிராம் எடை கொண்ட காளான் விதைக்கு நான்கு கிலோ வைக்கோல் போட வேண்டும். இது ஒரு பாலித்தீன் பைக்கான அளவு.
இதற்கென பிரத்யேகமாக  550 சதுர அடிக்குள் தென்னை ஓலையால் குடிசைக் கட்ட  வேண்டும்.  கீழே தரையில் ஆற்று மணலைப் பரப்பி அதில் தண்ணீர் ஊற்றி வரவேண்டும். இந்த சூழ்நிலை காளான் வளர்ப்பிற்கு ஏற்ற தட்டவெப்ப நிலையைக் கொடுக்கும். விதைகள் போட்டிருக்கும் பாலிதீன் பைகளில் 20 ஓட்டை போட வேண்டும்.
இந்நிலையில் 30-35 நாட்களுக்குப் பிறகு சிப்பி காளான் வெளியில் வர தொடங்கும். காலை இரண்டு மணிநேரம் மாலை இரண்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். முளைத்திருக்கும் காளானை மாலையில் அறுவடை செய்தால் மறுநாள் காலையில் பயன் பாட்டிற்கு கொண்டு போய் சேர்த்துவிட வேண்டும். காளான்களை அறுவடை செய்ததும் உடனடியாக சப்ளை செய்துவிட வேண்டும் என்பது முக்கியமான விஷயம். எனவே அறுவடை செய்தவுடன் ஸ்டார் ஓட்டல்கள், ரெஸ்டாரென்ட், கிளப் போன்ற இடங்களில் சப்ளை செய்யலாம்.
நிலம் மற்றும் கட்டடம்:
10 கிலோ காளான் உற்பத்தி செய்ய 700 சதுர அடி நிலம் தேவைப்படும். நிலத்தில் குடிசை கட்டுவதற்கு 2.50 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.
இயந்திரம்:
ஒரு நாளைக்கு 350 கிலோ வீதம் ஆண்டுக்கு 300 நாட்கள் வேலை செய்தால் 105 டன் காளான் தயாரிக்க முடியும். வைக்கோலை வேக வைக்கப் பயன்படுத்தப்படும் இயந்திரமான ஆட்டோகிளேவ் சென்னை, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் கிடைக்கிறது.
தண்ணீர்:
தினமும் 15 ஹெச்.பி. மின்சாரம் மற்றும் 1,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். தண்ணீர் தொடர்ந்து கிடைக்கும்படி இருக்க வேண்டும்.
வேலையாட்கள்:
திறமையான வேலையாட்கள் இரண்டுபேர், உதவியாளர்கள் நான்குபேர் மற்றும் விற்பனை யாளர் ஒருவர் என மொத்தம் 7பேர் தேவை.
ஃபைனான்ஸ்:
இந்த உற்பத்தி திறனுக்கான நிலத்திற்கு 60,000 ரூபாய் (தேர்ந்தெடுக்கப்படும் இடத்தைப் பொறுத்து விலை மாறுபடும்), கட்டடம் 2,50,000 ரூபாய் என மொத்தம் 3,10,000 ரூபாய் தேவை. இயந்திரத்திற்கான செலவு 1.98 லட்சம் ரூபாய்.

முந்தைய செலவுகள்:
நிறுவனத்தைப் பதிவு செய்தல், தொழில் தொடங்குவதற்கு முன்பு வரையிலான செலவுகள் மற்றும் அதற்கான வட்டி என 70,000 ரூபாய் வரை செலவாகும்.


ரிஸ்க்:
காளான் வளர்க்கும் இடம் மிகவும் சுத்தமாக இருப்பது அவசியம். காரணம், அசுத்தமான கையுடன் வேலை செய்தால்கூட பாக்டீரியாவால் பாதிப்படைந்து காளான் ஒழுங்காக வளராமல் கெட்டுப்போக வாய்ப்புண்டு. ஒரு பாலித்தீன் கவர் கெட்டு போனால்கூட அனைத்து பாலித்தீன் கவரும் கெட்டுப் போய்விடும். கோடை காலத்தில் வெயில் அதிகமாக இருக்கும், எனவே குறைந்த அளவே காளான் உற்பத்தியாகும். இதனை சரி செய்ய மற்ற நேரங்களில் காலை, மாலை மட்டும் தெளிக்கும் தண்ணீரை வெயில் நேரங்களில் நாள் முழுவதும் தெளிக்க வேண்டும். சொட்டு நீர் பாசன முறையில் தண்ணீரை விட்டு வந்தால் காளான் வளரத் தேவையான தட்பவெப்ப நிலை கிடைக்கும். பனிக் காலத்திலும் காளான் வளர்வது குறையும்.
பிளஸ்:
அசைவ உணவுகளுக்கு மாற்றாக மட்டுமின்றி சர்க்கரை நோய் உள்ளவர்களும் காளானைப் பயன்படுத்துகிறார்கள். சர்க்கரை நோயைக் குணப்படுத்த தயாரிக்கப் படும் மாத்திரைகளில் காளான் பொடிகள் பயன்படுத்தப்படுகிறது என்பது முக்கியமான விஷயம்.
நல்ல ஏற்றுமதி வாய்ப்பு உள்ள இத்தொழிலில் பெண்கள் அதிகளவில் ஈடுபட வாய்ப் புள்ளது. தற்போது அதிக எண்ணிக்கையில் காளான் உற்பத்தி யூனிட்டுகள் இல்லாத தால் இத்தொழிலுக்கு பிரகாச மான எதிர்காலம் இருப்பதை மறுக்க முடியாது!



கருத்துகள்

  1. Thank u this topic very interesting... now i will do this job so i need full details and training program... please may u send me
    regards natesan(natesan7indian@gmail.com

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவகிரக துதி

சூரியன் சீலமாய் வாழ சீரருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி! சூரியா போற்றி! சுந்தரா போற்றி! வீரியா போற்றி! வினைகள் களைவாய் சந்திரன் எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி! திருவருள் தருவாய் சந்திரா போற்றி! சற்குணா போற்றி! சங்கடந்தீர்ப்பாய் சதுராய் போற்றி! அங்காரகன் (செவ்வாய்) சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ மங்கள செவ்வாய் மலரடி போற்றி! அங்காரகனே அவதிகள் நீக்கு! புதன் இதமுற வாழ இன்னல்கள் நீக்கு புத பகவானே பொன்னடி போற்றி! பதந்தந்தாள்வாய் பண்ணொளியானே உதவியே யருளும் உத்தமா போற்றி! குரு குணமிகு வியாழக் குருபகவானே மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய் ; பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா கிரகதோஷமின்றி கடாஷித்தருள்வாய் சுக்கிரன் சுக்கிரமூர்த்தி சுப சுக மீவாய் வக்ரமின்றி வரமிகத் தருவாய் வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே சனி சங்கடந் தீர்ககுஞ் சனி பகவானே! மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றி சனீஸ்வரத் தேவே இச்சகம் வாழ இன்னருள் தா தா ராகு அரவெனும் ராகு அய்யனே போற...

சோப் ஆயிலில் சூப்பர் லாபம்!

வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் இயந்திரங்கள் எதுவும் இல்லாமல் சோப் ஆயில் தயாரிக்கலாம். இதன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை காளம்பாளையத்தில் ஹக் புராடக்ட்ஸ் சோப் ஆயில் தயாரிக்கும் ரமணன். அவர் கூறியதாவது: கோவையில் தேசிய பஞ்சாலை கழக தரக்கட்டுப்பாட்டு பிரிவில் உதவி ஸ்பின்னிங் மாஸ்டராக 28 ஆண்டுகள் பணிபுரிந்தேன். 7 ஆண்டுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றேன். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற என் போன்றவர்களை, கோவையில் உள்ள சிறு தொழில் சேவை மையத்தினர் சுய தொழில் செய்வதற்கான பயிற்சிக்கு அழைத்தனர். அங்கு ஒரு மாதம் நறுமண சொட்டு நீலம், பினாயில், சோப் பவுடர் போன்றவை தயாரிக்க கற்றுக் கொடுத்தனர். ரூ.5 ஆயிரம் முதலீட்டில் சோப் ஆயில் தயாரிப்பதற்கான தொழிலை துவக்கினேன். நானே முதலாளியாகவும், தொழிலாளியாகவும் இருந்து மாதம் 200 லிட்டர் சோப் ஆயில் தயாரித்து விற்கிறேன். சோப் ஆயில் தயாரித்து விற்பவர்கள் பலர் இருந்தாலும், தரமாக தயாரித்து விற்பதால் ஆர்டர் தொய்வு இல்லாமல் கிடைக்கிறது. தினசரி 5 மணி நேரம் உழைத்தால் 10 லிட்டர் சோப் ஆயில் தயாரிக்க முடியும். 20...

Various Herbs & Spices English & Hindi Names

English/ ஆ ங்கிலம் Tamil/ தமிழ் Hindi/ हिन्दी/ ஹிந்தி Rice Arisi( அரிசி) Chaval Black gram Kadalai Parruppu ( கடலை பருப்பு) Channa Dhal Black Gram Ulluththam Paruppu ( உளுதம் பருப்பு) Urad Dhal Green gram dhal Payaththam Parruppu( பயத்தம் பருப்பு) Moog Dhal Green gram Whole Paasi Parruppu( பாசி பருப்பு) Moog Sabut Yellow split peas Thuvaram Parruppu( துவரம் பருப்பு) Toor Dhal Green gram  Split Pachchai payiru( பச்சைப்பயறு) Moong Chilka Garbanzo beans Kondai Kadalai( கொண்டை கடலை) Kabuli Channa Peanuts Veerkadalai( வேற்கடலை) Moong falee All Purpose Flour Maida Maavu( மைதா மாவு) Maida Gram flour Kadalai Maavu( கடலை மாவு) Besan Wheat flour Godhumai maavu( கோதுமை மாவு) ...